பாடி பிரிட்டானியா பிஸ்கெட் பேக்டரி - CLOSED


சென்னை பாடியில் இருக்கும் பிரிட்டானியா பிஸ்கெட் பேக்டரி கடந்த 7ந்தேதியுடன் தனது உற்பத்தியினை நிறுத்திக்கொண்டு அங்கு வேலைப்பார்த்து வந்த சுமார் 200 தொழிலாளர்களுக்கு விருப்ப ஒய்வு திட்டத்தின் அடிப்படையில் பணி ஒய்வளிக்க முடிவெடுத்துள்ளது.

பெரும்பாலுலான பிஸ்கெட் உற்பத்தியை அவுட்சோர்ஸிங் முறைக்கு அனுப்பிவிட்ட பிரிட்டானியாவிற்கு வரும் லாப விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கையில் இங்கு சென்னையில் உள்ள தொழிற்சாலையை மூடி தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தோடு வீட்டுக்கு அனுப்பி, கிட்டதட்ட 20 ஏக்கர் நிலத்தையும் விற்றுதீர்த்தால் நல்ல லாபமாம் அதனாலேயே உடனே முடிவெடுத்துவிட்டது!

ஏற்கனவே மூன்று ஷிப்டுகளாக இயங்கி வந்த உற்பத்தி இரண்டு வருடங்களாக ஒருஷிப்டில் மட்டுமே இயங்கி வருகிறதாம். சில வருடங்களுக்கு முன்பே சுமார் 250 பேரை வீட்டு வி.ஆர்.எஸ்ஸில் அனுப்பிவிட்டார்களாம்.

தற்போதைய பாடி ஃபேக்டரி இடம் ஹச்.சி.எல் ஷிவ் நாடாரின் கைக்கு செல்கிறது கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழிலில் கட்டுமானங்களை உருவாக்க ஹச்.சி.எல் முடிவெடுத்து போட்டியில் முதலில் உள்ளது .

அவுட் சோர்சிங் முறையில் தற்போது தமிழ்நாட்டில் சோழிங்க நல்லூரிலும் மதுரையில் வெள்ளக்கோவிலும் சுமாராக 2500டன்கள் தயாரிக்கப்படுகின்றதாம்.

பாடி பஸ்நிலையத்தில் நிற்கும்போதும் சரி அந்த ஃபேக்டரியின் காம்பவுண்ட் சுவரினை ஒட்டி இருக்கும் சந்து வழியாக சீனிவாசா நகர் செல்லும்போதும் சரி,ஃபேக்டரி புரொடெக்‌ஷனிலிருந்து, காற்றினில் கலந்து வெளிவரும் அந்த இனிய பிஸ்கெட் வாசம் - இனி வராத அந்த வாசத்தை - ஏனோ இன்று ஞாபகப்படுத்தியது.

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நேத்து தான் ஸ்நாக்ஸ் சாப்பிடக்கூடாதுன்னு பதிவு போட்டீங்க. இன்னைக்கு பிரிட்டானியா வாசனையைக் காட்ரீங்களே.... நல்லா தான் இருக்கு :))

said...

நல்ல கேள்விதான் தமிழ் பிரியன்?

ஆனா பதில் சொல்ல தெரியலையே........????!

அதுலயும் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா தெரிஞ்சுது
இதுலயும் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா தெரியுது!

அவ்ளோதான்!

said...

அச்சச்சோ அப்படியா!! ஒரு 6-7 வருடத்துக்கு முன்னே மென்பொருள் கேட்டாங்கன்னு எங்க கம்பெனியிலே அந்த பாடி பேக்டரிக்கு அனுப்பிச்சாங்க... உள்ளே போய் இடத்தையெல்லாம் சுத்திப்பாத்தது இப்போ நினைவுக்கு வருது...

said...

பாடி பிரிட்டானியா பிஸ்கெட் மூடக்காரணம் அவுட் சோர்சிங்கில் மலிவாக உற்பத்தி செய்ய முடிவது மட்டும் இல்லை, அந்த இடத்தின் ரியல் எஸ்டேட் மதிப்பும் ஒரு காரணம், அந்த இடம் இப்போது மிகவும் மெயின் இடம் ஆகி விட்டது , ஒரு கிரவுண்ட் குறைந்த பட்சம் 50 லட்சம்(ஒரு கோடி கூட போகிறது).

அதனால் என்ன என்று நினைக்கலாம், ஒரு கிரவுண்ட் என்பது 5.5 செண்ட், ஒரு ஏக்கருக்கு தோராயமாக 20 செண்ட் வரும், நீங்கள் சொன்னதுப்போல 20 ஏக்கர் இடம் என்றால் என்ன விலை என்று கணக்கு போட்டுப்பார்த்துக்கொள்ளவும்.

அந்த நிறுவனம் ஆரம்பித்தப்போது 1 கோடி கூட முதலீடாக இருந்திருக்காது, எனவே இத்தனைக்கால உற்பத்தி மற்றும் லாபத்திற்கு பிறகு , அங்கே பிஸ்கெட் கம்பெனி நடத்துவதை விட இடத்தை விற்பதால் கிடைக்கும் லாபம் அதிகம், இனிமேல் வேறு எங்கோ ஒரு குக்கிராமத்தில் கூட கம்பெனி ஆரம்பித்துக்கொள்ளலாம்.