”கோ ஆப்டெக்ஸு”டன் கொண்டாடுங்கள் தமிழ் புத்தாண்டை!வருடந்தோறும் வரும் தீபாவளிக்கு பத்து நாட்களுக்கு முன்பே வந்துவிடும் கோ ஆப்டெக்ஸ் கடன் சலுகை காகிதம்!

ஒரு வித ரோஸ் கலர் பேப்பரும் அதன் பின்னால் மஞ்சள் பேப்பரும் இணைந்த பில்லில் உயர் அதிகாரிகளின் கையெழுத்துடன் கூடிய கடன் பேப்பர் வழங்கப்பட்டிருக்கும் தீபாவளிக்கான துணிகள் குடும்பத்திற்கு வேண்டிய மட்டும், குறிப்பிட்ட இலக்கிற்குள் என பல கட்டுப்பாடுகளுடன்....!

அப்பா கொண்டுவந்து கொடுத்துப்போகும் அந்த நேரத்திலெல்லாம் அதன் மீது ஒருவித அலட்சிய பார்வையே இருந்துவந்தது அப்போது...!

அம்மாவிடமிருந்து உடனே வரும் கேள்வி உனக்கு என்னடா வேணும்? ஆமாம்! அங்க என்ன இருக்கப்போகுது...? எனக்கு ஒண்ணுமே வேணாம்!வாங்கி தர்றதா இருந்தா சீமாட்டியில வாங்கி கொடு இல்லாட்டி எனக்கு தீபாவளியே வேணாம் என்று ரகளை நடக்கும்!

கடைசியில் அந்த கடன் பத்திரம் கொண்டு போர்வைகளும் தலையாணைகளும் வாங்கி கடனிலும் சிக்கனம் பிடித்து, அந்த காசினை மற்ற கடைகளில் அழித்து சந்தோஷம் பொங்க கொண்டாடிய தீபாவளிகள்! அப்போது.

நாட்கள் வருடங்களாக மாறி பல செய்திகள் நான் தெரிந்து அறிந்து அடைக்கலமாகும் போதுதான் தெரிந்தது இது போன்ற கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் நிலைமைகள் மற்றும் பிரச்சனைகள்!

என்னதான் மாற்றுகருத்துக்களாகிலும் நம்ம வீட்டுக்காரங்க செஞ்சு கொடுக்கறத தானே நாம முதல்ல எடுத்து பயன்படுத்தணும் என்ற எண்ணம்

வெளிப்பட தொடங்கியது, அதே சமயங்களில்தான் நிறைய ஊர்களிலும், பெரிய பெரிய கல்லுரிகளிலும் - குறிப்பாக பெண்கள் கல்லூரிகளிலும் - இந்த மாதிரியான கோ ஆப்டெக்‌ஷ் புடவைகளுக்கு விளம்பரம் தேடிதரும் வகையிலான செய்திகள் வெளிவர ஆரம்பித்தது! சரி நாம டிசைட் பண்ணது நல்ல விஷயம்தான் நம்மள(தேவைப்படும் இடங்களில் இது போல சுய தம்பட்டமிடவேண்டும்!) மாதிரியே எல்லாரும் ”திங்க”றாங்களோன்னு ஒரு ஃபீலிங்ஸ்!

சரிப்பா....! எதுக்கு இம்மாம் சின்ன மேட்டர இந்த மொக்க போடறேன்னு கேட்கற அண்ணன்களுக்கும் அக்காக்களுக்கும்......


தமிழ்புத்தாண்டை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடுங்கள்!

கோ ஆப்டெக்‌ஸ் சென்று சில பல துணி மணிகள் வாங்கி உடுத்தி

உன்னதமான திருவிழாவாக்குங்கள் எம் தமிழ் தாயின் பிறந்த நாளை ......!!!!

9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

தை மாதம் வர வேண்டிய பதிவு சித்திரையில் வருகிறதே!! எனி நுண்ணரசியல்? :))

said...

// இலவசக்கொத்தனார் said...
தை மாதம் வர வேண்டிய பதிவு சித்திரையில் வருகிறதே!! எனி நுண்ணரசியல்? :))
//


மாத்திட்டாங்களா??????

சொல்லவே இல்லை:)

said...

ஆயில்யன்,
உங்களுக்கும் என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

said...

மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

ஆமாங்க.. எங்க வீட்டிலேயும் படுக்கை விரிப்பு, அப்பாவுக்கு வேட்டி இன்னும் பல கோ-ஆப்டெக்ஸ்-லேர்ந்துதான் வாங்கிட்டிருந்தோம்...

ம்ம்.. கொசுவத்தி....

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

said...

புத்தாண்டில் புதுத் துணியுடுத்தி மகிழ்ச்சிகரமாக கொண்டாட வாழ்த்துக்கள்

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

//மாத்திட்டாங்களா??????

சொல்லவே இல்லை:)//

மாத்தினா மாறிடுவோமா என்ன!

said...

அதே கொசுவத்தி தான் இங்கயும்..
அப்படியும் பட்டுபுடவை எடுக்கவேண்டிய வயதில் முழு கடனுக்கும் பட்டுபுடவை வாங்க ஆரபித்துவிட்டார்கள்.. கல்யாணத்துக்கு சேர்க்க வேண்டுமே.. காதி க்ராப்ட் டும் உண்டு இந்த வரிசையில்...

கோ ஆப்டெக்ஸ் போர்வை எனக்கு ரொம்ப பிடிக்கும்..

said...

ஓ ஓ.. புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லவிட்டு போய்விட்டது போன பின்னூட்டத்தில்ல்..

புத்தாண்டு வாழ்த்துகள்..