நிதி நிர்வாகவியல் - பாடம் ஒன்று!


விலைவாசி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகமானால் அதன் சுமை தெரியாது. ஒரு காலத்தில் பவுன் விலை ரூ. ஆயிரமாக இருந்தது.

இன்று ரூ. 10,000 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

சாதாரண மக்களை வாங்கும் சக்தி கொண்டவர்களாக மாற்றிவிட்டால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். தேர்தலில் பயன்படுத்த மட்டும்தான் விலை உயர்வு என்ற பிரச்னை பயன்படும். எனவே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் பொருளாதாரக் கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் விலைவாசி உயர்வினால் பெரும் பாதகம் ஏற்படாது


- முதல்வர் கருணாநிதி



பொதுவிநியோகத் திட்டத்தில் அத்தியாவசிப் பொருள்கள் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். இதை, மாநில அரசு செய்யவேண்டும். அப்போது தான் விலைவாசி குறையும்.


- கம்யூனிஸ்ட்கள்

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இவர்கள் இருவருமே அரசியல் தான் பேசுகிறார்கள். :)
இந்தியாவில் தற்போது ஏற்ப்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கும் அரசுகளுக்கும் சம்பந்தம் மிகக் குறைவே! இது உலக நாடுகள் அனைத்திலும் ஏற்ப்பட்டுள்ள பிரச்சினை. இன்று வளைகுடா நாடுகளில் விலைவாசி 20 முதல் 35 சதம் வரை இரண்டு ஆண்டுகளில் கூடி விட்டது. இதற்கு யார் காரணமாக இருக்க முடியும். பொதுவாக சொல்வதானால் உலகப் பொருளாதாரமே கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது எனலாம். கச்சா எண்ணைய் விலை உயர்வும் இதில் முக்கிய இடம் வகிக்கிறது.

said...

முதல்வர் ஒருவேளை ஆசியாவிலேயே மூன்றாவது 'வாங்கும் சக்தி' கொண்ட நபராக மாறிவிட்டதால் வந்த கருத்தாக இருக்குமோ???????

சாமான்யனின் வாங்கும் சக்தி எப்படி உயரும்,முட்டாள் அரசியல்வாதிகள் இருக்கும் வரையில்??????

said...

நல்ல சிந்தனை:)

said...

//ரசிகன் said...
நல்ல சிந்தனை:)//


வழிமொழிகிறேன்.