குட்டி ராணி!


இது போன்ற செய்திகளை பகிர்ந்துகொள்வது என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக இருக்காது! ஆனாலும் இது போன்ற குறைபாடுகளை உடையோர் எந்தளவுக்கு மன உறுதியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று அனைவரும் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

ஜோதிக்கு வயது 14 உயரம் சுமாராக 2 அடிக்கு ஒரு இன்ச் குறைவு!

இவர்தான் உலகின் உருவத்தில் மிகச்சிறிய இளம்பெண்!

அஹோண்டுரோபிளாஸியா (achondroplasia) என்னும் ஒரு விதமான எலும்பு வளர்ச்சி தடையால் முதுகெலும்புகள் குறுகிய அளவு வளர்ச்சியையும் மற்றும் கை கால் எலும்புகளின் வளர்ச்சி குறுகிய அளவிலேயே தடைப்பட்டுபோவதுமாகும்!

இந்த குறைபாடு இருந்தாலும் கூட இன்றும் ஜோதியால் மிகுந்த உற்சாகத்துடன் இருக்க முடிகிறது.மேலும் தான் இந்த குறைபாட்டுடன் இருப்பதால் தான் பலரின் அன்பும் ஆதரவையும் மிக எளிதாக பெறமுடிகிறது,மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்கிறார் மிக எளிதாக!

மற்றவர்களை போலவே ஜோதிக்கும் எல்லா வகையிலும் வசதிகளை செய்து தருவதில்லும் அன்பிலும் அக்கறையிலும் அவர்தம் பெற்றோர் மிகுந்த ஆர்வமும் உற்சாகம் கொள்கிறார்கள்! இது மிகப்பெரிய வரம்தானே!

மற்ற தோழிகளை போன்றே இவருக்கும் சினிமாத்துறையின் மீதும் பாடல் பாடுவதிலும் மிகுந்த ஆர்வமாம். வாய்ப்பு கிடைத்தால் இவர் சினிமா துறைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்!

வாழ்த்துவோம் மனதார....!

thanks - TELEGRAPH

0 பேர் கமெண்டிட்டாங்க: