பணியிடத்தில் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக தற்போது மாறி வருகிறது.!
காலையில் மிகுந்த உற்சாகத்துடன் வேலைக்கு செல்லும் மனிதர் திரும்பவும் அதே உற்சாகத்துடன் திரும்புகையில் குடும்பத்திற்கு மகிழ்ச்சிதானே!
பணிக்கு செல்லும் போதும் சென்ற பிறகும் பிறகு திரும்பும்போதும் நாம் ஒன்றை மட்டுமே நினைவில் கொள்ளவேண்டும் நாமாகவே தேவையற்ற ரிஸ்க்குகளில் ஈடுபடகூடாது!
ரிஸ்க்ன்னு சொன்னா எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு சொல்றவங்க அப்பால போய் ஒரு டீ ஊத்திக்கினு கம்னு கிடங்கப்பா!
பணியிடத்தில் விபத்து என்பது ஒரு சாதாரண செய்தி அல்ல,உயிர் இழப்பு,உடைமைகள் இழப்பு,உற்பத்தி திறனையும் இழப்பு என பெரும் சேதம் விளைவிக்கும் விஷயமாகத்தான் ஒரு சாதாரண விபத்து இருக்கிறது!
விபத்தினை தவிர்க்க பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு சாதனங்களின் மதிப்பினை, விட பல மடங்கு மதிப்பு வாய்ந்தவை நாம் இழ்ந்த விஷயங்கள்!
அதிக அளவு ஒலி,அதிக அளவு ஒளி,அதிக அளவு வெப்ப உமிழ்வுகள் அதிக அளவு அதிர்வுகள் இவைகள் நம்மை உடல் ரீதியாக பெரிதும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றன.இவை அல்லாமல் எரிச்சல் அடைதல் மனச்சோர்வு அடைதல் போன்றவை மனரீதியாக பாதிப்புக்குட்படுத்துகின்றன.
மேலும் நம் கையாளும் பொருட்கள் விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் மருத்துவ கழிவுகளில் உள்ள வியாதிகளை பரப்பும் விஷயங்கள் இவைகளும் நம்மை பயமுறுத்தும் பாதுகாப்பு அற்ற பணியிடத்து விஷயங்கள்!
அனைத்து பணியிடம் சார்ந்த விபத்துகளும் பெரும்பாலும் மனிததவறுகளாலேயே ஏற்படுகின்றன எனபது நிரூபணமான உண்மை!
எவ்வளவுதான் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் விழிப்புணர்வுகளை உண்டாக்கும் செயல்களை செய்தாலும் கூட பணியாளர்கள் அதை கடைப்பிடிப்பதில் காட்டும் அலட்சியம் இன்றும் இன்னும் கூட விபத்துகளின் விபரங்களை செய்திகளாய் தந்துக்கொண்டேதான் இருக்கின்றன!
நான் சென்னையில் கண்ட காட்சிகளாய் பணியிடத்தில் பாதுகாப்பு மேற்பார்வையாளர் வரும் சமயங்களில் மட்டுமே தலைப்பாகையுடன் காட்சியளித்து அவர் சென்ற பின்னர் அதை வீசி எறியும் அந்த மக்களுக்கு தெரியுமா அது சின்னஞ்சிறார்களின் விளையாட்டு அல்ல என்று!
மக்களுக்கு விழிப்புணார்வினை ஏற்படுத்தும் நோக்கில் பல ஆண்டுகளாக நிறைய ஆய்வுகளினை செய்து, ஒவ்வொரு பணியையும் மேற்கொள்ளும் முன்பு அந்த பணியில் நிறைந்திருக்கும் விபத்து வாய்ப்புக்களின் எண்ணிக்கை எப்படி ஏற்படகூடும் அவ்வாறு ஏற்பட்டால் எப்படி பாதுகாக்கலாம் என்று தீவிர ஆய்வுகளினை மேற்கொண்டே பல பெரிய பணிகளில் ஈடுபடுகின்றனர்! - இவ்விஷயத்தில் நம் நாட்டினை பொறுத்த வரையில் மத்திய அரசு சிறப்பாக கடைப்பிடித்து வருகிறது என்பது என் எண்ணம் - மாநில அரசினை பொறுத்தவரை பாதுகாப்பு அப்படின்னா என்னாப்பா? என்ற ரேஞ்சில் தான் இருக்கிறது(அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரும் அரசு துறைகள்)
சரி என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கணும்னு கேட்டா, வேலை இடங்களில் பாதுகாப்பு உபகரணங்களை உபயோகித்து அக்கறையுடன் பணியில் ஈடுபடுங்கள்!
ஒவ்வொரு முறையும் பணியில் ஈடுபடும்போதும் குடும்பத்தை நினைத்துக்கொள்ளுங்கள் செய்கின்ற செயல்களில் அலட்சியம் இருக்காது ஆர்வத்துடன் ஆபத்தின்றி செய்ய இயலும் என்கிறார்கள் இந்து துறையில் பாடம் நடத்த்திக்கொண்டிருப்பவர்கள்!
பணியாளர்களிடம் வேலை வாங்குபவர்களும் மிக்க கவனத்துடன் வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் தம் குடும்பத்து உறுப்பினர்களாக நினைத்து பழகவேண்டும் என்று கூறுகிறார்கள்!
நான் படித்த ஒர் ஆண்டு டிப்ளமோ தொழில்துறை பாதுகாப்பு சம்பந்தமான படிப்பில் சொல்லிக்கொடுக்கப்பட்ட விஷயங்களில், மிக முக்கியம் என்று சொன்ன விஷயம்!
”சொன்னா கேட்டு நடந்துங்கோங்கப்பா!” இதுதாங்க!
என்னதான் மற்றவர்கள் நம் பாதுகாப்பினை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தாலும் நம் மீது நமக்குத்தானே அக்கறை வேண்டும்! நம்மை சார்ந்து வாழும் நம் குடும்பம் என நினைத்துப்பார்த்து வாழும் வாழ்க்கையினையும் செய்யும் பணியினையும் சிறப்பாக பாதுகாப்பாக செய்து மாண்புற வாழ்வோம்!

1 பேர் கமெண்டிட்டாங்க:
நல்ல விஷயம் தான். இவைகள் இந்தியாவில் கடைபிடிக்கப் படுகின்றனவா என்றால் பதில் கொஞ்சம் கஷ்டம் தான். முக்கியமாக உள்ளூர் கட்டுமானத் துறையில் முற்றிலும் இல்லை. துபாயில் இருந்த போது WP, PTW, பாதுகாப்பு உபகரணங்கள் என்று அமர்க்களமாக தான் இருந்தது. இங்கு முகமுடி, கையுறை, தலைக்கவசம், எதுவுமே கிடையாது. :( நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பைத் தர உறுதி பூண வேண்டும்.
Post a Comment