குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலு வேணாம்...! விட்டுடுங்க ப்ளீஸ்....!!


கனடா - கடும் நெருக்குதல்களுக்கு பிறகு, சரி இனி வரும் இளைய தலைமுறைக்கு அதிக ஆபத்துகளை ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்தாலும் கூடுமான வரை இனியும் பல்கி பெருக்க வைக்கவேண்டாம் என்ற பெரிய மனதோடு பிளாஸ்டிக் பாட்டில்களில் ஆன புட்டிகளை அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பால் புட்டிகளை தடை செய்து கனடா அரசு இன்று அறிவித்துள்ளது.

உலகிலேயே முதல் நாடாக முன்னின்று இந்த செயலினை செய்துள்ளதுகனடா!

சரி என்ன பிரச்சனை அந்த பிளாஸ்டிக் பாட்டில்லன்னு கேட்குறீங்களா?

பாட்டில்ல அதிக அளவு சூட்டோட தண்ணீரையோ அல்லது பாலையோ ஊற்றினால் அந்த வெப்பத்தினால் அந்த பிளாஸ்டிக்கில் உள்ள BPA சூடு தாங்கமுடியாம கோவிச்சுக்கிட்டு வெளிய வந்துடுமாம் (வெளியேன்னா புட்டி உள்ள!) அது உடல் நலத்துக்கு கெடுதலாம்!

BPA எனச்சொல்லப்படும் பைஸ்பினால் என்னும் ஒரு வேதிப்பொருள் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாலிகார்பனோடின் முக்கியமான சேர்க்கை ஐட்டமாகும்!இதனால் தயாரிக்கப்படும் புட்டிகள் சீக்கிரத்தில் உடையாமல் கடினமாகவும் இருக்குமாம்

கனடாவில் பெரும்பாலான உணவுப்பொருட்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் இதில் அடைத்துதான் விற்பனை செய்யப்படுகின்றனவாம்!

கிட்ட தட்ட ஒரு வருடகாலமாக தன்னார்வ அமைப்புக்களின் தொடர் நெருக்குதல்களில், சிக்குண்ட கனடா அரசுக்கு இந்த புட்டிகளை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் வெகு காலமாக பயன்பாட்டில் இருக்கும் இந்த புட்டிகள் தீங்கு விளைவிக்க கூடியவை அல்ல,என்று சமாதானப்படுத்தியிருந்தாலும் கூட கடந்த இரு மாதங்களில் பொதுமக்களின் கருத்து கணிப்புகளின் மூலம் கடைசியாக முடிவெடுத்துவிட்டது! தற்போதைக்கு குழந்தைக்களுக்காக தயாரிக்கப்படும் புட்டிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது!

இத்தனைக்கும் உபயோகப்படுத்தும் அளவுக்குத்தான் இந்த வேதிப்பொருள் கலந்துள்ளது. இதனால் பெரும் ஆபத்து இல்லையென்று பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் கூறினாலும் கூட எதிர்காலத்தில் இது போன்ற விஷயங்கள் வளர வாய்ப்பளிக்ககூடாது என்ற முடிவோடு அரசாங்கம் கடுமையாக நடந்துக்கொண்டிருக்கிறது!

நம்ம ஊரு மக்கள் இதுல ரொம்ப புத்திசாலிங்க பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஆற வைத்து, தான் புட்டியில் ஊற்றிக்கொடுக்கிறார்கள் அதனால் வேதி வினை, வேற வினைக்களுக்கு வேலையே கிடையாது!


முடிஞ்சா, குழந்தைகளுக்கு இனி பாலை கிளாஸ் புட்டியில ஊத்தி கொடுங்களேன்....!

கொசுறு சேதி:
இது சம்பந்தமான தகவல் ஏற்கனவே நமது தமிழ்மணத்தின் மருத்துவ வலைபதிவர்களுள் ஒருவரான டாக்டர் புரூனேவின் ஆங்கில வலைதளத்திலும் உள்ளது !

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக எதை உபயோகிப்பது என்பதும் பிரச்சினையாகத் தானே உள்ளது. சிறு குழந்தைகளுக்கு கண்ணாடி பாட்டிலில் பால் கொடுக்க இயலாது. அது இதைவிட பேராபத்தில் கொண்டு போய் விடும்.அதே நேரம் பிளாஸ்டிக் அல்லாத வேறு வகையில் பாட்டில்கள் வர வேண்டும்.

said...

குழந்தைகளுக்கு மட்டுமல்ல,நாமே கண்ணாடி அல்லது செரமிக் கலன்களை உபயோகிப்பது நல்லது.

said...

hmm :) very interesting and informative. thanks for sharing!