கை நிறைய சம்பளம் வாங்குபவர்கள் - பகுதி 1

பல் டாக்டர்கள்:-

என்னதான் நாம கஷ்டப்பட்டு மத்தவன் பல்ல்லை ஒடைச்சாலும்,கரெக்டா இருக்கற மிச்ச மீதி பல்லுங்கள வைச்சு அழகான சீரமைச்சு தர்ற அட்வான்ஸ்டு டாக்டர்கள்தான் இப்போதைக்கு டிமாண்டல் இருக்கற ஆளுங்களாம்!

விண்வெளி விஞ்ஞானிகள்:-

வானத்தை பார்த்தேன்,அதில் பூமியை பார்த்தேன் பாடி திரியிற ஆளாக இருந்தவங்க இப்ப வானத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு பணக்கோட்டையில் உயர்ந்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறார்களாம் ஆஸ்ட்ரானமனி முடிச்சு ஒரு டாக்டர் பட்டம் வாங்கிய கையோடு வெளியே வந்தா கையில டாலர்களை திணிச்சு அப்படியே கொண்டுட்டு போயிட்றாங்களாம்!

தொழில் துறை சார்ந்த மனநல மருத்துவர்கள்:-

இப்போதைய சுழலுக்கு ஒரு ஆபிஸ்ல வேலை பார்க்கிறவங்க சும்மா ஒரு வாரம் வேலை பார்த்தாலே அம்புட்டு மக்களும் மனநலமருத்துவரை தேடித்தான் போகறாங்களாம்! பெரிய பெரிய கம்பெனிகள் ரொம்ப யோசனை பண்ணி எதுக்கு நாம் அவங்கள தேடிப்போகணும் ஒரு போஸ்டிங்க் போட்டுடாலம்னு தனியா அட்வைஸ்ரன்னு ஒரு போஸ்ட் கிரியேட் பண்ணிட்டு ஆளுங்கள தேடி அலையிறாங்களாம்!

கணக்கு வாத்தியார்:-

இந்த போஸ்ட்க்கு உலகம் முழுக்கவும் செம டிமாண்ட்டாம்! உண்மைதானே! - இப்ப நினைச்சா கூட பகீருங்குது! ஈவன் ஐ ஆம் ஆல்சோ திங்கிங்க் ஹெள ஐ பாஸ்ட்டு அவுட் ப்ரம் திஸ் சப்ஜெக்ட்! - (ரகசிய பாஷை! மொழி புரியாதவங்க மெயிலுங்க!)

அணு உலை இயக்குநர்கள்:-

உண்மையிலேயே ரொம்ப ரிஸ்க்கான வேலையாம் பின்விளைவுகள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்! அட கொட்டி கொட்டி குடுக்க தயாரா இருந்தா வாங்கி குவிக்க நம்ம ரெடிதானே!

அரசியல் ஆய்வாளர்கள்:-

நல்ல காசாம்! ஆய்வு செஞ்சு ஆய்வு செஞ்சு சம்பாதிக்கலாமாம்! உலக நாடுகளின் வரலாறு அப்புறம் உள்ளூர் வரலாறு இப்படி எல்லாத்தையும் கரைச்சு குடிச்சவங்களாம்!
நான் அடிக்கடி பிபிசி தமிழோசையில மட்டும்தான் கேள்விப்பட்டதுண்டு இந்த வாசகத்தை! ஆமாம் நம்ம தமிழ்நாட்டுல யாராவது இது மாதிரி இருங்காங்களாப்பா?

இதுல ஏதோ ஒரு பீல்டுல நாம இருக்கோம்ம்னு பெருமை பட்டுக்கிற மாதிரி இல்லையேன்னு ஒரே ஏக்கம் ஏக்கமா வருதுங்க அதான் பக்குனு ஒரு பார்ட்டா நின்னுப்போச்சி!

அடுத்த பார்ட்ல மிச்ச மீதி இருக்கறவங்களையும் அள்ளிட்டு வர்றேன்!

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

என்னத்த சொல்ல.. எங்களை மாதிரி ஆளுங்களெல்லாம் பாத்து வாயைப் பொளக்க வேண்டியது தான் :))

said...

/ஈவன் ஐ ஆம் ஆல்சோ திங்கிங்க் ஹெள ஐ பாஸ்ட்டு அவுட் ப்ரம் திஸ் சப்ஜெக்ட்! //////
தொறை இங்கிலீபிசெல்லாம் பேசுது... ;))

said...

//தமிழ் பிரியன் said...
/ஈவன் ஐ ஆம் ஆல்சோ திங்கிங்க் ஹெள ஐ பாஸ்ட்டு அவுட் ப்ரம் திஸ் சப்ஜெக்ட்! //////
தொறை இங்கிலீபிசெல்லாம் பேசுது... ;))
/

அய்யோ அய்யோ! என்ன த.பிரியன் இப்படி சங்கேத மொழியெல்லாம் லைட்டு போட்டு காட்டுறீங்க! :(

said...

// தமிழ் பிரியன் said...
என்னத்த சொல்ல.. எங்களை மாதிரி ஆளுங்களெல்லாம் பாத்து வாயைப் பொளக்க வேண்டியது தான் :))
//


நான் என்னமோ அந்த லிஸ்ட்ல முதல்ல இருக்கற ஆளுமாதிரி கழட்டிவிட்டுட்டீங்க :((

said...

///இதுல ஏதோ ஒரு பீல்டுல நாம இருக்கோம்ம்னு பெருமை பட்டுக்கிற மாதிரி இல்லையேன்னு ஒரே ஏக்கம் ஏக்கமா வருதுங்க///


அடுத்தவங்கள பார்த்து ஏங்குறத முதல்ல விடுங்கப்பா!!!

said...

/நிஜமா நல்லவன் said...
///இதுல ஏதோ ஒரு பீல்டுல நாம இருக்கோம்ம்னு பெருமை பட்டுக்கிற மாதிரி இல்லையேன்னு ஒரே ஏக்கம் ஏக்கமா வருதுங்க///


அடுத்தவங்கள பார்த்து ஏங்குறத முதல்ல விடுங்கப்பா!!!
//

ஒன் சைடுல நிஜமா நல்லவனாட்ட்டம் ஏங்காதடான்னு சொல்லுது இன்னொரு சைடுல டேய் பாருடா எம்மாம் சம்பாத்தியம்ன்னு சொல்லுது இந்த பாழா போன மனசு?!

இன்னாப்பா பண்றது?

said...

///ஆயில்யன். said...
ஒன் சைடுல நிஜமா நல்லவனாட்ட்டம் ஏங்காதடான்னு சொல்லுது இன்னொரு சைடுல டேய் பாருடா எம்மாம் சம்பாத்தியம்ன்னு சொல்லுது இந்த பாழா போன மனசு?!

இன்னாப்பா பண்றது?///


என்ன பண்ணலாம் ம்ம்....ஆங்....உங்களுக்கு ரெண்டு மனசா இருக்கு தானே? ரெண்டு ம்ம்.. பேசாமா உங்க பதிவ ரெண்டு போட்டிக்கு அனுப்புறதுக்கு பதிலா நீங்களே போய்ட்டா என்ன?