சித்திரை விஷு - கொண்டாடுவோம்ல :-)

அன்னிய தேசத்தில் (என் மனத்துக்கினிய தேசம்!)

அறுவடை முடியும் காலம்!

இனிமையான வாழ்க்கை!

மகிழ்ச்சியான மனநிலை!

நல்ல உடல் நலத்துடன்,

குடும்பமே இனித்திருக்கும் இனிய விழாவாக, சித்திரை திருநாளாம் முதல் நாள் சித்திரை விஷுவாக கடவுளின் தேசத்தில் கொண்டாடப்படும் விழாவாக திகழ்கிறது - இன்று வரை! (அடுத்த வருடம் விஷு மகரத்திற்கு போகுமா....? - கம்யூனிஸ்ட்கள் இதில் கை வைக்கமாட்டர்கள் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்!)

இந்நன்னாளில் அஷ்ட மாங்கல்யம் எனச்சொல்லப்படும்,
பஞ்சலோக பாத்திரம்
தாம்பூலம்
மஞ்சள் அரிசி
குங்குமம்
கண்ணாடி
புதிய துணி
கொட்டைப்பாக்கு
இந்து மதநூல்களுள் ஒன்று இவை தவிர,

அழகான பூக்கள்
கனிகொண்ணா பூவாம் இது

மற்றும் பழவகைகளுள்,

மாம்பழம்
தேங்காய்
முந்திரி
வாழைப்பழம்
பசுமையான காய்கறிகள்

இவைகளோடு சேர்த்து,

தங்ககாசுகள்
வெள்ளிக்காசுகள்
நெல்மணிகள்
தூய நீர்!

என்று நான் லிஸ்ட் பண்ணி வைச்சிருக்கிற எல்லா ஐட்டங்கள் அனைத்தையும் அழகாக அடுக்கி பூசை அறையில் முதல் நாள் இரவே எடுத்து வைச்ச்கிக்கிட்டு காலையில வீட்ல இருக்கற பெரியவங்க மத்தவங்கள எழுப்பி அழைத்துக்கொண்டுப்போய் காமிப்பாங்களாம்!

இது போன்ற பொருட்களை காண்பதன் மூலம் எதிர்வரும் அந்த வருடம் மிக இனிமையான வருடமாக செல்வம் கொழிக்கும் வருடமாக, எனபது அவர்களின் நம்பிக்கையாம்!

நாமும் அது போலவே செய்து பார்க்கலாமே என்றுதான் இத்தனை டீடெயிலா சொல்லியிருக்கேன்!

அது மட்டுமில்ல.......!

நானும் அழகா பூக்கள் படம் போட்டிருக்கேன்!

நீங்களும் வாரத்தின் முதல் நாளாம் இன்று இதை பார்த்துட்டு அப்புறமா வேலைக்கு போங்க!

நல்ல சுபிட்ஷமா இருக்கும்!





(என்ன மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கா? அப்பன்னா எனக்கு விஷு கை நீட்டம் கொடுங்கப்பு! - அவங்கவங்க மனசுக்கு தோணுனபடி தங்க காசுகளாகவே தரலாம்! தாராளாமா வாங்கிக்க நான் தயார்!)

10 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆயில்யன் கலக்கிட்டீங்க!!!!

said...

கம்யூனிஸ்ட் உள்குத்தோடு பதிவு அருமை, கடைசி ரண்டு படம் போட்டுக் கவுத்திட்டீங்க ;)

said...

நல்லாயிருக்கு பதிவு.....ஆமாம், கடைசி 2 படங்கள் தெரியல்லையே?

said...

//மதுரையம்பதி said...
நல்லாயிருக்கு பதிவு.....ஆமாம், கடைசி 2 படங்கள் தெரியல்லையே?
//

அய்யோ!

என்னது படம் தெரியலையா?

அப்புறம் எது நல்லாயிருக்குன்னு சொல்றீங்க??????

said...

முதல் படமே கேரள் பெண் குட்டி எதிர்ப்பார்த்தேன்..

ஆனால் கடைசியிலாவது போட்டு ஆறுதல் கொடுத்தீங்க...

உங்க சேச்சிக்கு என் வாழ்த்துக்கள்... :P

said...

//TBCD said...
முதல் படமே கேரள் பெண் குட்டி எதிர்ப்பார்த்தேன்..

ஆனால் கடைசியிலாவது போட்டு ஆறுதல் கொடுத்தீங்க...

உங்க சேச்சிக்கு என் வாழ்த்துக்கள்... :P
/

அண்ணனுக்கு நன்றி!

said...

அண்ணாத்தே! கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது.... இப்ப தான் புத்தாண்டு புத்துணர்ச்சியா இருந்தது... ஹிஹிஹி :)))

said...

அடடா.. போட்டோஸ் சூப்பரு,, தெனமும் இப்டி விஷு கொண்டாடினா நல்லாயிருக்கும்ல்ல..:))

said...

'விஷு'வல் வாழ்த்துகளா!! நடக்கட்டும் நடக்கட்டும்!! :))

said...

///இலவசக்கொத்தனார் said...
'விஷு'வல் வாழ்த்துகளா!! நடக்கட்டும் நடக்கட்டும்!! :))//


நல்லா இருக்குல்ல ?? :))))))))))