APRIL - 02 KIDS BOOKS DAY - உலக சிறுவர் நூல் நாள்

அட...! இதுக்கு ஒரு நாளான்னு ஆச்சர்யபடவைக்கும்
லிஸ்டில இந்த சிறுவர் நூல் நாளையும் இனி சேர்த்துக்கவேண்டியதுதான்!

உலக சிறுவர் நூல் நாள் 1967 லேர்ந்து சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு நாள் நாளாக இருக்குதாம்! (எப்படித்தான் யோசிப்பாங்களோஓ...!)
சிறுவர் சிறுமியருக்கு, சிறு வயது முதலே புத்தகங்கள் மீதான ஆர்வத்தை உண்டாக்கவும்,சிறுவர் சிறுமியருக்கான தனித்துவம் வாய்ந்த வகையிலான புத்தகங்களின் எண்ணிக்கையை பெருக்குவதுமே இந்நாளின் மிக முக்கியமான நோக்கமாம்!
இந்நாளினை உலகெங்கும் பல்வேறு தனித்தனிபிரிவுகளாக செய்லபட்டுவரும் தன்னார்வ அமைப்புக்களின் ஒருங்கிணைந்த அமைப்புத்தான்
IBBY என்றழைக்கப்படும் உலக சிறுவர் நூல் வாரியம்

ஒவ்வொரு வருடமும் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை ஒட்டிய சிறார்களின் நூல் கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலமைந்த அழகிய வண்ண படங்கள் இந்த சிறுவர் புத்தக வாரியத்தால் வெளியிடப்படுக்கின்றது

சமீப வருடங்களில் வந்த தீம்களின் அணிவகுப்பினையும் மற்றும் நாடுகளின் விபரங்களை இங்கு காணலாம். இது கடந்த 2005 ஆம் ஆண்டிற்கான சிறுவர் புத்தக நாளின் இந்திய நாட்டின் தீம் போஸ்டர்!


இந்த வருடத்தின் தீம் போஸ்டர் தாய்லாந்து நாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படையில் அழகான ஒரு ஒவியமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் சிறார்களுக்கு சிறுவயதில் முதலில் சொல்ல துவங்கும் கதைகள் புத்த சமயத்தின் அடிப்படையிலமைந்தவையாம்!

படத்தினை காண்கையில் ஒரு அழகான கவிதை கதை படித்துக்கொண்டிருக்கும் காட்சி ஓவியமாக புலப்படுகிறதா?

நாளினை கடப்போம்!

நாளும் நூல்களை கற்போம்!

சிறார்களுக்கு கற்பிப்போம்!

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

தகவல் களஞ்சியமா இருக்கீங்களே ஆயில் ! உங்க காத்து கொஞ்சம் எங்க பக்கமும் அடிக்கட்டும் :)

said...

யோவ் உன் பதிவுல கும்மியடிக்கலாம்னு பார்த்தா கமெண்ட் மாடரேசன் பண்ணி வச்சிருக்கீங்க??? சின்னப்புள்ளத்தனமா!!!!!!!! அனானிகளும் அலவ்டு இல்லையா??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

nice..:) போட்டோ ரெண்டுமே அழகு..மற்ற போட்டோக்களை பார்க்கவில்லை.அதை தவிர இன்று உலக ஆட்டிஸம் டே கூட...(ஏப்ரெல் 2)....!

said...

ஆயில்யன் ரொம்ப நல்ல நல்ல பதிவா போடுறீங்க. தொடருங்கள். வாழ்த்துக்கள்.