மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?



மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்

விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்

சம்பந்தமில்லாதவையாக

கர்நாடகத்தில் நல்ல அரசு அமையட்டும்!

நம் மக்களுக்கு நல்ல குடிநீர் கிட்டட்டும்

அது வரையில் அமைதியாய்

காத்திருப்போம்!

இந்த இசையில் லயித்தபடி....!

பெற்றான் தமிழன் என்று வரலாறு சொல்வதைவிட,

பொறுத்தான் தமிழன் என்று வரலாறு சொல்வதில் அல்லவா மகிழ்ச்சி....!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

\\பெற்றான் தமிழன் என்று வரலாறு சொல்வதைவிட,

பொறுத்தான் தமிழன் என்று வரலாறு சொல்வதில் அல்லவா மகிழ்ச்சி....!//

அப்படியா.. ??

பொறுத்தால் எதும் கிடைக்கும்ன்னா சரி இல்லன்னா .. "பொறுமை.. பொறுமை என்றால் பொறுமைக்கு ஏதடா மகனே பெருமை" தான் நியாபகம் வருது.. :)

எதையும் சாதுரியமா யார் மனசும் நோகாம வெற்றியாக்கிக்குவான் தமிழன்னு சொல்ல வைக்கலாம் ன்னு என் விருப்பம்.

said...

///கயல்விழி முத்துலெட்சுமி said...
எதையும் சாதுரியமா யார் மனசும் நோகாம வெற்றியாக்கிக்குவான் தமிழன்னு சொல்ல வைக்கலாம் ன்னு என் விருப்பம்.///



வழிமொழிகிறேன்.

said...

தண்ணீர் விஷயத்தில் தமிழன் பொறுத்து வெற்றி பெறுவது இல்லையென்றே தோன்றுகின்றது. காவிரி, கிருஷ்ணா, பெரியார் அனைத்திலும் தமிழ்நாட்டிற்கு தோல்வியே :( இப்போது ஒகெனக்கல் பயத்தை அதிகமாக்கி உள்ளதே அன்றி வேறில்லை. ஆனாலும் நல்லதையே நினைப்போம்....

said...

எத்தனை மாநில அரசுகள் வந்தாலும் மக்களை உணர்ச்சிபூர்வமாக வைத்திருக்கவே விரும்புவாங்க, மத்திய அரசின் கடும் சட்டங்களாலேயே தீர்வை எட்டமுடியும் என்று நினைக்கிறேன். கலைஞர் ஏதோ கணக்கோடு தான் காத்திருக்கிறார், நன்மை வந்தால் மகிழ்ச்சியே.

said...

முதலில் திருப்பதி போச்சு(சென்னைக்காக)-ஆந்திராவுக்கு
அடுத்து கச்சுத்தீவு(நல்லுறவுக்காக) போச்சு-இலங்கைக்கு
அதைஅடுத்து தேவிகுளம்,பீர்மேடு (தென்குமரிக்காக)போச்சு-கேரளத்துக்கு
அடுத்து காவேரி நீர் உரிமையா?(????????????)-கர்நாடகாவுக்கு

said...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.