எனக்கே எனக்காய் அதிகமாய் எடுக்கப்பட்ட பல ஜோடி நீலநிற செருப்புகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எனக்காக பட்ஜெட்டில் 15 ரூபாய் ஒதுக்கபட்டுவிடும்,அந்த காசினை கொடுக்கும் சமயங்களிலும் சரி,அதன் பின்னரும் சரி வரும் அட்வைஸ்களில் காலை தூக்கி நடடா! அதிகமாக இருக்கும்! - பிற்பாடுதான் உணர்ந்தேன் காலை தூக்கி நடக்க அதுவரையிலும் எனக்கு தெரிந்திருக்கவில்லை எதற்கு இரண்டு மாதத்திறகு ஒரு முறை எனக்கு 15 தேவைப்படுகிறது என்று!
ரோடு வலிக்க நான் நடந்தேனாக்கும் !
வெள்ளை நிறத்துடன் நீல நிற வாரினாலோ ஆனா அந்த ஜோடி ஹவாய் செருப்புகள் தான் இந்திய திருநாட்டில் இன்றும் பலருக்கு பாத காவலன் !
சிலருக்கு இது பாத்ரூம் செருப்பு என்ற வெறுப்பு கூட உண்டு ஆனால் அவர்களுக்கு தெரியாது இது கூட இல்லாமல் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இன்றும் உண்டு நம் நாட்டில் என்று..!
பள்ளிகளில் இலவச திட்டங்களில் பாத அணிகள் உண்டு என்றாலும் கூட அவரவர் அளவுக்கு வாய்ப்பது என்பது ரொம்ப கஷ்டம்தான். இன்னும் கூட நீஙக்ள் நம் பள்ளி குறிப்பாக கிராமங்களில் பல மாணவர்களும் செருப்பின்றி செல்வதை காண இயலும்! ஆள்பவர்கள் ஒருவருக்கும் கூட இதில் ஆர்வம் இல்லை ஒரு முறை காண்டிரக்ட் விட்டு கமிஷன் எடுத்துகொண்டால் எதையுமே கண்காணிக்கமாட்டர்கள் நம் தமிழ் அகத்து அரசியல்வாதிகள்!
வருடந்தோறும் இதன் தேவை அதிகரிப்பது ஏப்ரல் மற்றும் மே மாத காலங்களில்தான்! அதுவும் வெயில்காலத்தில் நம்மூர் சாலைகளில் போடப்பட்டிருக்கும் தாரினை நீங்கள் மொண்டு கூட எடுத்து செல்லலாம் அப்படியான ஒரு லட்சணத்தில்தான் நம்மூர் சாலைகள் பணி ஒப்பந்தகாரர்களின் செயல் இருக்கும் இந்த நிலைமையில், பாத அணி இல்லா பாதசாரிகளின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப்பாருங்களேன்!
ஹவாய் செருப்புகளும் இரண்டு மாதங்களும்!
# ஆயில்யன்
Labels: என் உள்ளத்தில்
Subscribe to:
Post Comments (Atom)
8 பேர் கமெண்டிட்டாங்க:
/// என் உள்ளத்தில் ///
இம்புட்டு நல்லவரா நீங்க... :)
///பள்ளிகளில் இலவச திட்டங்களில் பாத அணிகள் உண்டு என்றாலும் கூட அவரவர் அளவுக்கு வாய்ப்பது என்பது ரொம்ப கஷ்டம்தான். ///
தமிழகத்தில் இலவச செருப்பு திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்....:(
என்ன செய்யலாம் ஆயில்யன்..
இப்போ எனக்கே செருப்புப் போட குற்ற உணர்வு வந்துடும்னு இருக்கே.
என்னால் முடிந்தவரை வாங்கிக்கொடுக்கிறேன்.
நானே பார்த்திருக்கிறேன் இந்தக் குழந்தைகளை.
//தமிழ் பிரியன் said...
/// என் உள்ளத்தில் ///
இம்புட்டு நல்லவரா நீங்க... :)
//
இப்படியா பப்ளிக்கா கேட்கறது எனக்கு வெட்கம் வெட்கமா வருதுங்கோ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))
தமிழ் பிரியன் said...
///பள்ளிகளில் இலவச திட்டங்களில் பாத அணிகள் உண்டு என்றாலும் கூட அவரவர் அளவுக்கு வாய்ப்பது என்பது ரொம்ப கஷ்டம்தான். ///
தமிழகத்தில் இலவச செருப்பு திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்....:(
சரிதான் போல ;(
//வல்லிசிம்ஹன் said...
என்ன செய்யலாம் ஆயில்யன்..
இப்போ எனக்கே செருப்புப் போட குற்ற உணர்வு வந்துடும்னு இருக்கே.
என்னால் முடிந்தவரை வாங்கிக்கொடுக்கிறேன்.
நானே பார்த்திருக்கிறேன் இந்தக் குழந்தைகளை.
//
நன்றி அம்மா !
உங்களால் முடிந்த உதவிகளை தொடருங்கள்
வாழ்த்துக்களுடன்.....!
hmm... kashtama thaanga irukku.
எவ்வளவோ வீணான விஷயங்களுக்குச் செலவளிக்கும் அரசு நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு இது போன்றவைகளை இலவசமாகக் கொடுத்து உதவலாமே.
உங்கள் பதிவு மனதுக்கு மிகவும் கவலையளித்தது.நல்ல மனது உங்களுக்கு வாய்த்திருக்கிறது.வாழ்த்துக்கள் நண்பரே :)
Post a Comment