தந்தி கம்ப ஸ்டாப்புல இறங்கிக்கிறேன்ப்பா :-)

ஓவர் மப்புல வர்றவங்களுக்கு ஸ்டாப் அல்லது ஸ்டாப்பிங்க இது மாதிரி மின்கம்பங்களும் காம்பவுண்ட் சுவர்களும் முள் வேலிகளும் ரொம்ப யூஸ்புல்லாக இருந்தனவாம்!

சில சமயங்களில் அரசே ரொம்ப ஆய்வுகள் செய்து இன்னும் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யணும் அப்படின்னு நினைச்சதன் வெளிப்பாடுதான்ல இது!

அப்படியே நேர வந்து முட்டி விழுந்து அவங்கவங்க வீட்டுக்கு போறதுக்கு சூப்பரா இருக்குல்ல....!

கொஞ்சம் நினைச்சு பார்த்தா சிரிப்பா இருக்கு ஆனாலும் ...படத்துக்கு பின் உள்ள சோகத்தில் சில...!

பட்டுக்கோட்டை அருகே நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேலமங்கனங்காட்டில் ஆர்.ஆர்.சாலை உள்ளது. இச்சாலையின் நடுவே பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மின்கம்பம் ஒன்று இருக்கிறது. மின் கம்பத்தில் விளக்கு பொறுத்தப்பட்டிருந்தாலும் வளைவான இடத்தில் உள்ள இந்த மின்கம்பத்தால் விபத்துகள் எந்நேரமும் ஏற்படலாம். மேலும் இச்சாலையில் ஒரு மினி பஸ்சும் செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த மின் கம்பத்தினை அகற்றி சாலையின் ஓரத்தில் நடும்படி ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் அதிராம்பட்டினம் மின்சார வாரியத்துக்கு கடந்த ஓராண்டாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நான் தான் பர்ஸ்ட்!
சரி பதிவ படிக்க போறேன்.

said...

///இந்த மின் கம்பத்தினை அகற்றி சாலையின் ஓரத்தில் நடும்படி ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் அதிராம்பட்டினம் மின்சார வாரியத்துக்கு கடந்த ஓராண்டாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது///


அடப்பாவிகளா ஒரு வருஷமா கோரிக்கை வச்சும் மாத்தலையா?

said...

இங்கே பெட்டிஷன் போடலாமா? எங்க ஊர்ல ஒரு வாரத்துக்கு ஒரு தடவை தான் குடிதண்ணீர் வருது...
அப்பாவி கிராமத்தான்..

said...

நல்லா இருக்கு இந்த முயற்சி :)

said...

நாங்க முன்பிருந்த வீட்டுப்பக்கத்தில் இப்படி ஒரு மின்கம்பம் இருந்தது.. இரவில் அந்த கம்பம் கொஞ்சம் தெரியும். ஆனா அதிலிருந்து ஒரு கம்பி இரண்டு பக்கமும் தரையோட இணைக்கப்பட்டிருக்கும் சாய்வாக அது இருட்டில் தெரியாது.. அங்கயே குடியிருப்பவங்களுக்கு தெரியும் . ஆனா வீட்டுக்கு விருந்தாளியா வரவங்களுக்கு தெரியாதே.. அவங்க அபார்ட்மெண்டை இப்படி சுத்தி அப்படி போனா ரோடு வரும்ன்னு மட்டும் சொல்லிடுவாங்க.. அவர்களும் வீடு இருக்கற இடத்துல வேகம் குறைக்கனும்ன்னு இல்லாம சர்ன்னு எடுத்துட்டு வந்து கம்பியில் மோதி நிறுத்துவாங்க சிரிப்பா இருக்கும்.. ஆனா என்னைக்கு இப்படி கம்பம் ஆடி தீப்பொறி கிள்ம்புரதோட நிக்காம கரெண்டும் கட்டாகுமோன்னு பயமா இருக்கும்.

said...

இதுக்கு எல்லாம் வழக்கம் போல கோரிக்கை வைக்கிறதுல புண்ணியம் இல்லை.. தமிழகமின்சார வாரிய இணையதளத்தில் மின்துறை உயரதிகாரியின் மின்னஞ்சல் முகவரி இருக்கும். உங்க ஊர்க்காரங்க எவ்வளவோ பேர் இணைய இணைப்புடன் இருப்பீங்க. எல்லாரும் தினமும் ஆளுக்கு 500 மெயில் அனுப்புங்க அந்த முகவரிக்கு... அந்த மின்னஞ்சல்களை அழிக்கிற வேலையை விட உங்க கோரிக்கையை நிறைவேற்றுவது சுலபம் என்று உங்க கோரிக்கையை நிறைவேற்றிவிடுவார்கள். :) முயற்சித்து பாருங்க.

said...

//SanJai said...
இதுக்கு எல்லாம் வழக்கம் போல கோரிக்கை வைக்கிறதுல புண்ணியம் இல்லை.. தமிழகமின்சார வாரிய இணையதளத்தில் மின்துறை உயரதிகாரியின் மின்னஞ்சல் முகவரி இருக்கும். உங்க ஊர்க்காரங்க எவ்வளவோ பேர் இணைய இணைப்புடன் இருப்பீங்க. எல்லாரும் தினமும் ஆளுக்கு 500 மெயில் அனுப்புங்க அந்த முகவரிக்கு... அந்த மின்னஞ்சல்களை அழிக்கிற வேலையை விட உங்க கோரிக்கையை நிறைவேற்றுவது சுலபம் என்று உங்க கோரிக்கையை நிறைவேற்றிவிடுவார்கள். :) முயற்சித்து பாருங்க.
//

சஞ்சய் அண்ணா! இது அன்னியன் ஸ்டைல்ல இருக்கே இதுக்கெல்லாம் நம்ம மக்க அடங்குவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா???