நலம் தானே ? - உலக உடல் நலம் பேணும் நாள் ஏப்ரல் 7



கார்பன் - டை-ஆக்சைடு மற்றும் இதர வாயுக்கள்.

மழை,வெள்ளம் மற்றும் சூறாவளி காற்று.

அளவினைவிட அதிகரித்த குளிர் அளவினை விட அதிகரித்த வெப்பம்.

காலநிலை மாற்றத்தால் உருவான புது புது வியாதிகள் .

மாறுபட்ட கால நிலைகளால் சில இடங்களில் அதிக மழைப்பொழிவு மற்றும் சில இடங்களில் வறட்சி இது போன்ற காரணங்களால் சுத்தமான நீரை தேடிச்செல்லும் நிலையில் மக்கள்!

அவ்வாறு தொலைதூரங்களுக்கு செல்வதற்கும் வசதியற்ற நிலையில் கிடைக்கும் அசுத்த நீரை குடித்து நோய்களுக்கு ஆளாகும் மக்கள்.

என புதிய புதிய பிரச்சனைகள் முளைத்துக்கொண்டுதான் இருக்கின்றன ஒவ்வொரு நாளும்,

இனி நமக்கு இந்த பூமி செய்யவேண்டிய கெடுதல் ஒன்றுமில்லை!

எல்லா கேடுகளையும் நம்மால் விதைக்கப்பட்டது. விதைத்துக்கொண்டும் இருக்கிறோம்!

அதற்கான பலனை அனுபவிக்கிறோம் அனுபவிக்கவும் போகிறோம்!(மிரட்டல் மாதிரியேதான் என்ன செய்றது!)

நாம் எதாவது செய்தே ஆகவேண்டும்!

நம்மால் முடியும் என்று நீங்கள் நினைத்தால்

தேவையற்ற சமயங்களிலும் வாகனங்களை பயன்படுத்தவேண்டாம்!

நீரை சேமிக்க வேண்டியதை விட மிக அவசியம் நம் தேவைக்கேற்ற அளவு நீரை மட்டுமே பயன்படுத்துதல்!

முடிந்தளவு மற்றவர்களுக்கு இந்த பிரச்சனையின் தீவிரத்தை சொல்லிச்செல்லுங்கள்!

அவ்வப்போது அரசாலோ அல்லது தன்னார்வ அமைப்புக்களாலோ கூறப்படும் விஷயங்களை செயல்படுத்த முயற்சியுங்கள்!

சில மணி நேரங்களுக்கோ அல்லது சில நாட்களுக்காகவாவது இந்த விஷயத்தை மனதில் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள்!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்லா இருக்கு :))

said...

ஆயில்யன் கடகம் என்றால் ஆயில்ய நக்ஷத்திரம் கடக ராசி என்று
பொருள் கொண்டேன். கடக ராசிக்காரர்களுக்கே ஒரு தனிப்பட்ட
குணம் உண்டு. எதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
என நினைப்பார்கள்.
உங்கள் வலைப்பதிவு அதை ஆமோதித்தது.

தோஹாவிலே ஒரு தமிழ் அன்பரா !
வாழ்க வளமுடன்.

சுற்றுப்புறச் சூழலில் உங்களுக்குள்ள ஈடுபாடு பாராட்டுக்குரியது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு. நேரமிருந்தால் வாருங்கள்:
http://vazhvuneri.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

said...

Global warming க்கு அடிப்படை காரணம் வாழும் மனிதர்களின் இயற்கையை மீறிய அதீத பாதகச் செயல்களே .
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

எல்லா சுகாதாரக் கேடுகளுக்கும் மனிதர்களே காரண கர்தாக்கள்.
இதுவரை செய்த மா பாவங்கள்

1.மழை தரும் மரங்களை வெட்டி காசாக்கியது
2.பிளாஸ்டிக் இமய மலைகளை உருவாகியது.
3.விளை நிலங்களை வியாபாரம் பண்ணியது
4.நிலத்தடி நீரை முழு பலத்துடன் மின் மோட்டார் துணை கொண்டு உறிஞ்சியது.
5.கட்டுப்பாடற்ற உலக ஜனத்தொகை பெருக்கம் .

காலம் கடப்பதற்குள் கரை சேர முய லவேண்டும் எனும் உங்கள் பதிவு ஒரு சிலர் கண்னை திறந்தால் உலகுக்கு நல்லது. இல்லை என்றால் ............