Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

ஆதிவாசிகள்

நம் நடைமுறை வாழ்க்கைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதபடியான ஒரு மனித சமூகம் காடுகளில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?

அதுவும் இந்த காலகட்டத்தில் எப்படியாகிலும் ஒன்று நம்மை போன்ற மனிதர்கள் கண்டிப்பாய் காடுகளில் தேடிதிரிந்து கண்டுபிடித்து கொண்டுவரமுயற்சிப்பார்கள்!

அல்லது ஆதிவாசிகளே தட்டுதடுமாறி நகரத்திற்கோ அல்லது நார்மல் மனிதர்களையோ கண்டிருக்கமுடியும் ஆனால் இதில் எதுவுமே நடைப்பெறவில்லை இதுவரையிலும்...!

சிவப்பு நிற வர்ணங்களில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் சிலர் அனேகமாக ஆண்களாக இருக்கக்கூடும்!


கருப்பு நிறம் வர்ணம் அல்லது தங்கள் உடல் நிறத்தினை வெளிப்படுத்திக்கொள்ளும் சிலர் அனேகமாக பெண்களாக இருக்ககூடும்!

எப்பொழுதுமே கொடிய மழையின் பிடியில் சிக்கி தவிக்கும் பிரேசில் - பெரு எல்லைப்புற காடுகளில் காணப்படும் இந்த ஆதிவாசிகள்!

இது போன்ற சூழலினை நீங்க எதிர்பாராமல் காணும்போது உங்களுக்கு தோன்றும் அதே கேள்விகள்தான் அனைவருக்குமே தோன்றுகிறதாம்!

1.ஏன் இவர்கள் வர்ணங்களின் மூலம் வித்தியாசப்படுத்திக்கொள்கிறார்கள்?
2.என்ன சாப்பிடுவார்கள்?
3.எப்படி இவர்களால் இதுபோன்றதொரு குடிசை அமைப்பினை உருவாக்க முடிந்தது?
4.இவர்களின் மொழி என்ன?
5.சமூக அமைப்பு எப்படி இருக்கிறது?

இது போன்ற பலப்பல கேள்விகள்!

இந்த புகைப்படங்கள் விமானத்திலிருந்து எடுக்கப்பட்டதாம்! விமானத்தினை அதிசயமாக பார்க்கும் சிலர் அதே சமயத்தில் ஏதோ ஆபத்து என்று, வில்லினை கொண்டு குறிபார்க்கும் ஆண்கள் என பிரமிப்பினை ஏற்படுத்தும் சமாச்சாரங்கள்தான் இவை!

ஆதிவாசிகள் வாழ்க்கை இப்படியே சென்றாலும் ஒன்றும் யாருக்கும் பிரச்சனையே இல்லையென்றாலும் கூட இவர்களின் பாதுகாப்புக்கு நம்மால் எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாது என்பதுதான் இப்போதைய கவலை!

ஏற்கனவே பெரும்பாலும் அழகிய இயற்கை சார் இடங்களில் வாழ்ந்து வந்த ஆதிவாசிகளை மிரட்டி பணியவைத்து நிலங்களை சூறையாடிக்கொண்ட பிரபுக்கள் பரம்பரையினரை போன்று வேறு எவரும் வந்து இவர்களின் வாழ்க்கையினை சீரழித்துவிடக்கூடாது என்ற கருத்தினையே பல ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்!

இது போன்ற ஆதிவாசி மக்களின் வாழ்க்கையினை நாம் மதித்து அவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்களின் வாழ்க்கை பயணத்தை தொடரச்செய்யவேண்டும்! அவர்களுக்காய் எப்பொழுது எந்த மாதிரியான தொடர்புகளாக நம் நாகரீக வாழ்க்கை முறைக்கு மாற வருகிறார்களோ, அப்பொழுது வரட்டும் அது வரையிலும் ஆராய்ச்சி என்ற பெயரில் கூட,அவர்கள் வாழ்வில் அதிகம் குறுக்கிடவேண்டாம் என்பதே மனிதாபிமானமுள்ள ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்தாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது!

நாம் நம் நார்மல் வாழ்க்கையினை நாகரீகமாக வாழ்ந்து இயற்கையினை நாசப்படுத்திசெல்வோம்!

ஆதிவாசிகள் - அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்!

எனது நினைவுகளில்.....
இதே போன்றதொரு சம்பவமாக டிசம்பர் 26 2004ல் நிகழ்ந்த சுனாமி பேரழிவில் கடும் பாதிப்புக்குள்ளான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட சென்றிருந்த, அரசின் ராணுவ விமானம் ஒரு காட்டு பகுதியினை கடந்து வருகையில் இதே போன்றதொரு ஆதிவாசி உருவம் கையில் அம்புடம் துரத்தி வந்த காட்சியினை போட்டோவாக "ஹிந்து" நாளிதழின் கடைசிபக்கத்தில் வெளியிட்டிருந்தது இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது! யாருக்காவது அது சம்பந்தமான சேதிகள் தெரிந்திருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்!

photo courtesy : survival - international
Daily mail

கேரளம் - எனக்கு இஷ்டமாயீட்ட ஸ்தலத்திலிருந்து......!

நம்ம என்னதான் குறை சொன்னாலும் பாருங்க எனக்கு வல்லிய இஷ்டமாயீட்ட பூமியிலேர்ந்துதான் மக்கள் - பெரும்பாலும் ஆண்கள் - போய் காலகணக்கின்றி சம்பாத்தியம் அரபு நாட்டு காசை அன்னை மண்ணுக்கு அனுப்போ அனுப்புன்னு அனுப்பிக்கிட்டே இருக்காங்களாம்!

இந்த மாதிரி மாநிலத்தோட வருவாயின் மூன்றாவது சோர்ஸாக எனக்கு இஷ்டமாயீட்ட ஸ்தல மக்கள் ,அங்க நினைச்ச நேரத்துக்கு ஸ்ட்ரைக்கு பண்ண முடியுது நினைச்ச நேரத்துக்கு மழைப்பெய்து நினைச்சு நினைச்சு பெருமூச்சு விடும் அளவுக்கு அழகிய பெண்களின் அவதாரங்கள் அந்த பூமியில் திகழ்ந்துக்கிட்டிருக்கு!

வெளிநாடுகளிலிருந்து எண்ட கேரளத்து மக்களிடமிருநது வரும் தொகை சுமாராக 40சதவீகிதம் வெளிநாட்டு வருவாயாக உள்ளதாம் நம் தேசத்துக்கு !

2 மில்லியன் மக்கள் நிரந்தரமாக வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்களாம்,சுமார் ஒரு மில்லியன் மக்கள் சும்மா போய்க்கிட்டும் வருமானத்தை சம்பாதித்து வந்துக்கொண்டும் இருக்கிறார்களாம்!

இந்த மக்களின் உழைப்பில் பெறும் பணம் கேரளாவின் வளர்ச்சியை எளிதாக எடைப்போட்டுக்காட்டுகிறதாம், பெருகிவரும் கட்டிடங்கள் வியாபார ஸ்தலங்கள் மக்களின் வாங்கும் தன்மை பெருகுதல் என எல்லாவற்றிலும் அயல்நாட்டு பணம் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது.

பலரும் தாம் அரபு மண்ணில் சம்பாதித்த பணத்தை கொண்டு அன்னை மண்ணில் அழகிய வேலைப்பாடுகளமைந்த பழங்காலத்து முறையிலமைந்த வீடுகளை கட்டி மினி அரபு தேசமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்களாம்!
எனக்கும் கூட ஆசைதான்! யாராவது வீடு ”கட்டி” தருவார்களா..?

குறிப்பு:-

மக்கா! யாருக்காவது பொறாமை இருந்தா மெதுவா அந்த ஆமைய ஒட்டிக்கிட்டு அந்தாண்ட போயிடுங்க அதவிட்டுட்டு, என்ன ஆயில்யன் உங்க சேச்சிங்க போட்டோவா போட்டுருக்கீங்கன்னு? எதாவது சவுண்ட் வந்துச்சு.....?!

தீனி பண்டாரங்களாய்...?!?




எங்கயாவது பசங்க வெளியூருக்கோ அல்லது பல நாட்கள் வெளியிலோ சென்று வந்தால் கண்டிப்பாக அன்றைய முதல் உணவுப்பொழுதில், இந்த வார்த்தைகளை கேட்ககூடும் உப்பு சப்பில்லாத சாப்பாட சாப்பிட்டிருப்பான்! ராசா உனக்கு இந்தாடான்னு ஆசை ஆசையா வகை வகையா பரிமாறும் பாட்டிகளிலிருந்து அம்மாக்கள் வரை அனைவரிடமிருந்தும் இந்த சொல் வெளிப்பட்டிருக்கும்:)

இன்றைய நாளில் இதெல்லாம் சர்வ சாதரணமாக மறந்துப்போய், பணமிருப்பவர்கள் மனமின்றி வாங்கி தின்னும் பழக்கத்தோடு பொருட்களின் வகைகள் கூடிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனால் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் விட மிக முக்கியமான கவலைக்குரிய விஷயம் வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் வாரிசுகள்தான் இளையதலைமுறைகளுக்கு,என்னமாய் கற்று தந்திருக்கிறார்கள் அழகாக சாக்லேட்டுகள் சாப்பிடவும்,இன்னபிற பெயர் வாயில் நுழையா பொருள் வாயினுள் நுழைத்து,இளம் வயதிலேயே நோயினை வரவழைத்துக்கொண்டு படாத பாடு படுவதை பலரும் நேரில் காணலாம்!

நொறுக்கு தீனிகள் என்றழைக்கப்படும் இவ்வகையான உணவுப்பொருட்கள் அந்த நேரத்தில் மட்டுமே நல்ல சுவையாக தோன்றினாலும் அதனால் உடலுக்கு ஒரு பலனும் இல்லை! இது போன்ற உணவுகளும் நல்ல அழகிய வண்ணங்களில் பலரையும் கவரும் வகையில் விற்பனைக்கு பயன்படுத்தப்ப்டுகின்றன அது மட்டுமல்லாமல் அதை வாங்கி தின்றால்தான் தங்களது கெளரவம் வெளியுலகுக்கு தெரியும் என்கிற ரீதியில் கூட மக்கள் மனதை மாற்றி வைத்துள்ளனர் விற்பனையாளர்கள்!

வரும் நோய்களை பற்றியும் சற்று தெரிந்துக்கொள்வோம் அதிக அளவு நொறுக்கு தீனிகள் அதே அளவு கொழுப்பினையும் கொண்டுவரும் கூடவே...!அதிக கொழுப்பு கல்லீரலினை காயப்படுத்தலாம், டயாபடிக் சார்ந்த நோய்கள்,நரம்பு தளர்ச்சி,சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகள் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் அனைத்துமே அடங்கியுள்ளது இது போன்ற நொறுக்கு தீனிகளுள்!

நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!

நோய்களை தேடி நாம் செல்வதை தவிர்ப்போம்!

அப்துல் கலாம் ஆசை - நிறைவேற்ற இயலுமா?



எம்.பிக்களுக்கு படிப்பு!

ஐந்து வருட எம்.பி பதவியை ஆறு வருடங்களுக்கு அதிகரித்து, முதல் ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு,பதவியில் -மக்கள் பணியில்- சேவை(!?) செய்வது எப்படி என்று புகழ்பெற்ற கல்விநிறுவனங்களில் பயிற்சி அளிக்கலாம் என்றதொரு ஆசை யோசனையை தெரிவித்துள்ளா!

தற்போதைய எம்பிக்கள் பெரும்பாலும் தாம் சார்ந்த அரசியல்கட்சிகளின் வழிகாட்டுதலின்படியே செயல்பட்டுவருகின்றனர்,இது போன்ற துறை சார்ந்த படிப்புகள் அவர்களை மிகசிறந்த மக்கள் தொண்டர்களாக மாற்ற உதவும் என்பது அவரது கருத்தின் சாரம்சமாகும்!


உணவு உற்பத்தி!

மேலும் உணவுப்பொருட்கள் சார்ந்த துறையில் மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, உற்பத்தி திறனை பெருக்க வேண்டிய வழிமுறைகளை இப்போதிலிருந்தே தொடங்குவது அவசியமென்றும், இந்தியாவின் தற்போதைய உணவு உற்பத்தியான சுமார் 200மில்லியன் டன்கள்.

இதைவிடவும் நமக்கு தட்டுப்பாடுகள் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கும் நிலையில் நாம் குறைந்தது 340 மில்லியன டன்களை உற்பத்தி இலக்காக நிர்ணயித்து,நம்மிடமுள்ள குறைந்துகொண்டிருக்கும் விளைநிலங்களை (170 மில்லியனிலிருந்து 100 மில்லியன் ஹெக்டருக்கு குறையும்) பயன்படுத்தி, குறைந்து வரும் இயற்கை வளமான தண்ணீரையும் கணக்கில் வைத்து நம் ஆராய்ச்சிக்ளை மேற்கொள்ளவேண்டியது மிக அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்!

இதெல்லாம் நம்மால முடியுமான்னு சந்தேகமாத்தான் இருக்கு?

ஆனாலும் நம்ம ஆள்தானே சொல்றாரு முடியும்னு!

நம்பிக்கையா இருப்போம்!

வானத்தை பார்த்தேன் - கூகுள் ஸ்கையில்!

சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது கூகுள் - ஸ்கை

சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தாலும் கடந்த வாரத்தில் உலகின் அனைத்து பகுதிகளிலும்,அனைவரும் எளிதில் எந்த ப்ரெளசரின் உதவியுடன் டெலஸ்கோப்பில் பார்ப்பது போன்று அழகாக காண வழிவகை செய்துள்ளது கூகுள்!



இப்போதைக்கு நிலவினையும் செவ்வாய் கிரகத்தினையும் காண முடியும்!

பரந்து கிடக்கும் உலகை பற்றி பதிவுகளில கூறுவது அடியேனின் அறிவுக்கு ஒவ்வாத செயலாதலால்,ரொம்ப இன்ட்ரஸ்ட் உள்ளவங்க,
இங்கன போய் பாருங்களேன்! தகவல்களுக்கு