ஏப்ரல் 18ல் சமூக கலாச்சார மரபுகளை மதித்து கொண்டாடுஙகள்!



ஏப்ரல் 18 உலக மரபு நாளாக உலக முழுவதும் 1982 ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

இந்த நாளில் இந்திய தொல்பொருள் துறை மக்களை நாடி தேடி வருகிறது நாட்டில் உள்ள பழங்கால மரபு கலாச்சாரங்களின் எச்சங்களினை பாதுகாக்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியபடியே......!

முதல்கட்டமாக மத்திய பிரதேசத்தில் போபாலில் மட்டுமே உள்ள சுமார் 50 க்கும் அதிகமான பண்பாட்டு சின்னங்களில் மத்திய அரசின் கீழும் மாநில அரசிடமும் உள்ளவற்றை பாதுக்காப்பதே,இந்த ஆண்டின் மரபு நாளின் முக்கிய நோக்கமாக இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது

இந்த நாளில் நாம் நம் மரபுகள் மற்றும் பண்பாடு சார்ந்த பழங்கால ஆதாரச்சான்றுகளின் அடியொட்டி அதை பாதுகாத்து இருக்கும் சமுதாயத்திற்கும் இனி வரும் சமுதாயத்திற்கும் நம் சமூக வாழ்வின் வரலாற்றினை அறியசெய்வோம் உலகுக்கு தெரிய செய்வோம்!

உலகையே எடுத்துக்கொண்டால் மொத்தம் 812 இடங்கள் இருக்கிறதாம் கலாச்சாரம் மற்றும் இயற்கையான அதிசயங்களாக அவை காட்சியளித்துக்கொண்டிருக்கிறதாம்!

நம் இந்தியாவில் மொத்தம் இருக்கும் 27 பண்பாட்டு சின்னங்களில் 5 இயற்கையாக அமைந்தவையாம் (படத்துல் போட்டிருக்காங்க!)



என்னதான் புதுபுது பில்டிங்குகள் வானை அளக்க நீண்டாலும், நமக்கு பழைய கட்டிடங்கள் மீது தானே எப்போதும் காதல் வருகிறது:-)

எனவே...

உலகுக்கு உன்னதம் சொன்ன நம் சமூக கலாச்சாரமரபுகளை காத்திருப்போம்!

பார்த்து பார்த்து பாதுகாத்து களித்திருப்போம்!

இனி...


நன்றி Archaeological Survey of India (ASI)

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நமது வருங்கால சமூகத்திற்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியவை சுத்தமான பூமியும், நல்ல கலாச்சாரங்களையும்...
அப்படிப்பட்ட கலாச்சாரங்களை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமை... நல்ல பதிவு. :)

said...

படங்களுடன் வெளியிட்டு தஞ்சை தரணிக்கு புகழ் சேர்த்தமைக்கு
நன்றி!

அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

இன்னும் என்னென்ன தினம் எல்லாம் இருக்குபா? தினமும் ஒரு தினம் கொண்டாட சொல்லுறீங்களே ஆயில்யன்? நல்லா இருக்கு பதிவு.

said...

//உலகுக்கு உன்னதம் சொன்ன நம் சமூக கலாச்சாரமரபுகளை காத்திருப்போம்!

பார்த்து பார்த்து பாதுகாத்து களித்திருப்போம்!//

வழிமொழிகிறேன் மாமேய்:)