வனஜா :-(

மனம் சந்திக்கும் முதல் பார்வையில் மகிழும் காதல் மட்டுமல்ல, சில நேரங்களில் மனம் கலங்கும் காட்சிகள் கூட இருக்கலாம் கவனமாகவே இருங்கள் என்று எப்பொழுதோ கேட்ட வார்த்தைத்தான் தோன்றியது இந்த படத்தினை காணுகையில்...!மனம் தொட்ட படத்தினை சுட்டி, தொடர்ந்து செல்கையில், ஊருக்குள் அதுவும் ஒரு பெரிய பண்ணை வீட்டில் எப்படியாக அடிமை போன்ற ஒரு பணியில் வறுமை வாழ்க்கை பெற்ற மக்கள் ஈடுபடுத்தபடுகின்றனர் என்பதை அப்படியே நிழல் படங்களிலேயே உணர்வுபூர்வமாய் கதை பற்றிய செய்திகளை எளிதில் தெரிந்துக்கொள்ளலாம்! அத்தனை உயிரோட்டமான ஒளிப்படங்கள் அது மட்டுமல்ல முழுபடமும் கூட அத்தனை உயிரோட்டமாகவே மனதினை கனத்துப்போக வைக்கிறது!

வறுமை, சாதி ரீதியான வெறுப்புக்களையும் சேர்த்து, ஒரு முக்கிய பிரச்சனை பால்ய விவாகத்து பிரச்சனையும் கூட இந்த படத்தின் மையகருத்தாக்கி அருமையாக படைத்துள்ளனர் ஒளி - ஒலியுடன் கிட்டதட்ட இரு வருடங்களுக்கு முன்பு வந்த படமாம்! ( அப்படியே தொடர்ச்சியாக கூகுளாண்டவரை வேண்டியதில் படத்தினையும் கூட பார்க்கும் வாய்ப்பும் பெற்றேன்! - லிங்கெல்லாம் கொடுக்கப்பிடாது தப்பு!)


பெரும்பாலான உலக திரைப்பட விழாக்கள் அனைத்திலும் கடந்த இரு வருட காலங்களில் திரையிடப்ட்ட இந்த படத்தினை பற்றியும் அதன் ஒவ்வொரு நிழல்படங்களிலும் அதை பற்றிய குறிப்புக்களுடன் முழுமையானதொரு தகவல்களையும் கூட நீங்க இந்த வனஜா பிரத்தியோக இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்!

குறிப்பு:- ச்சும்மா ஒரு விளம்பரம் படம் நல்லா இருக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைச்சா பாருங்க!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சமூக நோக்கில் எடுக்கப்படும் படங்கள் திரைப்பட விழாக்களில் மட்டுமே பார்க்க வேண்டிய நிலைக்கு :(
இதை அறிமுகம் செய்த ஆயில்யனுக்கு நன்றி! :)

said...

நானும் எப்படியாவது லிங்க் பிடித்து படம் பார்த்து விட்டு வருகிறேன்.... :)

said...

ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருக்கும் படம் இது, விமர்சனத்துக்கு நன்றி

said...

பகிர்வுக்கு நன்றி அண்ணன்...

said...

//சமூக நோக்கில் எடுக்கப்படும் படங்கள் திரைப்பட விழாக்களில் மட்டுமே பார்க்க வேண்டிய நிலைக்கு :(
இதை அறிமுகம் செய்த ஆயில்யனுக்கு நன்றி!//

மறுக்காச் சொல்லே .... :)

said...

Thedi paarkiren :)) thankies for sharing :))