எண்ணங்கள் செயல்களை மேம்படுத்துங்கள்! - தினமணி - 2


நற்சிந்தனைகளை மனதில் எண்ணும் போது, திட்டமிடலும் சிறப்பாக அமையும். பின்னர், திட்டமிட்டபடி அதைத் திறமையாகச் செயல்படுத்த வேண்டும்.

செயல்களில் வெற்றிகாண தளராது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். முயற்சிகள் தோல்வியுற்றாலும் மனம் தளரக் கூடாது.

தோல்விகளுக்கான காரணங்களை பிறர் மீது திணிக்கக் கூடாது.

அனைவரையும் அன்பால் அரவணைக்க வேண்டும். அன்பினால் வெல்ல முடியாதது ஒன்றுமே இல்லை. இல்லத்திலும் சரி, வெளியிலும் சரி, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். தனது பொறுப்பிலுள்ள அனைவரையும் அன்பால் அரவணைத்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.அவர்களது தேவைகளில் நிறைவேற்றக் கூடியவற்றை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக மன இறுக்கத்தை கைவிடப் பழகிக் கொள்ள வேண்டும். மன அழுத்தமானது மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், மனித உயிரையே மாய்த்துவிடும். எனவே மனசாட்சிப்படி நடக்க வேண்டும்.

மனசாட்சிக்கு ஏற்ப வாழ வேண்டுமானால், அதற்கு இன்றிமையாதது மனப்பக்குவம். இதற்கான பயிற்சிகளை நாள்தோறும் வளர்க்கத் தவறக் கூடாது.

இந்த உலகில் நிரந்தரமானது ஒன்றுமில்லை.மாற்றம் என்ற ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் மாற்றங்களுக்கு உள்பட்டது.

எனவே மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, நாம்தான் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வியுற்றபோது துவளவும், வெற்றிபெறும்போது வீறுகொள்ளவும் கூடாது.எந்தச் செயலைச் செய்தாலும், அதை முனைப்புடன் செய்ய வேண்டும். முழு ஈடுபாட்டுடன் செய்தால்,கடினமானதும் கைகூடும். முடியாதது என்று ஒன்றுமே இல்லை.

பிறரை அழிக்க வேண்டும்; பிறருக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என்ற கொடிய எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. அனைவரும் நம் சகோதரர்களே என்ற அன்பு மலர்கள் நம் மனதில் மலர வேண்டும். அனைத்து உள்ளங்களும் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும்.

துன்பங்களையும், எதிர்பாராது ஏற்படும் இன்னல்களையும், தாங்கிக் கொள்ளும் வலிமையை, பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோல்விகளை படிப்பினைகளாகக் கருதி, அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை வெல்வதற்கான முயற்சிகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டும். முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்!

நன்றி - தினமணி

ஏற்கனவே போட்ட பார்ட்டு 1 இங்க இருக்கு!

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

me the first!

said...

தேவையான பதிவு அண்ணே...

said...

///தோல்விகளுக்கான காரணங்களை பிறர் மீது திணிக்கக் கூடாது.///

முதல்ல நம்மள எவ்வளவு பட்டை தீட்டிக்கறமோ அவ்வளவும் நல்லதுன்னு நானும் நினைக்கறேன்..

said...

///அனைவரையும் அன்பால் அரவணைக்க வேண்டும். அன்பினால் வெல்ல முடியாதது ஒன்றுமே இல்லை///

அன்பு! அன்பு! அன்பு! இதுதாங்க உலகத்தின் கடவுள்...
சரிதானே அண்ணன்?

said...

அருமையான தகவல்களை கொண்டுள்ள பதிவு .. நன்றி ஆயில்யன்