விறகு ராட்டி அடுப்பு! - திரும்புதல் இயற்கை

ஆட்டோகிராப் நினைவுகளில்...!

உலகம் உருண்டையானது நீ ஒரிடத்தில் விட்டு பிரியும் நபரை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பினை பெறுவாய் என்ற ரீதியில் ஆட்டோ கிராப் போட்டு தந்த அந்த சகோதரியின் நினைவு வந்தது! ஆட்டோ கிராப் மட்டுமல்ல கிராமப்புற வாழ்க்கை பற்றிய சில பல செய்திகளும் கூட நான் கல்லூரி நாட்களில் அந்த சகோதரியிடமிருந்துதான் பெற்று, கற்றுக்கொண்டேன்!

சரி மேட்டருக்கு வர்ரேன்!

கிராமப்புறங்களில் அதிகாலை எழுந்து மாட்டுத்தொழுவத்தினை சுத்தம் செய்து,மாடுகளை அந்த இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் குறிப்பாக கொஞ்சம் வெயில் வந்து விழும்படியான இடத்தில் கட்டி விட்டு ( அந்த மாட்டு கயிற்று சுருக்கு போடற ஸ்டைல்லு இன்னிக்கும் கூட உங்களை ரசிக்கவைக்குற ஒரு விசயம்தாங்க!)மாட்டுச்சாணங்களை குவித்து, மாடுகளின் உணவில் மீந்த சிதறிக்கிடக்கும் வைக்கோல்களோட சேர்த்து அள்ளி தனியாக ஒரிடத்தில் குவித்து அழகாய் வட்டமாய் உருவமைத்து வெயிலிலிட்டு, காயவைத்து பெரும்பாலும் தம் வீட்டு உபயோகத்திற்கும், சிலர் மற்றவர்களுக்கும் கூட விற்பனை செய்யும் அந்த ராட்டி பற்றி மேலும் சொல்வதற்க்கு என்னிடம் ஒரு விசயமும் இல்லை!

ஆனால்,இதே இந்த கான்செப்டினைத்தான் இப்போது படு வேகமாய் பரப்பிக்கொண்டு வருகிறார்கள் இந்த என்விரோபிட் அமைப்பினை சார்ந்தவர்கள்!

அதிகரித்துவரும் சுற்றுசுழல் மாசு அதை விட வேகமாய் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலைகள் இவை எல்லாவற்றிற்குமே இது ஒரு எளிய தீர்வாய் அதே சமயத்தில் மிகப்பெரிதாய் சுற்றுசுழலுக்கு மாசு ஏற்படுத்தவண்ணம் இவர்களின் தயாரிப்பில் விலை குறைவான சமையல் அடுப்புக்களை தற்போது விநியோகித்துக்கொண்டு வருகின்றனர்!எப்பொழுதோ அல்லது இப்பொழுதும் கூட நம் கிராமங்களில் பயன்பாட்டில் இருக்கும் இதே போன்ற விஷயங்கள் இன்னும் கூட நம்மில் அலட்சியமான பார்வையில் பட்டுத்தான் ஒளிர்ந்து அல்லது ஒளிந்துக்கொண்டிருக்கின்றன!எது எப்படியோ வெளிநாடுகளிலிருந்தும்,இயற்கை பற்றிய விழிப்புணர்வுகளின் பிரச்சாரத்தின் மூலமும் இது போன்றதொரு விசயம் நம் கிராமங்களுக்கு செல்லும் போது நம் கிராம மக்கள் சொல்லும் செய்தி இதுவாகத்தான் இருக்கும் !

அட இதுதான் எங்களுக்கும் தெரியுமே!

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

என்ன சொல்ல வரீங்க ஆயில்யன் - மாநகரங்களில், அடுக்ககங்களில், எரிபொருள் சேமித்து- பழைய ராட்டி தட்டி எரிப்போமா அடுப்பினை ? தேவிலால் மாதிரி துணைப்பிரதமரின் அரசாங்க வீட்டினில் மாட்டுத் தொழுவம் அமைப்போமா ?

said...

அரசின் பொருளாதாரத் தடைக் காலத்தில் எமது வாழ்க்கைக்குக் கைகொடுத்தது இம்மாதிரி அரிய உபயோகங்கள் தான். அப்போது தான் இதன் அருமை புரிந்தது

said...

இன்றைய பெண்கள் அடுப்பூதுவதையும், புகையில் இருந்து சமைப்பதையும் விட்டு விட்டனரே.... எங்கள் வீட்டில் நெடுங்காலம் வரை மரத்தூளில் அடுப்பின் நடுவே கூடு போல் அமைத்து எரிக்கும் பழக்கம் இருந்தது. இப்போது வீட்டில் புகைக்கூண்டே அமைக்கவில்லை.... சமையல் எரிவாயு தான் பயன்பாடு.

said...

//அதிகரித்துவரும் சுற்றுசுழல் மாசு//
சுற்று சூழல் விஷயத்தில் அதிகரித்து வரும் விழிப்புணர்வு சந்தோஷமாய் இருக்கு ஆயில்ஸ்.. இன்னும் இதே மாதிரி நெறைய எழுதுங்கோ.. :)