இணையத்தில் என் தினம்! -

தினந்தோறும் சென்றுவரும் பதிவுகள் அப்படின்னா இதெல்லாம் தினமும் மூச்சு விடற மாதிரி!

இந்த தளங்களுக்கு போயிட்டு வர்லைன்னா கையெல்லாம் நடுங்கும் மனசுல அப்படியெ படபடப்பாவே இருக்கும்! வாயெல்லாம் குழறும்! பேசுறது எல்லாம் புரியாது! மத்தவங்க பேசுறது கேட்கவே கேட்காது! நேர்ல பார்க்கிறவங்களலெல்லாம் யாருன்னு சரியா புரிபடாது! என்பது போன்ற எந்த எபெக்ட்டும் கிடையாதுங்க ஆனாலும் ஏதோ இதாலதான் உசுரு ஓடிக்கிட்டிருக்குன்னு ஒரு பீலிங்க்ஸ்! - அட என்னைய மாதிரி ஒத்தையா வெளிநாட்ல குந்திக்கினு இருக்கற ஆளுங்களுக்கு மட்டும்தான்ங்க!

தமிழ்மணம் - என்ன சொல்றது? எல்லாவிதமான செய்திகளையும் ஒரு மணி நேர அவகாசத்தில் தெரிந்துவிடுகிறது.ஏராளமான பொழுதுப்போக்கு விஷயங்கள்,மனதை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் பதிவுகள் என இணைய தினம் இதிலிருந்தே ஆரம்பிக்கிறது!

ஜிமெயில் - டெய்லி வரும் ஒன்றிரண்டு மெயில்களை காண்பதிலும் நண்பர்களுக்கு மெயில் அனுப்புவதிலும் இருக்கற சந்தோஷமே தனி!

பிளாக்கர் - இது இல்லாமல் நான் என்பது எது?

தமிழ் தினசரி காலண்டர் - டெய்லி காலண்டர் அதுவும் நம்மூரில சுவத்துல மாட்டி வைச்சுப்பார்க்கிற மாதிரியே ஒரு பீலிங்கோட பார்க்கற தளம்!

யாகூ மெயில் - இதுவும் மெயில்களுக்கும் மற்றும் உறவுகள் நட்புகளுடமான தொடர்புகளுக்கும்!

ரஜினிஃபேன்ஸ் - பின்னே! இது பார்க்காம தினப்பணிகள் ஸ்டார்ட் ஆகுமா?

தமிழ் ரேடியோ - கிட்டதட்ட 5 சேனல்களில் வித விதமாய் பாடல்களை கேட்டு மகிழ்....! ( ஒரே பாட்டுக்கள் தான் ரிபிட் ஆனாலும் கூட நல்லா இருக்கு!

சூரியன் எப் எம் - இனிய இரவு தினமும் கேட்பது!

ஆஹா எப் எம் - இப்ப புதுசா கொஞ்ச நாளா - வைரமுத்து நேரம் சூப்பரா இருக்குங்க!

ஆஸ்திரேலிய வானொலி - http://s7.viastreaming.net/7920/listen.asx - இது இப்ப சமீபத்தில சேர்ந்தது அட நம்ம கானா வெள்ளிகிழமையும் புதன் கிழமையும் கலக்குறாருங்க! -அவுங்களுக்கு துணையா வரப்போறவங்க ( ஏற்கனவே பார்ட்டி சிக்கியிருக்கா இல்லையான்னு கன்பார்மா தெரியலப்பா..?!) ரொம்ப குடுத்துவைச்சவங்க! ரொம்ப பொறுமையான மனுசன்! (அப்புறம் இந்த லிங்க் அப்படியே மீடியா ப்ளேயர்ல ஒபன் உரல் போட்டீங்கன்னா நல்லா பாடும்!)

தினமணி - இது தமிழ் பேப்பரு ஆனா அப்படியே உலகத்தை ரவுண்டு அடிச்சு லோக்கல்ல கொண்டாந்து விட்டுடும்!

தினத்தந்தி - இது ஒன்லி லோக்கல் ஊரு நீயுஸ் பார்க்கறதுக்கு!

இந்தியன் எக்ஸ்பிரஸ் - அட நானெல்லாம் இங்கிலீபிசுல டெவலப ஆகறதுக்குத்தான்!

டைம்ஸ் ஆப் இந்தியா - இதுவும் கூட டெவல்ப்மண்ட் ஸ்டடீஸ்தான்!

டூயுப் தமிழ் - உடனுக்குடன் திரையிடப்படும் சின்னதிரை நகைச்சுவை நிகழ்ச்சிகள் அவ்வப்போது புதிய் படங்கள் பாடல்கள் காண...!

இன்னும் சில தளங்கள் வெளியாகும் படங்களினை உடனுக்குடன் பார்க்கும் வகையில் அயலகத்தில் வாழும் எம்போன்றோருக்காக தம் சேவைகளினை செய்து தரும் சில தளங்கள்! - அதெல்லாம் சாய்ஸ்ல விட்டு எஸ்ஸாகிட்டோம்ல!

சரி புதுசா சில தளங்களை இண்ட்ரோ பண்ணிவிட்டு போறேன்!

இது மழலைகள் தளம் தமிழ் மொழி பற்றிய ஆழ்ந்த அறிவு பெற..! - எல்லா வயதினருக்கும் கூட..!

வள்ளலார் - எப்பொழுதும் அல்ல எப்போதாவது கூட இந்த தளங்கள் தேவைப்படக்கூடும்

கணீர் குரலில் தேவாரம் கேட்பது என்பது எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமானதொரு நிகழ்வாகவே இருக்கின்றது! ஸோ தினமும் இந்த சைவம் தளத்திலிருந்து ஒரு பாடல் எப்படியும் ஒலித்துக்கொண்டிருக்கும்!

பழந்தமிழ் சொற்கள் பற்றி படித்து கஷ்டப்பட்டு எழுத்துக்களை கூட்டி படிப்பதென்பது ஒரு வித்தியாசமானதொரு ஆர்வமூட்டும் அனுபவம்! அதற்கேற்ற இந்த தளம் தேவாரம்

தமிழ் நேஷன் - எத்தனை எத்தனை தகவல்கள் தமிழ் பற்றியதாய் மட்டுமே இருக்கும் இத்தளம் அவ்வப்போது சென்று கண்டு கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய செய்திகளினை தெரிந்துக்கொள்வதும் உண்டு!

தமிழ் மொழி இந்த பெயரிலேயே ஒரு இணையத்தளம் அனைத்து விதமான தலைப்புக்களிலும் இங்கு தமிழ் சேகரிக்கப்படுகிறது - நாளைய கணினி தலைமுறைக்காக சேர்க்கப்படுகிறது!

மேலும் மூவரை அழைக்கவேண்டும் என்றார்கள்! இந்த முறை எந்தவித முன்னறிவிப்பு அழைப்பிதழும் அனுப்பாமல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மூவரை அழைக்கின்றேன்!

நீங்க எப்ப வேணும்னாலும் பதிவு போடுங்க என்ற கண்டிஷனோட...!

இணைய உறவுகளில் இவர்கள் மூவர்

யாத்ரீகன்
விக்னேஷ்வரன்
தமிழ்பிரியன்

(ஏம்ப்பா இத்தோட நிப்பாட்டிக்குவோம்! அடுத்து யாராச்சும் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா நீங்கள் டெய்லி சாட்டில் சந்திக்கும் நபர்களை பற்றி சொல்லுங்கள்ன்னு கேட்டுப்புடாதீங்க! - நானாச்சு பரவாயில்ல டெய்லி ஒரு பத்துலேர்ந்து 12 பேரு வரைக்கும்தான் சமாளிக்கிறேன் பட் நிறைய நண்பர்கள் இருக்காங்க கிட்டதட்ட 20 முதல் 30 ரேஞ்சுகளில் அவுங்களெல்லாம் லிஸ்ட் போட்டா தாங்கதுப்பா தாங்காது!)

27 பேர் கமெண்டிட்டாங்க:

said...

விக்னேஸ்வரன்னு யாரோ ஒரு நல்லவரோட பேர போட்டிருகிங்களே... யாருங்க அவரு... அவர் பெரிய மகான்னு கேள்விபட்டேன் உண்மையாகவா?

said...

///(ஏம்ப்பா இத்தோட நிப்பாட்டிக்குவோம்! அடுத்து யாராச்சும் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா நீங்கள் டெய்லி சாட்டில் சந்திக்கும் நபர்களை பற்றி சொல்லுங்கள்ன்னு கேட்டுப்புடாதீங்க! - நானாச்சு பரவாயில்ல டெய்லி ஒரு பத்துலேர்ந்து 12 பேரு வரைக்கும்தான் சமாளிக்கிறேன் பட் நிறைய நண்பர்கள் இருக்காங்க கிட்டதட்ட 20 முதல் 30 ரேஞ்சுகளில் அவுங்களெல்லாம் லிஸ்ட் போட்டா தாங்கதுப்பா தாங்காது!)///
ஆகா இந்த ஐடியா நல்லா இருக்கே? யாராவது ஆரம்பிச்சு வைங்கப்பா... :)

said...

ஆயில்யன், மாட்டி விட்டாச்சா... இப்ப திருப்தியா இருக்குமே.... அவ்வ்வ்வ்வ்

said...

அடுத்த டேக் க்கு இப்பவே ஐடியா குடுக்கறீங்களா? நல்லபிள்ளை மாதிரி அப்படி செய்யாதீங்கன்னு ஒரு வரி சேர்த்துட்டா ஆச்சா...

உங்கள் தினம் இன்று மட்டும் இல்லை எல்லா நாளும் இனியதினம் தான் போல..:)

said...

ஏம்ப்பா இத்தோட நிப்பாட்டிக்குவோம்!

ஆமாம். நானும் வழிமொழிகிறேன்.

:)

வேணாம் விட்டுருங்க. வலிக்குது

said...

நல்ல தளங்கள், குறிப்பா வானொலி தளங்கள் எல்லாம் எனக்கு புதுசு.

//நானாச்சு பரவாயில்ல டெய்லி ஒரு பத்துலேர்ந்து 12 பேரு வரைக்கும்தான் சமாளிக்கிறேன் பட் நிறைய நண்பர்கள் இருக்காங்க கிட்டதட்ட 20 முதல் 30 ரேஞ்சுகளில் அவுங்களெல்லாம் லிஸ்ட் போட்டா தாங்கதுப்பா தாங்காது!//

என்னாது இது சின்னப்புள்ளத்தனமா 20 ,30னு ரொம்ப சின்ன எண்ணிக்கையா சொல்றீங்க? நாங்க எல்லாம் யாருகிட்ட என்ன பேசுனோம்னே மறக்கிற அளவுக்கு சாட்டோ சாட்டுனு, சாட்டிகிட்டு இருக்கோம்ல, 30 ,40 எல்லாம் எங்களுக்கு 0 மாதிரி தெரியுது பாஸ்.

said...

நல்ல சுட்டிகளின் தொகுப்பு

said...

ரொம்ப ரொம்ப நல்ல தொகுப்பை வரிசைப்படுத்தி உள்ளீர்கள், நன்றிங்க

said...

சூப்பர்.. சந்தடி சாக்குல பிரபாண்ணனுக்கு விளம்பரம் கொடுத்துட்டீங்க. இனி ஆஸ்ட்ரேலிய வானோலில ட்ராஃபிக் ஜேம்தான். :-)

said...

அதுக்குள்ள இன்னொன்னா !!! :((((

said...

;-) கலக்கல் தொகுப்பு மாம்ஸ், ஏ பார் ஆப்பிளை வித்தியாசமா செஞ்சிருக்கீங்க, வலையுலக மணிரத்னம் ஆயில்ஸ் வாழ்க

said...

//VIKNESHWARAN said...
விக்னேஸ்வரன்னு யாரோ ஒரு நல்லவரோட பேர போட்டிருகிங்களே... யாருங்க அவரு... அவர் பெரிய மகான்னு கேள்விபட்டேன் உண்மையாகவா?
//

கரெக்ட் அதான் என் ஞான திருஷ்டியில் தெரிந்ததோ :)))))))))))

said...

//தமிழ் பிரியன் said...
///(ஏம்ப்பா இத்தோட நிப்பாட்டிக்குவோம்! அடுத்து யாராச்சும் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா நீங்கள் டெய்லி சாட்டில் சந்திக்கும் நபர்களை பற்றி சொல்லுங்கள்ன்னு கேட்டுப்புடாதீங்க! - நானாச்சு பரவாயில்ல டெய்லி ஒரு பத்துலேர்ந்து 12 பேரு வரைக்கும்தான் சமாளிக்கிறேன் பட் நிறைய நண்பர்கள் இருக்காங்க கிட்டதட்ட 20 முதல் 30 ரேஞ்சுகளில் அவுங்களெல்லாம் லிஸ்ட் போட்டா தாங்கதுப்பா தாங்காது!)///
ஆகா இந்த ஐடியா நல்லா இருக்கே? யாராவது ஆரம்பிச்சு வைங்கப்பா... :)
//

என்னா சந்தோஷம் !!!!!

said...

//தமிழ் பிரியன் said...
ஆயில்யன், மாட்டி விட்டாச்சா... இப்ப திருப்தியா இருக்குமே.... அவ்வ்வ்வ்வ்
//

சந்தோஷம் !

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அடுத்த டேக் க்கு இப்பவே ஐடியா குடுக்கறீங்களா? நல்லபிள்ளை மாதிரி அப்படி செய்யாதீங்கன்னு ஒரு வரி சேர்த்துட்டா ஆச்சா...

உங்கள் தினம் இன்று மட்டும் இல்லை எல்லா நாளும் இனியதினம் தான் போல..:)
//

இணைய உறவுகள் இருக்கும் வரை எந்த நாளும் இனிய நாள் தான் முத்தக்கா :))

said...

//புதுகைத் தென்றல் said...
ஏம்ப்பா இத்தோட நிப்பாட்டிக்குவோம்!

ஆமாம். நானும் வழிமொழிகிறேன்.

:)

வேணாம் விட்டுருங்க. வலிக்குது
//
சரிக்கா நான் 1ம்மே சொல்லலையே...!

said...

//ஜோசப் பால்ராஜ் said...
நல்ல தளங்கள், குறிப்பா வானொலி தளங்கள் எல்லாம் எனக்கு புதுசு.

//நானாச்சு பரவாயில்ல டெய்லி ஒரு பத்துலேர்ந்து 12 பேரு வரைக்கும்தான் சமாளிக்கிறேன் பட் நிறைய நண்பர்கள் இருக்காங்க கிட்டதட்ட 20 முதல் 30 ரேஞ்சுகளில் அவுங்களெல்லாம் லிஸ்ட் போட்டா தாங்கதுப்பா தாங்காது!//

என்னாது இது சின்னப்புள்ளத்தனமா 20 ,30னு ரொம்ப சின்ன எண்ணிக்கையா சொல்றீங்க? நாங்க எல்லாம் யாருகிட்ட என்ன பேசுனோம்னே மறக்கிற அளவுக்கு சாட்டோ சாட்டுனு, சாட்டிகிட்டு இருக்கோம்ல, 30 ,40 எல்லாம் எங்களுக்கு 0 மாதிரி தெரியுது பாஸ்.
///

நன்றி ஜோசப் அண்ணா! :)

said...

//மங்களூர் சிவா said...
நல்ல சுட்டிகளின் தொகுப்பு
/

ஹய்ய்ய்ய் நம்ம சிவா!

தாங்க்ஸ்ப்பா! (ஊர்ல தானே இருக்கீங்க!???)

said...

//rapp said...
ரொம்ப ரொம்ப நல்ல தொகுப்பை வரிசைப்படுத்தி உள்ளீர்கள், நன்றிங்க
//

நன்றி! நன்றி! நன்றி!

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
சூப்பர்.. சந்தடி சாக்குல பிரபாண்ணனுக்கு விளம்பரம் கொடுத்துட்டீங்க. இனி ஆஸ்ட்ரேலிய வானோலில ட்ராஃபிக் ஜேம்தான். :-)
//

அட நல்லா இருக்குங்க ஒலிபரப்பு அப்படியே தேன்கிண்ணத்தை ரேடியோவில கண்டினியூவா கேட்ட எப்படி இருக்கும்!!!!

said...

//Jeeves said...
அதுக்குள்ள இன்னொன்னா !!! :((((
//

ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காரு போல...!

கவலைப்படாதீங்க அண்ணாச்சி ஆனாலும் உங்களுக்கு கஷ்டம்தான் 40க்கும் மேல இருக்கும்ம்னு சொன்னீங்க நான் சும்மா 40 மட்டும்தான் போட்டிருக்கேன் :))))))

said...

// கானா பிரபா said...
;-) கலக்கல் தொகுப்பு மாம்ஸ், ஏ பார் ஆப்பிளை வித்தியாசமா செஞ்சிருக்கீங்க, வலையுலக மணிரத்னம் ஆயில்ஸ் வாழ்க//

இதெல்லாம் கொஞ்சம் இல்ல இல்ல!

ரொம்பவே ஓவரூ! :)

said...

இதுல நிறைய தளங்கள் எனக்கு புதுசுண்ணே.சீக்கிரமே போய் பார்க்குறேன்.

said...

இணையத்தில் ஆயில்யன் அண்ணாவின் தின தளங்களின் அணிவகுப்பு அத்துணயும் அற்புதம்.நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com

said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
இதுல நிறைய தளங்கள் எனக்கு புதுசுண்ணே.சீக்கிரமே போய் பார்க்குறேன்.
//
நன்றி அப்துல்லா!

said...

//கோவை விஜய் said...
இணையத்தில் ஆயில்யன் அண்ணாவின் தின தளங்களின் அணிவகுப்பு அத்துணயும் அற்புதம்.நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com
//
நன்றி விஜய்!

Anonymous said...

இணைப்புகளுக்கு நன்றிகள்..