400ல் - விருப்பமுடன் விடைப்பெறுகிறேன் உங்களிடமிருந்து....!


சற்றே குறைய 365 நாட்களை நிறைவு செய்து 400வது நாளினை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் நாழிகைகள் படு வேகமாய்...!

அப்போது இருந்த கவலைகள் பயங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் சென்றதும் இதே வேகத்திலேயே, இப்போது வரையிலும்..!

நட்புகள் பல பெற்றேன்!

நாளும் நிகழும் மகிழ்ச்சியின் பலனினை பகிர்ந்தேன்!

தமிழ் பாசத்துடனும் ,

தமிழ் நேசத்துடனும்,

தமிழ் உலகத்தோடு ஒட்டி உறவாடும் உறவுகளிடமிருந்து

மண்டியிட்டு,மலர்ந்த முகத்தோடு

அன்புடன் உங்களிடமிருந்தும் - உறவுகளிடமிருந்தும் - விடை பெற வேண்டி விரும்பி.....



உங்களின் நட்பு,
ஆயில்யன்.

















ஹைய்!

அஸ்க்கு!

புஸ்க்கு!

அவ்ளோ சீக்கிரத்தில போய்டுவேனா பதிவுலகை விட்டு...!

இன்னும் எவ்ளோவோ இருக்கு!

வரிசையா கீழே கொடுத்திருக்கற அத்தனை தமிழ் வார்த்தைகளுக்கும் பதில் சொல்லுங்க பார்ப்போம்! (திருமுறைகளில் படிக்க தொடங்கியபோது திணறிய வரிகளில் அர்த்தம் தெரியா வார்த்தைகள்!)

நரிபுரி
சுரிபுரி
தெரிபுரி
அரிபுரி
கீளலால்
பந்தார்
புழுவி
பெம்மான்
செம்மான்
விடுமின்கள்
புடை
வாரணம்
இகலல்
கூகா
ஆர்த்தான்

16 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஏன் இந்தக் கொலவெறி?, நான் நினைச்சேன் இந்தியாவுக்கு போய் கால்கட்டு போடப்போறீங்கன்னு

said...

//கானா பிரபா said...
ஏன் இந்தக் கொலவெறி?, நான் நினைச்சேன் இந்தியாவுக்கு போய் கால்கட்டு போடப்போறீங்கன்னு//

அப்படி இல்லாட்டி நாங்களே கைகட்டு போட்டு அனுப்பறோம் :)

said...

//அவ்ளோ சீக்கிரத்தில போய்டுவேனா பதிவுலகை விட்டு...!//

அதானே :-)

//நரிபுரி
சுரிபுரி
தெரிபுரி
அரிபுரி//

என் பேரு கிரி ங்கற அளவுல தான் எனக்கு தெரியும் :-))))

said...

அண்ணே! நல்ல வேலை, போகாதீங்கன்னு பதிவைப் படிக்காம பின்னூட்டம் போடப்பார்த்தேன்... :))))

said...

அந்த வார்த்தைகளெல்லாம் புரியலீங்கண்னா... தெரிஞ்சா எங்களுக்கும் சொல்லுங்க... :)

said...

///தமிழ் பிரியன் said...

அண்ணே! நல்ல வேலை, போகாதீங்கன்னு பதிவைப் படிக்காம பின்னூட்டம் போடப்பார்த்தேன்... ))//



ரிப்பீட்டேய்.....

said...

பதிவு படிக்காம பின்னூட்டம் போட்டிருந்தா மாட்டியிருப்பமுல்ல நாங்கள்லாம் உஷார்...:))

said...

//கானா பிரபா said...

ஏன் இந்தக் கொலவெறி?, நான் நினைச்சேன் இந்தியாவுக்கு போய் கால்கட்டு போடப்போறீங்கன்னு
//

ரிப்பீட்டேய்.. :-)

said...

@நிஜமா நல்லவன்...

///தமிழ் பிரியன் said...

அண்ணே! நல்ல வேலை, போகாதீங்கன்னு பதிவைப் படிக்காம பின்னூட்டம் போடப்பார்த்தேன்... ))//


ரிப்பீட்டேய்.....///

நானும்...

said...

நீங்கள் பண்ணியிருக்கும் காமெடியை விட சென்ஷியும், கிரியும் பண்ணியிருக்கும் காமெடி...:)) ரசித்தேன்.

said...

பாடல்களோட போடுங்க ஸ்வாமி .. அப்படியே படிச்சா அர்த்தங்கள் அநர்த்தமாக வாய்ப்புகள் அதிகம்

said...

\\கானா பிரபா said...
ஏன் இந்தக் கொலவெறி?, நான் நினைச்சேன் இந்தியாவுக்கு போய் கால்கட்டு போடப்போறீங்கன்னு\\

ஆயில் அண்ணே சீக்கிரம் முடிங்க...;))

said...

அந்தக் குழந்தை ஏன் அழுகிறது? :-0

:-))))

வாரணம் - யானை-ன்னு நினக்கிறேன்(தமிழில் ஒரு வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உண்டு)

இகலல் - பழித்துப் பேசுதல் or teasing....சரியா ஞாபகம் இல்லை.

இருங்க, ஒழுங்காத் தமிழ்ப்படுச்சவுங்க ஒருத்தங்க இருக்காங்க.அவுங்க (2 நாள் கழிச்சு) ஊர்லேர்ந்து வந்ததும் சொல்றேன்.:D :D

said...

பெம்மான் - பெருமான் - a great person - or may be தலைவன், depending on the context.

said...

//
அவ்ளோ சீக்கிரத்தில போய்டுவேனா பதிவுலகை விட்டு...!//
-:( -:P

said...

சரி சரி.. இதெல்லாம் நாங்க எத்தனை பாத்துட்டோம் போறெங்கறது வர்ரது எல்லாம்..

@தமிழன் இனி கொஞ்ச நாளுக்கு நீங்க பதிவு படிக்காம போடவே மாட்டீங்க பின்னூட்டம் :)))