பர்மா கடைக்காரர் - வெள்ளி நினைவுகள்!

கீழநாஞ்சில் நாடு !

இதுதான் நான் வாழ்ந்து வளர்ந்த இடம் எந்த மாவட்டம்னு கேட்காதீங்க? இது மயிலாடுதுறையில் உள்ள 500 மீட்டருக்கும் குறைவான கல்லுக்கார தெரு ( கல்லிடா ஸ்டீரிட் அப்படின்னா முடிவு உள்ள தெரு முட்டு சந்துன்னு பேரு அது இங்கீலிஸ்காரனிடமிருந்து உருவி அது பின்னாடி மருவி கல்லுக்கார தெருவாகி போயிடுச்சு!)

அதுக்கு எதோ பெரிய நாடு ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்து வைச்ச புண்ணியவான் யாருன்னு தெரியலை! இது பரவாயில்லைங்க இங்கிருந்து மேற்க பாக்க போன் சுமார் இரண்டு கி.மீ தாண்டி மேல நாஞ்சில் நாடு அங்கேயிருந்து பெண் எடுக்கறது இங்கேயிருந்து ஆண் கொடுக்கறதும் 1995 வரைக்கும் நடந்துக்கிட்டிருந்து அதற்கப்புறம் ஆளுங்க இல்லாம கல்யாணங்கள் கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுது!

அந்த நாட்லதான் எங்க வீடு! ரோட்டிலிருந்து கிட்டதட்ட 4 அடி உயரத்திற்கு உயர்த்தி கட்டப்பட்ட குட்டித்திண்ணையிலிருந்து ஆரம்பிக்கும் வீட்டின் நுழைவாயில்,பெரிய கதவினை திறந்து, சின்ன வராண்டாவில் நுழைந்து,பெரிய முற்றத்தினை கடந்தால் அருகே பெரிய ஹாலும்,அதை ஒட்டியே ஒரு பெரிய ரூமும் அமைந்திருக்கும்! முற்றத்தினை கடந்து பின்புறம் சென்றால் சமையலறை அருகில் பெரிய கொல்லைப்புற கதவு (நல்ல ஸ்ட்ராங்!நானெல்லாம் அந்த வயசுல தள்ளுற மாதிரி பாவ்லாதான் காட்டியிருக்கேனாம்!)
கொல்லை - அதுதாங்க கொல்லை எம்மாம் பெருசு நீட்டத்துக்கும் இருக்கும் இங்கன தான் எனக்கே எப்போதுமே பிடித்திப்போயிருந்த அந்த கிணறும் இருந்தது! - சரி விடுங்க! அதெல்லாம் போயே போச்சு! (அய்யோ மாடியை பத்தி சொல்லவே இல்லையே!?)

வீட்டுக்கு சொந்தக்காரர் தரங்கம்பாடி ( அந்த தெரு மொக்குலதான்) ரோட்ல டீ+இட்லி கடை வைச்சிருந்தாரு அவருக்குத்தான் பேரு பர்மா கடைக்காரர்ன்னு! என்னவோ அவரு பர்மா ஆளுன்னுத்தான் நான் அப்ப - எப்பவுமே நினைச்சிக்கிட்டிருந்தேன்! ஆனா பாருங்க கையில் காசு அதிகம் இருந்த காலத்தில செட்டியார்கள்,காசை எடுத்திக்கிட்டுப்போய் இன்வெஸ்ட பண்ணின இடம்தான் பர்மாவாம் (லேவாதேவிக்காரர்களாம்)

விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டோர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வகையில் கொஞ்ச காலங்களில் தொழிலில் நஷடம் ஏற்பட திரும்பவும் ஊருக்கு திரும்பியவர்களைத்தான் பர்மா செட்டியார்கள் என அழைக்கின்றனர் எங்க வீட்டு ஒனரும் அந்த கேரக்டர்தான்!

திடீரென்று ஒரு நாள் வீடு காலி பண்ண சொல்லிவிட்டார்கள் என்று சொன்ன நாளிலிருந்து எனக்கு அவர் மேல அத்தனை வெறுப்பு!

அத்தனை பெரிய ஹாலுடன் பெரிய பெட்ரூம் பின்னால் மாடிப்படிகள் ஏறி சென்றும் அங்கிருந்து பொருட்களை தாழ்வரத்திற்கு தூக்கிப்போட்டு விளையாடும் விளையாட்டுகள் விட்டு செல்லப்போகிறோமே என்று!?

வீட்டை இடித்துவிட்டு வேறு புதிய வீடு கட்டப்போவதாக, என்னதான் காரணம் சொன்னாலும் எனக்கு தாங்கி கொள்ளவே முடியவில்லை!

அந்த தெருவிலதான் வாகன போக்குவரத்து அதிகமின்றி எப்போதும் தெருவிலேயே கிடக்க முடியும் அது மட்டுமல்லாமல் இரவு 8 மணிக்கு மேலும் விளையாடினாலும் எந்த வீட்டுக்காரர்களும்,தம் பிள்ளைகளை பற்றி கவலையின்றி அவர்தம் வேலைகளில் முழ்கி இருப்பார்கள்!

நான் விளையாடி பருவத்தில் என்னை அடிக்கடி அடிக்கும் பக்கத்து வீட்டு எருமை (அப்ப இப்படித்தான் கூப்பிடுவேனாக்கும்), அவனது கால் ஊனமுற்ற சகோதரியின் மீது இரக்கப்பட்டு அதையும் தாங்கி கொண்ட சமயங்கள்! அண்ணனின் நண்பனாக இருந்தாலும், என்னையும் விளையாட அழைக்கும் அண்ணனின் நண்பர்கள், என பல நட்புகள் அந்த வீடு மாறுதலில் பிரிந்து போனது மறக்க முடியவில்லை!

இப்போதும் அந்த பக்கம் போகையில் என் வீடு இருந்த பக்கம் ஒரு சோகப்பார்வையையும், அந்த ஒனர் வீடு இருந்தப்பக்கம் ஒரு கோபப்பார்வையையும் செலுத்தாமல் போகமாட்டேன்!

ஆனாலும் இப்போது எண்ணங்களில் சில மாற்றங்கள்!

இன்று அந்த வீட்டில் இருந்திருந்தால், எப்போதும் மாடியில்தான் இருக்கவேண்டும் அப்பத்தானே ஏவிசி இன்ஜினியரிங்,ஆர்ட்ஸ் & தருமபுரம் காலேஜ் பஸ்களுக்கு டாட்டா காமிக்கலாம்!? (யாருக்குன்னு கேட்காதீங்க - யாருக்கோ!)

இந்த மாதிரியான மன மாற்றங்கள் தவிர்க்க முடியாதுதானே...?

15 பேர் கமெண்டிட்டாங்க:

said...

கலக்கல் பதிவு, ரொம்ப சூப்பரா நினைவுகள பகிர்ந்துக்கிட்டு இருக்கீங்க :):):)

said...

பர்மா கடைக்காரரைப் பற்றி இன்னும் கொசுவர்த்தி போட்டிருக்கலாம், எழுதியது சிறப்பா இருக்கு.

said...

போனா போகட்டும் விடுங்க ஆயில்யன்... கோபத்தை விடுங்க...
///ஏவிசி இன்ஜினியரிங்,ஆர்ட்ஸ் & தருமபுரம் காலேஜ் பஸ்களுக்கு டாட்டா காமிக்கலாம்!?//// இதைப் பற்றி ஏதாவது புனைவு எழுதலாமே... ;)

said...

:)

said...

rombha nalla erunthunga....reminds me of my childhood...but nan citylaye poranthu valarthathunala gramathu anubavam perisa illa....i know i have missed something really great...but unga post rombha nallaeruku....btw can u tell me how to write comments in tamil...tried but enaku therilla...

said...

//rapp said...
கலக்கல் பதிவு, ரொம்ப சூப்பரா நினைவுகள பகிர்ந்துக்கிட்டு இருக்கீங்க :):):)
/

நன்றி ராப் :)

said...

// கானா பிரபா said...
பர்மா கடைக்காரரைப் பற்றி இன்னும் கொசுவர்த்தி போட்டிருக்கலாம், எழுதியது சிறப்பா இருக்கு.
//

நன்றி கானா :))

said...

//தமிழ் பிரியன் said...
போனா போகட்டும் விடுங்க ஆயில்யன்... கோபத்தை விடுங்க...
///ஏவிசி இன்ஜினியரிங்,ஆர்ட்ஸ் & தருமபுரம் காலேஜ் பஸ்களுக்கு டாட்டா காமிக்கலாம்!?//// இதைப் பற்றி ஏதாவது புனைவு எழுதலாமே... ;)
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
:)
//
நன்றி :))

said...

//Sangeeth said...
rombha nalla erunthunga....reminds me of my childhood...but nan citylaye poranthu valarthathunala gramathu anubavam perisa illa....i know i have missed something really great...but unga post rombha nallaeruku....btw can u tell me how to write comments in tamil...tried but enaku therilla...
//
ரொம்ப நன்றி !

இங்கhttp://www.thozhi.com/tamiltyping.htm போய் நீங்க டிரைப்பண்ணி பாருங்க தமிழ்ல டைப்ப பண்ண ( எப்படி eppadi அப்படின்னு அடிச்சு அடுத்த வார்த்தைக்கு மாறும்போது அப்படியே இங்கீலிபீஸ் தமிழுக்கு மாறும் அதிசயம்!)
முடிஞ்சா http://www.thozhi.com/tamiltyping.htm இங்க போய் படிச்சுட்டு முடிஞ்சா உங்க கம்ப்யூட்டர்ல தமிழ் இன்ஸ்டால் பண்ணிட்டா நோ ப்ராப்ளம்!

said...

டூ சங்கீத

http://www.google.com/transliterate/indic/Tamil
போய் நீங்க டிரைப்பண்ணி பாருங்க தமிழ்ல டைப்ப பண்ண ( எப்படி eppadi அப்படின்னு அடிச்சு அடுத்த வார்த்தைக்கு மாறும்போது அப்படியே இங்கீலிபீஸ் தமிழுக்கு மாறும் அதிசயம்!)

said...

உங்க வீட்டை பத்தின விவரிப்பு படிச்சதும் Nostalgic ஆகிடிச்சு.. இப்படி ஒரு வீட்டுல இருந்துட்டு, இப்போ இருக்குற புராக்கூடுகள நினச்சாலே கடியா இருக்கு .. அதுவும் இந்த மாதிரி சந்துல விளையாடுறதோட சுகமே தனி .. Missing all those moments

உங்க எண்ண மாற்றத்தை பத்தி விரிவாவே சொல்லியிருக்கலாம் ;-)

said...

நினைவுகள் அருமையா வர்ணிச்சியிருக்கிங்க:)

said...

//இன்று அந்த வீட்டில் இருந்திருந்தால், எப்போதும் மாடியில்தான் இருக்கவேண்டும் அப்பத்தானே ஏவிசி இன்ஜினியரிங்,ஆர்ட்ஸ் & தருமபுரம் காலேஜ் பஸ்களுக்கு டாட்டா காமிக்கலாம்!? (யாருக்குன்னு கேட்காதீங்க - யாருக்கோ!).//

இது வேறயா?:))

said...

ரொம்ப நன்றி ஆயில்யன்! நீங்க சொன்ன மாதிரியே ட்ரை பண்ணினேன் வந்துடுச்சு ...அதிசயம்தான் போங்க!