ஆடி(ய)யோ காலங்கள் - தீம் மியூசிக் & ரிங்டோன்ஸ்!

கிட்டதட்ட கடந்த 5 ஆண்டுகளில் இந்த தீம் மியுசிக் வார்த்தையின் புழக்கம் படு ஸ்பீடாகிவிட்டது! எல்லாம் மொபைல் வந்த நேரம்! அவனவன் பாட்டுக்கு இடையில எங்காவது ஒரு பிட்டு புடிச்சு அதை ரிங்டோனாக்கி மத்தவங்களை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஆக்கிக்கிட்டிருந்தானுங்க! (இன்னும் சிலர் இருக்காங்க! எனக்கு தெரிஞ்ச ஒரு பார்ட்டீ வடிவேலு படத்தில அழுகுற அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் சவுண்ட கூட ரிங்டோனாக்கி வைச்சுருக்காரு!??)

மொபைல் கையில வாங்கியதுமே அவனவன் நோண்டுறது, இந்த ரிங்டோன்கள் மேட்டரத்தான் அதுலயும் தீம் மியூசிக் படங்களை பத்தி பயபுள்ளைங்க சேகரிக்கற தகவல்கள் அந்த இசை அமைத்த இசையமைப்பாளருக்கு போட்டு காட்டுனா கூட அவ்ளோ ஈசியா அவுகளுக்கு புரியாது! அந்த மாதிரி பூந்து விளையாடுவாங்க!

இந்த தீம் மியுசிக் கான்செப்ட்ங்கறதே அதிகம் பேச கூடாத இடங்களிலோ அல்லது பேசுவதற்கு வார்த்தை கிடைக்காத இடங்களிலோ ஸ்டார்ட் மியூஜிக்ன்னு போட்டதால பொறந்த விஷயம்ன்னு நினைக்கிறேன்ங்க!

ரொம்ப பிரபலமானது எனக்கு தெரிஞ்சு இசைப்புயல் வந்ததுக்குப்பிறகுதான் போல! ஆனாலும் கூட நம்ம ராசா ஏற்கனவே இந்த விஷயத்தில களம் பல கண்ட விஷயங்களையும் ஒரு தீம் மியுசிக்கினை இடம் பொருள் பார்த்து பயன்படுத்தி அசத்தியதையும் நாம இப்ப கொஞ்சம் கொஞ்சமா அண்ணன் கா.பி புண்ணியத்தில கேட்டுக்கிட்டு வர்ரோம்! (ரொம்ப பொறுமையா செய்யவேண்டிய வேலையிலே இதுவும் 1. கரெக்ட்டா முதல்ல படத்தை பார்க்கணும் அப்புறம் எந்த இடங்களில் எந்த மாதிரியான வகைப்படுத்தலில் இசை அமைந்திருக்குன்னு பார்க்கணும் அப்புறம் அதை அப்படியே கட்டி ஒட்டணும் ஷ்ஷ்ஷப்ப்ப்ப் இப்பவே கண்ணை கட்டுது!)

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படத்தின் பாடல் கேசட்டுகளில் கண்டிப்பாய் இது போன்ற தீம் மியூசிக் பிட்டுகள் இருக்கும்! அதெல்லாம் அந்த டைம்ல அவ்வளவா பிரபலமாகாட்டியும் கூட இப்ப ரொம்பவே ஆர்வத்தை உண்டாக்கி வைச்சுருக்கு!

ஒரு தீம் மியூசிக் அதை வைச்சுக்கிட்டு சந்தோஷமா இருந்தாலும் சரி,துக்கமா இருந்தாலும் சரி, காதலியை முதன்முதலாக பார்க்கும்போதும் சரி அப்புறம் பிரிவிலும் சரி போட்டு தாக்கியே பல படங்கள் ஒடியிருக்கு! ( உதாரணத்துக்கு ரோசாப்பூ சின்ன ரோசப்பூ அப்புறம் விக்ரமன் படங்கள்,எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த் படங்களை சொல்லலாம்!)

அதே மாதிரி ஒரு வாத்திய கருவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம்! டைட்டில்லயே சூப்பரான தீம்! அப்படியே மனசை எந்திரிச்சு ஆட வைக்குறமாதிரி ஒரு ஃபீலிங்க் கண்டிப்பாக உங்களுக்கும் கூட வரும் இந்த பாட்டினை கேட்டா....!கொஞ்ச காலம் நான் இந்த பாட்டை ரிங்க்டோனா வைச்சிருந்தேன் ஆனா பயங்கர எதிர்ப்பு இருந்ததால பின்னே மாத்திட்டேன் - ஆமாங்க பாட்டு ஆரம்பிக்க கொஞ்சம் லேட்டாகும் அதுவரைக்கும் நமக்கு போன் சத்தம் கேட்காதது எதிர்ல போன் பண்றவங்களுக்கு தெரியாதுல்ல! - இப்ப என்ன ரிங்டோன்னு கேட்கறீங்களா? - நம்ம தலைவர் படம் ஆடியோ ரீலிசாகியிருக்கும்போது வேற பாட்டுக்கள் வைக்க தோணுமா?

12 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ரிங் டோன் என்ற ஒரு சமாச்சாரம் வந்தபின் தான் இப்போதெல்லாம் பின்னணி இசையின் பாலும், பாடல்களின் மெட்டிசையிலும் பலர் கவனம் திரும்பியிருக்கின்றது. உங்கள் பதிவு சிறப்பாகச் சொல்லியிருக்கின்றது. அண்மையில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியிலும் பாலசந்தர் முன் ரஹ்மான் சிலாகித்துச் சொன்னது டூயட் பின்னணி இசையைத் தான்.

said...

சூப்பரு...

said...

அண்ணே இந்த படத்தோட அடிப்படையே இசைதானே மறக்க முடியாத சில பாடல்கள் இந்த படத்திலும் இருக்கிறது...

said...

ஆமா இந்த ரிங்டோனால பெரிய ரணகளம் ஆகியிருக்கு சில இடங்கள்ள...
பல கதைகள் இருக்கு தல...

said...

அண்ணே இந்த படத்தோட அடிப்படையே இசைதானே மறக்க முடியாத சில பாடல்கள் இந்த படத்திலும் இருக்கிறது...
வைரமுத்துவோட கவிதைகளும் இருக்கு படத்துல...

said...

கடலிலே மழை வீழ்ந்த பின் எந்த துளி மழைத்துளி...
காதலில் அது போல நான் கலந்திட்டேன் கண்மணி...

said...

கார்த்திகை மாதம் போனால் பெருமழை இல்லையே...
கண்மணி நீ இல்லையேல்
கவிதைகள் இல்லையே...

said...

///எனக்கு தெரிஞ்ச ஒரு பார்ட்டீ வடிவேலு படத்தில அழுகுற அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் சவுண்ட கூட ரிங்டோனாக்கி வைச்சுருக்காரு!??)///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))//////

said...

///அந்த இசை அமைத்த இசையமைப்பாளருக்கு போட்டு காட்டுனா கூட அவ்ளோ ஈசியா அவுகளுக்கு புரியாது! அந்த மாதிரி பூந்து விளையாடுவாங்க!///

ஆமா ஆமா...
இது நம்ம டோனாங்கிற சந்தேகமே அவருக்கு வந்துடும்...

said...

அண்ணே நீங்க இப்ப வச்சிருக்கிற ரிங்டோன் என்னண்ணே...

said...

சில பேர் யாரு கூப்பிடுறாங்க எங்கிறதுக்கு ஏத்தா மாதிரி ரிங்டோன் வச்சிருப்பாங்க அதுவே ஒரு கலக்கலா இருக்கும்...
(ஆனா அழைக்கிறவங்களுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் சில பாடல்கள் அப்படியும் இருக்கும்)

said...

நல்லதொரு பதிவு

இசை என்றாலே நின்று கேட்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் ரிங் டோன்கள் வந்த வுடனே பிண்ணனி இசையில் ஒரு முன்னேற்றம் தெரிகிறதே

ஒரு நண்பரின் ரிங் டோன் :

எட்றா எட்றா எட்றா போன
எட்றா எட்றா எட்றா போன
எட்றா எட்றா எட்றா போன
எட்றா எட்றா எட்றா போன
எட்றா எட்றா எட்றா போன