டம் டம் டிகா! டிகா..!

ஏதோ ஒரு காலகட்டத்தில் கேட்டதில் பிடித்திருந்தது போல! (பசு மரத்தாணி போல பதியணும்னு இது மாதிரியான விஷயங்களைத்தான் சொல்லுவாங்க போல...!)

இப்போது தேடியதில் டக்கென்று கிடைத்தது!-

ரொம்ப பழைய படம் போல..!

ஆனா பாருங்க மழையில எவ்ளோ ஜாலியா டான்ஸ் + பாட்டு பாடறாருன்னு! பார்த்ததுமே மழை ஞாபகம் வந்துச்சு ( இதுல நேத்திக்கு ஸ்ரேயா படம் வேற போட்டிருந்தோம்ல! )



வழக்கம்போலவே பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியாமலே கேட்டு கேட்டு ரசிச்சாச்சு!

சும்மா டிரான்ஸ்லேஷன் டிரைப்பண்ணுனது!

இப்ப மழை பெய்த்துக்கொண்டிருக்கிறதாம்!
மனுசன் தண்ணி அடிக்காமலே கீழ விழுந்துக்கிட்டிருக்கானாம்!
ஆண்டவா ரொம்ப அழகா அருமையா இருக்கிறாராம்!
இப்படித்தான் எனக்கு ரெண்டுவரி புரிஞ்சுந்துப்பா!
(டேய்...! ஏண்டா ஹிந்தி இப்படி கொல பண்ணுறன்னு நீங்க கேட்டா? நான் என்ன பண்ணமுடியும் என்னால முடிஞ்சது இவ்ளோதான்!)

உங்களுக்கு மொழி தெரிஞ்சிருந்தா என்ன அர்த்தம்னு டிரான்ஸ்லேட் பண்ணி, புல் பாட்டையும் தமிழ்ல பாடிக்காட்டுங்களேன் சரி பதிவில் காட்டுங்களேன்! (சும்மா தெரிஞ்சு வைச்சுக்கதான்!)


Dum dum diga diga
Mausam bheega bheega
Bin piye maein to gira...Maein to gira
Haye allah, surat aap ki subhan allah

Teri ada wah-wah kya baat hai
Ankhiya jhuki jhuki, baatein ruki ruki,
Dekho lutera aaj lut gaya
Haye allah..

Sanam hum mana garib hain
Dhanda khota sahi banda chhota sahi
Dil yeh khazana hai pyar ka
Haye allah..

Teri kasam tu meri jaan hai
Mukhada bhola bhola, chupke daka dala
Jaane tu kaisa mehmaan hai
Haye allah...

25 பேர் கமெண்டிட்டாங்க:

said...

முதலில் வந்தது யாரு?

said...

ஆஹா தார் பூசி அழிச்சாங்களாமே ஒரு காலத்தில அந்த மொழிப்பாட்டா? அது என்ன மொழின்னு கூட எனக்கு தெரியாதுப்பா. ஆயில்யன் பதிவு படிச்சிதான் தெரிஞ்சிக்கிட்டேன். அழிச்சவங்க வீட்டு புள்ளைங்க எல்லாம் பேசுது. நமக்கு தான் தெரியாம போய்டுச்சி:(

said...

பாட்டு கேட்டாச்சு - அர்த்தமா ? யாருக்குத் தெரியும் ? பொருளுரை - பதிப்புரை எல்லாம் எழுதச் சொல்லுங்க யாரையாச்சும்

said...

அண்ணே வேற்று மொழி கவிதையை எப்படிண்ணே வரிக்கு வரி மொழி பெயர்பு செய்வது?........ ;(

said...

ஹிந்தி தெரிஞ்ச ஆட்கள் அடிக்க வராதீங்க....

டம் டம் டிகா டிகா
இது மழைநேரக் காலம்..
தண்ணி அடிக்காமலேயே விழுந்து விட்டேன்.... விழுந்து விட்டேன்....
ஹே இறைவா! என்னே உனது படைப்பு! உனக்கே அதற்க்கான புகழ்!

;;;;;;;;;;;;;;;;;;

உன்னுடைய அளிப்பு(மழை) என்னே பெரிய விஷயம்..
பார்வைகள் இறங்கி விட்டன.. வார்த்தைகள் தடங்கலாகின்றன...
பார்! திருடனிடம் கூட திருடப்படுகின்றது...
;;;;;;;;;;;;;;;;;

சத்தியமா நான் ஏழை என்பதை ஒத்துக் கொள்கிறேன்...
என் வாழ்வும் சின்னது....
உறவும் சின்னதே....
ஆனா இதயத்தில் நிறைய இடமிருக்கு (களஞ்சியம் போல்)...

;;;;;;;;;;;;;;;;;;;;;

உன் மீது ஆணையாக நீதான் என் உயிர்...
தோற்றத்தில் ஒரு அப்பாவி! அமைதியாகவே கொள்ளை அடித்து விட்டாய்...
நீ எப்படிப்பட்ட விருந்தாளி என்பது கூட தெரியவில்லை...

said...

எங்க காலத்துப் பாட்டு.
ராஜ்கபூரும் முகேஷும் சேர்ந்தா கேக்கணுமா.
ஆயில்யன்,

'ரெயின் ட்ராப்ஸ் கீப் ஃபாலிங் ஆன் மை ஹெட்'
பாட்டுதான் நினைவுக்கு வருகிறது. இந்த வெய்யிலுக்கு இந்தப் பாட்டு வேண்டியதுதான்:)

said...

நல்லப்பாட்டு ஆயில்யன்.. இரண்டாவது பத்தியில்.. நான் ஏழைதான்னு ஒத்துக்கறேன்.. ஆனா என் உள்ளம் ஒரு கஜானா அன்பு நிறைந்த கஜானான்னு சொல்றாரு..

said...

//நிஜமா நல்லவன் said...
முதலில் வந்தது யாரு?
//

எங்கே....????

said...

//நிஜமா நல்லவன் said...
ஆஹா தார் பூசி அழிச்சாங்களாமே ஒரு காலத்தில அந்த மொழிப்பாட்டா? அது என்ன மொழின்னு கூட எனக்கு தெரியாதுப்பா. ஆயில்யன் பதிவு படிச்சிதான் தெரிஞ்சிக்கிட்டேன். அழிச்சவங்க வீட்டு புள்ளைங்க எல்லாம் பேசுது. நமக்கு தான் தெரியாம போய்டுச்சி:(
//

யாரு வேணும்னாலும் எது வேணும்னாலும் பேசிட்டு போகட்டும்பா நீங்கள் அரசியல் பேசாதீங்க! எனக்கு பயமாயிருக்கு! :)

said...

//சீனா said...
பாட்டு கேட்டாச்சு - அர்த்தமா ? யாருக்குத் தெரியும் ? பொருளுரை - பதிப்புரை எல்லாம் எழுதச் சொல்லுங்க யாரையாச்சும்//

சொல்லியிருக்கேன் சார் யாரைச்சும் வராமலா போய்டுவாங்க....???!!!

said...

//தமிழ் பிரியன் said...
அண்ணே வேற்று மொழி கவிதையை எப்படிண்ணே வரிக்கு வரி மொழி பெயர்பு செய்வது?........ ;(
//

வேற்று மொழி இல்லப்பா நம்ம நாட்டு மொழிதான் நாமதான் கொஞ்சம் அன்னியபடுத்தி வைச்சிருக்கோம் பரவாயில்ல டிரைப்பண்ணுங்க!

said...

நல்ல கருத்துள்ள பதிவு தம்பி ஆயில்யா!!!

said...

தமிழ் பிரியன் சூப்பரூ :))

(தமிழ்ன்னு சொல்லிக்கிட்டே நீங்களெல்லாம் இந்தி படிச்ச குரூப் ஆளுங்களா????????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

said...

//வல்லிசிம்ஹன் said...
எங்க காலத்துப் பாட்டு.
ராஜ்கபூரும் முகேஷும் சேர்ந்தா கேக்கணுமா.
ஆயில்யன்,

'ரெயின் ட்ராப்ஸ் கீப் ஃபாலிங் ஆன் மை ஹெட்'
பாட்டுதான் நினைவுக்கு வருகிறது. இந்த வெய்யிலுக்கு இந்தப் பாட்டு வேண்டியதுதான்:)
//
பாட்டு மட்டுமில்ல!

கொஞ்சம் மழை வேண்டிக்கிட்டு கிடைக்கவே கிடைக்காது தெரிஞ்சு கடைசியா ஷவர்ல மழை பிலிங்க்ஸ் பார்ப்போம்னு போனா வெந்நீரைத்தான் ஊத்துது :((

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
நல்லப்பாட்டு ஆயில்யன்.. இரண்டாவது பத்தியில்.. நான் ஏழைதான்னு ஒத்துக்கறேன்.. ஆனா என் உள்ளம் ஒரு கஜானா அன்பு நிறைந்த கஜானான்னு சொல்றாரு..
/

அட சூப்பரூ :))

said...

//அபி அப்பா said...
நல்ல கருத்துள்ள பதிவு தம்பி ஆயில்யா!!!
//

அண்ணே தாங்க்ஸ்ஸ் :) ( அது எப்படி உங்களுக்கு மட்டும் கருத்து தெரியுது! நான் ஏற்கனவே ஆன்மீகம்/இலக்கியத்திலதான் பதிவு போட்டிருக்கேனே....???)

said...

///ஆயில்யன் said...

//அபி அப்பா said...
நல்ல கருத்துள்ள பதிவு தம்பி ஆயில்யா!!!
//

அண்ணே தாங்க்ஸ்ஸ் ( அது எப்படி உங்களுக்கு மட்டும் கருத்து தெரியுது! நான் ஏற்கனவே ஆன்மீகம்/இலக்கியத்திலதான் பதிவு போட்டிருக்கேனே....???)///


அண்ணே பதிவு போட்டுட்டு தமிழ் மணத்துக்கு அனுப்பாம விட்டுட்டீங்க. அதை ஆன்மிகம் இலக்கியத்துக்கு அனுப்பியது நானுங்கோ!!!!!!!

said...

//இப்ப மழை பெய்த்துக்கொண்டிருக்கிறதாம்!
மனுசன் தண்ணி அடிக்காமலே கீழ விழுந்துக்கிட்டிருக்கானாம்!
ஆண்டவா ரொம்ப அழகா அருமையா இருக்கிறாராம்!//

:-)

said...

//நிஜமா நல்லவன் said...
///ஆயில்யன் said...

//அபி அப்பா said...
நல்ல கருத்துள்ள பதிவு தம்பி ஆயில்யா!!!
//

அண்ணே தாங்க்ஸ்ஸ் ( அது எப்படி உங்களுக்கு மட்டும் கருத்து தெரியுது! நான் ஏற்கனவே ஆன்மீகம்/இலக்கியத்திலதான் பதிவு போட்டிருக்கேனே....???)///


அண்ணே பதிவு போட்டுட்டு தமிழ் மணத்துக்கு அனுப்பாம விட்டுட்டீங்க. அதை ஆன்மிகம் இலக்கியத்துக்கு அனுப்பியது நானுங்கோ!!!!!!!
//

அது சரி:(

நாம எழுதற மேட்டரெல்லாம் ஆன்மீகம் இலக்கியத்துல சேர்க்க சொல்லி த.நிர்வாகிகள் முடிவு பண்ணியிருப்பாங்களேன்னு நாந்தான் தப்பா நினைச்சிட்டேனா....????

:))))

said...

சரி,முயற்சி செஞ்சுருவோம்! :)

Dum Dum Diga Diga
Mausam Bheega Bheega
இது ஒரு மழைக் காலம்

Bin Piye Maein To Gira...Maein To Gira
மதுக் கிண்ணம் ஏந்தாமலே, விழுந்தேனே!

Haye Allah, Surat Aap Ki Subhan Allah
அழகே! உன் முகமே!
பிரம்மா! ஓ பிரம்மா! இது வரமா சாபமா?

(Teri Ada Wah-Wah Kya Baat Hai)2
உன் அழகை நான் என்ன சொல்ல
(Ankhiya Jhuki Jhuki, Baatein Ruki Ruki,)2
கண்கள் படபடக்க, வார்த்தை தடதடக்க!
Dekho Lutera Aaj Lut Gaya
கள்வன் இன்று களவாடப் பட்டேன்!
Haye Allah...
பிரம்மா! ஓ பிரம்மா! இது வரமா சாபமா?

(Sanam Hum Mana Garib Hain)2
அன்பே! நான் ஏழை!
(Nasiba Khota Sahi Banda Chhota Sahi)2
விதி விளையாடியது, பணம் காற்றானது
Dil Yeh Khazana Hai Pyar Ka
ஆனால்,என் மனம் (காதல் எனும்) தங்கச் சுரங்கமானது!
Haye Allah...
பிரம்மா! ஓ பிரம்மா! இது வரமா சாபமா?

Teri Kasam Tu Meri Jaan Hai
என் உயிர் நீதானே!
Mukhada Bhola Bhola, Chupke Daka Dala
பால் போன்ற (உன்) முகம், திருடியதே என் மனம்!
Jaane Tu Kaisa Mehmaan Hai
நீ எனைக் கொள்வாயா?(அல்லது) கொல்வாயா?
Haye Allah...
பிரம்மா! ஓ பிரம்மா! இது வரமா சாபமா?
//

Literal translation செய்யாமல் வரிகளின் அர்த்தம் கொள்ள முயற்சித்திருக்கிறேன்.

இதை ஒரு, கவிதையாய் , எகன மொகன போட்டு உருட்ட இன்னும் நேரம் வேண்டும்! பிறகு வருகிறேன்.:))

பி.கு.:ஓ! இத இங்க வரைக்கும் முழுசாப் படிச்சீங்களா! உங்கப் பொருமைய நினைக்கும் பொழுது எனக்குப் பெறுமையா இருக்கு! :))))

said...

தமிழ்ப்பிரியனின், மொழிபெயர்ப்பு கச்சிதம். பஹூத் அச்சா! :)

said...

//NewBee said...
சரி,முயற்சி செஞ்சுருவோம்! :)

Dum Dum Diga Diga
Mausam Bheega Bheega
இது ஒரு மழைக் காலம்

Bin Piye Maein To Gira...Maein To Gira
மதுக் கிண்ணம் ஏந்தாமலே, விழுந்தேனே!

Haye Allah, Surat Aap Ki Subhan Allah
அழகே! உன் முகமே!
பிரம்மா! ஓ பிரம்மா! இது வரமா சாபமா?

(Teri Ada Wah-Wah Kya Baat Hai)2
உன் அழகை நான் என்ன சொல்ல
(Ankhiya Jhuki Jhuki, Baatein Ruki Ruki,)2
கண்கள் படபடக்க, வார்த்தை தடதடக்க!
Dekho Lutera Aaj Lut Gaya
கள்வன் இன்று களவாடப் பட்டேன்!
Haye Allah...
பிரம்மா! ஓ பிரம்மா! இது வரமா சாபமா?

(Sanam Hum Mana Garib Hain)2
அன்பே! நான் ஏழை!
(Nasiba Khota Sahi Banda Chhota Sahi)2
விதி விளையாடியது, பணம் காற்றானது
Dil Yeh Khazana Hai Pyar Ka
ஆனால்,என் மனம் (காதல் எனும்) தங்கச் சுரங்கமானது!
Haye Allah...
பிரம்மா! ஓ பிரம்மா! இது வரமா சாபமா?

Teri Kasam Tu Meri Jaan Hai
என் உயிர் நீதானே!
Mukhada Bhola Bhola, Chupke Daka Dala
பால் போன்ற (உன்) முகம், திருடியதே என் மனம்!
Jaane Tu Kaisa Mehmaan Hai
நீ எனைக் கொள்வாயா?(அல்லது) கொல்வாயா?
Haye Allah...
பிரம்மா! ஓ பிரம்மா! இது வரமா சாபமா?
//

Literal translation செய்யாமல் வரிகளின் அர்த்தம் கொள்ள முயற்சித்திருக்கிறேன்.

இதை ஒரு, கவிதையாய் , எகன மொகன போட்டு உருட்ட இன்னும் நேரம் வேண்டும்! பிறகு வருகிறேன்.:))

பி.கு.:ஓ! இத இங்க வரைக்கும் முழுசாப் படிச்சீங்களா! உங்கப் பொருமைய நினைக்கும் பொழுது எனக்குப் பெறுமையா இருக்கு! :))))
///

சூப்பரா இருக்கு !

எதுகை மோனையெல்லாம் போட்டு சூப்பரா எடுத்துட்டு வாங்க!



//Literal translation செய்யாமல் வரிகளின் அர்த்தம் கொள்ள முயற்சித்திருக்கிறேன்.//

நல்லா இருக்கு :))

said...

பல பேரு சொல்லியிருக்கிறத வச்சு பாத்தா பாட்டு நல்ல பாட்டுதான்..

said...

அண்ணே உங்களுக்கு எத்தனை வயசு...:)

said...

திடீரென்று இந்த பாட்டை போட்டிருக்கிங்க...