ஆடல் கலையே தேவன் தந்தது!

ஆண்டுவிழாக்களிலும் ஆர்கெஸ்ட்ராக்களிலும் இன்னும் பிற நிகழ்ச்சிகளிலும் தவறாமல் நடைபெறும் நடன நிகழ்ச்சிகள்! ஆடுபவர்களின் திறமையினை வெளிக்கொணர்ந்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஆட்டத்தினை ரசித்துக்கொண்டும் அல்லது மனதினில் ஆடிக்கொண்டிருக்கும் அல்லது ஆட்டத்தை பற்றிய அவதானிப்புக்களை நினைத்துக்கொண்டிருக்கும் வித்தியாசமான ரசிகர்களினை நீங்கள் கண்டதுண்டா? ஏன் சில சமயங்களில் அது போன்ற மனத்தினை கொண்ட ரசிகர்கள் நீங்களாகவும் கூட இருக்ககூடும்!

அது ஒரு மகிழ்ச்சிகரமானதொரு அனுபவம்தான்!

ஆடும் ஆட்டத்திற்கேற்ப நாமும் நம்மை தயார் செய்துக்கொண்டு ஆடிக்கொண்டிருப்போம் - மனதுக்குள்ளாகவே...!

வெகு சிலர்தான் கொஞ்சம் கூட அக்கம் பக்கத்தினரின் சிந்தனைகள் பற்றிய கவலையின்றி மிக ஆனந்தமாக ஆடிக்கொண்டிருப்பார்கள்! - அவர்கள் என் பார்வையில் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையினை அனுபவித்து....!

இன்னும் சிலருக்கோ தங்களுக்கு ஆடவும் தெரியாது அதே சமயத்தில் ஆட்டம் பற்றிய குறைகளோ அளவற்று இருக்கும்! அவர்களை பற்றி நாம் என்ன கூறமுடியும் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை..!

ஒ.கே நீங்கள் இந்த பாடலை பாருங்கள்! முடிந்தால் ஆடுங்கள்! இருக்கும் விடுமுறையில் இனிமையாய் ஆக்கிக்கொள்ளுங்கள்! (குத்து பாட்டான்னு நினைச்சு ரொம்ப பீல் ஆகுபவர்களுக்கு நெக்ஸ்ட் டைம் நல்ல பாடல் வரும் என்ற நம்பிக்கையோட எதிர்காத்து இருங்கள்!)இந்த பாட்டு, இங்க தெரியலைன்னா இங்கன போயும் பாருங்களேன்..!

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

///வெகு சிலர்தான் கொஞ்சம் கூட அக்கம் பக்கத்தினரின் சிந்தனைகள் பற்றிய கவலையின்றி மிக ஆனந்தமாக ஆடிக்கொண்டிருப்பார்கள்! - அவர்கள் என் பார்வையில் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையினை அனுபவித்து....!///


ஆயில்ஸ் நீங்க பக்கத்தில் இருந்ததை கவனிக்கலை. ஸாரி:)

said...

//நிஜமா நல்லவன் said...

///வெகு சிலர்தான் கொஞ்சம் கூட அக்கம் பக்கத்தினரின் சிந்தனைகள் பற்றிய கவலையின்றி மிக ஆனந்தமாக ஆடிக்கொண்டிருப்பார்கள்! - அவர்கள் என் பார்வையில் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையினை அனுபவித்து....!///

வழிமொழிகிறேன்

said...

அப்படியா.. பொம்பிளைங்கள்ளாம் வாழ்க்கையை அனுபவிச்சு வாழக்கூடாதாமே.. தெரியுமா .. இப்பல்லாம் எல்லா ந்டனநிகழ்ச்சியிலும் பெண்கள் ஆடறாங்களாம்.. என்ன தைரியம்..

said...

பாடுவோர் படினால் ஆடத்தோன்றுவது
காலம் காலமாய் உள்ளதுதானே!

அதுவு இது பட்டைய கிளப்புற பாட்டு

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com