இட்லி மிளகாய் பொடி...!

நாற்புறமும் வட்டத்தில் குன்றுகளாய் அமைத்து,

அதன் நடுவில் அழகாய் விட்ட எண்ணெய்யில்,

குன்றுகளை கரைத்த பின் காணும் சொர்க்கம்!

காரமாகவே இருந்தாலும் கூட, கடலினிருந்து பெற்ற அமிர்தத்துக்கு இணையாக இட்லிக்கும் தோசைக்கும், துணையாக வரும் இந்த இட்லி மிளகாய் பொடியும் சாப்பிடாத ஆட்களுண்டோ...!

அனேகம் பேருக்கு அதிகம் அறிமுகமாவது இட்லிக்கு துணையாகத்தான்! அதுவும் கூட வீடுகளில் அவசரகால நடவடிக்கை சமயங்களில்தான்!

சூடச்சுட இட்லியும் அதற்கு துணையாக நல்லெண்ணை முழ்கிய மிளகாய் பொடியும் இருந்தால் போதும் எண்ணிக்கை இங்கு எடுபடாது!அப்படியே தின்று கொண்டே இருக்க தோன்றும்! அதை போலவே இந்த துணை தோசைக்கும் நன்றாக ஈடுக்கொடுக்கும்!

ஒன்றுமே செய்ய இயலாத சூழ்நிலையில் இருக்கும்போது தயிர்சாதத்துடன் + மிளகாய் பொடி -அனுபவிச்சு பாருங்கப்பா அர்த்தம் விளங்கும்!

கொஞ்சம் உளுத்தம் பருப்பு (வெள்ளை)
கொஞ்சம் சிவப்பு மிளகாய் ( அதாம்ப்பா காஞ்ச மிளகாய்!)
கொஞ்சம் கடலை பருப்பு,
கொஞ்சம் எள்,
கொஞ்சம் பெருங்காயம்,
இன்னும் கொஞ்சமா உப்பு,
அவ்ளோதாங்க! அப்படியே இட்லியை கொஞ்சிக்கிட்ட சாப்பிட்ட வைக்கலாம் இதை தொட்டுக்கொண்டு...!

சின்னபசங்க இந்த இட்லி மிளகாய் பொடி காம்பினேஷனா சாப்பிடுறதையும் கொஞ்சம் வாட்ச் பண்ணி பார்த்தீங்கன்னா, கொஞ்சமா இட்லி பிட்டு அதுல மிளகாய் பொடியை தோய்த்து கையில வைச்சுக்கிட்டு, கண்களால் அதையே ரொம்ப நேரத்துக்கு நோட்டம் விடற பார்த்தீங்கன்னா, நமக்கே அதை அப்படியே பிடுங்கி சாப்பிட்டணும் போல தோணும்! (அப்படியும் சாப்பிட்டிருக்கேன்ல....!)

இதெல்லாம் நார்மலா எல்லாரும் டிரைப்பண்ற விஷயம் நாமெல்லாம் அப்படியா...!??? இட்லி தோசை எல்லாம் அடிச்சு முடிச்சப்பிறகு மீந்து போயிருக்கு எண்ணெய் + மிளகாய் பொடியை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சுவைத்து பாருங்களேன்..! ச்சே சான்ஸே இல்லப்பா!

யாருப்பா..! கண்டுபிடிச்சது இத்தனை ஆனந்தம் வரவழைக்கும் இந்த ஐட்டத்தினை..??

(இருக்கும்போது இல்லாத எண்ணம் இழந்தபோது தான் தோன்றியது! - ஆமாங்க லீவுக்கு ஊருக்கு போனப்ப அம்மாவை செய்ய சொல்லி, எடுத்து வந்த மிளகாய் பொடியை யாருக்குமே கொடுக்காமல்,கிட்டதட்ட 5 மாசம் பொத்தி பொத்தி வைச்சு தின்னு நேற்றையோட காலி! :-( )

28 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மேலே இருப்பது மிளகாய்ப் பொடியா? சக்கரைப் பொடி போல இருக்குப்பா

said...

ஆமாண்ணே செம டேஸ்ட் தான்... ஆனா எங்க ஏரியால எல்லாம் இது பழக்கத்தில் இல்லை. உங்க ஏரியா வந்தா சில ஹோட்டலில் கிடைக்கும் போது விரும்பி சாப்பிடுவோம்... :)

said...

நானும் இப்படி சாப்பிட்டிருக்கேன்...
என்ன ஒரு சுவை...

said...

தயிர் சாதத்துடன் சாப்பிட்டதில்ல.. ஆனா தனியா இட்லி காலியானப்பறம் படிச்சிட்டு இருக்கும் நாவலை சுவாரசியமா புரட்டிக்கிட்டே மிச்சமிருக்கும் பொடியையும் சாப்பிட்டுக்கொண்டிருப்பது இப்பவும் உண்டு.. ஒரு முறை நானே செய்வேன்..அடுத்தமுறை வருவோர் போவோரோ இல்ல எப்படியோ அம்மா மாமியார் யாராவது செய்தது கிடைத்துவிடும்..
எங்க அம்மா ஒரு பிடி அரிசி வறுத்து போடுவாங்க..(ஆனா சீக்கிரம் காலியாக்கனும்ன்னு நினைக்கிறேன்)

இங்க தில்லியில் மகளின் தோழிகளில் இருந்து ஆசிரியை வரை கணவரின் கூட வேலை செய்பவர்கள் எல்லாரும் அதை கன் பவுடர் ன்னு சொல்லுவாங்க.. எப்படி செய்வது டிப்ஸ்.. கேட்டுட்டே இருப்பாங்க..? மிளகாய் பொடி இட்லி குடுத்தே ப்ரண்ட்ஸ் பிடிச்சுப்பா மகள்.

said...

அது என்ன முதல் வரி.. நாற்புறமும் வட்டத்தில் வட்டத்தில் ஏது நாற்புறம்..:) இது சும்மா

said...

ஆயில்யன் நான் தொட்டுப்பேன் தயிர்சாதத்துக்கு இட்லிப்பொடி.
அந்தப் பெருங்காய மணமும் நல்லெண்ணெய் வாசனையும் தயிர்சாதத்தை உடனே விழுங்க வைத்துவிடும். அதுவும் கரகரவென்ற பொடியாக இருக்கவேண்டும். பற்களில் பருப்பு அகப்படவேண்டும். ஆஹா.
எள் கலப்படமில்லாத மிளகாய்ப்பொடி ருசியே தனி.:)

said...

இதே போல பழைய சோற்றுக்கு சின்னவெங்காயமும் பச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து நசுக்கின தொகையல் இன்னும் நல்லா இருக்கும்:)
அதுவும் இலையில் போட்டு கையால் பிசைய வேண்டும்:)

said...

கடகத்தாரே, என்ன ஒரு பொருத்தம்?. இப்போ நானும் இட்லிக்கு,எண்ணை ஊற்றிய பொடியுடன்,இம்புட்டு வயசாகிடுச்சு,இன்னும் ஊட்டி விடனுமாம்ல்லன்னு திட்டிக்கிட்டே அம்மா ஊட்ட, சாப்பிட்டுக்கிட்டேதான் இதைப் படிக்கறேன்.

பின்ன இந்தியா வந்துட்டு இதையெல்லாம் மிஸ் பண்ண முடியுமா?

Anonymous said...

ஆயில், மிளகாய்ப்பொடி, இட்லி நல்ல காம்பினேஷன். இட்லி சாம்பார் சாப்பிட்டுட்டே படிக்கிறேன்.

said...

வெறும் மிளகாய்த் தூளை எண்ணையில போட்டு பூண்டு, கறிவேப்பிலை உப்பு சேர்த்து செய்வாங்களே அந்த சுவைக்கு அப்புறமா தான் இதோட சுவைன்னு நான் காரசாரமான எதிர் விவாதம் வைக்கிறேன்

said...

ஏனுங்க வயித்தெரிச்சலைக் கிளப்பறீங்க.இப்பத்தான் ரொட்டித்துண்டும் தொட்டுக்க பட்டாணிக் கடலையும் தங்கமணிகிட்ட சத்தம் போடாம வாங்கி சாப்பிட்டுட்டு உங்க பதிவுக்கு வந்தேன்.நீங்கதான் இப்படின்னா ஜீவ்ஸ் மொளகாய்ப் பொடிங்கிறாரு,எண்ணை,பூண்டு,கருவேப்பிலைன்னு ...சும்மா சொல்லக்கூடாது மூளைக்கும் நாக்குக்கும் என்னமோ தொடர்பு இருக்கத்தான் செய்யுது.

said...

இதற்காகவே ஊருக்குப் போக வேண்டுமென்ற ஆசையை ஏற்படுத்தி விட்டீர்கள்.

ஆமா, அதென்ன ஆயிலுக்குள் ‘ஆயில்யன்'?

said...

///கானா பிரபா said...
மேலே இருப்பது மிளகாய்ப் பொடியா? சக்கரைப் பொடி போல இருக்குப்பா
//

அண்ணே! அது மிளகாய் பொடிதான்ண்ணே நம்புங்க ப்ளீஸ்!

said...

//தமிழ் பிரியன் said...
ஆமாண்ணே செம டேஸ்ட் தான்... ஆனா எங்க ஏரியால எல்லாம் இது பழக்கத்தில் இல்லை. உங்க ஏரியா வந்தா சில ஹோட்டலில் கிடைக்கும் போது விரும்பி சாப்பிடுவோம்... :)
//

அடுத்த தடவை வர்றதுக்கு முன்னாடியே சொல்லுங்க பார்சல் கட்டி வைக்கிறோம்!

said...

//Sen22 said...
நானும் இப்படி சாப்பிட்டிருக்கேன்...
என்ன ஒரு சுவை...
//

ஸேம் பீலிங்க்ஸா ! நானெல்லாம் சாப்பிட்டேன் சாப்பிட்டுக்கிட்டிருக்கேன் சாப்பிடுவோம்ல...!

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
தயிர் சாதத்துடன் சாப்பிட்டதில்ல.. ஆனா தனியா இட்லி காலியானப்பறம் படிச்சிட்டு இருக்கும் நாவலை சுவாரசியமா புரட்டிக்கிட்டே மிச்சமிருக்கும் பொடியையும் சாப்பிட்டுக்கொண்டிருப்பது இப்பவும் உண்டு.. ஒரு முறை நானே செய்வேன்..அடுத்தமுறை வருவோர் போவோரோ இல்ல எப்படியோ அம்மா மாமியார் யாராவது செய்தது கிடைத்துவிடும்..
எங்க அம்மா ஒரு பிடி அரிசி வறுத்து போடுவாங்க..(ஆனா சீக்கிரம் காலியாக்கனும்ன்னு நினைக்கிறேன்)

//
ஹய்! புத்தகம் பேப்பர் பார்த்துக்கிட்டே படிக்கறவங்களாக்கா நீங்க?! - நானும் தான் :))

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
அது என்ன முதல் வரி.. நாற்புறமும் வட்டத்தில் வட்டத்தில் ஏது நாற்புறம்..:) இது சும்மா
//

கரெக்ட்டா வட்டம் வந்ததே கிடையாது அதான் இப்படி!!!

ஆமாம் இது பொருள் குற்றம் தானே! நீங்க சொற்குற்றம் தான் கண்டுபிடிக்கணும் ஆமாம் சொல்லிப்புட்டேன்! :)))

said...

//வல்லிசிம்ஹன் said...
ஆயில்யன் நான் தொட்டுப்பேன் தயிர்சாதத்துக்கு இட்லிப்பொடி.
அந்தப் பெருங்காய மணமும் நல்லெண்ணெய் வாசனையும் தயிர்சாதத்தை உடனே விழுங்க வைத்துவிடும். அதுவும் கரகரவென்ற பொடியாக இருக்கவேண்டும். பற்களில் பருப்பு அகப்படவேண்டும். ஆஹா.
எள் கலப்படமில்லாத மிளகாய்ப்பொடி ருசியே தனி.:)
//

ஹய் வல்லி அம்மாவுக்கு தெரிஞ்சுருக்கு இந்த தயிர் சாதம் +இட்லிபொடி டேஸ்ட் சூப்பரூ! :)

said...

//வல்லிசிம்ஹன் said...
பற்களில் பருப்பு அகப்படவேண்டும். ஆஹா.எள் கலப்படமில்லாத மிளகாய்ப்பொடி ருசியே தனி.:)
//

பற்களில் பருப்பு அகப்படுவதாவது, அது பல் இடுக்குகளில் மாட்டிக்கிட்டு அப்புறம் கிண்டி கிளற அது ஒரு அனுபவம்! :)))

said...

//வல்லிசிம்ஹன் said...
இதே போல பழைய சோற்றுக்கு சின்னவெங்காயமும் பச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து நசுக்கின தொகையல் இன்னும் நல்லா இருக்கும்:)
அதுவும் இலையில் போட்டு கையால் பிசைய வேண்டும்:)
///

ம்ம்...! தின்னுருக்கேன்! தின்னுருக்கேன்!

said...

//ரசிகன் said...
கடகத்தாரே, என்ன ஒரு பொருத்தம்?. இப்போ நானும் இட்லிக்கு,எண்ணை ஊற்றிய பொடியுடன்,இம்புட்டு வயசாகிடுச்சு,இன்னும் ஊட்டி விடனுமாம்ல்லன்னு திட்டிக்கிட்டே அம்மா ஊட்ட, சாப்பிட்டுக்கிட்டேதான் இதைப் படிக்கறேன்.

பின்ன இந்தியா வந்துட்டு இதையெல்லாம் மிஸ் பண்ண முடியுமா?
//

நல்லா இருங்கப்பா! :))

ஆனாலும் அம்மா ஊட்ட, நீங்க கம்ப்யூட்டருல உக்காந்திக்கிட்டு சாட்டிக்கிட்டே சாப்பிடறது, பாக்குறதெல்லாம் கொஞ்சம் ஓவருதான்!

said...

//சின்ன அம்மிணி said...
ஆயில், மிளகாய்ப்பொடி, இட்லி நல்ல காம்பினேஷன். இட்லி சாம்பார் சாப்பிட்டுட்டே படிக்கிறேன்.
//

ஆஹா...!

சாம்பர்ல முழ்க வைச்சா இல்ல சும்மா தொட்டு தொட்டு சாப்பிடறீங்களா....!???

said...

//வெயிலான் said...
இதற்காகவே ஊருக்குப் போக வேண்டுமென்ற ஆசையை ஏற்படுத்தி விட்டீர்கள்.

ஆமா, அதென்ன ஆயிலுக்குள் ‘ஆயில்யன்'?
//

ஊருக்கு போறப்ப இதையெல்லாம் மிஸ் பண்ண முடியுமா??

ஆஹா படத்தை நல்ல பெருசா அழுத்தி உத்து பார்த்திட்டீங்களா?
அதெல்லாம் ச்சும்மா நம்ம போட்டோவுக்குனு ஒரு அடையாளம்தான்! :)))

said...

இது ஸ்டாக் இல்லாம இருந்ததேயில்லை. சட்னி சாம்பார் வைக்க நேரமில்லாம போகும் போது "கை கொடுக்கும் தெய்வம்" ஆச்சே!

//இருக்கும்போது இல்லாத எண்ணம் இழந்தபோது தான் தோன்றியது!//

இருக்குது பாருங்க இட்லி மிளகாய் பொடிக்குள்ளேயும் இப்படி ஒரு மெசேஜ்!

said...

//ராமலக்ஷ்மி said...

இட்லிமிளகாய்பொடி, வைச்சுத்தான் ரொம்ப தெனாவட்ட வேற எதுவும் தொட்டுக்க செய்யாம தூங்கி எழுந்து தின்னுட்டு திரும்ப தூங்கறது இங்க லீவு நாட்களில்....! :))

பொடிக்குள்ளயும் மெசேஜா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)))

said...

//வெறும் மிளகாய்த் தூளை எண்ணையில போட்டு பூண்டு, கறிவேப்பிலை உப்பு சேர்த்து செய்வாங்களே// Jeeves சொன்னதை ஆமோதிக்கிறேன். கறிவேப்பிலை கூட தேவையில்லை. நல்லெண்ணெய் சற்று அதிகமாகவே இருக்கட்டும்.

J.P. Ravichandran, Bangalore

said...

மிளகாய் பொடி...அமிர்தம் அண்ணாச்சி அது...வீட்டுல சட்னி சாம்பார்னு எது வச்சாலும் தொட மாட்டோம்ல எனக்கு எப்பவும் மிளகாய் பொடி தான் :))

Anonymous said...

சமையலுமா?
பொறாமையா இருக்கு..
முயற்சி செய்து பார்க்கின்றேன்...