தூக்கு சாடி மாதிரியான கைப்பிடி வைச்ச வடிவத்தில அப்போது வந்துக்கொண்டிருந்த ஐட்டம்தான் சவன்பிராஷ் அல்லது ஜவன்பிராஷ் ரெண்டுமே ரொம்ப கஷ்டமா இருக்குன்னா ஜீவன் பிரஷ்ன்னு வைச்சுக்கலாம்! - அப்படித்தான் இருக்குமாம் இதை சாப்பிட்டா!
ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த லேகியத்தை சாப்பிட்டுவந்தால் நல்லா புஷ்டியாக ஆரோக்கியமாக இருக்கும் புள்ளைங்கன்னு எல்லா அம்மாக்களையும் போல எங்க அம்மாவும் இதை மாசம் மாசம் வாங்கி வைச்சு, வைச்சு தூக்கு வைச்ச பாட்டில்களால்தான் பயன் அதிகமானதே தவிர பசங்களுக்கு ஒண்ணும் ஆரோக்கியத்தும் அந்தளவுக்கு வந்து சேரலை - தின்னாத்தானே வரும்! லேகியம்ன்னா அவ்ளோ கசக்கும்ல! ( அதெல்லாம் திங்காமலே சும்மா அந்த மாதிரி புஷ்ன்னுத்தான் இப்ப இருக்கேன்ல!)
ஜீவன் பிரெஷ் ஒரு வித்தியாசமான சுவைன்னுத்தான் சொல்லணும்! புடிக்கும்னும் சொல்லமுடியாது!
அய்ய அதுவான்னு ஒதுக்கிவைக்ககூடிய அளவுக்கும் அவ்ளோ மட்டம் கிடையாது! சில சமயங்களில் சளி தொந்தரவுகளால் பாதிக்கப்படு மூச்சு விட சிரமம் படும் நபர்களுக்கு டாகடர்களே பரிந்துரைக்கும் மருத்துவம் இதுதான்!
டெய்லி ஒரு ஸ்பூன் காலையில உள்ள உட்டுக்கிட்டோம்னா சும்மா அவ்ளோ நல்லது உடம்புக்குன்னு கேட்டதுண்டுங்க! வாரம் வாரம் ஜீவன் பிரெஷ் புண்ணியத்துல எதாவது ஒரு புரோகிராம் டிடியை வளைச்சுக்கட்டி அடிக்கறத வைச்ச கண்ணு வாங்காம பார்த்ததுல அப்படியே பச்சக்குன்னு பதிஞ்சு போன விஷயம்தான் இந்த சவன்பிராஷ்!
என்னதான் ஊரில் இருந்தபோது கடைகளில் கண்டு,காணாமல்போனாலும் (அப்ப அருமை தெரியாது போல!) இங்க இப்ப திடீருன்னு பார்க்கறச்ச அப்படியே நினைப்பு நினைப்பா வந்து வுழுவுதுங்க! சரி ஏண்டாப்பா நீ கடைக்குப்போகணும் அதை பார்க்கணும் அப்புறம் இங்க வந்து அழுவணும்ன்னு கேட்கறது எனக்கு கேட்குது?
என்னங்க பண்றது? பத்து நிமிஷம் வெளியில (வெய்யில்ல) நின்னா பத்தி எரிஞ்சுடுவோம் போல இருக்கு அந்தளவுக்கு கொளுத்துது வெய்யில்! நிழல் கண்டு ஒதுங்குனாலே உடனே ஜில்லுனு தண்ணி குடிக்க தோணுது! அதை குடிச்சா ஆட்டோமேடிக்கா அடுத்த 2 மணி நேரத்துல ஜல்ப்பு புடிச்சுக்கிது! இவ்ளோ கஷ்டத்தையும் கண்ட்ரோல் பண்ணனும்னா எதாவது மருந்து சாப்பிடலாம்ம்னு எனக்கு தெரிஞ்ச இந்திய பொருட்கள் விக்கிற கடைக்கு போனப்ப இந்த சவன் பிராஷ்தான் டக்குன்னு கண்ணுல பட்டுச்சு! பதிவுல போட்டாச்சு!
சரி, கடையை பத்தியும் கொஞ்சம் சொல்லிக்கிறேன் தென்னிந்திய உணவுகள்னு சொல்லிட்டு எல்லாம் கேரளா பொருள் மட்டுமே வைச்சிருக்காணுங்க! இன்னொன்னு நம்ம ஊரு ரேஷன் அரிசி மாதிரியே வாசனையோட அரிசியும் இருக்குங்க! தஞ்சாவூர் பொன்னி அரிசியாம்! - கேரளாவுக்கு அரிசி கடத்தல்ன்னு சேதி படிச்சதுதான் இந்த சந்தேகம் என் ஞாபகத்துக்கு வருது! அது அப்பிடியே இங்கேயா வருது????

7 பேர் கமெண்டிட்டாங்க:
சயவ்ன் ப்ராஷ் நம் உடம்புக்கு உறுதி ஊட்டுது. தினம் எடுத்துக்கொள்வது நம்மை வலிமையாக்குது.
ஆனா நீங்கள் முதலில் போட்டிருக்கும் படம் பங்கஜ கஸ்தூரி. கொஞ்சம் காட்டமா இருக்கும்.
பங்கஜ கஸ்தூரி ஆஸ்துமா, சைனஸுக்கு சிறந்த மருந்து.
இரவு தூங்கப்போகும் முன் இதமான சூடானப் பாலில் கலந்து குடித்தால்
இருமல், மூக்கடைப்பு இல்லாமல் இதமானத் தூக்கம் வரும்.
Anna nalla healthy information. Thanks..!! :-)
\\அதெல்லாம் திங்காமலே சும்மா அந்த மாதிரி புஷ்ன்னுத்தான் இப்ப இருக்கேன்ல!)
\\ அப்படியா!!! க்ளிண்டன்னு இருக்கீங்கன்னு நெனச்சேன்
இந்த அயிட்டங்களை எல்லாம் பாத்ததோடு சரி... டேஸ்ட் ஒத்து வர்ரது இல்லை பாருங்க... :)
////புதுகைத் தென்றல் said...
சயவ்ன் ப்ராஷ் நம் உடம்புக்கு உறுதி ஊட்டுது. தினம் எடுத்துக்கொள்வது நம்மை வலிமையாக்குது.
ஆனா நீங்கள் முதலில் போட்டிருக்கும் படம் பங்கஜ கஸ்தூரி. கொஞ்சம் காட்டமா இருக்கும்.
புதுகைத் தென்றல் said...
பங்கஜ கஸ்தூரி ஆஸ்துமா, சைனஸுக்கு சிறந்த மருந்து.
இரவு தூங்கப்போகும் முன் இதமான சூடானப் பாலில் கலந்து குடித்தால்
இருமல், மூக்கடைப்பு இல்லாமல் இதமானத் தூக்கம் வரும்.////
ரிப்பீட்டேய்.....!
பிள்ளைங்களுக்காக வாங்கி அவங்க சாப்பிடாமல் கடைசியில் நானே கஷ்டப்பட்டு காலி செய்தேன்.. இப்ப வந்துட்டுப்போனப்ப அம்மா .. பசங்களாவது பரவாயில்ல போல நீ தான் மோசமா இருக்க.. டேட் சிரப் சாப்பிடுன்னு வாங்கிவச்சுட்டுபோயிருக்காங்க.. :)
கடையில் இருக்கற ஒவ்வொரு விசயத்துக்கும்பதிவு போடுங்க.. கொசுவத்தி நாயகரே..
Post a Comment