பரதம் - அழகு மலர் ஆட...!

1988ல் ஆண்டுவிழாவில் கேட்ட, பார்த்த இந்த பாட்டு அப்படியே இன்னும் கூட காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது! இருக்காதா பின்னே ஆண்டுவிழாவில் பரதநாட்டியம் என்ற பெயரில் ஆடிய ஐவரில் என் சகோதரியும் ஒருவராச்சே!

அப்போதெல்லாம் பரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் ஆர்வமிருந்தாலும் கூட, அதற்கென்று தனியாக பயிற்சி எடுக்கவேண்டும் என்பதிலோ அல்லது தினமும் ஆசிரியரிடம் சென்று வகுப்புக்களில் கலந்துக்கொள்ளவேண்டும் என்பதிலோ அத்தனை ஆர்வம் இருந்தது கிடையாது! ஆனாலும் சிலரது வீடுகளில் மட்டுமே அப்போது தெரிந்துக்கொண்டிருந்த டிவிக்களில் வரும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளினை பார்க்கும்போதெல்லாம் ஏனோ பெண் குழந்தைகளுக்கு ஒரு ஆசை ஏற்படுவது தவிர்க்க இயலாத விசயமாக இருந்தது! அதையும் விட இன்னொரு விசேஷமும் இந்த பரதநாட்டியத்திற்கு உண்டு !வேற என்னங்க! நானும் பரத நாட்டியம் ஆடப்போறென்னு வீட்ல சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி பட்டு புடவையோ அல்லது பட்டு பாவாடை செட்டோ இன்னும் பிற ஆபரணங்கள் எல்லாம் ரெடி பண்ணனும்ல!

பரத நாட்டிய ஆட்டங்கள் அந்த காலகட்டத்தில் எல்லா பள்ளிகளிலும் வாழ்த்துப்பா சங்கதி போன்று கட்டாயமானதாக்கப்பட்டிருந்த ஒரு விஷயம்! அதிகமான மேக்கப்புக்கள், ஆடத்தெரியாவிட்டாலும் கூட ஆரம்பம் அட்டகாசமாக இருக்கவேண்டும் என்ற சில கண்டிஷன்கள்! சிலருக்கோ சரி ஆடணும்னு முடிவு பண்ணிட்டோம் அப்புறம் பரத நாட்டியம் மட்டும் எதுக்கு எல்லாத்தையும் கலந்துவிட்டுடலாம் என்ற சில சோதனை களங்களும் கூட அரங்கேறிய நாட்கள் பற்றி முந்தா நாள் நினைச்சு பார்த்தேனுங்க!

நம்ம முத்தக்கா பொண்ணு நல்ல அருமையா பரத நாட்டிய போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு பெற்றது,பற்றிய சேதி கேட்டப்பொழுது, இதெல்லாம் நினைப்பு வந்துச்சு :-)

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஒரு பதிவின் லிங்க் அதை வைத்து ஒரு பதிவு. கலக்குறீங்க ஆயில்ஸ். மாதினிக்கு அவங்க பதிவிலேயே வாழ்த்தை சொல்லிட்டேன்!இங்கும் ஒரு தடவை மாதினிக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.

said...

//நிஜமா நல்லவன் said...
ஒரு பதிவின் லிங்க் அதை வைத்து ஒரு பதிவு. கலக்குறீங்க ஆயில்ஸ். மாதினிக்கு அவங்க பதிவிலேயே வாழ்த்தை சொல்லிட்டேன்!இங்கும் ஒரு தடவை மாதினிக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.//

ரிப்பீட்டேய்ய்

ஆனா வழக்கமான உங்க ஞாயிறு பஞ்ச் பதிவு எங்கே? ;-) சாரி ஜொள்ளீட்டே இருக்கேன்.

said...

அனிதா ரத்தினம் படம் போட்டு இருக்கவே அவங்களைப் பத்தியோன்னு நினைச்சேன்பா.
ஆயில்யன், மாதினி ஆடினது எனக்குத் தெரியாது.
தகவல் கொடுத்ததற்கு நன்றி.

மாதினிக் குட்டி வாழ்த்துகள் செல்லம். உங்க அம்மா கிட்டயும் சொல்லு.

said...

ஆனாலும் சிலரது வீடுகளில் மட்டுமே அப்போது தெரிந்துக்கொண்டிருந்த டிவிக்களில் வரும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளினை பார்க்கும்போதெல்லாம் ஏனோ பெண் குழந்தைகளுக்கு ஒரு ஆசை ஏற்படுவது //

ஆமாண்ணே, டி.டி. ல ஞாயித்துகிழமை காலையில போடுவாங்க இல்ல?

said...

எனக்கும் பரதம் மிகவும் பிடிக்கும். இந்த பாட்டு என்னோட ஆல் டைம் பேவரை பாட்டு.,,,,,,, :)