மதியம் வியாழன், ஜூன் 17, 2010

ராவணன்


கொளுத்தியெடுக்கும் வெய்யில் காலத்தில் ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டுமா என்ற கேள்விகள் பல பத்து முறைகள் எழுந்தடங்கினாலும் பார்த்துடலாம்ன்னு நட்பு கை கொடுக்க ராவணனின் திரைக்களம் -தியேட்டருக்குத்தாங்க - புகுந்தோம்!

ப்ளாக்யெல்லாம் வைச்சுருக்கோம்ல அப்படின்னு ஒரு நினைப்பு வந்துச்சு அதான்...!

*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*


Ø செய்திகளில் பேசப்பட்டது போலவே ராமாயணம் கதையின் கருவே ராவணன் – குரங்கு சேஷ்டை செய்யும் கார்த்திக் விபீஷணனாக மாறும் தம்பி கண்டிப்பாக நம்பவைத்துவிடுகிறது - ஹீரோவின் கேரக்டரினை விட வில்லன் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏன் டைட்டில் வைச்சுருக்காங்கன்னு யோசிக்கவைச்சு பதிலும் சொல்லியிருக்காங்க! என்ன அதுக்குள்ள இண்டர்மிஷனா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு விறுவிறுப்பு

Ø சந்தோஷ் சிவனின் ஒளி ஓவியங்கள் - ஒரு டப்பா எஸ்.எல்.ஆர் கேமராவினை வைத்துக்கொண்டு அலைமோதிக்கொண்டிருக்கும் எனக்கெல்லாம் வியப்பினை தரவைக்கும்விதமான காட்சியமைப்புக்கள் ! ஒரு காட்சியில் ஐஸின் ஐஸ் ஹப்ப்படியோ சொக்கவைக்கிறது! கேரளத்தில் அவுட்டோர் லொக்கேஷன் செண்டிமெண்ட் மணி ரத்னத்திற்கு உண்டு என்பதை நிரூபிக்கும் அதிராம்பள்ளி!

Ø உசுரே போகுதே பாடல் ஒளி/ஒலிக்கதொடங்கும் காட்சிகளில் சற்றே மனதுக்கு நெருடலாய் ஆரம்பித்தாலும், மொத்தமாய் படம் முடியும் பொழுதினில் சாரி டூ திருவள்ளுவர் & அபிஷேக் பச்சன் ”பிறன் மனை பாராமை பேராண்மை ரூல்ஸெல்லாம் ஏத்துக்க முடியாம, ஐஸ்வர்யா ராய் பச்சனை மனதிலேற்றி அமர்த்திவிட்டது!



Ø பெருத்த பிரபு வீராவுக்கு அண்ணன் + அட்வைசராக கால்ஷீட் பிரச்சனையோ அல்லது காலதாமதமோ கண்டினியூட்டி சில இடங்களில் பிரபுவுக்கு தடுமாற்றம்

Ø மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தில் பார்க்க நினைத்துக்கொண்டிருக்கின்ற கேரக்டர் ரஞ்சிதா - ச்சே எக்ஸ்பெக்டேஷனெல்லாம் கிர்ர்ர்ர்ர்

Ø கந்தசாமி எஃபெக்ட் சவுண்ட் கொடுக்கும் மேனரிஷம் எப்படி மணி ரத்னம் அனுமதித்தார் - நிஜமாகவே விரும்பியிருப்பாரோ - ஆச்சர்யம்தான்!

Ø கட்டுமஸ்தான விக்ரம் கந்தசாமியில் விழுந்தவரை கண்டிப்பாக கரை சேர்க்கும்! ஹிந்தியில் ஐஸ்வர்யாவின் கணவராக நடிப்பதையும் பார்த்துவிடும் ஆவல் உண்டாகியிருக்கிறது!

Ø மிக எளிய உரையாடலினை வெளிப்படுத்தும் வசனங்களே! மனைவியினை சந்தேகப்படும் கணவனின் செயல் சாதுர்யமாக கையாளப்படுவதும்,கோபம் விட்டுபோகாமல் இருக்கவும், தீயவர்களிடத்தில் இரக்கம்/அன்பினை வெளிப்படுத்தாமல் இருக்கவும், இறைவனிடம் வேண்டும் கதாநாயகி வசனங்கள் - சுஹாசினி - மணி ரத்னம் கொடுத்து வைத்தவர் ரொம்ப அதிகம் பேசமாட்டாங்க போல அவுரு தங்கமணியும்..!

Ø கோடு போட்ட,கள்வரே கள்வரே,கடா கடா காட்சியமைப்புக்களிலும் தூள்! ரொம்ப சிலாகித்து பேசப்பட்ட உசுரே உசுரே கொஞ்சம் நிமிடங்களில், மயங்கி கிடக்கும் ஐஸ்வர்யாவினை மனதில் இருத்திவிட்டு செல்கிறது!

Ø ஹிஸ்டரியின் ஒன் லைன் தீம் வைத்துக்கொண்டு கரெக்டர்களையும் ஒத்துவருவதுபோலவே உருவாக்கிவிட்டு, அரசியல் இன்ன பிற ஹிஸ்டோரிக்கல் பிரச்சனைகள் எதுவுமின்றி வில்லனை ஹீரோவாக்கும் விசயத்தில் மணி ரத்னம் ஜெயித்திருக்கிறார்


*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*

கடைசியா தோணுச்சு:- ஒரே நேரத்தில ராவணன் ஹிந்தி தமிழ்ல ரீலிசானா மல்லு சேட்டன்மார் ஹிந்திக்குத்தான் போறாங்க செம்மொழி மாநாட்டுல சொல்லி இதுக்கு எதுனா தடை போடணும்

டிஸ்கி டெரரிசம் :- இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று அப்படின்னு பாடுன தேவன் மேல டெரர் கோபம் வர்ற அளவுக்கு உங்களை ஒரு பெண் சஞ்சலப்படுத்தினால் நீங்களும் ராவணனே!

36 பேர் கமெண்டிட்டாங்க:

Thamiz Priyan said...

பாஸ்... ஐஸ்வர்யா இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது பாஸ்!

Subankan said...

ஆகா ஆவலை எகிறப்பண்ணிட்டீங்களே!

வால்பையன் said...

இங்க இன்னும் ரிலீஸே ஆவலயே!

Bruno said...

நவிநஆ

அபி அப்பா said...

நல்ல விமர்சனம்! நன்றி ஆயில்யன்!

ராம்ஜி_யாஹூ said...

have u seen in qatar or written this post based on nakkeran magazine's review

G3 said...

U adhukkulla paathaachaa!!! Me going only sat :(((

Thamiz Priyan said...

ராம்ஜி விட்டுட்டேன்... ஒருநாள் உங்க கூட கெட்டி சட்னியு, செட் தோசையும் சாப்பிடனும்.. வாங்களேன்... ரொம்ப ஆர்வமா இருக்கேன்.

Thamiz Priyan said...

\\\ராம்ஜி_யாஹூ has left a new comment on your post "ராவணன்":

have u seen in qatar or written this post based on nakkeran magazine's review
\\\\

ராம்ஜி.. சொம்பைத் தூக்கி கக்கத்தில் வச்சுக்கங்க.. சொம்பு ரொம்பவே அடி வாங்கி இருக்கு... மேஜர் சுந்தரராஜன் மாதிரி இந்த ஆங்கில கமெண்டை தமிழில் போடுங்க ப்ளீஸ்

ஆயில்யன் said...

//ராம்ஜி_யாஹூ said...

have u seen in qatar or written this post based on nakkeran magazine's review//

பாஸ் பார்த்துட்டுத்தான் எழுதுறோம் சொல்லப்போனா மன்னன் ரஜினி ஸ்டைல்ல பர்ஸ்ட் டிக்கெட் கூட! அதெல்லாம் போட்டோ எடுத்து போட்டுத்தான் நம்பவைக்கணும்ங்கற அவசியம் எனக்கு இல்லை!

அபி அப்பா said...

ராம்ஜி! வாட் ஈஸ் திஸ்? நல்லா இல்லியேப்பா உங்க கமெண்ட். வலைகுடா நாடுகளில் இன்று ராவணன் ரிலீஸ் என்பதாவது தெரியுமா உங்களுக்கு!

நிஜமா நல்லவன் said...

/தமிழ் பிரியன் said...
பாஸ்... ஐஸ்வர்யா இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது பாஸ்!/

பாஸ்...எதுக்கும் இந்த வாரம் முழுக்க ஒரு தடவை இராவணன் பார்த்திடுங்க...:)

நிஜமா நல்லவன் said...

ஆயிலு...மோதிரம் யாருக்கு???செயின் யாருக்கு????அதை முதலில் சொல்லுங்க....அதுக்கு அப்புறம் யார் ரஜினி யார் கவுண்டருன்னு முடிவு பண்ணிக்கிறேன்:))

கை.க.சோழன் said...

Thanks for your raavanan's preview and it will be making more expectations on this film.

நேசமித்ரன் said...

நல்ல பார்வை ஆயில்யன்

நல்லா எழுதி இருக்கிங்க நன்றி

கோபிநாத் said...

ரைட்டு ;))

☼ வெயிலான் said...

பாஸ்! என்ன இது மல்ஸ் விட்டுட்டு ஒரேடியா ஐஸ்க்கு தாவீட்டீங்க..... :)

வினையூக்கி said...

மல்லு பிரித்விராஜ் இருந்துமா, சேச்சிகளும் சேட்டன்களும் இந்திப் பதிப்புக்குப்போறாங்க !!

நீங்க ஏன் எங்க ஸ்வீட் வில்லன் பிரித்விராஜைப் பத்தி சொல்லவே இல்லை !! மனுஷன் வில்லன் ரோல்ன நல்லா பண்ணுவார், கணாகண்டேன், இப்போ வந்திருந்த குற்றப்பிரிவு இரண்டிலேயும் ஸ்மார்ட்டா வந்திருப்பாரு.

நக்ஸலைட்பத்தி எல்லாம் சொல்லலியா !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ படம் பாக்கலாம்தானே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா ஜொள்ளியிருக்கீங்க!

பா.ராஜாராம் said...

very intresting review.

thanks. paarkanum.

வந்தியத்தேவன் said...

சின்னப்பாண்டி ஐஸ் படம் கலக்கல் ஐசுக்காக நான் படம் பார்ப்பேன்.

சீமாச்சு.. said...

//நல்லா ஜொள்ளியிருக்கீங்க!//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ராமலக்ஷ்மி said...

பார்க்கலாம்னு சொல்றீங்க. நல்லா எழுதியிருக்கீங்க.

கை கொடுத்த நட்பின் விமர்சனத்தைப் பார்க்கப் போகிறேன். வரட்டா?

கண்ணா.. said...

இன்னும் ரெண்டு ஐஸ் படத்தை சேர்த்து போட்ருக்கலாம் பாஸு

ஐஸை பத்தி பேசுறத விட்டுட்டு மல்லுகளை பற்றி பேசி ரெண்டு வரி வேஸ்ட் பண்ணிட்டயேண்ண....

அப்புறம் உங்க கூட படம் பார்த்த படத்தோட டெக்னிஷியன், லைட் பாய், ஸ்டுடியோ வாட்ச்மேன் பத்தில்லாம் எழுதுனாத்தான் நல்ல விமர்சனம்னு ஒத்துக்குவோம்

:)

சந்தனமுல்லை said...

/தமிழ் பிரியன் said...

பாஸ்... ஐஸ்வர்யா இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது பாஸ்!/

ஊருக்கு வாங்க..எங்கே நிக்குதுன்னு பார்ப்போம்..அண்ணிக்கிட்டே சொல்லின்னு சொல்லணூமா என்ன?! :))

சந்தனமுல்லை said...

பாஸ்..அதுக்குள்ளேயே..கலக்குங்க..பைதிவே பாயிண்ட் நோட்டட்! ;-))

நீங்களும் பின்வீட்டுக்காரருமா..பிரியாணி செஞ்சு கொடுமை படுத்தக்கூடாதுன்னு அக்ரிமென்ட் போட்டீங்களா இல்லையா?! :-))

தமிழன்-கறுப்பி... said...

ஊருக்கு போய் பாத்துடலாம்னு இருக்கோம் பாஸ்..

:)

எல் கே said...

will see this sunday

தக்குடு said...

//இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று அப்படின்னு பாடுன தேவன் மேல டெரர் கோபம் வர்ற அளவுக்கு உங்களை ஒரு பெண் சஞ்சலப்படுத்தினால் நீங்களும் ராவணனே!// பஞ்ச் டயலாக்கு, மெசேஜ் எல்லாம் சொல்லுது புள்ள!!!...:)

Anonymous said...

நாளைக்கு பாத்துட்டு சொல்றேன்

karthik said...

kavunthucha ...kavuruliya..correckita sollu mame

karthik said...

kavunthucha ...kavuruliya..correckita sollu mame

Pepe444 said...

HI FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

Thamira said...

உங்க டெரர் டிஸ்கி அழகு. அப்படிப்பார்த்தால் ஊரெல்லாம் ராவாணாஸ்தான்.

நல்ல ஆயில்யன்.! நன்றி பதிவு.!

அருள் said...

அண்ணே, விமர்சனம் கலக்கல்...

தியேட்டர் போயி பாத்தா வரிசை கார் பார்கிங்க்க்கு வெளிய போகுது... அப்படியும் எதாவது வரிசையில் நிக்கிற தமிழ் முகம் நமக்கு கைகொடுகும்னு போனா ஏமாற்றம் தான் மிச்சம்... கடைசியில ஒரு சேட்டன் தான் நமக்கு கைகொடுத்தார் அதுவும் 15 ரியால் டிக்கேட்ல உள்ள நுழைத்தேன் (சேட்டன் பினாடி நீன்னவக்களுக்கு பெப் பே டிக்கெட் காலி)
நீங்க சொன்னது ஐஸ்வர்யா பச்சன் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது.

திரைப்படவியல் (ஒளி ஓவியங்கள்) 90% மணிகண்டன்னால் எடுக்கப்பட்டது...இது திரைக்கு பின்னால் கிடைத்த வட்டார செய்தி.

"ஒரு டப்பா எஸ்.எல்.ஆர் கேமராவினை வைத்துக்கொண்டு அலைமோதிக்கொண்டிருக்கும் எனக்கெல்லாம் வியப்பினை தரவைக்கும்விதமான காட்சியமைப்புக்கள்"

நானும் அப்படி தான் நெனச்சேன்...

"ஒரே நேரத்தில ராவணன் ஹிந்தி தமிழ்ல ரீலிசானா மல்லு சேட்டன்மார் ஹிந்திக்குத்தான் போறாங்க செம்மொழி மாநாட்டுல சொல்லி இதுக்கு எதுனா தடை போடணும்"

ஹிந்தி பழகுறாங்ககலாம்...