படிப்பு - திசை மாறும் பயணம்


ஐந்து வருடங்களுக்கு முன்பு ------------------------------------------> [ரவுண்டு ரவுண்டா சுத்தவெல்லாம் முடியாது இப்பிடித்தான்] கடைசி பரீட்சை முடிந்ததுமே கவலைப்பட்டது சிதம்பரம் கோவிலுக்கு போய் மங்களம் பாடுவதா அல்லது புத்தூர் ஜெயராமனுக்கு போய் தின்று கும்மாளம் போடுவதா என்று! அந்த கவலையிலேயே 3மணி நேர பரீட்சை எல்லோருக்கும் 2 மணி நேரத்தில் நிர்பந்தமாக முடிக்கப்பட்டு கட்டுகடங்கா காளையின் வேகத்தில் சூபர்வைசரின் அட்வைசை அலேக்காக காற்றில் தள்ளிவிட்டு திமிறிக்கொண்டு, வெளியே வந்த தருணங்கள்! மெஜாரிட்டியினரின் முடிவின் படி மங்களமே பாடப்பட்டது! [செண்டிமெண்ட் செண்டிமெண்ட்]

சரி இந்த கதை இப்ப எதுக்குன்னு நீங்க கேட்க மாட்டீங்க [ வந்து தொலைஞ்சுட்டோம் பிறகு என்ன கேள்வின்னு] இப்ப திடீருன்னு புத்தகத்தை எடுத்து வைச்சுக்கிட்டு உக்கார்ந்து படிக்க ஆரம்பிக்கலாமேன்னு ஒரு அழகிய மதிய பொழுதினில் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்த போது உதித்தது ! குதித்தோடி எழுந்து, தேடோ தேடுவென தேடி, கிடைத்தது ஒரு சிறிய டைரியில் ”சிவில் இன்ஜினியரிங்” என்று மட்டும் எழுதி அட்டவணைப்படுத்தியிருந்த பாடங்களின் தலைப்புக்கள் மட்டுமே! சரி முடிவு எடுத்தாஊக்குவிக்கற மாதிரி நடந்துக்கிடணும்பின்வாங்குற மாதிரி நடவடிக்கை கூடாதுன்னு, நண்பரிடமிருந்து பெற்ற புத்தகத்தினை எடுத்து வைச்சு தொடங்கியாச்சு!

ரொம்ப பக்கம் இருக்கிற தலையாணை டைப்பு புத்தகம் ஆரம்பிச்சதுமே அவ்வப்போது சந்தேகங்கள் எழுவதும், அடங்குவதும் என மாறுபட்ட மனநிலையில் - இங்கதான் ரிஸ்க் நிறைய எடுக்கிறோமோன்னு லைட்டா தோணுச்சு - நாம டெக்னிகலா படிச்சு டெவலப்பாகறதை விட, வேற அன்னிய மொழிகளின் மீதும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே என்று!

டெக்னிகல்
விசயங்களை சொல்வதற்கு அன்னியமொழி சற்று தெரிந்துகொள்வதில் தவறில்லைத்தானே [!?] அதுவும் ஒன்றுமே தெரியாமல் காட்சி பரப்பும் [சீன் போடுதலின் தமிழாக்கம்ங்க] கண்ணியவான்கள் நிறைந்த அலுவலக சூழலில் முயற்சிப்போம் என்று கொஞ்சமாய் அதற்கான விபரங்களையும் திரட்டி அதுவும் பாடத்திட்டத்துடன் இணைந்துகொண்டது தினமும் மதிய பொழுதினில் மல்லாந்து கிடப்பதை விட சொல்லில் ஆழந்து சிறந்து விளங்கிட வேண்டும் என்ற ஆர்வம் உந்துதலாக தள்ளிக்கொண்டு வந்தது - ரெண்டு நாள்தாங்க ரெண்டே நாள்தான்!

எங்கோ ஒரு தேசத்திற்கு வந்து யாருக்காகவோ நாம் அன்னிய மொழியினை கற்று சிறப்பு பெயர் பெறுவதை விட நாம் ஏன் நம்முடையை மொழியில் உள்ள சிறப்பானவைகளை ஊன்றி படிக்ககூடாது அப்படின்னு நான் நினைச்சுக்கிட்டிருக்கும்போதே பிங்கியது ஒரு பிரபலம் - உங்களுக்கு ஒளவையார் எழுதிய அகவல் தெரியுமா?

என்னது தெரியுமாவா? னிட்டர் பண்ணி வைச்சிருக்கேனாக்கும் சொல்லட்டுமா? என்று கேட்க தொடங்கிய அடுத்தகணமே மனசிலாயி!

அடடே! அதான் நிறைய இருக்குல்ல படிக்கிறதுக்கு !

என்னங்க பாதியில நிக்கிதேன்னு பாக்குறீங்களா

இப்ப நான் இங்கே நின்னுக்கிட்டிருக்கேங்க-------> மதுரை திட்டம்

18 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பாஸ்.. இது ந்வீனத்துவ கட்டுரையா> ஜெமோ எழுதின மாதிரியே இருக்கு.:))

said...

\\புத்தூர் ஜெயராமனுக்கு போய் தின்று கும்மாளம் போடுவதா என்று! \\
எதுக்கு அங்க போயும் தயிர் சாதம் சாப்பிடவா?

said...

யப்பாடீ! அந்த லிங்ல போனா தலை சுத்துதே? இன்னா லேங்குவேஜ்ப்பா அது?

said...

என்னதான் சொல்ல வர்ர்ர்ர்றீங்க?

said...

:) இப்படியே அங்க இங்க ந்னு இருக்கம்ன்னு சொல்லுங்க

said...

:)) thalaivaaaaaaaaa [boss ku thamizhaakkam :)] indha thalathula irundhu dhaan naanum ponniyin selavan kathai padichen :D

//காட்சி பரப்பும் [சீன் போடுதலின் தமிழாக்கம்ங்க] //

vizhundhu vizhundhu sirichittirukken :)) Asathunga neenga :) [Mannichikkonga thalai.. aapisla thamizh ezhuththuru [fontukku thamizhakkam correcta???] ilali :(( adhaan tamizh pattru pathivukku thanglish pinoottaam :D]

said...

//“ஊக்கு”விக்கற மாதிரி நடந்துக்கிடணும் “பின்”வாங்குற மாதிரி நடவடிக்கை கூடாதுன்னு, //

avvvvvvvvvv.. unga arivukkum theramaikkum.. neenga engayo irukka vendiya aalu thalai... [Adhaan qatarkku oditennu soldreengalo ;)]

said...

பாஸ் நல்ல தளம் பாஸ். அதுல இருக்க நிறைய புத்தகம் படிச்சுட்டேன். நீங்க இப்ப தான் அங்க நிக்குறீங்களா? ரைட்டு எல்லா புத்தகத்தையும் சீக்கிரம் படிங்க :)

said...

//“ஊக்கு”விக்கற மாதிரி நடந்துக்கிடணும் “பின்”வாங்குற மாதிரி நடவடிக்கை கூடாதுன்னு, //
நல்ல ஊக்குவிப்பு

said...

//நினைச்சுக்கிட்டிருக்கும்போதே பிங்கி’யது ஒரு பிரபலம் - உங்களுக்கு ஒளவையார் எழுதிய அகவல் தெரியுமா?
// யோவ் ஆயிலு, நான் ஒரு நல்ல காரியத்துக்காக கேட்டா பிரபலம்நு சொல்லி கலாய்க்கவா செய்யரீர். இருக்கட்டும்! இருக்கட்டும்!...:)))

said...

பாஸ் !

நைஸ் ஒன் :)))

said...

//ரொம்ப பக்கம் இருக்கிற தலையாணை டைப்பு புத்தகம் ஆரம்பிச்சதுமே அவ்வப்போது சந்தேகங்கள் எழுவதும், அடங்குவதும் என மாறுபட்ட மனநிலையில் //

லைட்டா தூக்கம் வர்ற நேரம்ன்னு சொல்லுங்க :-)))

said...

அண்ணே ரொம்ப நல்ல தளம் ;)

ஆமா இதை அறிமுகம் படுத்ததான் இம்புட்டு பில்டப்பா!? இல்லை வேற ஏதாச்சும் சொல்லவரிங்களா? !

said...

ரைட்டு!திசை மாறியாச்சா???

said...

சுத்தி வளைச்சுப் பேசுறாப்ல சுத்தி வளைச்சு லிங்கீட்டீர். நல்லவேளை புத்தூர் ஜெயராமன் தப்பிச்சார்

said...

அக்லகு... அழகு !?

said...

இதற்கு மேலும் ஒன்று செய்யலாம்.

தமிழ்நாட்டில் நாட்டுரிமையாக்கப்பட்ட எழுத்தாக்கங்களை நீங்கள் எழுதி மதுரைத்திட்டத்தில் சேர்க்கலாம்.

காட்டாக, குன்றக்குடி அடிகளாரின் ஆக்கங்கள்.

அறிவுரையன்று; பட்டறிவில் விளைந்த மனவெழுச்சியை பகிர்ந்து கொள்ளவெண்ணி, அவ்வளவே.

said...

//ஐந்து வருடங்களுக்கு முன்பு ------------------------------------------> [ரவுண்டு ரவுண்டா சுத்தவெல்லாம் முடியாது//

:)))