மதியம் வெள்ளி, மார்ச் 26, 2010

Phantom HD Gold


டிஸ்கி
:- நாலு பேருக்கு நாலு விசயம் போய் சேரணும்னா இந்த மாதிரி பதிவு போடறதுல தப்பேயில்ல!

எந்தவொரு முக்கியமான அதாவது தமிழ்ல சொல்லணும்ன்னா இம்பார்டெண்ட் டெசிசன்ஸ் எடுக்கறச்ச எல்லாருமே கொஞ்சம் சைலண்ட் கீப் அப் செஞ்சு ஒரு எதிர்பார்ப்பினை உண்டாக்கிதான் செய்வாங்க! அதாங்க ஸ்லோமோஷன். சினிமாவுலே நாம கத்துக்கிட்டோமா அல்லது நம்மகிட்டர்ந்து சினிமா சுட்டுக்கிச்சான்னு தெரியாது - இந்த ஸ்லோ மோஷன் எஃபெக்ட்க்கு அடிமையாகதா ஹீரோக்களே கிடையாதுன்னு சொல்ற அளவுக்கு ஒவ்வொரு கோணத்திலயும் ஸ்லோமோஷன்ல நடிச்சு தீர்த்துட்டாங்க!

இப்படிப்பட்ட ஸ்லோ மோஷன் நடிகர்களுக்காக புது புது தொழில் நுட்பத்துடன் அதிகமான ஹை டெபனஷன் (HD) டிஜிட்டல் கேமராக்கள் மார்கெட்டில் க்யூ கட்டி நிற்க தொடங்கிவிட்டது அதுவும் தற்போதைய லேட்டஸ்ட் phantom HD Gold Camera - High Speed இதுல என்ன அப்படி ஒரு ஸ்பெஷாலிட்டி



சாதாரணமாக ஸ்லோமோஷன் காட்சிகள் நிமிடத்திற்கு 24 ப்ரேம்ஸ் சுட்டுத்தள்ளும் கேமரா வகைகளிலிருந்து தரப்படுகின்றன ஆனால் இந்த புதிய phantom HD Gold நிமிடத்திற்கு 1500 ப்ரேம்ங்களை சுட்டு தள்ளும் அதே நேரத்தில் படத்தில் கிளாரிட்டிக்கும் 100% உத்தரவாதம் !

சாம்பிள்


தமிழ் திரைப்பட உலகை பொறுத்த வரையில் அனேகமாக எந்திரனிலும் மற்றும் இயக்குனர் அருண்வைத்யநாதனின் எதிர்மறையிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் உண்டு!

இனி வருங்காலங்களில் இந்த உயர்தர தொழில்நுட்ப கேமராக்களை வைச்சு பாடா படுத்தி எடுக்க தமிழ் திரையுலகம் ரெடியா நிக்கிது !
இனி குளோஷப் - ஷாட்ல ஹீரோவோட கண்ணுல இருக்கிற நரம்புகளில் ரத்தம் கொப்புளிக்கிறதுலேர்ந்து கண் இமைகள் துடிப்பது உதடுகள் துடிப்பது வரைக்கும் கண்டிப்பா காட்ட டிரை பண்ணுவாங்க!

யெப்பாடியோவ்வ் நினைச்சு பார்த்தாலே டெரர் காமிக்கிது!

15 பேர் கமெண்டிட்டாங்க:

☼ வெயிலான் said...

நல்ல பதிவு ஆயில்ஸ்! இன்னும் கூட தகவல்களை திரட்டியிருக்கலாம்.

ஆயில்யன் said...

//☼ வெயிலான் said...

நல்ல பதிவு ஆயில்ஸ்! இன்னும் கூட தகவல்களை திரட்டியிருக்கலாம்.//

ஆமாம் பாஸ் ! பட் டெக்னிகலா நிறைய விசயங்களை - மெமரி & குவாலிட்டி - சொல்றதுக்கு தெரியல அதான் விட்டுட்டேன் :)

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்தல்

இம்பூட்டு ஸ்லோவா பார்க்க நல்லாத்தான் இருக்கு ...

தமிழன்-கறுப்பி... said...

//யெப்பாடியோவ்வ் நினைச்சு பார்த்தாலே டெரர் காமிக்கிது!//

ஆமா, ஆமா. ;)


எந்திரன்லயா ஐசை காட்டினா பரவால்ல :)

தலைவரு முகத்தையெல்லாம் இப்படி பார்க்க முடியாது அண்ணே.

Thamiz Priyan said...

\\\தமிழன்-கறுப்பி... said...

//யெப்பாடியோவ்வ் நினைச்சு பார்த்தாலே டெரர் காமிக்கிது!//

ஆமா, ஆமா. ;)


எந்திரன்லயா ஐசை காட்டினா பரவால்ல :)

தலைவரு முகத்தையெல்லாம் இப்படி பார்க்க முடியாது அண்ணே.\\\

படுவா.. அண்ணாச்சி எம்புட்டு சீரியஸா பதிவு போட்டு இருக்காரு.. ஐஸ்ஸை பாத்து ஜொள்ளு விடுற வயசா உனக்கு?.. ;-)

Thamiz Priyan said...

ம்ம்ம்.. நன்றி பாஸ்! புகைப்படக் கலைஞர்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சி இருக்கு.. :)

கோபிநாத் said...

என்ன ஆச்சு அண்ணே உடம்புக்கு ஏதாச்சும்...!!!!

கோமதி அரசு said...

ஸ்லோமோஷன் காட்சிகளின் சாம்பிள்
நல்லாஇருக்கு ஆயில்யன்.

☀நான் ஆதவன்☀ said...

சூப்பரா இருக்கே பாஸ்!

//இனி குளோஷப் - ஷாட்ல ஹீரோவோட கண்ணுல இருக்கிற நரம்புகளில் ரத்தம் கொப்புளிக்கிறதுலேர்ந்து கண் இமைகள் துடிப்பது உதடுகள் துடிப்பது வரைக்கும் கண்டிப்பா காட்ட டிரை பண்ணுவாங்க!//

அவ்வ்வ்வ் திகிலான விசயம் தான் :(

Unknown said...

நல்ல தகவல் நண்பா.பகிர்தமைக்கு நன்றி

*இயற்கை ராஜி* said...

நல்ல பகிர்வு பாஸ்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தெளிவான குறிப்பும் அதற்கேற்ற வீடியோவும்!

Unknown said...

Saw that you had commented in my blog. Unfortunately, there is some prob with displaying unicode in my blog :( Would be great if you can comment in English. Thanks

Aparna
http://aparna-a.com

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

சுண்டெலி(காதல் கவி) said...

எந்த டெக்னாலஜி வந்தாலும் மொக்கையாக்குற் மொக்கை டைரக்டர்களிடம் இருந்து தமிழ்நாட்ட ஆண்டவன்தான் காப்பாத்தனும்