ஆஃபர் போட்டிருக்காங்க போலாமா.!

வந்த புதிதில் எல்லா இடங்களிலும், மின்னிய ஆஃபர் விளம்பரங்களை பார்த்து அட நம்ம ஊரு மாதிரியேதானா? இங்கேயும் அப்படின்னு ஆச்சரியப்பட்டேன்.!

ஒரு நாள் ஆபர் போட்டிருந்த சூப்பர் மார்கெட்டுக்கு போனப்பத்தான் தெரிஞ்சுது பெரும்பாலான தலைகள் நம்ம நாட்டுக்காரங்கத்தான்னு! குடும்பத்தோட வந்து, போகும்போது, காரை நெறப்பிக்கிட்டு போறத அதிசயமாத்தான் பார்த்துக்கிட்டு இருக்கிறேன்!

Photo Sharing and Video Hosting at Photobucket


Photo Sharing and Video Hosting at Photobucket


ஒவ்வெரு பொருளையும் விலையோட பெரிய A3 சைஸ்ல வழ வழ பேப்பருல ஃப்ரீயாக கொடுத்தத வைச்சுக்கிட்டு ,நம்மூரு விலையோட கம்பெர் பண்ணி பார்த்து பார்த்து, சில பொருட்கள எப்படி யூஸ் பண்றதுன்னும் நினைச்சு பார்த்து, பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளையும் ஊர் கவலையையும் ஓட்டியிருக்கேன்னா பாருங்களேன்!

ரூமூக்கு யாராவது வந்தா கரெக்டா கேட்கற கேள்வி, “வந்து எத்தனை நாளாகுதுன்னுத்தான்?” எனக்கு ஆச்சர்யமாருக்கும் எப்படித்தான் கண்டுபிடிக்கறாங்களோன்னு?!


அட உங்க ரூம்ல கிடக்கற அத்தனை சூப்பர் மார்க்கெட் ஆஃபர் பேப்பர வைச்சுத்தான் சார் எல்லாரும் ஈஸியா கண்டுபிடிக்கறாங்கன்னு.பக்கத்து ரூம்காரர் சொன்னபிறகுத்தன் அதன் உண்மையான அர்த்தம் புரிஞ்சுது!

சில பொருட்கள் அட இவ்வளவுதானா நின்னக்கவைக்கும் பல் பொருட்கள் ஆ..இம்மாம் விலையான்னு கேட்கவைக்கும்.

எல்லாத்தையும் வாங்குனுமுனு மனசுல நினைக்கத்தோணும்! ஆனா, அட, இத நம்ம ஊருல போயே வாங்கிக்கலாமேனு, இன்னெரு சாய்ஸ அதே மனசு சொல்றத,கேட்டு சும்மா வந்ததுக்கு ஒரு ஹெட்போன்,சைனா பிளேட் போன்ற சின்ன லெவல்லயே முடிச்சுக்கிட்டு, பெருசா ஷாப்பிங் பண்ணா மாதிரி, பெரிய்ய பை கேட்டு வாங்கிக்கிட்டு ஸ்டைலா ஒரு கோக்கோட வெளிய வர்றதுதான் எங்க ஆஃபர் ஷாப்பிங் ஸ்டைலாகிப்போச்சுங்க!