காவிரி - காப்பி & பேஸ்ட்

இடம்: தலைமை செயலகம் சென்னை.

நாள்: உத்தேசமாக ஜுன் -2007 கடைசி வாரம்.

என்னப்பா..? நான்தான் அப்பவே சொன்னேன்ல ஜூன் இரண்டாவது வாரத்தில ரெடியா வைச்சுக்கோங்க திடீர்னு கேட்பாங்க அப்ப கிடந்து பதறிக்கிட்டு இருக்ககூடாதுன்னு இப்ப பாரு ஒரே டென்ஷனாக்கிட்டிங்க? தலைமைசெயலக அதிகாரி சத்தம் அக்கம் பக்கமெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க,
அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அலுவலர் " இல்ல சார் மணி அப்பவே ரெடி பண்ணிட்டாரு, ஆனா அவரு மதியம் வரைக்கும் லீவு சார் ஆஸ்பெட்டலுக்கு குடும்பத்தை அழைச்சுக்கிட்டு போயிருக்காரு"!

சரி இப்ப என்ன பண்றது? பதிலுக்கு வினவ,

ஒரு பத்து நிமிஷத்தில ரெடி பண்ணிடறேன் சார்?

ராஜா கம்ப்யூட்டர ஒபன் பண்ணுப்பா?
எங்க அந்தாளு சேவ் பண்ணியிருக்கான்னு பாருப்பா?
சில நிமிடங்கள் கழித்து,
சார் அவரு என்ன பேருல பைல் பண்ணியிருக்காருன்னு தெரியிலை சார்
இப்ப என்ன பண்றது?

சரி ஒண்ணும் பிரச்சனையில்லை நீ போய் அந்த பீரேல இருக்கற சி.டி பாக்ஸ எடுத்து வா?

அதுல, ஜுன் மாதம் பேக்-அப் போட்டுருக்கே அந்த சி.டிய ஒபன் பண்ணுப்பா?
அந்த பைல்தான் ஒபன் பண்ணுங்க!
அப்பாடா! ஒ.கே முதல்ல டேட்ட மாத்துங்க?
சார் என்ன தேதி போடறது சார்? - கேள்வி முடிப்பதற்குள்,

ம்ம்ம்...! அது பிரச்சனைத்தான் மத்தத நாம முதல் ரெடி பண்ணுவோம். பொ.ப.துல டீடெயில்ஸ் தந்தாங்களே அது எங்க?

சரி இந்த வேல்யூவ டைப் பண்ணுங்க,

அதே மேட்டர்த்தான் காப்பி& பேஸ்ட் பண்ணுங்க,

அது அமைச்சரா இல்லை முதல்வரா உங்களுக்கு தெரியுமா?
அமைச்சர்தான் சார்!
- கட்டளைகள் பறந்து கொண்டிருக்க,

முடிஞ்சுதா,?
அப்பாடா!ஆமாம் பேரெல்லாம் கரெக்ட்டாத்தானே போட்டுருக்கீங்க?

எல்லாம் கரெக்ட்டுத்தான் சார் இந்தாங்க படிச்சு பாருங்க..!
Photo Sharing and Video Hosting at Photobucket
பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

கர்நாடகத்தில் பருவமழை தீவிரமாக உள்ளது. கபினி அணை நிரம்பி உபரி நீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்குத் திறந்து விடப்படுகிறது.
கிருஷ்ணராஜசாகர் அணையிலும் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்துவிடும் அளவுக்குத் தேவையான நீர் இருப்பு உள்ளது.
ஆனால் இந்த அணையிலிருந்து தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி வைக்க கர்நாடக -######- உத்தரவிட்டுள்ளதாக, பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இச் செய்தியைப் படித்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
இது உண்மையானதாக இருக்கக் கூடாது. அப்படி உண்மையாக இருக்குமேயானால் ஒரு மாநிலத்தின் -######- அரசியல் சட்டத்தின் மீது
கொண்டிருக்கும் மதிப்பையும் கூட்டாட்சி தத்துவத்தில் அவருக்குள்ள நம்பிக்கையும் வெளிப்படுத்துவதாக இருக்காது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு குழிதோண்டும் செயலாகவே ஆகிவிடும்.
இப்போதே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலைமை உள்ளது. எனவே இதில் மத்திய அரசும் பிரதமரும் உடனடியாகத் தலையிட்டு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்,'' என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
ஒ.கே!

சார் இந்தாங்க நீங்க கேட்ட லெட்டர்..!
இப்படித்தாம்ப்பா அந்த அம்மா ஆட்சியிலே ஒரு தடவை என்னாச்சுன்னா...! - (கடிதத்தை கொடுத்து விட்டு சக ஊழியருடன் அலுவலக "பணியில்" முழ்க ஆரம்பித்தனர்)

0 பேர் கமெண்டிட்டாங்க: