இனிய ஆண்டில் - உதவிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்!



மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

சேவை என்று தெரியாமலே, அனைவரும் நமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு, நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும்!

நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை... இத்யாதி இருக்கின்றன. 'நம் சொந்த கஷ்டத்துக்கு நடுவில் சமூக சேவை வேறா!' என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறைக்க வழி உண்டாகும்.

ஒரு லாப- நஷ்ட வியாபாரமாக நினைக்காமலே பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மால் ஆனதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால், போதும். அதனால் பிறத்தியார் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்... நமக்கே ஒரு சித்த சுத்தியும் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு, அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

நம்மைப் போல் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லாரும் ஒரு சங்கமாக, ஒரே அபிப்பிராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம்.

அப்படிப் பலர் கூடிச் செய்யும் போது நிறையப் பணி செய்ய முடியும். இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல், சத்தியத்தாலும், நியமத்தாலும் காக்க வேண்டும்.

உதவி செய்பவர்களுக்கு ஊக்கமும் அத்தியாவசியம். மான- அவமானத்தை பொருட்படுத்தாத குணமும் வேண்டும்.

பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கின்ற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவிட வேண்டும்.

'வாழ்க்கைத் தொல்லைகளிடையே கொஞ்சம் உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தப்பா' என்று கேட்பீர்கள்.

உங்களுக்குச் சொல்கிறேன்; பரோபகாரமாகச் சேவை செய்தால், அதுவே விளையாட்டு; அதுவே இன்பம்.

கண்ணதாசனிடமிருந்து,

அர்த்தமுள்ள இந்து மதத்தின் வழியாக...!

சின்னப்புள்ளதனமால்ல இருந்திருக்கேன்!


ஜீவ்ஸ் அண்ணாச்சி, கோட்டித்தனமா ஒரு பதிவு எழுதச்சொல்லி டேக் பண்ணிட்டு போயிட்டாங்க! கோட்டி தனமான்னா முதல்ல எப்படி எழுதறது என்னாத்தை எழுதறதுன்னே பிரியல! :-(

சரி எதாச்சும் சின்னபுள்ளதனமா செஞ்ச காரியத்தை சொல்லிடலாம்ன்னு ஆரம்பிச்சுட்டேன்! (நீ பிளாக்குறதே அப்படித்தானே இருக்குன்னு பீல் பண்றவங்களுக்கு - சின்னபுள்ள எழுதுனா அப்படித்தான் இருக்கும்!)

கல்லூரி சென்ற பிறகு நட்பு வட்டம் கிர்ர்ர்னு எகிற ஆரம்பித்திருந்தது எனக்கு!

பல வகுப்புக்களுக்கும் சென்று பழகும் நண்பர்களை மிக பொறாமையுடன் பார்க்கும் பழக்கம் கொண்ட எனக்கு இந்த எண்ணிக்கையின் அருமை புரிந்திருக்கவில்லை என்னை பொறுத்தவரையில் நாம் நிறைய நட்புக்கள் பெற வேண்டி இருக்கும் போல என்ற எண்ணம்தான்!

கல்லூரி படிக்கும் காலங்களில் சின்ன சின்ன உரசல்கள் வந்தாலும் கூட டக்கென்று மறக்கடிக்கும் சூழலே இருந்து வந்ததால் எந்தவொரு நிகழ்வுமே பெரியதாக இழப்பினையோ அல்லது மனகுழப்பங்களையோ கொண்டிருக்கவில்லை !

பொதுவாகவே நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்கள் நட்புக்களை காயப்படுத்தாத வகையில்தான் இருக்கும் என்றாலும் கூட, அதை வெளிப்படுத்துதல் காலம் நேரம் சூழல் கண்டிப்பாக சிறிய நிகழ்வினை கூட அலட்சியமாக்கியும் விடக்கூடும் அல்லது நட்பில் உரசல்களை கொண்டு வந்து விட்டுவிடக்கூடலாம்!

எல்லா நட்புக்களிடமும் கூடிய மட்டும் தொடர்ச்சியான தொடர்பினை கொண்டிருந்த எனக்கு சில நேரங்களில் சில நட்புகளின் பழக்கங்களில் தொடர்பு கொள்ளும் பழக்கம் வெறுத்துப்போக செய்தது !

ஒரு கட்டத்தில் அடப்போடா...! நீயா வந்து பேசுறவரைக்கும் நான் உன்கிட்ட பேசமாட்டேன் என்ற வைராக்கியம் அவ்வப்போது வந்து மறைந்து க்கொண்டிருந்தது (ஆமாங்க கொஞ்ச நாள் இருக்கும் பிறகு சந்திக்க நேர்ந்தால் எல்லாம் மறந்து போகும்,திரும்ப வரும்!)

வேலை விசயமாக வெளியூரில் இருந்தாலும் கூட தொடர்புகளும் இது போன்ற பிரச்சனைகளும் வந்துக்கொண்டுத்தான் இருந்தன! ஒரு கட்டத்தில் சிலரிடம் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பேசவே இல்லை (இப்ப நினைச்சா கூட அடேங்கப்பா ரொம்ப இஸ்ட்ராங்காத்தாண்டா இருந்திருக்க என்று நினைச்சு சிரிச்சுப்பேன்!)

வழக்கமான பிரச்சனைதான்! எப்பொழுதுமே ஒன்வே மாதிரி நான் மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டுமா அவர்களும் பரஸ்பரம் தொடர்பு கொள்ளட்ட்டுமே என்ற எண்ணம்தான்!

அந்த காலகட்டங்களில் நினைவுகள் வரும்போகும் நினைவுகளிலேயே எனக்காய் நிறைய உதவிகள் செய்திருந்த நட்புக்களுக்கு நன்றி சொன்னாலும் கூட ரியாலிட்டின்னு வரும்போது அடப்போடா..! நான் போன் பண்ணமாட்டேன் என்று மனம் அடம்பிடித்த சூழல்தான்!

ஆனாலும், சென்னை போன்ற சூழல் கண்டிப்பா நிறைய நினைவுகளையும் உறவுகளை நட்புக்களை பிரிந்திருக்கும் சூழலினை விளங்க வைக்க நிறைய சோதனைகளினை தரும் அது போன்றதொரு ஒரு உடல் நலக்குறைவு தருணத்தில்தான் எனக்கு சுற்றமும் நட்பும் தெளிவாக புரிந்தது!

உதவிக்கொரு ஆள் இல்லாத சூழலில் ஒவ்வொருவரினை பற்றியும் நினைவுகள் மாறி மாறி பயணிக்க,எடுத்த முடிவுதான் யார் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும் நாம இப்படித்தான் இருக்கணும்ன்னு ஒரு உறுதி எடுத்தாச்சு!

நம்மை தொடர்பு கொள்வதில் அவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம் சில நேரங்களில் மனமே கூட இல்லாமல் இருக்கலாம் அதை பற்றிய கவலை எல்லாம் நாம் எதற்கு எடுத்து நம் தோளில் சுமக்க வேண்டும்!

நாமே வலிய போய் நின்னாலும் கூட அவர்கள் வலிந்து ஒரு புன்சிரிப்பினை உதிர்ந்த்துதானே ஆகவேண்டும் அப்படின்னு முடிவா முடிவு பண்ணிட்டேன்!

கோபப்பட்டதும் அதனால் சில காலங்கள் பேசாமல் இருந்ததையும் நினைத்து நினைத்து சின்னபுள்ளதனமால்ல நடந்துக்கிட்ட்டோம்ம் நினைத்து எனக்குள் நானே கேவலப்பட்ட விசயத்தை எல்லாருக்க்கும் சொல்லிட்டேன்ப்பா!

வாழும் வாழ்வின் எண்ணிக்கை எவரும் அறியாத இவ்வுலகில் இருக்கும் நாட்களில், எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு திருப்தியான செயல்கள் செய்வதில் உயர்வு தாழ்வு பார்க்காமல் வாழ்ந்து போகலாமே என்று நினைத்தது எண்ணம் - தொடர்கிறது....!

தாழ்ந்து போவது தவறில்லைத்தான்!
வீழ்ந்து போவதற்கு வாய்ப்பும் இல்லை!
இந்த ஸ்டைலிலேயே வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே....!

டிசம்பர் 26




மனதில் பதிந்த சோகத்தை

மறந்துவிட முடியாத நாளாக

இன்று டிசம்பர் 26

எதிர்காலம் நோக்கியது மட்டுமல்ல

என் பார்வை..!

என் சொந்தங்களை

கொன்ற காலனை

எப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்

என் தடம் பதிக்கின்றேன்....!

M.G.R




திரைப்படங்களில் நிழல் கதாநாயகனாய் வந்தவர்

பின்பு நிஜ கதாநாயகனாய் மாறினார்,

இன்று நினைவுகளில் நிரம்பி இருக்கிறார்!

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

அந்த

நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

நினைத்தாலே உறைக்கும்!


டிஸ்கி:- படிச்சப்பிறகு நாக்கை சப்பு கொட்டிக்கிட்டு உக்காந்திருக்ககூடாது சட்டுப்புட்டுனு போய் காரியத்தை கச்சிதமா முடிச்சுட்டு வந்து கமெண்ட்ல ஆஹா நீங்க சொன்னதும் நிசம்தான்னு சொல்லிட்டு போகணும் ஒ.கேய்ய்!

எங்க ஊரு மக்களுக்கு நாளும் கிழமையும்ன்னா கண்டிப்பா காலையில வீட்ல இட்லிதான் போடுவாங்க திங்கிறதுக்கு!

நாளும் கிழமையும்ன்னா நல்ல நாட்கள், விசேஷ நாட்கள் மற்றப்படி கிருத்திகை,பெளர்ணமி அப்புறம் இன்ன பிற விரத நாட்கள் வெள்ளி ஞாயிறு இப்படியான நாட்கள்ன்னு வைச்சுக்கலாம்!

மத்த நாட்களில் எதாச்சும் டிபன் ஐட்டம்ன்னு சொல்ற தோசை,உப்புமா,பொங்கல் அல்லது வடக்கத்திய ஐட்டம்ங்கள் பூரி சப்பாத்தின்னு ஓடிக்கிட்டிருக்கும் ஆனா இந்த நாளும் கிழமையும்ன்னு சொன்னா ஒன்லி இட்லி ஐட்டம்தான் அதுக்கு சைடு கட்டி வைச்சு தட்டறதுக்கு சட்னி அல்லது சாம்பார் ஐட்டங்கள்!

இந்த சைடு ஐட்டங்கள் நார்மலா செய்யுறது,சில சமயங்கள் ட்யூ டூ அர்ஜென்சிக்கு (அம்மா பசிக்குதும்மா!) செய்யுற சைடு ஐட்டம்தான் நான் இங்க சொல்லி, நீங்க செஞ்சு திங்கப்போறது

சிவப்பு மிளகாய் பொடி - ஆக்சுவலா இப்படித்தான் நாங்க ஜொள்ளுவோம்! ஆனா இது துவையல் கேரக்டர்!

ரொம்ப சிம்பிளான செய்முறைதான் ஆனா திங்கிறப்பத்தான் சும்மா ஜிவ்வுன்னு காரம் தூக்கி கலக்கும் !

செய்யிறது எப்பிடின்னு நானே கூடச்சொல்லிடுவேனாக்கும்

நல்ல நாலு காஞ்ச மிளகாய் அப்புறம் கொஞ்சம் சின்ன வெங்காயம்,கொஞ்சம் உப்பு அம்புட்டுத்தேன்!

இந்த ஐட்டங்களை சேர்த்து,கொஞ்சமா தண்ணி தெளிச்சு விட்டு,அம்மியில வைச்சு விழுதாக அரைக்கணும்! ச்சும்மா வெண்ணெய் பதத்துக்கு அரைக்கணுமாக்கும்!

கடைசியா கொஞ்சம் கடுகு பொரிச்சு போடணும்!

அவ்ளோதான் புராடெக்ட் ரெடி!

இனி நல்லா சப்பணம் போட்டு உக்காந்துக்கிட்டு,சுடச்சுட இட்லியை டைரக்டா இட்லிபானையிலேர்ந்து அப்படியே தட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்ட்டு, அரைச்சு வைச்சா மிளகாய் பொடி/துவையலை ஒரங்கட்டி நடுவில குழிவிட்டு நல்லெண்ணை விட்டு கொஞ்சமா கலக்கி வைச்சுக்கிட்டு (ரொம்ப எண்ணெய் விட்டா நல்லா இருக்காதுப்பா!)
இட்லியை பிட்டு அதை சிவப்பு மிளகாய் பொடி/துவையல்ல தோய்த்து ச்சாப்ட்டா...!

(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!எனக்கு இப்பவே சாப்பிடுணும் போல இருக்குங்க ஒரே அழுகை அழுகையா வருது!)

டெவல்ப்மெண்ட் ஸ்டடீஸ்க்கு :-

1.சிவப்பு மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயும் ச்சூப்பரா இருக்கும்!.

2.இந்த ஐட்டங்களோட கொஞ்சம் பூண்டு சேர்த்து அரைச்சா அதுலயும் கொஞ்சம் டிபரெண்ட் டேஸ்ட் காமிக்கும்

3.சின்னவெங்காயத்துக்கு பதிலா பெரியவெங்காயமும் போடலாம் பட் பெரியவெங்காயத்தை கொஞ்ம் பொன்னிறமா வறுத்துப்போடா இன்னும் சூப்பரா இருக்கும்!


ரொம்ப உறைப்பாகிடுச்சுன்னா லைட்டா ஜீனி நாக்கில தொட்டுக்கோங்க!



ஒ.கேய்ய்ய்ய் !

அப்பத்தான் நினைத்தாலே இனிக்கும்!

we are all for QATAR





டிசம்பர் - 18 - கத்தார் நாட்டின் தேசிய நாள் இன்று

பெரும்பாலான நாடுகளின் மக்கள் வந்து வாழ்ந்து செல்லும் இடமாக

அரபு மண்ணின் கலாச்சார பண்பாட்டினை காத்து.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் போட்டி போட்டுக்கொண்டு வளரும்

குட்டி நாடாக

அச்சுறுத்தல்கள் ஏதுமின்றி அமைதியாக

பல்வேறு நாட்டு மக்களின் பாதுகாப்பிலும்

படு கவனமாய்....!

எதிரெதிர் நாட்டு மக்கள் இங்கு நட்பு பாராட்டுவதும்,

சண்டையிட்டுக்கொண்டிருக்கும் சகோதரர்கள் இங்கு சங்கடமின்றி பழக

பரவசமாகிறோம் இந்நாட்டின் வளர்ச்சி கண்டு

பக்கபலமாய் இருக்கிறோம் வளர்ச்சிக்காகவே என்று

எம்மினிய தேசமே உன் எழுச்சியில்

உண்டு எம் தேசத்தின் வளர்ச்சி...!

உண்டு உடுத்தி, உறவுகளை தவிர்த்து, தவித்து வாழுமெமக்கு

தினசரி வாழ்க்கை திகட்டாத ஒன்றாக

மனம் கலங்காத மங்களகரமான வாழ்க்கையாக்கி தந்த

இந்நாட்டின் தேசியத்தினத்தில்

இம்மண்ணின் மைந்தர்களை வாழ்த்துக்கிறோம்!

THE AHIMSA WAY - Embracing love


படித்ததும் மனத்தினை மிகவும் பாதித்தது!

அதை அப்படியே தமிழாக்கம் செய்ய மனம் துடித்தாலும், செய்தபோது சில பல எண்ணங்கள் வேண்டாம் செய்யாதே கேடாக்கிவிடுவாய் என்று உள்மனம் உணர்த்த தொடங்கிய கட்டத்திலேயே கட் செய்துவிட்டேன்

இங்க பேஸ்ட் செய்துவிட்டேன் படித்துப்பாருங்கள்!

சுனாமியில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் வாழ்க்கையும் கூட வருகிறது!

***********************************************

THE AHIMSA WAY Embracing love

Going beyond non-violence, ahimsa also involves connecting things and people with compassion and hope.

So far we have been looking at the concepts of ahimsa and himsa, in the context of our daily relationships. We need to remember that ahimsa values go further than just non-violence. We also need to think of ahimsa and practise it as an all embracing love, in which other qualities are also crystallised…compassion, justice, activism, hope, love for people and all of creation, and a vision that includes and connects everything and everyone with love and compassion.

Such an ahimsa mind does not come automatically or even easily to most of us, as we live at a time when only “I” and “Me” matter. “What’s in it for me?” “If I don’t benefit,” then, with a shrug of the shoulder, so much is thrown away — relationships, friends and jobs. We become selfish, insensitive, himsa people. We live too at a time when people around us don’t affirm ahimsa behaviour or values. Says one reader, “We are looked at as fools and laughed at and taken advantage of.” So is this all-embracing love only an ideal? Where today do we find examples of such ahimsa love that we can believe in and emulate?

When tragedy struck

I was at a camp in Sirgazhi, Tamil Nadu, where some of those affected by the tsunami are housed. There I met nine-year-old Murugeshwari. On the morning of December 26, 2004, she was on her way to buy tomatoes for her sister. Her mother was outside, cleaning fish. Sudddenly Murugeshwari heard a strange sound. She turned and saw the sea rushing towards her. Her first thought was to run and warn her sister and mother, but before that thought could turn into any kind of action she saw the sea swallow them both.

Today Murugeshwari is at a tsunami camp. Her bright eyes fill with tears as she tells me her story. She wipes them away with the hem of her skirt. Some children playing nearby see her wiping her eyes and come running over. They quickly surround her and two of them put their arms around her. “We are her friends, whenever she cries, we try and make her happy,” they said.

“How do you make her happy?” I asked them. “Some of us go and sleep with her in the night, so that she does not miss her mother and sister too much,” said one.

Another said, “We always hold her tight when we sleep.”

“I thought a present would make her happy. I asked my mother for some money to buy her a present. I bought her these,” said another girl pointing to a row of brilliant, green, glass bangles around Murugeshwari’s wrists. Yet another little girl said, “I gave her this,” pointing to a beautiful, black, red and gold bead necklace Murugeshwari was wearing.

“Where did you buy it?” I asked her.

“I didn’t buy it,” she said, “The sea swallowed my mother and my sisters also, so I don’t have anyone to ask money from. It was mine; it was round my neck when the tsunami came. I gave it to her,” she said.

The ahimsa love came so naturally to these children who had lost all that was important to them — their families, homes, and little possessions. While I was with them, I noticed that they were constantly looking out for those who needed some form of care — taking the older people to the bathroom, fetching water for women who were not their mothers, drying someone’s clothes in the sun, or just carrying someone’s baby on their hips as if it was their own brother or sister.

Contrasting behaviour

Contrast this with a story sent in by a reader. Two young women in an academic institution were applying for research grants. Although both were applying for different grants, there seemed to be some rivalry between them. Their boss told them to help each other with the grant applications and check on the last dates to make sure that they submitted them well on time. One of the girls was very competitive and did not want her colleague to get her grant, so she quietly sabotaged her application. We see this kind of himsa behaviour all around us — mean, selfish, hurtful, destructive.

Why does ahimsa behaviour not come easily to us who have so much? Is it because in our materialistic society we respect things more than people? Is our own personal selfishness, greed for material luxury, and desire to be the sole keepers of anything good, hindering us from being sensitive and caring? How do we turn our himsa behaviour around so that it becomes nurturing and powerful?

Forget the ego

At the tsunami camp, I learnt that ahimsa love had to be self- sacrificial to be real and truly meaningful. We need to put away the “I” of the ego, and look beyond at someone else’s well being. Two women were due for a promotion and were short- listed for it. One lady knew that she was qualified, had the right experience and had put in the required number of years in service. She knew too that if chosen, she would perform well. But after a while, she went to her boss and asked that the post be given to the other person. The reason? Her colleague had recently been through a series of personal tragedies and was desperately looking for something that would bring meaning to her life. The woman felt that the promotion would help her friend find stability and fulfilment at a time when so much in her life was painful.

Ahimsa people are powerful; It is in their hearts and minds to change himsa situations, and they do, not because they gain anything out of it, but because they believe in something much larger than themselves.


நன்றி :- உஷா ஜேசுதாசன்
இந்து நாளிதழ் - சண்டே ஸ்பெஷல்

ஐ லவ் லூசி!

நகைச்சுவைக்கென பிரத்யோகமாக வெளியாகிய நாடகங்கள் ஆரம்பகட்டங்களில் சிரிப்புக்களை வரவழைக்கும் சின்ன சின்ன யுக்திகளைனை கையாண்டு உண்மையாக சிரிக்க வைக்கும் செயல்களை செய்து வந்தன. காலங்கள் மாறின காட்சிகளும் கூட...!

சிரிப்பு வரவழைக்க முடியாத செயல்களை செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கறச்ச நாமளே நாலு பேரை தனியா சம்பந்தா சம்பந்தமில்லாம காட்சிகளில் சிரிக்க வைப்போம் அந்த சிரிப்பு சத்தம் கேட்டு மக்களும் அட இதுவும் காமெடி போலன்னு சிரிப்பாங்கன்னு ஒரு டெரரர் ஐடியா கண்டுபிடிச்சு அது இன்னிக்கு வரைக்கும் கண்டினியூ ஆகுது - நம்ம ஊர்ல!

இது போன்றே காட்சிகள் ஒளிப்பரப்பாகும்போது தனித்து சிரிப்பு சப்தங்கள் காட்சிகளுக்கேற்ப இணைக்கப்பட்டு பெரிதும் மக்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட முதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்தான் ஐ லவ் லூசி!

குடும்பத்தில் தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப்படும் நகைச்சுவைதான் ஐ லவ் லூசியின் தீம்!

1948ஆம் ஆண்டில் வானொலியில் ஒலிப்பரப்பாக தொடங்கிய இந்த நகைச்சுவைத்தொடர் பலத்த வரவேற்பினை பெற்றிருந்தாலும் மக்களிடையே ஒரு வித நம்பகத்தன்மை இன்றியே காணப்பட முதல் முதலாய் 1950 நேரடியாக களத்தில் இறங்கிய லூசி தம்பதியினரின் நகைச்சுவை தெறிக்கும் நாடகம் தொலைக்காட்சியில் தொடர்ந்து,6 ஆண்டுகள் வரை டாப் 3 நிகழ்ச்சிகளிலுக்குள்ளேயே இருந்தது!

டாப் 3 நிகழ்ச்சிகளில் மக்களால் ரசிக்கப்பட்ட இந்த நகைச்சுவை தொடர் அந்த வரிசையில் இருக்கும்போதே நிறுத்தப்பட்டதும் கூட வியப்பினை அளிக்கும் விசயமாக இருந்தது!

கொஞ்சமாய் இண்ட்ரோ கொடுத்தது போதும்ன்னு நினைக்கிறேன்! கொஞ்சமாய் நகைச்சுவை காட்சியினையும் பாருங்க!








டிஸ்கி:- இவையனைத்துமே கோமதி அம்மா கமெண்டாய் தெரிவித்த செய்தியின் அடிப்படையில் நான் தெரிந்துக்கொண்ட (நீங்களும் கூட இருக்கலாம்!?) நகைச்சுவை நடிகையும் - நகைச்சுவை ஒலி ஒளி நாடகம் தொடர்பான செய்திகள் !

மிஸ் வேர்ல்டு 2008 - ரஷ்யாவுக்கு போயிடுச்சுப்பா!





இன்று 13.12.2008 நடைப்பெற்று முடிந்த 2008 ஆம் ஆண்டிற்கான உலக அழகிபோட்டிகளில் பங்குபெற்ற பல நாடுகளின் அழகிகளிலிருந்து ரொம்ப பெஸ்டாக போன வருசம் மிஸ் ரஷ்யாவாக இருந்தவங்க இந்த வருசம் உலகம் பூராவும் பார்த்து ரசிக்கிற அழகியாகிட்டாங்க!

கடைசியா லிஸ்ட் அவுட் ஆன அஞ்சு பேரு!

Parvathy Omanakuttan, India

Gabrielle Walcott, Trinidad and Tobago

Brigite Santos, Angola

Ksenia Sukhinova, Russia

Tansey Coetzee, South Africa

நம்ம இந்தியாவிலேர்ந்து எங்க கனவு தேசத்துக்காரங்க ஒருத்தங்களும் போனாங்க பட் அவுங்க பர்ஸ்ட் ரன்னராகிட்டாங்க! :-(

Picasa - 3 - படு ஷோக்காகீதுப்பா!




  • நெறைய நெறைய விசயங்களை அப்டேட் பண்ணிக்கிறாங்கோ!

  • போட்டோ எல்லாத்தையும் அப்படியே வீடியோவாக்கி அதை யூ டூயுப்ல போட்டா உலகமே பார்க்குமாமாம்!

  • கம்ப்யூட்டரூ ஸ்கீரின் அப்படியே கேட்ச் புடிச்சு வைச்சிக்கிலாமாமாம்!

  • உங்க போட்டோவா இருந்துச்சுன்னா அதுல உங்க பேரை தண்ணியில எழுதி வைச்ச மாதிரி எழுதி வைச்சிக்கிட்டா என்னிய மாதிரி ஆளுங்க அதை சுட்டு நெட்டுல போட்ட்டா ஈசியா கண்டுபுடிச்சுடலாமாமா!

  • அட டக்குன்னு எல்லா போட்டோவும் ஜிவ்வுன்னு ஏறி நெட்டுக்குள்ள போயிடுதுப்பா அப்புறம் அதை ஊரு புல்லா அனுப்பலாம் !

  • கோலேஜ் சொல்லிக்கிற போட்டோ சேர்த்து வைச்சு வெளையாடற விளையாட்டுக்கு கொஞ்சம் ஆப்ஷன் அதிகப்படுத்தியிருக்காங்கோ!

  • அட எனக்கு கொஞ்சமா தெரிஞ்சு அன்னியமொழியை வைச்சுக்கிட்டு நான் கண்டுபுச்சது இம்புட்டுதான் நீங்க வேணும்னா போய் படிச்சுக்கோங்கப்பா புச்சிருந்தா இறக்கி வைச்சு வெளையாடுங்கப்பா!

வரவேற்பறை வந்த PIT


குழுப்பதிவாய் கூடிய கூட்டம்!

கூட்டிய கூட்டம் எண்ணிக்கையில்லாமல் தொடர்கிறது.

ஒவ்வொரு முறையும் இணைந்துக்கொள்ளும் இணையபதிவர்கள்

எழுத்துத்துறையில் மட்டுமின்றி நிழல்படக்கலையிலும் நிஜமாய் அசத்துக்கின்றனர்!

ஒவ்வொரு மாதமும் தேர்வாகும் படங்களும் சரி

தேர்வுக்கு வரும் படங்களும் சரி...!

கண்டிப்பாய் காண்பவர்களை ஈர்த்துக்கொண்டேதான் இருக்கிறது!

ஆம்!

பார்ப்பவர்களையும் கூட படமெடுக்க ஈர்த்துக்கொண்டுதான் இருக்கிறது!

எல்லாம் ஒருங்கே அரங்கேற அருமையாய் வழிநடத்திச்செல்லும் பிஐடிக்கு மற்றுமொரு பெருமை கொள்ளும் செய்தி

வரவேற்பறையில்



இணையம் தவிர்த்து, தனித்திருக்கும் இன்னும் பலரையும் இணைந்துக்கொள்ள வாய்ப்பாய்....!

வாழ்த்துகிறோம்!

விகடனையும்...!

விகடனின் வரவேற்பறையில் வீற்றிருக்கும் பிஐடி குழுமத்தினையும்....!

12-12-08


நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!

Happiness begins when ambition ends.

ஆசைகள் குறையக்குறைய நிம்மதி - சந்தோஷம் அதிகமாகிறது!

வாழ்க்கை ஒரு புத்தகமாக முதல் சில பக்கங்களும் கடைசியில் சில பக்கங்களும் தொலைத்து காணப்படுகின்றது! அவற்றை தேடுவதுதான் வாழ்க்கை! நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போகிறோம்! என்று நமக்கு தெரியாது அதை தெரிந்துக்கொள்ள முயல்வதுதான் வாழ்க்கை!

காணாமல் போன பக்கங்கள் பற்றிய கவலையின்றி கிடைத்த பக்கங்களோடு வாழ்க்கை வாழ பழகிக்கொள்வன் சாதாரண மனிதன்!
- ரஜினிகாந்த்

எட்டில் வாழ்க்கை!



1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!


டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!

கடலை நினைவுகள்!

முன்னாடியே டிஸ்கி:-

டெரரர் பிளான் ரெடியான இடம் இங்க இருக்கு!

*************



கடலையிலிருந்து
சொத்தையை பிரித்து
மத்ததை சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
கடலையை
சரிப்பாதியாக

கடலையை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
வறுக்கின்ற மண்ணாய்
கடலைக்குள் சேர்ந்து
வெளியேற மறுக்கிறது
அந்த வறுபட்ட மண்

கடலையும்
திங்க நல்லதுதான்
தான் கருகி
வந்தால்
கருகிய
சுவையாய்
நாக்கில் ருசிக்கிறது

என் கைப்பிடி அளவு
கடலையோடு,
உன் கையிலுள்ள
கடலையையும்
எனக்கு கொஞ்சம்
தருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி

கடலோரம்
அழகாய்
உன் கடலையையும்
என் கடலையையும் சேர்த்து
சுவைத்தப்படியே
வாயினில் மெல்ல மெல்லக்கரைய

நம் ஒவ்வொரு கடலையும்
நெருப்பில் கருகிய
கடலைகளாய்,
ஒரு வினாடி
தீச்சுவாலைக்கு பின்
முழுவதும் கருகிவிட்டது
மொத்தக்கடலையும்!

அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் கடலைக்கடைக்காரன்
காசுக்கேட்டு துரத்துகிறான்
அவன்
என்னை பிடிப்பதும்
நான்
அவனிடமிருந்து எஸ்ஸாவதும்
நிச்சயமே!

கவனித்து தின்கிறேன்
கருகிய
உன் மற்றும் என் பங்கு கடலைகளை
மூச்சு திணறாமல்
மெதுவாக தண்ணீர் குடித்தப்படியே

ஆயிரம் தடவை
வாங்கி தின்று வந்திருக்கிறேன்
இந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்
முதல் முறை நிதானித்து
தின்று பார்க்கிறேன்
என்னோடு சொந்த காசில்
வாங்கி தின்ன
அந்த நாட்களை யோசித்தப்படியே....

ஞாயிறு கொண்டாட்டம் - லாரல் & ஹார்டி!

இன்றைய (நவீன!?) காலகட்டத்தில் நகைச்சுவை காட்சிகளினை காண்கையில் ஏற்றுக்கொள்ளமுடியாத வகையிலான காட்சிகளின் குவியல்களாலாகவே இருக்கிறது!

ஏதோ சிரிப்பு மட்டும் வெளிப்பட்டால் போதும் என்ற மனநிலையிலேயே காட்சிகள் படமாக்கப்பட்டு வெளியாகின்றன! நடிப்பவர்களுக்கோ அல்லது அதை காட்சிகளாக படமாக்குப்பவர்களுக்கோ காட்சிகளில் உள்ள அபத்தங்கள் கொஞ்சம் விளங்குவதில்லையா? அல்லது விளங்கினாலும் வேறு வழியே இல்லை, இந்த காட்சி எடுத்தால்தான் மக்களை சிரிக்க வைக்கமுடியும் என்று மொத்தமாய் முடிவு கட்டிக்கொண்டு களத்தில் இறங்குகிறார்களா என்று புரியவில்லை!

லாரல் & ஹார்டி இரட்டை நகைச்சுவை நாயகர்களின் திரைப்பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன்பு ராஜ் டிவியில் பொழுது போகாத தருணங்களில் (அவுங்களுக்கு!) ரசித்து பார்த்ததுண்டு!

அங்க அசைவுகளிலும்,ஒருவருக்கொருவர் செய்யும் அசட்டை செயல்களிலும்,பார்ப்பவர்கள் மனம் நிறைய சிரித்து மகிழ வாய்ப்புக்கொடுத்துக்கொண்டே இருப்பவர்கள்!

இந்த காட்சியினை இப்போதைக்கு கண்டு சிரியுங்கள்...!

அழகென்ற சொல்லுக்கு ஆயில்யா...!



எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ..!

இதயத்தை கயிறு கட்டி கேரளா பக்கம் இழுத்தவள் இவளோ...!

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..

அது என்னென்று அறியேனடி...?




கண்ணே உன்னை காட்டியதால்

எனக்கு கேரளா சிறந்ததடி!!!!!

டிஸ்கி -1:- கேரளத்து புது வரவு இந்த அம்மிணி பேருதான் ஆயில்யா!

டிஸ்கி -2:- டைட்டில பார்த்துட்டு, என்னது ஆயில்யன் அம்புட்டு அழகான்னு யாரும் டெரரா ஃபீல் பண்ணவேணாம்!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!

பளீஸ் வேணாம்..!


இது ரொம்ப சகஜமானதொரு அனைவராலும் அலட்சியமாக அட! இதனால என்ன பெருசா ஆகிடப்போகுதுன்னு மனோபாவத்தோடு செய்யப்படும் சமூக பணி!

சுத்தம் செய்யும் பணிதான் ஆனாலும் ஊர் சுத்தமாகிறது - உலகம் அசுத்தமாக்கப்படுகிறது!

குப்பைகளாகிவிட்ட இலை தழைகளை தீயிலிட்டு தயவு செய்து எரிக்காதீர்கள் என்று பல இடங்களிலிருந்து பலமுறை வேண்டுக்கோள்கள் விடுக்கப்பட்டும் கூட,மக்களிடம் பழக்கமாகிவிட்ட இந்த வழக்கத்தினை மாற்ற இயலவில்லை :-(

சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி வரைமுறைக்குட்பட்டு நடக்கும் அரசாங்க அலுவலகங்களில் கூட இதே முறையினைத்தான் பின்பற்றப்பட்டு வருகிறது! அலுவலக வளாகங்களில் வளர்ந்து நிற்கும் மரங்களின் இலைகள் வாரத்திற்கொருமுறை இவ்வாறு தீயிலிட்டு எரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது!

பெரும்பாலும் இப்படியாக அப்புறப்படுத்தும் பணிகள் அதிகாலை வேளைகளிலோ அல்லது இரவு நேரங்களிலோதான் நடைப்பெறும்!

இப்படி எரிக்கப்படும் போது வெளிப்படும் மிக நுண்ணிய தூசுகள் அந்த புகையாக வெளிப்பட்டு காற்றில் கலக்கிறது!

காற்றினை சுவாசிப்பவர்களின் சுவாசக்காற்றாக மாறுகின்றது பின் வெகு விரைவில் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகச்செய்கிறது!

சிறு பணியாக நாம் செய்தது பெரும் தவறாக வியாபித்து நம்மையே நோய் கொண்டு வதைக்கிறது!

நம்மால் முடிந்தவரை தடுப்போம்!

நம்மால் முடிந்தவரை தவிர்ப்போம்!

*எச்சரிக்கை* இப்படியும் நடக்கலாம்..!



எல்லையை மீறி செல்லவேண்டாம்

உடலும்..!

உணவும்..!



(வலி இருக்கறவனுக்குத்தானப்பா தெரியும் அதோட கஷ்டமெல்லாம் நான் சொல்றதை சொல்லிப்புட்டேன் பிறகு உங்க இஷ்டம்! அதையே பாலோ பண்ணுனா பிறகு நொம்ப்ப கஷ்டம்!)

நன்றி :- டைட்டில் தானம் - ஜீவ்ஸ் அண்ணாச்சி!

மனப்பூக்கள் மலரட்டும் - 1



இதயம் பரிபூரணத்தூய்மையுடன் திகழட்டும்!

முற்றிலும் நியாயத்தின் வழியில் நில்லுங்கள்!

(உலகால் ஒத்துக்கொள்ளப்பட்ட உங்களின் மனதில் சரி என நினைக்கின்ற, மற்றவர்களால் பாராட்டப்படாவிட்டாலும் கூட ஏற்றுக்கொள்கின்ற வழி முறைகளையே பின்பற்றுங்கள்! )

இறக்கும் வரைக்கும் இருக்கும் வாழ்க்கையில் தைரியமே பிரதானமாக இருக்கட்டும்!

பாவமாக தோன்றும் ஒரு விசயத்தை பற்றி நினைத்துக்கூட பார்க்கவேண்டாம்! அதிகமாக நினைக்கப்படும்போது தான், நம்மையறியாமலே நம் செயல்களில் அந்த பாவங்களின் பாதிப்புக்கள் இருக்கும்!



உண்மையாக ஒருவர் தூயவராக இருந்தால் தூய மனம் படைத்தவராக நினைத்துக்கொண்டிருந்தால் அவரிடம் உங்களால் தூய்மையின்மையினை காண இயலாது! உள்ளே நினைப்பதுதான் வெளியே தெரிகிறது,தெரிவிக்கிறது.

- சுவாமி விவேகானந்தர்!



டிஸ்கி :-நொம்ப டெரராய் பதிவுகள் எழுத தொடங்கியிருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால், அன்பு கூர்ந்து, அடியேனை அட்டாக் செய்து சொல்லவும்!

ஆத்தா நான் லூசாயிட்டேன்...!

உன் குரலை மட்டுமே கேட்க

வேண்டாமென என் இரு செவிகளிலும்

ரெண்டு ரோல் பஞ்சினை வைத்தேன் என்றதற்கு

என்ன சொல்கிறேன் என்று தெரியாமல்

தான் பேசிக்கொண்டிருந்ததை கேக்கவில்லையே

என்று என்னை டெரராய் அடித்தாயே!



நாம் சந்தித்த இடங்களில்

நீ இல்லாத நாட்களில்

நான் நன்றாக இருந்தேன்

நிம்மதியாக இருந்தேன் என்றதற்கு

என்னுடன் பேசாமல் நிம்மதியாக இருந்தாயா?

என்று என்னை டெரராய் அடித்தாயே!




பிறந்ததில் இருந்து

நீ இத்தனை அழகா

என்று நான் ச்சும்மா கேட்டதற்கு

கண்ணாடியில் எனை காணாததால்

வந்த அழகு இது என

தைரியமாய் சொன்னாயே!

பைத்தியமடி நீ எனக்கு!

பைத்தியமானேன் நான் எனக்குள்!



டிஸ்கி:- இங்க படிச்ச பாதிப்புத்தான் என்னிய மன்னிச்சுடுங்க நாணல் அக்கா :)

தீபம் ஏற்றுவோம்! தியாகம் போற்றுவோம்!



தீபம் ஏற்றுவோம்!

தியாகம் போற்றுவோம்!

இனி வரும் காலங்களிலாவது,

தீவிரவாதம் நம் மண்ணில் திளைத்துப்போகாமல்

மரித்துப்போக வைக்கும் பணிகளில்

மனிதர்களாய், மனம் ஒன்றுப்பட்டு

கரம் கோர்ப்போம்!

களம் வெல்வோம்!

களத்தில் எதிரிகளால் வீழ்ந்த வீரர்களை போற்றுவோம்

களத்தில் எதிரிகளை வீழ்த்தும் வீரர்களை வாழ்த்துவோம்!

ஏலேலங்கடி - 13



என்னைப்போல் ஒருவன்!

இவர்களுக்கு இன்று பிறந்த நாள்...!



இரு மலர்கள்

இனிதாய் கொண்டாடுகின்றனர்

இனிய பிறந்த நாளினை...!

வருடந்தோறும் வரும் நாள்

வாழ்த்துக்கள் தெளிக்கின்ற இத்திருநாள்!

தொட்டு விடும் தூரத்தில் உறவுகள்!

நின்றங்கு வாழ்த்தியிருக்க,

தொலைத்தூரத்து உறவுகளாய்

நின்றிங்கு நாங்கள் வாழ்த்துகிறோம்!

வரும் நாட்களில் வசந்தங்கள் காத்திருக்க...!

இன்பங்கள் எத்திக்கும் பூத்திருக்க...!

கொண்டாடி மகிழ்கிறோம்!

அன்பு நெஞ்சங்கள் அள்ளித்தரும்

வாழ்த்துக்கள் பெற வாருங்கள்!

இணையத்தின்

என் இனிய பாச மலர்கள்...!

நாணல் தங்கச்சி!

அமிர்தவர்ஷினி அம்மாவோட பொண்ணு!
(பேரு எவ்ளோ ஈசியா சொல்றேன் பாருங்களேன்!)


















உங்கள் வருகையினூடே உடனிருக்கட்டும்

ரெண்டு பீஸ் கேக்குகளும் கூட.....!



எனக்கு மட்டும்....!

துறவு!

வார்த்தை கேட்டதும் அதிர்ந்தவர்கள் வாழ்ந்த காலங்கள் கடந்துப்போய்விட்டது! - களையிழந்தும்கூட போய்விட்டது!

இப்பொழுது இந்த சொல்லினை உபயோகிப்பதால் பெரும் கிண்டலும் கேலியும் தானே வந்து சேருகிறது - சரியாக புரிந்துக்கொள்ளப்படாமல் இருப்பதால்!

ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவோ முடிவடையக்கூடும்!

உலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சரியான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்!

சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!

சட்டக்கல்லூரி - போலீஸ் - நோ எண்ட்ரீ!


நடைப்பெற்று முடிந்த சட்டக்கல்லூரி வன்முறை சம்பவங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் இப்பொழுது காவல்துறையின் பக்கம் திரும்பி நிற்கிறது!

ஒரு வார காலத்திற்கும் மேலாக சட்டக்கல்லூரியில் சிலச்சில பிரச்சனைகள் முட்டிக்கொண்டிருந்த நிலையில்,உளவுப்பிரிவால் தகவலும் அளிக்கபட்டிருந்த நிலையில் காவல்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தாலும் கூட கட்டாயம் இச்சம்பவம் வேறு மாதிரியான பிரச்சனைகளாகவே அரங்கேறியிருக்ககூடும்!

வாசல்வரை வந்து நின்ற காவல்துறைக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற செய்தியும் போலீஸ் அதிகாரிகளின் கண்முன்னேயே மாணவர்கள் மாணவனை தாக்கியதும் எல்லோரிடமும் ஒட்டுமமொத்த வெறுப்பினை காவல் துறை வாங்கிக்கட்டிக்கொண்டது!

(சாமி பட ஸ்டைலில் யாராவது ஒரு சில இளைய தலைமுறை போலீஸ் களமாடியிருந்தால் பொதுமக்களால் பாராட்டுப்பெற்றிருக்கக்கூடும்! )

முன்பு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காவல்துறைக்கு விடுக்கப்பட்ட செய்தி குறிப்பாக காவல்துறை கல்லூரிகளுக்கு குறிப்பாக சட்டக்கல்லூரிகளுக்கு நுழைவதற்கு அக்கல்லூரியின் முதல்வரின் அனுமதியினைப்பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு நடைமுறை பழக்கம் கொண்டு வரப்பட்டிருக்கிறது!

(இது மற்ற மருத்துவ பொறியியல் கல்லூரிகளுக்கு கிடையாது! - போலீஸால், சட்டம் படித்தவர்களினை அத்தனை எளிதில் கைது செய்து விட முடியாது அதே நேரத்தில் மற்ற எத்துணை பெரிய படிப்பு படித்த மனிதராக இருந்தாலும் தூக்கிடலாம் அப்படிங்கறதும் ஒரு விந்தையான நடைமுறை விதி!)

ஜாதி ரீதியான பிரச்சனைகளை முன்வைத்து வன்முறை சம்பவம் அரங்கேற்றப்பட்டது, அதற்கு என்ன காரணம் மாணவர்களின் படிப்பு சார்ந்த விசயங்கள் தவிர்த்து மற்ற ஏனைய விசயங்களில் கல்லூரிக்குள் என்ன நடக்கிறது? எப்படி வெடித்தது இப்பிரச்சனை? என்ற எந்த விசயமும் இப்போதைக்கு எழுப்பப்படாமல் சில காவல்துறை அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டும், சஸ்பெண்ட் செய்யப்பட்டும் உள்ளார்கள்! - ஒட்டுமொத்த பிரச்சனையுமே காவல்துறை மூக்கை நுழைக்காமல் வெளியே நின்று வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்!

கேட்டுக்கு வெளியே நின்று அடித்தால் போலீஸ் வந்து பிடித்து துவைக்கும் என்ற சட்டம் தெரிந்தே அழகாய் உட்புறம் நின்று வன்முறையாடிய மாணவர்களுக்கு இப்படியான வன்முறையில் ஈடுபட்டால் என்ன விதமான தண்டனைகள் சட்டத்தில் இருக்கு என்று சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டார்களா ஆசிரியர்கள்?

இந்த சம்பவத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு என்ன விதமான தண்டனை அளித்தால் இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையிலும் இருக்கும்? இந்த மாணவர்கள் தண்டனை பெற்ற மீண்ட பிறகு நல்லவிதமாக சமூகத்தில் கடமை ஆற்ற மனதளவில் தயாராக இருப்பார்களா? அல்லது வன்முறையின் ஆணி வேர்களாக மாறுவார்களா? - சிந்திக்கப்படவேண்டிய விசயம் - யார் சிந்திப்பது....?

நாங்களும் ரவுடிதான் பாஸ்....! - டெரராய் ஒரு பதிவு

எதிர்கால இந்தியாவின் சட்ட மேதைகளாக வரப்போகிறவர்களாக

இன்று இருப்பவர்கள் இவர்கள்......!???




சட்டத்தை சாட்டையாக்கி சுழற்றவேண்டிய நீங்கள்

மரச்சட்டத்தை கட்டையாக்கி கையிலெடுத்துக்கொண்டு சுற்றுவதா?

அடிச்சுக்காதீங்க பாஸ் அடிச்சுக்காதீங்க!

திருக்குறள் பற்றி - நானும்....!


திருக்குறள் - மனித வாழ்வின் குறுகிய காலகட்டத்தில் கண்டுணர முடியாத உண்மைகள் பலவற்றை கூறிச்சென்ற பொதுமறை!

குறளினை அடிப்படை கல்வியில் மட்டும் பயின்று அதன்பின்னர் காலப்போக்கில் மறந்து செல்லும் பலருக்கு மத்தியில் இன்னும் கூட பலரால் இந்த பொதுமறையான நூல் போற்றப்படுகிறது! -ஒவ்வொருவரும் திருக்குறளினை தம் வாழ்க்கை ஓட்டத்தில், ஒரு முறையாகிலும் படித்து பொருள் உணர்ந்து கொள்ள கட்டாயம் வேண்டும்!

அறம் - இத்தலைப்பில் நிறைய கருத்துக்களினை கொண்ட குறள்கள் நிரம்பியிருக்கின்றன அவை சொல்லும் கருத்துக்கள் அத்தனையும் நல்லதொரு வாழ்க்கை தத்துவங்களாய் வாழ்க்கையில் கடைப்பிடிக்க தகுந்தவைகளாகவே இருக்கின்றன!

அறம் செய்தல் - தம் தேவை வரம்பினை மீறி அதிகம் உள்ள பொருட்களினை தானம் செய்தல் அல்லது நம்மால் இயனற அளவு உதவிகளை இல்லாதோர்க்கு செய்தல் என்ற அடிப்படை கருத்தில், நம்மால் முடிந்தவரை கடைப்பிடிக்க முயலவேண்டும்! செய்வது என்று முடிவெடுக்க யோசியுங்கள்,முடிவுகளை எடுத்தப்பின்னால் செயலை செய்துவிட்டு நீங்கள் உங்கள் வழியில் அடுத்த இலக்கினை நோக்கி செல்லுங்கள் இதுவே மிகச்சிறந்த பார்முலாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்! நல்லது செய்தாலும் சரி செய்யாமல் இருந்தாலும் சரி அதற்கான காரணங்களை நியாயப்படுத்த நிறைய விசயங்கள் மனதில் சஞ்சரிக்கும். அவ்வாறு தூண்டுவதற்கும் சமூகத்தில் பலருண்டு! முடிவெடுத்த பின்னால் யோசிக்காதீர்கள்!

அறம் செய்யுளம் அளவுக்கு பொருள் இல்லை, பொருள் இருந்தாலும் என் எதிர்காலத்தினை எம் குடும்பத்தின் நினை கண்டால் மனம் பயமுறுகிறது என்று இருப்பவர்களுக்குத்தான் இன்னொரு வழியினையும் திருவள்ளுவரின் குறள்களால் வெளிப்படுத்தப்படுகிறது!

இன்சொல் பேசுதல்!

காலை எழுவது முதல் இரவு வீழ்வது வரை நாம் நம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனையோ பேர்! உறவுகள் நட்புகள் முதல் முதலாய் சந்திக்க வைக்கும் சம்பவங்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிமுகங்கள் வாழ்க்கை தினசரிகளில் நிறையவே கற்றுக்கொடுக்கிறது! - அல்லது கற்றுத்தருகிறது! - எல்லோரையுமே ஒரளவுக்கு நம்பித்தான் வாழ்கிறோம்!

தினமும் பார்க்கும் மனிதர்களிடத்தில் இனிமையாக நடந்துக்கொள்ளுங்கள்,அன்புடன் கனிவான பேச்சு எவரையுமே நம் பக்கம் எளிதில் ஈர்த்துவிடும்.

ஊரில் இருந்த காலத்தில் தினசரி பணியிடத்திற்கு செல்லும் பயணத்தில் சில மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன் எந்த வொரு கூச்சமும் இன்றி என்னிடத்தில் வந்து தம்மை அறிமுகம் செய்துக்கொண்டு என் விபரங்கள் சில தெரிந்துக்கொண்டவர்கள் தினமும் பார்த்து சிரித்து,வணக்கம் செய்து ஒரு நல்ல நட்பு பெற்ற மகிழ்ச்சியினை அன்று அடைந்தேன் - இன்றும் கூட ஊரில் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சியான தருணங்களாகவே இருக்கிறது!

அதே சமயத்தில் என்னால் ஏன் இது போன்று வெளிப்படையாக புதிது புதிதாய் நண்பர்களை பெற்றுக்கொள்ளமுடிவதில்லை என்று பலமுறை நினைத்ததும் உண்டு! - ஆனால் அதுதான் தவறாகி இருக்கிறது! நினைத்தப்படியே இல்லாமல் செயல்படுத்திப்பாருங்களேன்!

வாழும் வாழ்க்கை ஒன்று செல்லும் தூரமும் தெரியாது செல்லும் வழியும் கூட சிறப்பாக இருக்குமா என்று புரியாது! ஆனாலும் கூட ஒரு நம்பிக்கையோடு தொடங்கிவிட்டோம் அந்த நம்பிக்கையோடே தொடர்வோம் - நட்பு வசத்தில் உறவுகளின் வாசத்தில்....!

**************************************************

என்னை பற்றிய குறள்கள்..! (அட எனக்கு புடிச்சதுப்பா)

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்க்கி அகத்தானாம்
இன்சொலின் அதே அறம்

அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப்பெறின்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப்பிற

பின்குறிப்பு:- ஜீவ்ஸ் அண்ணாச்சி இனி என்கிட்ட கதை கதைன்னு 1ம் கேக்கமாட்டீங்கன்னு பெரும் நம்பிக்கையோட எஸ்ஸாகிக்கிறேன்!

இது ஒரு பொன் காலைப்பொழுது!


ஹே ஹோ ஹூம்... ல ல லா...
பொன்மாலை பொழுது...

இது ஒரு பொன் காலைபொழுது
பிளாக்கர் பக்கம் ஒடுகின்றேன்
புதிதாய் பதிவு தினம் போடுகின்றேன்
இது ஒரு பொன் காலைபொழுது

ஆயிரம் ஹிட்ஸ்கள் கோலமிடும்
பதிவுக்கு கொஞ்சமாய் கமெண்ட்ஸும் வரும்?
பாதியில் பதிவுகள் ஸ்ட்ரக்கி விடும் :-(
மொக்கைக்கும் கும்மிகள் தாளமிடும் :-)
மூத்த பதிவர் கமெண்டிவிட,
இது ஒரு பொன் காலைபொழுது...!

தமிழ்மணம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது பதிவு தரும்!
ஒரு நாள் கூகுளில் என் பேரும் வரும்,
திருநாள் நிகழும் தேதி வரும்!

மொக்கைகளால் பதிவுகளை நான் செய்தேன்
இது ஒரு பொன் காலைப்பொழுது!

கடமையை செய்! பலனை எதிர்பார்! - ரஜினி





இந்தச் சந்திப்பின் நோக்கம்..?

நீண்ட காலமாக நீங்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டீர்கள்; அதே போல நானும் உங்களைச் சந்திக்க ஆசைப்பட் டேன். இதுதான் நோக்கம். ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் "உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்; அதற்கு நான் பதில் அளிக்கிறேன்' என்றார்
அதுதான் இப்போது நடக்கிறது

முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள்; அதன்பிறகு அருணாசலேஸ்வரர்; பிறகு பாபாஜி என்கிறீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வை இல்லையா?

நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என பல படிப்புகள் உள்ளன. அவை நமது அறிவை விருத்தி செய்கின்றன. அதுபோலத்தான் தேடல் நிறைந்த உள் ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கி றது. தேடல் உள்ளவர்கள் பார்வையில் இது ஒன்றும் தவறு கிடையாது

உங்களைக் குழப்பவாதி என எழுதுவதையும் பேசுவதையும் கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம்கொடுக்கிறீர்கள்?

பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்டால் எப்படி?...

சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித் தான் இருக்கிறது. இது செய்தால் இது நடக்கும் என யூகித்துச் சொல்வதில்லை!

நான் நினைப்பது சரி எனும்போது பேசிவிடுகிறேன். அதை வேறு கோணத்தில் பார்ப்பவர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. சில செய்திகளைப் படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில செய்திகள் சிந்திக்க வைக்கும். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். என்னுடைய சுயநலத்துக்காக நான் யாரையும் குழப்பியதில்லை. மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன். எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வதுதான்

ஒகேனக்கல் விவகாரத்தில் வருத்தம்; மன்னிப்பு? எது உண்மை?

நான் முன்னால் போக வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் பின்னாலேயே போக வேண்டும் என்கிறீர்கள். விஷயம் முடிந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள். அதிலேயே இருந்தால் எப்படி..? ஒகேனக்கல் பிரச்னை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகத்தைப் பொருத் தவரை எந்தப் பிரச்னை என்றாலும் அங்கு முதலில் தாக்குலுக்கு உள்ளாவது தியேட்டர்கள் தான். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த மேடையில் அமர்ந்தேன். பலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்கள். நானும் மனிதன்தானே!... பேசிவிட்டேன். ஒரு பிரச்னை ஆரம்பித்தால் உடனே முடியவேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் வருத்தம் தெரிவித்தேன்!

நீண்ட காலமாக மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களைப் பற்றி..?

"ரஜினி ரசிகர்கள்' என்பவர்களைப் பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது
நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள்

ரசிகர்களுக்கென ஓர் அங்கீகாரம் கிடைக்குமா?

ரஜினி ரசிகர் என்றால் சமுதாயத்தில் ஓர் அங்கீகாரம் கிடைக்கும்படி நிச்சயம் செய்வேன்
எதிர்காலத் திட்டம்; அரசியல் ஈடுபாடு குறித்த கேள்விகளுக்கு சிறிது மெüனம் காத்து ரஜினிகாந்த் பேசியதாவது:

மீண்டும் மீண்டும் நான் சொல்வது இதுதான்..முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள்; அடுத்து நான்... அடுத்ததுதான் அரசியல். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தை களுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என் கடமையைச் செய்து வருகி றேன். அதுபோல நீங்களும் முதலில் உங்கள் கட மையைச் சரியாகச் செய்துவிடுங்கள் அரசியலைப் பொருத்தவரை திறமை, புத்திசா லித்தனம், உழைப்பு இருந்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. அதற்கேற்ற சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் அமையவேண்டும். அதுதான் வெற்றிக்கு முக்கியம். 1996-ம் ஆண்டு இருந்த நிலை வேறு. அன்று பதவிக்குரிய சூழ்நிலை இருந்தது.

நமக்கு ஒரு விஷயத்தில் திறமையும் அனுபவமும் இருக்கவேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தில் இறங்கக்கூடாது. என் சிறு வயதில் பணக் கஷ் டத்தில் இருந்தபோதுகூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 ஆண்டுகள் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன். அதன்பிறகுதான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தைச் செய்ய மாட்டேன்.

அரசியலுக்கு வருமாறு யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. பலவந்தமாக திருமணம் செய்து வைத்தால் அந்த வாழ்க்கை இனிமையாகவா இருக்கும்? இரண்டு தரப்பிலும் ஈடுபாடு இருக்க வேண்டும். ஒரு தரப்பில் மட்டும் வற்புறுத்தல் இருக்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை எல்லாமே ஆண்டவன்தான். அங்கிருந்து உத்தரவு வந்தால் நாளையே பல விஷயங்கள் நடக்கலாம்

ஆனால் அரசியலில் ஈடுபடுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. தற்போது பல இடங்களில் நிலைமை சரியில்லை. இங்கு மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் நிலைமை சரியில்லை. நாட்டில் நடப்பதைக் கூர்ந்து கவனித்து வாருங்கள்.

ரீ - எண்ட்ரி!



பிரும்மாண்டம் என்ற வார்த்தை பிரயோகித்து பிரபலமானவர்!

தயாரிப்பாளராகி தனக்கு தானே கட்-அவுட் வைத்து கலக்கியவர்!

ஏற்றமாய் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று படுவேகத்தில் இறங்கி போனவர்!

எங்கு போனார் என்று நினைத்திருந்த வேளையில்....

ரீ - எண்ட்ரி!

வாழ்த்துக்கள் கே.டி. குஞ்சுமோன்!

தமிழ்ச்செல்வன்!


புன்னகை இழந்த ஈழமக்களின் வாழ்வில் ஒளியேற்றம் கிடைக்கும் என்று நம்பிய சமாதான பேச்சுவார்த்தைகளின்போது புன்னகையோடு வலம் வந்துக்கொண்டிருந்த சகோதரனை இழப்போம்! என்று எவருமே நினைத்திருக்காத தருணத்தில் எதிரிகளின் வஞ்சகத்தால் ஈழ மக்களின் புன்னகை நெஞ்சம் கருகி இன்றோடு ஒராண்டு!

முகத்தில் புன்னகை எப்போதும்;

முழக்கமும் தமிழில்தான் எப்போதும் ;

போர் வீரனாய் இருந்தவர், பார்தோறும் சென்றார்;

ஈழத்தின் நிம்மதிக்கு நியாயம் தேடி!

ஆண்டனை இழந்த போது, அதிர்ச்சியில் நின்றவர்களுக்கு!

ஆச்சர்யம் கொடுத்தவர்! சர்வதேச அரசியலில் ஆண்டனின் வாரிசாய்!

இரையானார் கொடிய மிருக(குண)ங்களின் நடவடிக்கைக்கு

விதையானார்..!

தன் விருட்சங்(க)கிளை விட்டு...!

ஈழம் அடைந்தே தீரவேண்டும் - ரஜினி பேச்சு!



இலங்கையில் ஈழத் தமிழர்கள் புதைக்கப்படவில்லை அவர்கள் அங்கே விதைக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறீலங்காப் படையினர் ஆண்மையற்றவர்கள்.

ஈழத் தமிழர்கள் பேசும் தமிழ் மொழி இனிமையானது. அவர்கள் திட்டினாலு் கூட இனிமையாகவே இருக்கும். அவர்கள் சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புகளால் புலம்பெயர்ந்து உலகப் பந்து முழுவதும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். சம உரிமைக்காகப் போராடும் அவர்கள் மீதான யுத்தத்தை சிறீலங்கா அரசு உடன் நிறுத்த வேண்டும்.

நான் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகின்றேன். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொன்று குவித்து வருகிறீர்கள். ஆனால் அவர்களை உங்களால் அழிக்க முடியவில்லையே ஏன்? நீங்கள் ஆண்மையற்றவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

சாமானிய சனங்களின் வேதனை கலந்த அந்த மூச்சுக் காற்று பரவிக் கிடக்கும் எந்த நாடும் உருப்படாது. அவர்களின் சாபம் யாரையும் சும்மா விடாது. பெண்கள்இ குழந்தைகளின் உதிரம் அந்த மண்ணில் கொட்டுகிறது. உங்கள் பூமியில் தமிழர்களைக் கொன்று புதைக்கவில்லை. விதைக்கிறீர்கள். அந்த விதை உங்களை வாழ விடாது.

‘நான்' ‘எனது' என்ற அகங்காரத்தை விட்டால் உங்களுக்குத்தான் நல்லது. தங்கள் நாட்டை தமிழர்கள் அடைந்தே தீருவார்கள். பெரிய நாடுகள் இலங்கை அரசுக்கு இதைப் புரிய வைக்க வேண்டும். எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்

திரையுலக உண்ணாவிரதப்போராட்டம் சில படங்கள்!






இது போன்ற நிகழ்வுகளால் கூட கொஞ்சமாகவேணும் தாக்கத்தினை ஏற்படுத்தி

எம் ஈழ மக்களினை அழிக்க விழும் குண்டுகளின் வேகம் கட்டுப்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையோடு....!

பயணத்தில் நான்...


நீண்ட நெடிய சாலை!

பாதை தெரிகிறது!

பயமும் தெரிகிறது!

தனி ஒருவனாக கடக்கப்போவதை நினைத்து!

யாருமில்லா இருபக்கங்களில்

யாரை நான் கூப்பிடுவேன்!

யாரை நான் கும்பிடுவேன்!

எங்கள் ஊர் அரசியல்வாதிகள்;

எண்கண் முன்னே என்னை பழித்து சிரிக்கின்றார்கள்;

யாருமே இல்லாத இடத்தில் போட்ட கும்பிடுக்காக

நான் அவர்களைப்பார்த்து எத்தனை முறை சிரித்திருப்பேன்..!

யாருமில்லா ஊராகத்தான் முதலில் தெரிகிறது!

பள்ளங்கள்தான் முதலில் கண்ணில்படுகின்றன,

ஒன்று மட்டும் உறுதியாகிறது.

போகும் பாதையில் பயங்கரம் இல்லையென்று;

தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,

நானும் செல்வேன் வெல்வேன் என்று..!

எதிர்கொள்ள யாருமில்லாவிட்டாலும்,

இதோ பயணம் தொடங்கிவிட்டேன்!

பாதையே மலர்களால் வேண்டாம்!

பாதையில் வரும் மரங்களாவது,

என் மீது மலர்களை உதிருமா..?



(ஜீவ்ஸ் அண்ணாச்சி தானாகவே முன்வந்து மெருகேற்றி தந்த படம் - இணைய நட்புறவு இணைந்த நேரமும் கூட!)

டிஸ்கி:-கடந்த வருடத்தில் இதே நாளின் நட்சத்திர வாரத்து பதிவு மீள் பதிவாய்...!

6 சிக்மா!



சிக்ஸ் சிக்மா என்பது என்னவென்று சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அது மோட்டரோலா நிறுவனம் கண்டுபிடித்த ஒரு மானேஜ்மென்ட் தந்திரம். கடலை எண்ணெய்க்கு ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துவது போல ஒரு தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்.

எந்த ஆறு சிக்மா நிறுவனமும் தயாரிக்கும் பொருட்கள் 99.999 சதவிகிதம் கியாரண்டியாக நல்ல தரத்துடன் இருக்கும். சிக்மா என்ற சொல், புள்ளியியலில் வருகிறது. சராசரியிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வசிக்கிறோம் என்பதை அளக்கும் குறியீடு அது.

உதாரணமாக, நீங்கள் நட்டு போல்ட் தயாரிக்க ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஆறு சிக்மா சான்றிதழ் கேட்கிறீர்கள். அவர்கள் முதலில் அளப்பது, உற்பத்தியாகும் பொருட்களில் எவ்வளவு சதவிகிதம் குறைபாடு இருக்கிறது என்பதைத்தான். ஒரு மாதத்தில் பத்து லட்சம் போல்ட்டு தயாரித்தால், அதில் சுமார் மூன்றரை போல்ட்டுகளுக்கு மேல் தப்பு இருந்தால் சர்டிபிகேட் கிடைக்காது! (மூன்றரை போல்ட் என்பதை ஒத்துக் கொள்ள முடியாவிட்டால், ஒரு கோடியில் முப்பது நான்கு பிழைகளுக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்).

ஆறு சிக்மா வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. ஜி.இ., ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கே சான்றிதழ் கிடைப்பதற்குள் தூக்குப் போட்டவன் மாதிரி நாக்குப் பிதுங்கிவிட்டது. அவர்களிடம் இல்லாத கம்ப்யூட்டரா, எம்.பி.ஏக்களா? இருந்தும் பிழைகளை நீக்கிக் கொள்வதற்கு முக்கியத் தேவை, கடமைக்கு வேலை செய்யாமல் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யும் ஊழியர்கள். அப்படிப்பட்ட ஊழியர்கள் மட்டும் கிடைத்தால், எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஆறு சிக்மாவைச் சந்திக்கலாம். இதற்கு அருமையான உதாரணம், மும்பை நகரின் சாப்பாடுக் கூடைக்காரர்கள்.

புகழ் பெற்ற ஐ.ஐ.எம்.நிர்வாகவியல் பள்ளி. உச்சாணிக் கிளை எம்.பி.ஏக்களை உற்பத்தி செய்யும் நாற்றங்கால். அங்கே ஒரு நாள் மானேஜ்மென்ட் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பவர், கோட்டு சூட்டு போட்ட ஹார்வர்ட் பேராசிரியர் அல்ல; வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டி காந்தி குல்லாய் அணிந்த சர்வ சாதா கூலித் தொழிலாளி. தலை மேல் சாப்பாட்டுக் கூடைகளைச் சுமந்து சென்று வினியோகிக்கும் "டப்பாவாலா'. அவராவது, எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் போய் மானேஜ்மென்ட் சொல்லித் தருவதாவது? ஏனெனில் அன்று நடந்த பாடம், "தவறுகளே நடக்காமல் வேலை செய்வது எப்படி' என்பதாகும்.

மும்பைக்கு ஒரு முறை சென்று வந்த யாரும் இந்த டப்பாவாலாக்கள் என்பவர்களைக் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. மும்பை நகரம், ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் இருபதாயிரம் பேர் என்ற ரேட்டில் மக்கள் டப்பாவில் அடைக்கப்பட்ட பேரீச்சம் பழம்போல் நெரிசலாக வசிக்கும் நகரம். இத்தனை பேரும் சேவல் கோழியுடன் சேர்ந்து எழுந்து ரயில் பிடித்து எங்கோ இருக்கும் அலுவலகம் போக வேண்டும். அத்தனை பேருக்கும் மதியம் சாப்பாடு வேண்டும். காண்டீனிலோ, கண்டகண்ட எண்ணெய். இங்கேதான் உதவிக்கு வருகிறது டப்பாவாலா சர்வீஸ். இவர்கள், புற நகர் பகுதியில் இருக்கும் உங்கள் வீட்டிலிருந்து காலை ஒன்பது மணி அளவில் டிபன் காரியரை எடுத்துக் கொண்டு போனால் சரியாக லஞ்ச் நேரத்துக்கு அலுவலகத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். மாலையில் காலி காரியர்கள் எதிர்த் திசையில் பயணம் செய்து கண்ணன் மேய்த்த ஆநிரைகள் போல் வீட்டுக்கு வந்து சேரும். ட்ரெயின், பஸ், சைக்கிள், மனிதக் கால் என்று சகலவிதமான போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு சாப்பாட்டு மூட்டையும் சராசரியாக அறுபது கிலோ மீட்டர் பயணம் செய்கிறது; நாலு கை மாறுகிறது. இருந்தும் காரியர் மாறிவிடாமல், அவரவர் வீட்டுச் சாப்பாடு அவரவருக்குப் போய்ச் சேருவதுதான் ஆச்சரியம்.



டப்பாவாலாக்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. டிபன் பாக்ஸ்களில் கோடு, புள்ளி, ஸ்வஸ்திக் என்று தங்களுக்கே உரிய எளிய குறியீடுகளைப் பயன்படுத்தி அதனதன் இலக்கைத் தெரிவிக்கிறார்கள். ஒரு ஏரியாவிலிருந்து சேகரித்த டப்பாக்கள் தபால் பிரிப்பு அலுவலகம் போன்ற ஒரு மரத்தடிக்கு வந்து நாலு திசைகளிலும் பிரித்து அனுப்பப்படுகிறது.

ஐயாயிரம் ஊழியர்கள் தினம்தினம் இரண்டு லட்சம் சாப்பாடுகளை டெலிவரி செய்கிறார்கள். மழையோ புயலோ வெயிலோ, க்வார்ட்ஸ் கடிகாரம் மாதிரி எல்லாம் சீராக, நேரம் தவறாமல் இயங்குகிறது. டெலிவரியில் தப்பு நடப்பது மிகமிகமிக அபூர்வம்!

இந்தத் தொழிலை மட்டும் நம்ம லட்ச ரூபாய் எம்.பி.ஏக்களிடம் விட்டிருந்தால், ஒவ்வொரு டிபன் காரியருக்கும் ஆர்.எஃப் பட்டி, கூடைக்குப் பார் கோட், சுமப்பவர் ஒவ்வொருவருக்கும் ஜி.பி.எஸ் என்று டெக்னாலஜியில் புகுந்து விளையாடி, வரிசை வரிசையாக டெல் கம்ப்யூட்டர்கள் வைத்துக்கொண்டு கண்காணித்து, கடைசியில் அல்போன்ஸ் வீட்டு மீன் குழம்பை அனந்தாச்சாரிக்குக் கொண்டு போய்க் கொடுத்துவிடுவார்கள்.

மாபெரும் மானேஜ்மென்ட் பள்ளிகளும் டப்பாவாலாக்களைப் பக்கத்தில் சென்று கவனித்து ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் என்னும் புகழ் பெற்ற பிசினஸ் இதழ் அவர்கள் ஆறு சிக்மா உலகத் தரத்தை எட்டிவிட்டார்கள் என்று வியக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் அவர்களைப் பற்றிக் கட்டுரை எழுதுகிறது, பி.பி.சியில் டாக்குமென்டரி படம் காட்டுகிறார்கள். இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வந்தபோது டப்பாவாலாக்களைச் சந்தித்து அவர்களுடன் பெருமிதமாக போட்டோ எடுத்துக் கொள்கிறார். கலிபோர்னியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் இதைப் பின்பற்றி "அன்னதாதா' என்று சாப்பாட்டு கேரியர் சர்வீஸ் ஆரம்பிக்கிறார்கள்.

செய்வதைத் திருந்தச் செய்வது என்பது பல்லாயிரம் ஆண்டு பழமையான கருத்து. எகிப்திய பிரமிடின் நாலு பக்கங்களையும் இப்போது அளந்து பார்த்தால் தொண்ணூறு டிகிரிக்கு ஆச்சரியகரமாகக் கிட்டத்தில் அமைத்திருக்கிறார்கள். ஒரு டிகிரியில் ஆயிரத்தில் ஒரு பகுதிதான் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்தது! குவாலிட்டி கண்ட்ரோல் என்ற நவீன வார்த்தை உலகப் போரின்போது உருவானது. தொழிற்சாலை அசெம்பிளி லைன்களில் கார் முதல் குண்டூசி வரை பெரிய அளவில் அடித்துத் தள்ள ஆரம்பித்தார்கள்.

ஊழியர்களை "வேகம், வேகம்' என்று துரத்தியதில் தரம் வீழ்ந்துவிட்டது; கஸ்டமர்கள் கதறினார்கள். எனவே, 1924-வாக்கில் புள்ளியியல் அடிப்படையில் தரக் கட்டுப்பாடு சோதனை செய்யும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. வால்டர் ஷேவார்ட் என்பவர் அன்றைக்கு எழுதிய புகழ்பெற்ற ஒரு பக்க டாக்குமென்ட்தான், பின்னால் வந்த அத்தனை ஜிலுஜிலு பவர் பாயின்ட்களுக்கும் முன்னோடி. சீக்கிரமே தரக் கட்டுப்பாடு என்பது தாரக மந்திரமாகி (தாரக என்றால் என்ன?), டி.க்யூ.எம், சி.எம்.எம், ஐ.எஸ்.ஓ, ஜப்பானில் கைஸன் என்று கிளைகிளையாகப் புறப்பட்டது. முழு நேர குவாலிட்டி டிப்பார்ட்மென்ட்கள் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் நாற்காலியைத் தேய்க்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு ஆறு சிக்மா, ஏழு சிக்மா என்றெல்லாம் அவர்கள் சீசனுக்கு சீசன் ஒரு புதிய மானேஜ்மென்ட் ஃபாஷன் ஏற்படுத்தி அப்பாவி முதலாளிமார் தலையில் மிளகாய் அரைத்தாலும், தரத்தை உறுதி செய்வதற்கு பிரமிட் காலத்திலிருந்தே ஒரே ஒரு எளிய விதிதான் இருந்து வந்திருக்கிறது.

டப்பாவாலாக்கள் போன்ற தொழில் பக்தி மிகுந்த ஊழியர்கள்! சார்லஸ் இளவரசர் வந்த அன்றைக்குக்கூட, ""எங்கள் வேலை பாதிக்கக் கூடாது; டியூட்டி நேரம் முடிந்த பிறகு வாங்க'' என்று சொல்லி அனுப்பினார்கள். கடந்த நூற்று இருபது வருடங்களாக நடப்பது டப்பாவாலா சர்வீஸ். இருந்தும் ஒரு முறை கூட ஸ்ட்ரைக், ஊர்வலம் என்று நடந்ததே இல்லை. வேலைக்கு வருபவர்களின் பின்னணியைத் தீர விசாரித்துவிட்டுத்தான் கிட்டேயே சேர்க்கிறார்கள். ரிட்டையர்மெண்ட் வயது என்று எதுவும் கிடையாது. அவரவர்கள் உடம்பில் தெம்பு உள்ள வரை வேலை செய்யலாம். அநாவசியமாக லீவு எடுத்தாலோ, காந்திக் குல்லாய் யூனிஃபார்ம் இல்லாமல் காணப்பட்டாலோ கடும் அபராதம் உண்டு! இந்தப் படிப்பில்லாத மக்களிடமிருந்து நமக்கு நிறையப் படிப்பினை இருக்கிறது.

நன்றி - தினமணி கதிர்

அரும்புகள் வாசிப்பு இயக்கம் - கோவை



நூலகங்கள்

காலத்தின் போக்கில் கடக்கும் விசயங்களை, சேகரிக்கும் செய்திகள், நூல்களை நாளை வரப்போகும் தலைமுறைக்கு நல்லதொரு வாழ்க்கை சூழலினை தரப்போகும் முக்கிய அம்சம்!

எத்தனையோ தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளில் அக்கறை கொண்டு தீர்வுகளை கண்டுகொண்டிருந்தாலும், இந்த பணி ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் மிகச்சரியானதொரு பணியாக,இவர்கள் முன்நின்று செய்யும் இந்த அடையாளம் - அரும்புகள் வாசிப்பு இயக்கம்

கோவை வாழ் எளிய மக்களின் பிள்ளைகள், சிறுவர் சிறுமியர்களின் புத்தகங்கள் மீதான ஆர்வம் - அடையாளம் அடையாளத்தால் தரப்பட்டிருக்கிறது!

ஆம்!

எதிர்காலத்தில் சமூகத்தில் நல்லதொரு அடையாளம் தரும் சிறந்த மனிதர்களினை உருவாக்கும் பணியாக....!

இவர்களின் சிறு கோரிக்கையாக இந்த தீப ஒளி திருநாளில் மலர்ந்திருப்பது உங்களால் முடிந்த உதவிகளை நூல்களாய் தாருங்கள் புத்தகங்களை கொடுத்து இளைய தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்கு உங்களாம் முடிந்தளவும் உதவுங்கள் என்பதுதான்!

இளைய தலைமுறைக்கு எம்மால் செய்யும் உதவிகள் சிறிதாக இருந்தாலும் கூட காலத்திற்கும் நிலைத்து நிற்கும் மாபெரும் நற்பணி!

வாய்ப்புக்கள் இருந்தால்,நீங்களும் கூட உதவலாமே?!

தீப ஒளி திருநாளில். அறிவு ஒளி ஏற்றி,மகிழ்ச்சியை, மகிழ்ச்சியாய் கொண்டாடுங்களேன்!

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

எதோ ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டப்பொழுதில் காதில் விழுந்து மனதில் பதிந்திருந்தது! ( அனேகமாய் அப்பாவின் டேப்ரெக்காடர் வழி கேட்டிருக்கவேண்டும்!)

நினைவுகள் அளிக்கும் தொந்தரவான தருணங்களில்,சில வரிகள் மட்டும் மனம் சிந்தித்து வாய் வழி ஒலித்து தெறித்து விழும் பாடல்!

மிக நீண்ட நாட்கள் தேடலில் ஒரு வழியாய் கிடைத்து பிடித்துவிட்டேன்!

இன்று முதல் இனிய காலை வேளைகளின் தோழமையாய் மாறிவிட்ட இந்த பாடல்

எத்தனையோ செய்திகளை இணைய நட்புகளோடு பகிர்ந்துக்கொண்ட எனக்கு இதையும் பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசையோடு....!


பாடலை காண...




பாடல் வரிகளினை காண

நன்றி செல்லி

நன்றி ஜில்ஸ்!

எல்லாருக்க்கும் மனசுக்குள்ள நன்றி சொல்லிக்கிட்டே சரி ரிஷி மூலத்தை பாக்கலாம்ன்னு போனா அங்க நம்ம கே.ஆர்.எஸ் அண்ணாச்சி ஸ்டைலா படுத்துக்கிட்டு சிரிச்சிக்கிட்டிருக்காரு! அவுருக்கும் ஒருபெரிய்ய்ய்ய் தேங்கஸ்சு!

வைச்சுக்கவா உங்களை மட்டும் டெஸ்க்-டாப்புல...!



கடந்த ஆகஸ்ட் 2007 மாசத்துலேர்ந்து கிட்டதட்ட ஒரு 8 மாசமா இந்த படம்



அப்புறமாட்டிக்கு ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்ல கிடைச்ச இந்த போட்டோ



நடுவாப்புல கொஞ்சம் மாசம் தலைவரு ரிடர்ன்




பெறவு இவுங்க




இப்ப லேட்டஸ்டா இந்த படம்தான் இப்போதைக்கு (போதைக்கு!?) டெஸ்க்டாப்பினை அலங்கரிச்சுக்கிட்டிருக்கற படம்! (டெஸ்க்குடாப்புல இவுங்க அழகா இருக்காங்களா? இல்ல இவுங்க அழகா இருக்கறதால, டெஸ்க்டாப்பு அழகா இருக்கான்னு திடீர் திடீர்ன்னு கவுஜ எல்லாம் வருது! - ஆண்டவா என்னிக்கு அதெல்லாம் பதிவா வரப்போகுதோ?!!)


இனிய நண்பர் தமிழன் - ஏண்டா இவனை எழுத சொன்னோம்ன்னு பீல் பண்றீங்களா? நல்லாவே பீல் பண்ணுங்க! அந்த மிதிவண்டி இடைவெளியில நான் மொபைல் போன் டெஸ்க்டாப்பு படம் அப்புறமாட்டிக்கு ஆபிஸ்ல இருக்கற டெஸ்க் டாப்பு படம் எல்லாம் ரெடி பண்ணனும்!


சரி நாமளும் ஒரு நாலு முக்கியமான ஆளுங்களை கூப்பிட்டுட்டு போவோம்!

1.முத்துலெஷ்மியக்கா (அக்கா பிசியா இருந்தாலும் கூட,இதுக்கும் கொஞ்சம் டைம் பிசியா ஒதுக்கிக்கோங்க ஒ.கேய்!)

2.கப்பி (அண்ணாச்சி!இந்த தடவை மட்டும்
மி(எ)ஸ்ஸான அப்புறம் டீக்குளிக்கிறதுதான் ஒரே வழி!)

3.சந்தனமுல்லை (தங்கச்சி ஒரே பப்பு படமாத்தான் வைச்சிருக்கும்ன்னு ஒரு நினைப்பு!)

4.சுடர்மணி (கொஞ்சமா நல்லவராம் - இருக்கட்டும்!இருக்கட்டும்!)


டிஸ்கி:- எல்லாமே டைல்தானான்னு டென்ஷானக்குறவங்களுக்கு - ஒரே போட்டோவை எம்புட்டு நாளைக்குங்க பாக்குறது அதான் நிறைய்ய்ய்ய? (பயலுக்கு என்னமோ ஆகிப்போச்சுன்னு பீல் பண்ணாதீங்க! நாங்கெல்லாம் நொம்ப தெளிவாத்தான் இருக்கோம்!)