குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

எதோ ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டப்பொழுதில் காதில் விழுந்து மனதில் பதிந்திருந்தது! ( அனேகமாய் அப்பாவின் டேப்ரெக்காடர் வழி கேட்டிருக்கவேண்டும்!)

நினைவுகள் அளிக்கும் தொந்தரவான தருணங்களில்,சில வரிகள் மட்டும் மனம் சிந்தித்து வாய் வழி ஒலித்து தெறித்து விழும் பாடல்!

மிக நீண்ட நாட்கள் தேடலில் ஒரு வழியாய் கிடைத்து பிடித்துவிட்டேன்!

இன்று முதல் இனிய காலை வேளைகளின் தோழமையாய் மாறிவிட்ட இந்த பாடல்

எத்தனையோ செய்திகளை இணைய நட்புகளோடு பகிர்ந்துக்கொண்ட எனக்கு இதையும் பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசையோடு....!

பாடலை காண...

பாடல் வரிகளினை காண

நன்றி செல்லி

நன்றி ஜில்ஸ்!

எல்லாருக்க்கும் மனசுக்குள்ள நன்றி சொல்லிக்கிட்டே சரி ரிஷி மூலத்தை பாக்கலாம்ன்னு போனா அங்க நம்ம கே.ஆர்.எஸ் அண்ணாச்சி ஸ்டைலா படுத்துக்கிட்டு சிரிச்சிக்கிட்டிருக்காரு! அவுருக்கும் ஒருபெரிய்ய்ய்ய் தேங்கஸ்சு!

39 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அண்ணே! எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல் இது.

said...

அறை எண் 305 ல் கடவுள் என்ற படத்தில் வரும் பாடலைத் தேடியபோது இது கிடைத்தது. MSS ன் குரல் அழகு! அருமை!

said...

ஆயில்! ஓரிரு மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் காலை, இம்சை அரசன் புகழ் சிம்புதேவனின் பேட்டி டீவியில். வழக்கப்படி, ஒரு காதில் வாங்கிக் கொண்டு என் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்க, அ.எ. கடவுள் படத்தில் ராஜாஜி எழுதிய "குறையொன்றுமில்லை" பாடலைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். எனக்கு மிக பிடிக்க பாடல் என்பதால், அவர் சொன்னதைக் கேட்க ஆரம்பித்தேன்.
ராஜாஜியின் மகன் நரசிம்மன் (பெயர் சரி என்று நினைக்கிறேன்) அகால மரணம் அடைந்ததும், அவரை எரியூட்டிவிட்டு, அன்றிரவு எழுதிய பாடலாம் இது. உலகிலேயே மிக கொடுமையானது புத்திர சோகம், அதில் மனம் பேதலித்து இருக்கும்பொழுது,
"குறையொன்றுமில்லை" என்று இறைவனை துதித்தது... இப்பொழுது நினைத்தாலும் கண்கலங்குகிறது. பிறகு பிடித்த பாடல், இன்னும் மிக பிடித்தமாய் போய்விட்டது.

said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான பாட்டு.

ஊர்ல இருக்கும்போது, சன் டி.வில ஏதோ ஒரு விளம்பரத்துல வரும்போது கேட்டது.
அப்படியே, கொக்கி போட்டு இழுத்துடுச்சு.
அன்னிக்கே, தேடிப் பிடிச்சு, முழுப்பாட்டையும் கேட்டாச்சு.

அடிக்கடி கேக்கர பாட்டுல இதுவும் ஒண்ணு.

உஷா தந்த உபரி தகவல், வெரி டச்சிங்.

நன்றி!

said...

அற்புதமான பாடல். பகிர்தலுக்கு நன்றி

said...

echuseme...athu gils..jils ila :D krs annachi still paathu me too seri surprised..online bakthina anga annachi aajar aaiduvar nenakren :D

said...

சர்! ஆன்மீகம், சாஸ்தீரிய சங்கீதம் எல்லாம் நமக்கு மேம்பட்ட விஷயம் என்பதால் இந்த பாட்டு எனக்கும் தெரியாது. நீங்கள் சொன்னாமாதிரி, சக்தி மசாலா விளம்பரத்தில் இந்த பாட்டு பின்னால் ஒலிக்கும். பிறகு இணையத்தில் குமரன் ஒரு முறை பதிவு போட, பாட்டை
தேடிக்கேட்டேன். ஆனால் இப்பொழுது :-( அந்த வரிகளைப் படித்துப் பாருங்களேன். எல்லாம் முடிந்த பிறகு தூக்கம் வராத
அந்த இரவு தனிமையில் திரும்ப திரும்ப அழும் மனதை சமாதானப்படுத்த கடவுளிடம் எனக்கு குறையில்லை என்று மன்றாடுகிறார்.

said...

ஆஹா! எனக்குப் பிடித்த பாடல் தலைப்பில் என்னவென்று பாக்க நுழைந்தால்..எம்மஸ் அம்மாவின் தேன்மதுரக் குரலில் அப்பாடலைக் கேட்டேன். வழக்கம்போல் சொக்கினேன். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். அந்தத் தெய்வீக திருக்குரலுக்கு என் அஞ்சலிகள்!!

said...

எங்கள் பள்ளியில் வாரம் ஒருமுறை போடுவார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.

வெகு நாட்கள் தேடி கிடைத்தது.
MP3ல் வேண்டுமென்றால் சொல்லுங்கள் தருகிறேன்.

said...

மிக அருமையான் பாடல். எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். பகிர்தலுக்கு நன்றி.

Anonymous said...

நல்ல பாடல்....எனக்கும் பிடிக்கும்..

said...

போன மாசம் எம்.எஸ்சின் தமிழிசைப் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வாங்கியிருந்தேன். அதில் அடிக்கடி போடும் பாடல்களில் இதுவும் ஒன்று

said...

நானானி சொன்னது போல் 'எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்'.
உஷாவின் தகவல்களுக்கும் நன்றி.
முக்கியமாய் பாடலைத் தந்த உங்களுக்கு ரொம்ப நன்றி.

said...

எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு :)

said...

//தமிழ் பிரியன் said...
அண்ணே! எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல் இது.
//

ஜூப்பரூ!

said...

//தமிழ் பிரியன் said...
அறை எண் 305 ல் கடவுள் என்ற படத்தில் வரும் பாடலைத் தேடியபோது இது கிடைத்தது. MSS ன் குரல் அழகு! அருமை!
//

தெய்வீக ராகம் பாடிய குரல்! :)

said...

//ramachandranusha(உஷா) said...
ஆயில்! ஓரிரு மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் காலை, இம்சை அரசன் புகழ் சிம்புதேவனின் பேட்டி டீவியில். வழக்கப்படி, ஒரு காதில் வாங்கிக் கொண்டு என் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்க, அ.எ. கடவுள் படத்தில் ராஜாஜி எழுதிய "குறையொன்றுமில்லை" பாடலைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். எனக்கு மிக பிடிக்க பாடல் என்பதால், அவர் சொன்னதைக் கேட்க ஆரம்பித்தேன்.
ராஜாஜியின் மகன் நரசிம்மன் (பெயர் சரி என்று நினைக்கிறேன்) அகால மரணம் அடைந்ததும், அவரை எரியூட்டிவிட்டு, அன்றிரவு எழுதிய பாடலாம் இது. உலகிலேயே மிக கொடுமையானது புத்திர சோகம், அதில் மனம் பேதலித்து இருக்கும்பொழுது,
"குறையொன்றுமில்லை" என்று இறைவனை துதித்தது... இப்பொழுது நினைத்தாலும் கண்கலங்குகிறது. பிறகு பிடித்த பாடல், இன்னும் மிக பிடித்தமாய் போய்விட்டது.
//

அக்கா மேலதிக விவரங்களுக்கு மிக்க நன்றி!

மகனின் மறைவின் சோகம் தவிர்க்க தந்தை எழுதிய பாடலா? செய்தியினை கேட்கும்போதோ அந்த தந்தை பட்ட கஷ்டம் புரிகிறது!
இந்த பாடல் அமைதியினை அளிக்கும் கண்டிப்பாய் எந்த பிரச்சனையான சூழலிலும்!

said...

//SurveySan said...
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான பாட்டு.
ஊர்ல இருக்கும்போது, சன் டி.வில ஏதோ ஒரு விளம்பரத்துல வரும்போது கேட்டது.
அப்படியே, கொக்கி போட்டு இழுத்துடுச்சு.
அன்னிக்கே, தேடிப் பிடிச்சு, முழுப்பாட்டையும் கேட்டாச்சு.
அடிக்கடி கேக்கர பாட்டுல இதுவும் ஒண்ணு.
உஷா தந்த உபரி தகவல், வெரி டச்சிங்.
நன்றி!
//

ஆமாம் சர்வேசன் எதோ ஒரு விளம்பர பாடலிலும் கேட்ட ஞாபக்ம் இருக்கு :)

கொக்கி போட்டு புடிச்சது எல்லாத்தையும் கூட நீங்க பிளாக்குல சைடு கட்டி வைச்சா நாங்களும் வந்து புடிச்சு இழுத்துக்குவோம் தேவைப்பட்டதை :)))))

said...

//அருண் said...
அற்புதமான பாடல். பகிர்தலுக்கு நன்றி
/
நன்றி அருண்!

said...

//gils said...
echuseme...athu gils..jils ila :D krs annachi still paathu me too seri surprised..online bakthina anga annachi aajar aaiduvar nenakren :D
//
எச்சுஸ்மீ இன்னும் கொஞ்சம் கன்ப்யூசந்தான் ! (பட் ஜில்ஸ்ன்னு இருந்தாக்க்கூட சூப்பராத்தான் இருக்கு!)
ஆமாம் அதுக்கு நாம ஸ்பெஷல் தாங்க்ஸ் சொல்லணும் கே.ஆர்.எஸ்.அண்ணாச்சிக்கு!

said...

//நானானி said...
ஆஹா! எனக்குப் பிடித்த பாடல் தலைப்பில் என்னவென்று பாக்க நுழைந்தால்..எம்மஸ் அம்மாவின் தேன்மதுரக் குரலில் அப்பாடலைக் கேட்டேன். வழக்கம்போல் சொக்கினேன். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். அந்தத் தெய்வீக திருக்குரலுக்கு என் அஞ்சலிகள்!!
//

நன்றி நானானி அம்மா!

said...

//வெங்கட்ராமன் said...
எங்கள் பள்ளியில் வாரம் ஒருமுறை போடுவார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.

வெகு நாட்கள் தேடி கிடைத்தது.
MP3ல் வேண்டுமென்றால் சொல்லுங்கள் தருகிறேன்.
//

நன்றி வெங்கட்ராமன் :)

said...

//அமுதா said...
மிக அருமையான் பாடல். எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். பகிர்தலுக்கு நன்றி.
//

நன்றி அமுதா அக்கா!

said...

/Thooya said...
நல்ல பாடல்....எனக்கும் பிடிக்கும்..
//

தங்கச்சி தேங்க்ஸ்ம்மா!

said...

//கானா பிரபா said...
போன மாசம் எம்.எஸ்சின் தமிழிசைப் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வாங்கியிருந்தேன். அதில் அடிக்கடி போடும் பாடல்களில் இதுவும் ஒன்று
//
அட கலக்குங்க தல! அப்ப கூடிய விரைவில் ரேடியோ நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கும் எனக்கு! :)))

said...

//ராமலக்ஷ்மி said...
நானானி சொன்னது போல் 'எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்'.
உஷாவின் தகவல்களுக்கும் நன்றி.
முக்கியமாய் பாடலைத் தந்த உங்களுக்கு ரொம்ப நன்றி.
///

நன்றி ராமலெஷ்மியக்கா! எதோ ஒரு யோசனையோடுத்தான் பகிர்தல் பதிவு போடவேண்டும் என்று முடிவெடுத்தேன் நலமாய் அமைந்தது! :))

said...

//Divyapriya said...
எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு :)
//
தேங்க்ஸ் திவ்ஸ் :)

said...

அண்ணாத்த, ஸூப்பர் பாடல். என்றும் நெஞ்சில் நிற்க்கும்! MS - மறக்க முடியாத ஒரு நபர்.

said...

எம்.எஸ் அம்மாவின் பாடல்களுக்கு இந்தப் பாடல் ஒரு மகுடம் அயில்யன். இதைச் சொல்ல அந்தப் பெரியவர் எத்தனை பக்குவம் அடைந்திருக்கணும். உஷாவுக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கும்தான் ஆயில்யன்.

said...

ம். எனக்கு அம்மாட நினைவு வந்திட்டு.. அம்மா நல்லாப்பாடுவா இந்தப்பாட்டு.. அவாக்கு மனசுக்கு நெருக்கமான பாட்டும் கூட.. :)

said...

ம்.. எனக்கும் பிடித்தப்பாட்டு தான்..சில சமயம் கேட்கும் போது அழுகையும் உடல் நடுக்கமும் கூட ஏற்படும்..

said...

//Sangeeth said...
அண்ணாத்த, ஸூப்பர் பாடல். என்றும் நெஞ்சில் நிற்க்கும்! MS - மறக்க முடியாத ஒரு நபர்.
///

தங்கச்சி! தாங்க்ஸ்ம்ம்மா!

said...

//வல்லிசிம்ஹன் said...
எம்.எஸ் அம்மாவின் பாடல்களுக்கு இந்தப் பாடல் ஒரு மகுடம் அயில்யன். இதைச் சொல்ல அந்தப் பெரியவர் எத்தனை பக்குவம் அடைந்திருக்கணும். உஷாவுக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கும்தான் ஆயில்யன்.
///

மகுடமாய் அமைந்த பாடல் நிச்சயமாக கேக்கும் ஒவ்வொரு முறையுமே மீண்டும் மீண்டும் கேட்க வேண்டுமென்ற ஆவலைத்தானே அதிகப்படுத்துக்கிறது!

நன்றி வல்லி அம்மா!

said...

//த.அகிலன் said...
ம். எனக்கு அம்மாட நினைவு வந்திட்டு.. அம்மா நல்லாப்பாடுவா இந்தப்பாட்டு.. அவாக்கு மனசுக்கு நெருக்கமான பாட்டும் கூட.. :)
//

நன்றி அகிலன்!

அம்மா அப்பாக்கள் முணுமுணுக்கும் பாடல்கள்,நாம் இப்பொழுது கேட்கையில் கூட பாருங்களேன் ஒரு வித உணர்வுபூர்வமான நினைவுகளையே தோற்றுவிக்கின்றது!

said...

/முத்துலெட்சுமி-கயல்விழி said...
ம்.. எனக்கும் பிடித்தப்பாட்டு தான்..சில சமயம் கேட்கும் போது அழுகையும் உடல் நடுக்கமும் கூட ஏற்படும்..
///

நன்றி அக்கா!

ஒவ்வொரு முறையும் பாடலை கேட்கையில் ஒரு வித, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத, சிலிர்ப்பு உணர்வே மேலோங்கி நிற்கிறது எனக்கு!

said...

அருமையான பாடல். நம்ம எம் எஸ். அம்மாவின் சிடியில் இருக்கு. அடிக்கடி கேட்கும் பாடல்தான்.

இந்தப் பாடலை அறை எண் 305லே பார்த்தப்ப மனசு அப்படியே கலங்கி அழுகை வந்துருச்சு.

ஏழ்மை எவ்வளவு கொடூரம் பாருங்க(-:

said...

குறையொன்றும் இல்லை - பாடல் இன்றைக்கும் 10க்கும் அதிகமான பாடகர்களால் பாடப்பட்டாலும், குரல் பதிவு செய்யப்பட்டாலும், எதிலும் மனம் ஈர்க்கப் படுவதில்லை. எம்.மெஸ் - தேவ கானம் என்பதில் சந்தேகமே இல்லை. இப்போ போட்டிருக்கிற வீடியோ அவர் வயதானக் காலத்தில் பாடியது. அவர் சிறு வயதில் பாடியது இன்னும் கம்பீரமாக மனதை நெகிழவைக்கும்.

said...

500-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...!

said...

எனக்கு ..ஏன் அனைவருக்குமே எம்.எஸ். ஸின். இந்த பாடல் பிடிக்கும்.
ஒரு உபரிச்செய்தி.
ஐ.நா.சபையிலும் இந்த பாடல் அவரால் பாடப்பட்டது