கடலை நினைவுகள்!

முன்னாடியே டிஸ்கி:-

டெரரர் பிளான் ரெடியான இடம் இங்க இருக்கு!

*************



கடலையிலிருந்து
சொத்தையை பிரித்து
மத்ததை சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
கடலையை
சரிப்பாதியாக

கடலையை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
வறுக்கின்ற மண்ணாய்
கடலைக்குள் சேர்ந்து
வெளியேற மறுக்கிறது
அந்த வறுபட்ட மண்

கடலையும்
திங்க நல்லதுதான்
தான் கருகி
வந்தால்
கருகிய
சுவையாய்
நாக்கில் ருசிக்கிறது

என் கைப்பிடி அளவு
கடலையோடு,
உன் கையிலுள்ள
கடலையையும்
எனக்கு கொஞ்சம்
தருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி

கடலோரம்
அழகாய்
உன் கடலையையும்
என் கடலையையும் சேர்த்து
சுவைத்தப்படியே
வாயினில் மெல்ல மெல்லக்கரைய

நம் ஒவ்வொரு கடலையும்
நெருப்பில் கருகிய
கடலைகளாய்,
ஒரு வினாடி
தீச்சுவாலைக்கு பின்
முழுவதும் கருகிவிட்டது
மொத்தக்கடலையும்!

அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் கடலைக்கடைக்காரன்
காசுக்கேட்டு துரத்துகிறான்
அவன்
என்னை பிடிப்பதும்
நான்
அவனிடமிருந்து எஸ்ஸாவதும்
நிச்சயமே!

கவனித்து தின்கிறேன்
கருகிய
உன் மற்றும் என் பங்கு கடலைகளை
மூச்சு திணறாமல்
மெதுவாக தண்ணீர் குடித்தப்படியே

ஆயிரம் தடவை
வாங்கி தின்று வந்திருக்கிறேன்
இந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்
முதல் முறை நிதானித்து
தின்று பார்க்கிறேன்
என்னோடு சொந்த காசில்
வாங்கி தின்ன
அந்த நாட்களை யோசித்தப்படியே....

42 பேர் கமெண்டிட்டாங்க:

said...

digai rangela kwiju vacha..intha paadalil ethanai murai kadalai engira sol vanthirukunu kadakadanu enni solravangaluku vasanth n co lenthu oru cooker parisu :D :D

said...

அடடா! இதுதான் ஒரிஜினல் எதிர் கவுஜயா :)))

கலக்கலா இருக்குது ஆயில்ஸ் சார் :-)

said...

செமயான கடலை!

said...

//என் கைப்பிடி அளவு
கடலையோடு,
உன் கையிலுள்ள
கடலையையும்
எனக்கு கொஞ்சம்
தருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி//

சத்தியமா சொல்றேன்.. இந்த வரியை படிச்சுட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல.. கலக்கிடீங்க :)))))

said...

///கடலையிலிருந்து
சொத்தையை பிரித்து
மத்ததை சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
கடலையை
சரிப்பாதியாக///
வாரே! வா! குட்! குட்! நல்ல பொண்ணா இருக்கும் போல இருக்கே! சொத்தையை பிரிச்சுட்டு அண்ணனுக்கு கடலையை மட்டும் கொடுத்துடும்மா

said...

///கடலையை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
வறுக்கின்ற மண்ணாய்
கடலைக்குள் சேர்ந்து
வெளியேற மறுக்கிறது
அந்த வறுபட்ட மண்///
இதென்ன பெரிய பிள்ளைத் தனமா இருக்கு..சின்ன வயசுல மண் திண்டது மறந்து போச்சா?..;)))

said...

//அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் கடலைக்கடைக்காரன்
காசுக்கேட்டு துரத்துகிறான்
அவன்
என்னை பிடிப்பதும்
நான்
அவனிடமிருந்து எஸ்ஸாவதும்
நிச்சயமே!//

இதனாலதான் எந்த பிகரும் உனக்கு மாட்ட மாட்டேங்குதா ஆயில் சார் :)))

said...

///கடலையும்
திங்க நல்லதுதான்
தான் கருகி
வந்தால்
கருகிய
சுவையாய்
நாக்கில் ருசிக்கிறது///
இன்னா கொல வெறி...அவ்வ்வ்வ்வ்

said...

///என் கைப்பிடி அளவு
கடலையோடு,
உன் கையிலுள்ள
கடலையையும்
எனக்கு கொஞ்சம்
தருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி//*/
இதென்ன...அல்பமாக்கீது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

grrrrrrrrrrrrrrrrrrr

said...

///அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் கடலைக்கடைக்காரன்
காசுக்கேட்டு துரத்துகிறான்
அவன்
என்னை பிடிப்பதும்
நான்
அவனிடமிருந்து எஸ்ஸாவதும்
நிச்சயமே!///
இன்னா வில்லத்தனம் இந்த பய புள்ளைக்கு..;))))

said...

///ஆயிரம் தடவை
வாங்கி தின்று வந்திருக்கிறேன்
இந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்
முதல் முறை நிதானித்து
தின்று பார்க்கிறேன்
என்னோடு சொந்த காசில்
வாங்கி தின்ன
அந்த நாட்களை யோசித்தப்படியே....///
நிச்சயமா அது மட்டும் நடக்காது.. எவனாவது இ.வா. கிடைக்காமயா போய்டுவான்...;))

said...

வறுத்துட்டீங்க பாஸ் ...

said...

கொய்ய்ய்ய்ய்யாலா...கலக்கலா இருக்குப்பா....இதுக்கு பின்னணியில் யாரோ இருக்காங்க...அது தான் யாருன்னு தெரியலை...:)

said...

அண்ணா எதிர் கவுஜ சூப்பர் சூப்பர் சூப்பர்.. கலக்கிட்டீங்க.. :))) நீங்க ஏன் கவிதை எழுதக்கூடாது??

said...

மேல போட்ருக்கற அத்தனை கமெண்ட்டுக்கும் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே.. :)))))

said...

///ஸ்ரீமதி said...

அண்ணா எதிர் கவுஜ சூப்பர் சூப்பர் சூப்பர்.. கலக்கிட்டீங்க.. :))) நீங்க ஏன் கவிதை எழுதக்கூடாது??///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

said...

அப்பவே கடலை போட ஆரம்பிச்சாசா?

said...

Over kadalaiya irukkae :P

said...

கடலை வச்சு நான் ஒரு கதை எழுதினேன்,
ஆனா நீங்க கடலையை வச்சி ஒரு காவியமே படைச்சிட்டீங்க.
வாழ்த்துக்கள் ஆயில்யன்.

said...

கலக்கலான எதிர் கவுஜைங்க,
செம கடலை!

said...

அய்யய்யப்பா.................

said...

கடலைப் பார்த்தவாறு போடுவதால் கடலையானதா,கடும் அலை வந்தாலும் போடுவது நிற்காது என்பதால் கடலை ஆனதா?
கடலை படம் சூப்பர்...பள பளவென பாலிஷ் போட்ட மாதிரி இருக்கு .ஒரு கடலையில் ஒரு மெகா காதல் காவியமே எழுதலாம் போலிருக்கிறதே.

said...

//
என் கைப்பிடி அளவு
கடலையோடு,
உன் கையிலுள்ள
கடலையையும்
எனக்கு கொஞ்சம்
தருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி
//

அம்மா தங்கமணி நீ உஷாரு,
உன் கையில் உள்ள கடலையும் காணாமல் போகபோகுதுன்னு
பட்சி சொல்லுது.

said...

கடல வறுக்கறதுன்னு சொல்லணுமா - போடறதுன்னு சொல்லணுமா - சூப்பரா இருக்கு கடல

said...

யோவ் சின்னப்பாண்டி

வாயில நல்லா வருது எனக்கு
@$#%^#$)(*&%

said...

soofer kadalai ..poem than vasikkalai ..:))

said...

சென்ஷி said...
//என் கைப்பிடி அளவு
கடலையோடு,
உன் கையிலுள்ள
கடலையையும்
எனக்கு கொஞ்சம்
தருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி//

சத்தியமா சொல்றேன்.. இந்த வரியை படிச்சுட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல.. கலக்கிடீங்க

ennakum itha padichitu சிரிப்ப than vanthu

nalla podrenga friend kadalaye

said...

// சென்ஷி said...
//என் கைப்பிடி அளவு
கடலையோடு,
உன் கையிலுள்ள
கடலையையும்
எனக்கு கொஞ்சம்
தருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி//

சத்தியமா சொல்றேன்.. இந்த வரியை படிச்சுட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல.. கலக்கிடீங்க :)))))

//

சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்தது தான் மிச்சம்:)))))))))))))))))))

said...

//ஆயிரம் தடவை
வாங்கி தின்று வந்திருக்கிறேன்
இந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்
முதல் முறை நிதானித்து
தின்று பார்க்கிறேன்
என்னோடு சொந்த காசில்
வாங்கி தின்ன
அந்த நாட்களை யோசித்தப்படியே....
//

அப்போ மட்டும் தான் சொந்த காசா? அப்போ இவ்ளோ நாளா ஓசியா???????????????????????????

said...

//கவனித்து தின்கிறேன்
கருகிய
உன் மற்றும் என் பங்கு கடலைகளை
//

அதக் கூட விடவில்லையா????

said...

செம ஆயில்யன்!!!
உண்மையாவே டெரராத் தான் இருக்கு :))

said...

கடலை..நல்ல வாசமா வறுபட்ட கடலை!!
உங்களோடு கடலைபோடுபவர் உஷாரா இருக்கணும் போல. எதிராளி கடலையையும் பிடுங்கிடுவீங்க போல.

said...

அந்த கடலை படம் நல்லா இருக்கு.. பச்சைக்கடலை வாங்கி வச்சிருந்தா.. அம்மாக்கு தெரியாம எடுத்து சாப்பிட்ட ஞாபகம்..:)

said...

:))))

said...

//அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் கடலைக்கடைக்காரன்
காசுக்கேட்டு துரத்துகிறான்
அவன்
என்னை பிடிப்பதும்
நான்
அவனிடமிருந்து எஸ்ஸாவதும்
நிச்சயமே!//
சிரிச்சு சிரிச்சு வயிரு புண்ணாகி போச்சு

உங்களுக்கு இருந்தாலும் நக்கல் கொஞ்சம் சாஸ்திதேன்

said...

ஆயில்யன்,கடலை செம அசத்தல்.
கடலை போட்டுப் போட்டு நல்ல அலைகடலாய் ஆயில்யன் நீங்கள்.

//ஆயிரம் தடவை
வாங்கி தின்று வந்திருக்கிறேன்
இந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்முதல் முறை நிதானித்து
தின்று பார்க்கிறேன்.//

இந்தப் பந்தியில் எனக்குச் சந்தேகம்.எந்தக் கடல்(லை)?

said...

செம காமெடிக்கடலைங்க

ஏன் வறுத்த்தோட நிறுத்திட்டீங்க,அவிச்ச கடலைக்கு தனிக்கவுஜயா.

said...

//டெரரர்//

அப்டின்னா என்ன? பொருள்விளக்கம் தருக:):):)

இப்படிக்கு,
குத்தம் கண்டுபிடிச்சு குத்து வாங்கி வாழ்வோர் சங்கம்

said...

செம கடலை பாஸ்

ஸ்ரீமா, கொஞ்சம் இங்க வந்து பாரேன்,
ஒரு கவிதைக் கொலையே நடந்திருக்கு,
வா வா பொறியல் ச்சீ மறியல் பண்ணலாம்.

செம சிரிப்ஸ் அண்ணா,
அடிச்சு தாக்கியிருக்கீங்க

நம் ஒவ்வொரு கடலையும்
நெருப்பில் கருகிய
கடலைகளாய்,
ஒரு வினாடி
தீச்சுவாலைக்கு பின்
முழுவதும் கருகிவிட்டது
மொத்தக்கடலையும்!

அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் கடலைக்கடைக்காரன்
காசுக்கேட்டு துரத்துகிறான்
அவன்
என்னை பிடிப்பதும்
நான்
அவனிடமிருந்து எஸ்ஸாவதும்
நிச்சயமே!
ஹைய்யோ ஹைய்யோ

(அய்யோ, எனக்கு கவிதை எழுத பயமாயிருக்குது)

said...

இப்படியெல்லாம் கடலை போட்டிங்க கத்தார்ல ஒரு ஃபிகரும் மாட்டாதுடி//

கவனித்து தின்கிறேன்
கருகிய
உன் மற்றும் என் பங்கு கடலைகளை
மூச்சு திணறாமல்
மெதுவாக தண்ணீர் குடித்தப்படியே...

இப்படித்தின்னா, ஏன் தொப்பை வளராது. அப்புறம் அதுக்கொரு ஃபோட்டோ, ஒரு பதிவு

said...

அண்ணா .... படிச்சு படிச்சு சிரிச்சேன்... எப்படி இப்படிஎல்லாம் யோசிக்கறீங்க....:))))