சட்டக்கல்லூரி - போலீஸ் - நோ எண்ட்ரீ!


நடைப்பெற்று முடிந்த சட்டக்கல்லூரி வன்முறை சம்பவங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் இப்பொழுது காவல்துறையின் பக்கம் திரும்பி நிற்கிறது!

ஒரு வார காலத்திற்கும் மேலாக சட்டக்கல்லூரியில் சிலச்சில பிரச்சனைகள் முட்டிக்கொண்டிருந்த நிலையில்,உளவுப்பிரிவால் தகவலும் அளிக்கபட்டிருந்த நிலையில் காவல்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தாலும் கூட கட்டாயம் இச்சம்பவம் வேறு மாதிரியான பிரச்சனைகளாகவே அரங்கேறியிருக்ககூடும்!

வாசல்வரை வந்து நின்ற காவல்துறைக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற செய்தியும் போலீஸ் அதிகாரிகளின் கண்முன்னேயே மாணவர்கள் மாணவனை தாக்கியதும் எல்லோரிடமும் ஒட்டுமமொத்த வெறுப்பினை காவல் துறை வாங்கிக்கட்டிக்கொண்டது!

(சாமி பட ஸ்டைலில் யாராவது ஒரு சில இளைய தலைமுறை போலீஸ் களமாடியிருந்தால் பொதுமக்களால் பாராட்டுப்பெற்றிருக்கக்கூடும்! )

முன்பு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காவல்துறைக்கு விடுக்கப்பட்ட செய்தி குறிப்பாக காவல்துறை கல்லூரிகளுக்கு குறிப்பாக சட்டக்கல்லூரிகளுக்கு நுழைவதற்கு அக்கல்லூரியின் முதல்வரின் அனுமதியினைப்பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு நடைமுறை பழக்கம் கொண்டு வரப்பட்டிருக்கிறது!

(இது மற்ற மருத்துவ பொறியியல் கல்லூரிகளுக்கு கிடையாது! - போலீஸால், சட்டம் படித்தவர்களினை அத்தனை எளிதில் கைது செய்து விட முடியாது அதே நேரத்தில் மற்ற எத்துணை பெரிய படிப்பு படித்த மனிதராக இருந்தாலும் தூக்கிடலாம் அப்படிங்கறதும் ஒரு விந்தையான நடைமுறை விதி!)

ஜாதி ரீதியான பிரச்சனைகளை முன்வைத்து வன்முறை சம்பவம் அரங்கேற்றப்பட்டது, அதற்கு என்ன காரணம் மாணவர்களின் படிப்பு சார்ந்த விசயங்கள் தவிர்த்து மற்ற ஏனைய விசயங்களில் கல்லூரிக்குள் என்ன நடக்கிறது? எப்படி வெடித்தது இப்பிரச்சனை? என்ற எந்த விசயமும் இப்போதைக்கு எழுப்பப்படாமல் சில காவல்துறை அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டும், சஸ்பெண்ட் செய்யப்பட்டும் உள்ளார்கள்! - ஒட்டுமொத்த பிரச்சனையுமே காவல்துறை மூக்கை நுழைக்காமல் வெளியே நின்று வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்!

கேட்டுக்கு வெளியே நின்று அடித்தால் போலீஸ் வந்து பிடித்து துவைக்கும் என்ற சட்டம் தெரிந்தே அழகாய் உட்புறம் நின்று வன்முறையாடிய மாணவர்களுக்கு இப்படியான வன்முறையில் ஈடுபட்டால் என்ன விதமான தண்டனைகள் சட்டத்தில் இருக்கு என்று சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டார்களா ஆசிரியர்கள்?

இந்த சம்பவத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு என்ன விதமான தண்டனை அளித்தால் இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையிலும் இருக்கும்? இந்த மாணவர்கள் தண்டனை பெற்ற மீண்ட பிறகு நல்லவிதமாக சமூகத்தில் கடமை ஆற்ற மனதளவில் தயாராக இருப்பார்களா? அல்லது வன்முறையின் ஆணி வேர்களாக மாறுவார்களா? - சிந்திக்கப்படவேண்டிய விசயம் - யார் சிந்திப்பது....?

15 பேர் கமெண்டிட்டாங்க:

said...

Me the first?? :))

said...

நன்றாகக் கேட்டிருக்கிறீர்கள்.

//இந்த மாணவர்கள் தண்டனை பெற்ற மீண்ட பிறகு //

அப்படி ஒன்று நடக்குமா அல்லது விசாரணை என்பதே கண் துடைப்பாகி தண்டனை என்பதே தரப் படாமல் வெளியில் வந்து விடுவார்களா? இந்தக் கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

said...

சிந்திக்கப்படவேண்டிய விசயம் -

யார் சிந்திப்பது....?

said...

///ராமலக்ஷ்மி said...

நன்றாகக் கேட்டிருக்கிறீர்கள்.

//இந்த மாணவர்கள் தண்டனை பெற்ற மீண்ட பிறகு //

அப்படி ஒன்று நடக்குமா அல்லது விசாரணை என்பதே கண் துடைப்பாகி தண்டனை என்பதே தரப் படாமல் வெளியில் வந்து விடுவார்களா? இந்தக் கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.///

இதே தான் என்னுள்ளும் எழுகின்றது... :(

said...

//காவல்துறை கல்லூரிகளுக்கு குறிப்பாக சட்டக்கல்லூரிகளுக்கு நுழைவதற்கு அக்கல்லூரியின் முதல்வரின் அனுமதியினைப்பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு நடைமுறை பழக்கம் கொண்டு வரப்பட்டிருக்கிறது! //

இது காவல்துறைக்கு மட்டும் தானா அல்லது தீயணைப்பு துறைக்குமா

அங்கு தீ பிடித்தால் சட்டக்கல்லூரி முதல்வர் கடிதம் எழுதி அனுப்பிய பின் தான் அணைப்பார்களா

என்ன கொடுமை சார் இது

said...

ம்ம்..இதுக்கெல்லாம் விடை கிடைச்சுட்டா!!

said...

the police would have secured the(so-called)Justice if it was in Kottaipatti of Madurai even without big reason.But police didnot control the knife holding killers so the students faced them, since police is keeping silent.


http://vinavu.wordpress.com/2008/11/13/tmstar4/

said...

திருத்தி எழுதப்பட வேண்டிய சட்டங்கள் இவை...

சிந்திக்க ஒரு துளி... நன்றி

குறிப்பு: தோஹாவில் இருப்பதாக கேள்வி ...

காலம் அனுமதிதால் தொடர்பு கொள்ளவும் +974 - 6408793

said...

சிந்திக்கப்படவேண்டிய விசயம் - யார் சிந்திப்பது....?

ithu enna chinapulla thanma question pereyavanga neenga irukum pothu chinavanga naanga chinthekkalama friend.

said...

ஹ்ம்ம்.. யோசிக்க வேண்டுய விஷயம். நல்லா சொல்லி இருக்கிறீர்கள்.

said...

//ஜாதி ரீதியான பிரச்சனைகளை முன்வைத்து வன்முறை சம்பவம் அரங்கேற்றப்பட்டது, அதற்கு என்ன காரணம் மாணவர்களின் படிப்பு சார்ந்த விசயங்கள் தவிர்த்து மற்ற ஏனைய விசயங்களில் கல்லூரிக்குள் என்ன நடக்கிறது? எப்படி வெடித்தது இப்பிரச்சனை? என்ற எந்த விசயமும் இப்போதைக்கு எழுப்பப்படாமல் சில காவல்துறை அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டும், சஸ்பெண்ட் செய்யப்பட்டும் உள்ளார்கள்! -//

நல்ல லாஜிக்கான கேள்வி!! விட சொல்வார் யாரோ!!

said...

போன முறை சட்டக்கல்லூரி பிரச்சனையின் போது ஹாஸ்டல் புகுந்து போலீசார் கைது செய்ததற்க்கும் எதிர்ப்பு. இப்போவும் எதிர்ப்பு. இதுல ஒரு ஸ்டுடண்ட் பேட்டி "வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம்" என்று. ஒரு வார்த்தைக்கூட சகமாணவனின் வெறித்தனத்தைப் பற்றி கண்டிக்கவில்லை??

said...

ஜாதி ரீதியான பிரச்சனைகளை முன்வைத்து வன்முறை சம்பவம் அரங்கேற்றப்பட்டது, அதற்கு என்ன காரணம் மாணவர்களின் படிப்பு சார்ந்த விசயங்கள் தவிர்த்து மற்ற ஏனைய விசயங்களில் கல்லூரிக்குள் என்ன நடக்கிறது? எப்படி வெடித்தது இப்பிரச்சனை? என்ற எந்த விசயமும் இப்போதைக்கு எழுப்பப்படாமல் சில காவல்துறை அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டும், சஸ்பெண்ட் செய்யப்பட்டும் உள்ளார்கள்! - ஒட்டுமொத்த பிரச்சனையுமே காவல்துறை மூக்கை நுழைக்காமல் வெளியே நின்று வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

நல்ல கேள்வி.
இதில் காவல்துறை மூக்கை நுழைத்திருந்தாலும் பத்திரிக்கை இப்படி தான் சொல்லும்
காவல் துறையின் அத்து மீறல், அராஜகம்.
ஆட்டி வைத்துப் பார்க்கும் அரசியல்வாதிகள்
ஆடும் சட்(டா)ம் பிள்ளைகள்
ஆடாமலிருக்கும் போலீஸ்

என்ன சொல்ல
இந்தப் பிள்ளைகளும் போலீஸுக்கு செய்த, செய்கின்ற, செய்யும் அராஜகம் நெறய இருக்கு.
அது தெரியாமலேயே இருக்கட்டும்.

said...

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை..

said...

இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியிலும் காண்பித்தார்களாமே.
என்ன ஒரு கொடுமை.