சின்னப்புள்ளதனமால்ல இருந்திருக்கேன்!


ஜீவ்ஸ் அண்ணாச்சி, கோட்டித்தனமா ஒரு பதிவு எழுதச்சொல்லி டேக் பண்ணிட்டு போயிட்டாங்க! கோட்டி தனமான்னா முதல்ல எப்படி எழுதறது என்னாத்தை எழுதறதுன்னே பிரியல! :-(

சரி எதாச்சும் சின்னபுள்ளதனமா செஞ்ச காரியத்தை சொல்லிடலாம்ன்னு ஆரம்பிச்சுட்டேன்! (நீ பிளாக்குறதே அப்படித்தானே இருக்குன்னு பீல் பண்றவங்களுக்கு - சின்னபுள்ள எழுதுனா அப்படித்தான் இருக்கும்!)

கல்லூரி சென்ற பிறகு நட்பு வட்டம் கிர்ர்ர்னு எகிற ஆரம்பித்திருந்தது எனக்கு!

பல வகுப்புக்களுக்கும் சென்று பழகும் நண்பர்களை மிக பொறாமையுடன் பார்க்கும் பழக்கம் கொண்ட எனக்கு இந்த எண்ணிக்கையின் அருமை புரிந்திருக்கவில்லை என்னை பொறுத்தவரையில் நாம் நிறைய நட்புக்கள் பெற வேண்டி இருக்கும் போல என்ற எண்ணம்தான்!

கல்லூரி படிக்கும் காலங்களில் சின்ன சின்ன உரசல்கள் வந்தாலும் கூட டக்கென்று மறக்கடிக்கும் சூழலே இருந்து வந்ததால் எந்தவொரு நிகழ்வுமே பெரியதாக இழப்பினையோ அல்லது மனகுழப்பங்களையோ கொண்டிருக்கவில்லை !

பொதுவாகவே நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்கள் நட்புக்களை காயப்படுத்தாத வகையில்தான் இருக்கும் என்றாலும் கூட, அதை வெளிப்படுத்துதல் காலம் நேரம் சூழல் கண்டிப்பாக சிறிய நிகழ்வினை கூட அலட்சியமாக்கியும் விடக்கூடும் அல்லது நட்பில் உரசல்களை கொண்டு வந்து விட்டுவிடக்கூடலாம்!

எல்லா நட்புக்களிடமும் கூடிய மட்டும் தொடர்ச்சியான தொடர்பினை கொண்டிருந்த எனக்கு சில நேரங்களில் சில நட்புகளின் பழக்கங்களில் தொடர்பு கொள்ளும் பழக்கம் வெறுத்துப்போக செய்தது !

ஒரு கட்டத்தில் அடப்போடா...! நீயா வந்து பேசுறவரைக்கும் நான் உன்கிட்ட பேசமாட்டேன் என்ற வைராக்கியம் அவ்வப்போது வந்து மறைந்து க்கொண்டிருந்தது (ஆமாங்க கொஞ்ச நாள் இருக்கும் பிறகு சந்திக்க நேர்ந்தால் எல்லாம் மறந்து போகும்,திரும்ப வரும்!)

வேலை விசயமாக வெளியூரில் இருந்தாலும் கூட தொடர்புகளும் இது போன்ற பிரச்சனைகளும் வந்துக்கொண்டுத்தான் இருந்தன! ஒரு கட்டத்தில் சிலரிடம் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பேசவே இல்லை (இப்ப நினைச்சா கூட அடேங்கப்பா ரொம்ப இஸ்ட்ராங்காத்தாண்டா இருந்திருக்க என்று நினைச்சு சிரிச்சுப்பேன்!)

வழக்கமான பிரச்சனைதான்! எப்பொழுதுமே ஒன்வே மாதிரி நான் மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டுமா அவர்களும் பரஸ்பரம் தொடர்பு கொள்ளட்ட்டுமே என்ற எண்ணம்தான்!

அந்த காலகட்டங்களில் நினைவுகள் வரும்போகும் நினைவுகளிலேயே எனக்காய் நிறைய உதவிகள் செய்திருந்த நட்புக்களுக்கு நன்றி சொன்னாலும் கூட ரியாலிட்டின்னு வரும்போது அடப்போடா..! நான் போன் பண்ணமாட்டேன் என்று மனம் அடம்பிடித்த சூழல்தான்!

ஆனாலும், சென்னை போன்ற சூழல் கண்டிப்பா நிறைய நினைவுகளையும் உறவுகளை நட்புக்களை பிரிந்திருக்கும் சூழலினை விளங்க வைக்க நிறைய சோதனைகளினை தரும் அது போன்றதொரு ஒரு உடல் நலக்குறைவு தருணத்தில்தான் எனக்கு சுற்றமும் நட்பும் தெளிவாக புரிந்தது!

உதவிக்கொரு ஆள் இல்லாத சூழலில் ஒவ்வொருவரினை பற்றியும் நினைவுகள் மாறி மாறி பயணிக்க,எடுத்த முடிவுதான் யார் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும் நாம இப்படித்தான் இருக்கணும்ன்னு ஒரு உறுதி எடுத்தாச்சு!

நம்மை தொடர்பு கொள்வதில் அவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம் சில நேரங்களில் மனமே கூட இல்லாமல் இருக்கலாம் அதை பற்றிய கவலை எல்லாம் நாம் எதற்கு எடுத்து நம் தோளில் சுமக்க வேண்டும்!

நாமே வலிய போய் நின்னாலும் கூட அவர்கள் வலிந்து ஒரு புன்சிரிப்பினை உதிர்ந்த்துதானே ஆகவேண்டும் அப்படின்னு முடிவா முடிவு பண்ணிட்டேன்!

கோபப்பட்டதும் அதனால் சில காலங்கள் பேசாமல் இருந்ததையும் நினைத்து நினைத்து சின்னபுள்ளதனமால்ல நடந்துக்கிட்ட்டோம்ம் நினைத்து எனக்குள் நானே கேவலப்பட்ட விசயத்தை எல்லாருக்க்கும் சொல்லிட்டேன்ப்பா!

வாழும் வாழ்வின் எண்ணிக்கை எவரும் அறியாத இவ்வுலகில் இருக்கும் நாட்களில், எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு திருப்தியான செயல்கள் செய்வதில் உயர்வு தாழ்வு பார்க்காமல் வாழ்ந்து போகலாமே என்று நினைத்தது எண்ணம் - தொடர்கிறது....!

தாழ்ந்து போவது தவறில்லைத்தான்!
வீழ்ந்து போவதற்கு வாய்ப்பும் இல்லை!
இந்த ஸ்டைலிலேயே வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே....!

37 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அன்பின் ஆயில்யன்

கோட்டித்தனமாக - சிறு பிள்ளைத்தனமாக - எழுதிய உரை நன்கு உள்ளது. அனைவரும் படித்து ஒரு முறை சிந்தித்து கடைப்பிடிக்க வேண்டிய கட்டுரை.

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை.

நல்வாழ்த்துகள்

said...

ரொம்ப நல்லா இருக்கு அண்ணா உங்க முடிவான முடிவு :)))

said...

//ஜீவ்ஸ் அண்ணாச்சி, கோட்டித்தனமா ஒரு பதிவு எழுதச்சொல்லி டேக் பண்ணிட்டு போயிட்டாங்க!//

சரியான ஆள தான் தேர்ந்தேடுத்துருக்காரு ஜீவ்ஸ் அண்ணா.. ;))))

said...

//நீ பிளாக்குறதே அப்படித்தானே இருக்குன்னு பீல் பண்றவங்களுக்கு - சின்னபுள்ள எழுதுனா அப்படித்தான் இருக்கும்!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இந்த பதிவுலையே என்ன ரொம்ப பாதிச்ச விஷயம் இது தான்.. :)))))

said...

நட்ப பத்தி இவ்ளோ சொல்லிட்டு.. இன்னும் எனக்கு குட் மார்னிங் மெயில் அனுப்பாத ஆயில்ஸ் அண்ணாவ கண்டிக்கிறேன்... :))))

said...

//
தாழ்ந்து போவது தவறில்லைத்தான்!
வீழ்ந்து போவதற்கு வாய்ப்பும் இல்லை!
இந்த ஸ்டைலிலேயே வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே....!//




அனுபவித்து வாழ்ந்திருக்கிறீர்கள்.

said...

நம்மை தொடர்பு கொள்வதில் அவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம் சில நேரங்களில் மனமே கூட இல்லாமல் இருக்கலாம் அதை பற்றிய கவலை எல்லாம் நாம் எதற்கு எடுத்து நம் தோளில் சுமக்க வேண்டும்!

நாமே வலிய போய் நின்னாலும் கூட அவர்கள் வலிந்து ஒரு புன்சிரிப்பினை உதிர்ந்த்துதானே ஆகவேண்டும் அப்படின்னு முடிவா முடிவு பண்ணிட்டேன்!

மிகச்சரியாக அருமையாக உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

//
தாழ்ந்து போவது தவறில்லைத்தான்!
வீழ்ந்து போவதற்கு வாய்ப்பும் இல்லை!
இந்த ஸ்டைலிலேயே வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே....!//
அட இது ஆயில்ஸ் அண்ணாச்சி இஸ்டைலு.
ஏ நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.

said...

ஸ்ரீமதி said...
//நீ பிளாக்குறதே அப்படித்தானே இருக்குன்னு பீல் பண்றவங்களுக்கு - சின்னபுள்ள எழுதுனா அப்படித்தான் இருக்கும்!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இந்த பதிவுலையே என்ன ரொம்ப பாதிச்ச விஷயம் இது தான்.. :)))))

ஆமாம் ஸ்ரீமா, நான் கூட அழுதுட்டேன்.

Anonymous said...

//கோபப்பட்டதும் அதனால் சில காலங்கள் பேசாமல் இருந்ததையும் நினைத்து நினைத்து சின்னபுள்ளதனமால்ல நடந்துக்கிட்ட்டோம்ம் நினைத்து எனக்குள் நானே கேவலப்பட்ட விசயத்தை எல்லாருக்க்கும் சொல்லிட்டேன்ப்பா//

இது ஒண்ணும் கேவலம் இல்லை. கடைசில நல்ல முடிவு இல்ல சொல்லிருக்கீங்க :)

said...

//வாழும் வாழ்வின் எண்ணிக்கை எவரும் அறியாத இவ்வுலகில் இருக்கும் நாட்களில், எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு திருப்தியான செயல்கள் செய்வதில் உயர்வு தாழ்வு பார்க்காமல் வாழ்ந்து போகலாமே என்று நினைத்தது எண்ணம் - தொடர்கிறது....!//

வாழ்த்துக்கள்!

//தாழ்ந்து போவது தவறில்லைத்தான்!
வீழ்ந்து போவதற்கு வாய்ப்பும் இல்லை!
இந்த ஸ்டைலிலேயே வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே....!//

அழகான பதிவு.
கோட்டித்தனமும்
இங்கில்லை
சிறுபிள்ளைத்தனமோ இல்லவேயில்லை
கோர்வையாகச் சொல்லப் பட்ட
சீரிய சிந்தனைகள் நிரம்பிய
சீரியஸ் பதிவு.

நன்றி ஆயில்யன்!!!

said...

//தாழ்ந்து போவது தவறில்லைத்தான்!
வீழ்ந்து போவதற்கு வாய்ப்பும் இல்லை!
இந்த ஸ்டைலிலேயே வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே....!//

வாழ்த்துக்கள். நல்ல பதிவு.

said...

//ஸ்ரீமதி said...

//நீ பிளாக்குறதே அப்படித்தானே இருக்குன்னு பீல் பண்றவங்களுக்கு - சின்னபுள்ள எழுதுனா அப்படித்தான் இருக்கும்!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இந்த பதிவுலையே என்ன ரொம்ப பாதிச்ச விஷயம் இது தான்.. :)))))
//

ரிப்பீட்டு!

said...

//கல்லூரி சென்ற பிறகு நட்பு வட்டம் கிர்ர்ர்னு எகிற ஆரம்பித்திருந்தது எனக்கு! //

ஓ..நல்லாத் தெரியுதே..ரவுண்ட் ராபின்ல சாட் செஞ்சு செஞ்சு..சாப்பிட,தூங்கக் கூட முடியாம...நீங்க பாடுபடறது நல்லாவே தெரியுது!!

said...

//கல்லூரி படிக்கும் காலங்களில் சின்ன சின்ன உரசல்கள் வந்தாலும் //

எதுக்குங்க ஆயில்ஸ் அண்ணா? பென்சில் சண்டை..பெஞ்ச் சண்டையா??

said...

//அதை வெளிப்படுத்துதல் காலம் நேரம் சூழல் கண்டிப்பாக சிறிய நிகழ்வினை கூட அலட்சியமாக்கியும் விடக்கூடும் அல்லது நட்பில் உரசல்களை கொண்டு வந்து விட்டுவிடக்கூடலாம்!//

மெத்தச் சரி!! ஆயில்ஸானந்தா கலக்குறீங்களே!

said...

//டுத்த முடிவுதான் யார் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும் நாம இப்படித்தான் இருக்கணும்ன்னு ஒரு உறுதி எடுத்தாச்சு!//

சூப்பர்!

said...

//எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு திருப்தியான செயல்கள் செய்வதில் உயர்வு தாழ்வு பார்க்காமல் வாழ்ந்து போகலாமே//

செம சூப்பர்!

said...

:))))

Periya manushan periya manushan dhaaaya :D

said...

//எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு திருப்தியான செயல்கள் செய்வதில் உயர்வு தாழ்வு பார்க்காமல் வாழ்ந்து போகலாமே என்று நினைத்தது எண்ணம் - தொடர்கிறது....!//

Repeatae :))) follow panniduvom :D

said...

என்னாங்க இது சின்னபுள்ள தனமான்னு சொல்லிட்டு, இப்படி பெரிய பெரிய மேட்டரெல்லாம் சொல்றிங்க

said...

//கல்லூரி சென்ற பிறகு நட்பு வட்டம் கிர்ர்ர்னு எகிற ஆரம்பித்திருந்தது எனக்கு! //

எனக்கும் அப்படித் தான்...
எல்லோரும் நல்ல நண்பர்கள்...

said...

vaayyaa vaa...


இதுல சின்னப் புள்ளத்தனமா எதுவுமே இல்லையே?

யாரை நீ இழுத்து விடப்போறே ?

said...

ஆயில்யன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.புதிய வருடத்தின் ஆரோக்யமான ஒரு உறுதி.அழகான நல்ல விஷயம்.உண்மையோடு உணர்ந்து எழுதியிருக்கிறிர்கள்.
தனிமை வதைக்கும்போது உறவுகள் நட்புக்களின் நினைவுகள் சுற்றிச் சுழரும்.உடனேயே ஊருக்கு ஓடிப்போக
வேணும்போல இருக்கும்.பிடிக்காதவர் கோபக்காரர் முகங்கள் என்றாலும் சாகும்வரை அவர்கள் மத்தியில் வாழவேணும் போல இருக்கும்.இன்று இருந்துவிட்டு நாளை மறைந்தால் அடுத்த நாள் பால் என்கிற வாழ்வில் என்ன வைராக்கியம் எல்லாம் வேண்டிக்கிடக்கு என்று தத்துவம் எல்லாம் பிறக்கும்.யோசிக்க வைக்கும் பதிவு.

Anonymous said...

:)

said...

பாஸ்

எங்கேயோ போயிட்டீங்க, பெரிய ஆளுதான் நீங்க

said...

கரீக்ட்டு பாஸ்

said...

சின்னப்புள்ளத்தனமான்னு சொல்லிட்டு பெரிய மனுசனா இருக்கறியே ராசா...

said...

இந்த முடிவத்தான் தன்முனைப்புகள் இல்லாதிருத்தல் அப்படின்னு பின் நவீனத்துல சொல்லுவாங்க...

said...

செய்தல் நிகழ்தலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது இந்த விசயம்...

(சும்மா இருக்கமாட்டம்ல நாங்க ஏதாவது சொல்லி குழப்பணும்ல ;)


நிஜமாவே உங்களுக்கு நல்ல மனசு அண்ணே...!

said...

அண்ணே என்ன செய்து கொண்டிருக்கறிங்க...:)

said...

எப்பபாரு நெட்லதானா...:)

said...

நம்மளுக்கெல்லாம் பதிவெழுதி அத பதிவாக்கவே நேரம் கிடைக்க மாட்டேங்குது...

said...

// வாழும் வாழ்வின் எண்ணிக்கை எவரும் அறியாத இவ்வுலகில் இருக்கும் நாட்களில், எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு திருப்தியான செயல்கள் செய்வதில் உயர்வு தாழ்வு பார்க்காமல் வாழ்ந்து போகலாமே என்று நினைத்தது எண்ணம் - தொடர்கிறது....!

தாழ்ந்து போவது தவறில்லைத்தான்!
வீழ்ந்து போவதற்கு வாய்ப்பும் இல்லை!
இந்த ஸ்டைலிலேயே வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே....!//

அருமையோ அருமை…சின்ன புள்ளத்தனமான்னு தலைப்பு வச்சுட்டு, செம சூப்பரா எழுதிட்டீங்க…

said...

எப்பன்னாலும் கொஞ்ச நேரம்தான் இணையத்துக்கான சந்தர்ப்பமே கிட்டுது...:(

said...

உங்க பதிவை படிச்சதும் எனக்கும் ஏண்டா நானும் ஈகோ பார்க்கிறேன் என்று தோன்றுகிற்து !

said...

அருமை!

said...

அன்பின் ஆயில்யன், என்ன இப்படி ஒரே உணர்ச்சிகரமா இருக்கு. கோட்டித்தனமா இதுக்குப் பெயர்? கெட்டித்தனமில்லையோ.

நல்லா எழுதறீங்க. நல்ல நட்புக்கள் இருப்பது பின்னூட்ட வரிசையில் தெரிகிறது. என்னை மாதிரி எப்பவாவது வந்து விமரிப்பவர்களுக்குத் தான் இந்தையலாமை இருக்கு. உங்க்ளுக்கு இல்லை. நல்ல புத்தாண்டில் நல்ல தீர்மானங்களோடு நன்றே வாழ வாழ்த்துகள்.