
திருக்குறள் - மனித வாழ்வின் குறுகிய காலகட்டத்தில் கண்டுணர முடியாத உண்மைகள் பலவற்றை கூறிச்சென்ற பொதுமறை!
குறளினை அடிப்படை கல்வியில் மட்டும் பயின்று அதன்பின்னர் காலப்போக்கில் மறந்து செல்லும் பலருக்கு மத்தியில் இன்னும் கூட பலரால் இந்த பொதுமறையான நூல் போற்றப்படுகிறது! -ஒவ்வொருவரும் திருக்குறளினை தம் வாழ்க்கை ஓட்டத்தில், ஒரு முறையாகிலும் படித்து பொருள் உணர்ந்து கொள்ள கட்டாயம் வேண்டும்!
அறம் - இத்தலைப்பில் நிறைய கருத்துக்களினை கொண்ட குறள்கள் நிரம்பியிருக்கின்றன அவை சொல்லும் கருத்துக்கள் அத்தனையும் நல்லதொரு வாழ்க்கை தத்துவங்களாய் வாழ்க்கையில் கடைப்பிடிக்க தகுந்தவைகளாகவே இருக்கின்றன!
அறம் செய்தல் - தம் தேவை வரம்பினை மீறி அதிகம் உள்ள பொருட்களினை தானம் செய்தல் அல்லது நம்மால் இயனற அளவு உதவிகளை இல்லாதோர்க்கு செய்தல் என்ற அடிப்படை கருத்தில், நம்மால் முடிந்தவரை கடைப்பிடிக்க முயலவேண்டும்! செய்வது என்று முடிவெடுக்க யோசியுங்கள்,முடிவுகளை எடுத்தப்பின்னால் செயலை செய்துவிட்டு நீங்கள் உங்கள் வழியில் அடுத்த இலக்கினை நோக்கி செல்லுங்கள் இதுவே மிகச்சிறந்த பார்முலாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்! நல்லது செய்தாலும் சரி செய்யாமல் இருந்தாலும் சரி அதற்கான காரணங்களை நியாயப்படுத்த நிறைய விசயங்கள் மனதில் சஞ்சரிக்கும். அவ்வாறு தூண்டுவதற்கும் சமூகத்தில் பலருண்டு! முடிவெடுத்த பின்னால் யோசிக்காதீர்கள்!
அறம் செய்யுளம் அளவுக்கு பொருள் இல்லை, பொருள் இருந்தாலும் என் எதிர்காலத்தினை எம் குடும்பத்தின் நினை கண்டால் மனம் பயமுறுகிறது என்று இருப்பவர்களுக்குத்தான் இன்னொரு வழியினையும் திருவள்ளுவரின் குறள்களால் வெளிப்படுத்தப்படுகிறது!
இன்சொல் பேசுதல்!
காலை எழுவது முதல் இரவு வீழ்வது வரை நாம் நம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனையோ பேர்! உறவுகள் நட்புகள் முதல் முதலாய் சந்திக்க வைக்கும் சம்பவங்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிமுகங்கள் வாழ்க்கை தினசரிகளில் நிறையவே கற்றுக்கொடுக்கிறது! - அல்லது கற்றுத்தருகிறது! - எல்லோரையுமே ஒரளவுக்கு நம்பித்தான் வாழ்கிறோம்!
தினமும் பார்க்கும் மனிதர்களிடத்தில் இனிமையாக நடந்துக்கொள்ளுங்கள்,அன்புடன் கனிவான பேச்சு எவரையுமே நம் பக்கம் எளிதில் ஈர்த்துவிடும்.
ஊரில் இருந்த காலத்தில் தினசரி பணியிடத்திற்கு செல்லும் பயணத்தில் சில மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன் எந்த வொரு கூச்சமும் இன்றி என்னிடத்தில் வந்து தம்மை அறிமுகம் செய்துக்கொண்டு என் விபரங்கள் சில தெரிந்துக்கொண்டவர்கள் தினமும் பார்த்து சிரித்து,வணக்கம் செய்து ஒரு நல்ல நட்பு பெற்ற மகிழ்ச்சியினை அன்று அடைந்தேன் - இன்றும் கூட ஊரில் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சியான தருணங்களாகவே இருக்கிறது!
அதே சமயத்தில் என்னால் ஏன் இது போன்று வெளிப்படையாக புதிது புதிதாய் நண்பர்களை பெற்றுக்கொள்ளமுடிவதில்லை என்று பலமுறை நினைத்ததும் உண்டு! - ஆனால் அதுதான் தவறாகி இருக்கிறது! நினைத்தப்படியே இல்லாமல் செயல்படுத்திப்பாருங்களேன்!
வாழும் வாழ்க்கை ஒன்று செல்லும் தூரமும் தெரியாது செல்லும் வழியும் கூட சிறப்பாக இருக்குமா என்று புரியாது! ஆனாலும் கூட ஒரு நம்பிக்கையோடு தொடங்கிவிட்டோம் அந்த நம்பிக்கையோடே தொடர்வோம் - நட்பு வசத்தில் உறவுகளின் வாசத்தில்....!
**************************************************
என்னை பற்றிய குறள்கள்..! (அட எனக்கு புடிச்சதுப்பா)
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்க்கி அகத்தானாம்
இன்சொலின் அதே அறம்
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப்பெறின்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப்பிற
பின்குறிப்பு:- ஜீவ்ஸ் அண்ணாச்சி இனி என்கிட்ட கதை கதைன்னு 1ம் கேக்கமாட்டீங்கன்னு பெரும் நம்பிக்கையோட எஸ்ஸாகிக்கிறேன்!
Showing posts with label குறள். Show all posts
Showing posts with label குறள். Show all posts
திருக்குறள் பற்றி - நானும்....!
# ஆயில்யன் 28 பேர் கமெண்டிட்டாங்க
Labels: குறள்
Subscribe to:
Posts (Atom)

