செல்லமடி நீ எனக்கு! அப்ப...!

நான் நீ அவன்

நானாகவே போக நினைத்தேன்

நீ யாகவே போக சொன்னாய்

அவனாகவே வர நினைத்தான்

நீ யாகவே வரவழைத்தாய்

நாமாக நினைத்தேன் நான்

அவனிடம் தானகவே சென்றாய் நீ

நாமம் தரித்துவிட்டாய் நீ எனக்கு

ஆனாலும்,

செல்லமடி நீ எனக்கு! அப்ப...!

இப்ப.. அவனுக்கு!

வாழ்த்த நினைக்கிறேன் மனதால்

வாயில் வரவில்லை சொல்

வாழ்க்கையை வாழ நீ செல்....


(சும்மாத்தான் எல்லாம் :-))

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

///வாயில் வரவில்லை சொல்///

ஆனா எனக்கு நல்லா வாயில வருது !!!ஆனா சொல்லமாட்டேன் நண்பா:))

said...

///நானாகவே போக நினைத்தேன்///

நீங்களா போகவில்லை என்றால் ஒரு கொலை விழும் அங்க!!! ரசிகன் ஆயில்யனுக்கு என்ன ஆச்சு கொஞ்சம் டெஸ்ட் செய்யுங்க!!!

said...

///நானாகவே போக நினைத்தேன்///

ரெண்டு மூனு வாழைபழம் சாப்பிடுங்க எல்லாம் சரி ஆகிடும்.