சூப்பரான விஷயம் "அவள்" இடமிருந்து

காற்றலைகளோட கபடியாட ஆரம்பிச்சுட்டாங்க திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரி மாணவிகள். அதாங்க.. எஃப்.எம். ரேடியோ ஒலிபரப்புல படு பிஸியா கலக்கிட்டிருக்காங்க. புரொபசர் ஷெர்லி தீபக்கோட மேற்-பார்வை-யில இந்தக் களத்துல இறங்கியிருக்குறவங்க, அந்த காலேஜோட விஷுவல் கம்யூனிகேஷன் மாணவிகள்

காலை 6லிருந்து இருந்து 10 மணிவரை, மாலை 4லிருந்துல இருந்து 8 மணிவரைனு நிகழ்ச்சிகளை தயாரிச்சு திருச்சியில 20 கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் காதுல ஹனி ஊத்துறாங்க!

நிகழ்ச்சி வடிவமைப்பு, பதிவு, ஒலிபரப்புனு எல்லாமே அம்மணிகள் அட்மினிஸ்ட்ரேஷன்தான். சினிமா பாடல்களுக்கு ‘நோ’, அவங்களே இசையமைச்ச பாடல்களைப் போட்டு ஆடி(யோ)யன்ஸை அசர வைக்கிறாங்க. பார்வை இழந்தோர்க்கான பிரத்தியேக நிகழ்ச்சி, சமூக விழிப்பு உணர்வு விளம்பரங்கள்னு உபயோகமானதையெல்லாம் திகட்டாமலும் தர்றது இவங்க திறமையைத்தான் காட்டுது.

இன்னொரு முக்கியமான விஷயம்.. டெல்லியில இருந்து ‘டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி’ங்கிற அமைப்பு இவங்ககிட்ட 16 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து, பெண்கள் மத்தியில நோய்க்கான விழிப்பு உணர்வு ஏற்படுத்துறது தொடர்பான நிகழ்ச்சிகளை தயாரிக்கச் சொல்லி, ஒப்பந்தம் போட்டிருக்காங்களாம்!

நன்றி - அவள் விகடன்

அட...! உண்மையிலேயே ரொம்ப சூப்பரான விஷயம்தானே..!

ஏற்கனவே கம்யூனிட்டி ரேடியோன்னு ஒரு திட்டத்த அமல்படுத்த அரசு ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது இது போன்ற விஷயங்களில், துறை சார்ந்த மக்கள்ஸ் களத்தில இறங்குனா நல்லாத்தானே போகும்....!

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பாராட்டப்படவேண்டிய பெருமையான செய்திக்கு நன்றி.

said...

பாராட்டப்படவேண்டிய விஷயம். செய்திக்கு நன்றி.

said...

இப்போ படிப்பு மட்டுமே சொல்லிக்கொடுக்காமா மற்ற திறமைகளையும் ஊக்குவிக்கின்ற இது போன்ற கல்லூரிகளுக்கும், மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

//பாராட்டப்படவேண்டிய விஷயம். செய்திக்கு நன்றி.
//

Ditto :)