மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், கால்நடை சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து மனித, கால்நடைகளின் உறுப்புகள், ரத்தம் மற்றும் திரவங்கள், அவற்றைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட பஞ்சு உள்ளிட்ட திடப் பொருள்கள், காலாவதியான மருந்துகள், உடைந்த ஆய்வகக் கண்ணாடிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கழிவுகளாக நாள்தோறும் வெளியேறுகின்றன.
மாநிலம் முழுவதும் இவ்வாறு வெளியே றும் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் கிலோ என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை அழிக்கும் முறைகள் வரையறுக் கப்பட்டுள்ளன. மனித உள்ளுறுப்புகளின் கழிவுகள், திசுப் பகுதிகள், கால்நடை மருத்து வமனைகளில் வெளியாகும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு பொசுக்க வேண்டும் அல்லது ஆழ மான குழியில் புதைக்க வேண்டும்.
நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள், மனித மற்றும் விலங்கு செல்களின் "கல்சர்' பொருள்கள் போன்றவற்றை "ஆட்டோ கிளேவ் அல்லது மைக்ரோ வேவ்' ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.
கூர்மையான ஊசிகள், கத்திகள், கண்ணாடி- கண்ணாடித் துகள்கள் ஆகியவற்றை உடைத்துத் தூளாக்கி அழிக்க வேண்டும்.காலக்கெடு முடிந்த மருந்துப் பொருள்களை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆழமான குழியில் இட்டு அழிக்க வேண்டும்.
ரத்தத்தால் மாசுபட்ட பொருள்கள், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள் துடைக்கப்பட்ட பஞ்சு, காரத்துணி, அழுக்கான துணிகள், படுக்கைகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆட்டோ கிளேவ், மைக்ரோ வேவ் ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.
இவை மட்டுமல்ல... மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் திரவக் கழிவுகளையும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு கழிவுநீர்க் கால்வாய்களில் வெளியேற்ற வேண்டும் என்றும் விதிகள் கடுமையாக எச்சரிக்கின்றன.
ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட முறையில் வெப்ப உலையில் இட்டு அழிக்கும்போது ஏற்படும் சாம்பலையும் நகராட்சிக் கழிவு உரக்கிடங்கில் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைகள் நீள்கின்றன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன?
எல்லா நகரங்களிலும் குப்பைக் கழிவுகளுக்கிடையே பஞ்சுகளையும், சிரிஞ்சுகளையும் மிகச்சாதாரணமாகப் பார்க்க முடிகிறதே எப்படி? அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனைக் கூடப் பணியாளர்கள் போன்றோருக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை அளிக்கவும், கண்காணிப்புக் குழுக் களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
இவை எதுவும் மாநிலத்தின் எந்த மூலையிலும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதனைப் பார்க்கும் போது அப்போதுமட்டும் "மூக்கைப் பொத்திக் கொண்டு' செல்லும் நம்மவர்களின் மன நிலை மாற வேண்டும்.சுருங்கச் சொல்லவேண்டுமானால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை !
நன்றி - தினமணி
மருத்துவ கழிவுகள் - சங்கடங்களை எதிர்நோக்கிய சங்கதி !
# ஆயில்யன்
Labels: விளம்பரம்
Subscribe to:
Post Comments (Atom)
5 பேர் கமெண்டிட்டாங்க:
நல்ல பதிவு ஆயில்யன்...
அப்படியே நம்ம பதிவுக்கும் ஒரு எட்டு வந்துட்டு போயிருங்க.. நம்மளப் பத்தி ஒரு பதிவு போட்ருக்கேன்..
http://jeyakumar-srinivasan.blogspot.com/2007_12_01_archive.html
ஜெயக்குமார்
அதிகம் பேசப்படாத ஆனால் அவசியம் பேசப்பட வேண்டிய அம்சம்.
செய்தி வெளியிட்ட தினமணிக்கும், மறுபிரசுரம் செய்த கடகத்திற்கும் நன்றி.
தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் மேலாண்மை குறித்து சமூக ஆய்வு நடத்த மக்கள் சட்டம் வலைப்பூ சார்பில் முயற்சி நடைபெறுகிறது.
பங்கேற்க/ஒத்துழைக்க விரும்புவர்கள் makkal.sattam@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
Awareness is good. But action is better.
ஆயில்யன் ,
நல்லப்பதிவு, அனேகமாக போன ஆண்டும் யாரோ ஒரு பதிவு இது சம்பந்தமாகப்போட்டார்கள், அப்போதும் நான் பின்னூட்டம் போட்டேன் :-))
அப்போ சொன்னதையே இப்போவும் சொல்றேன், இந்த பிரச்சினையை அரசு தீவிரமாகவே கவனிப்பதில்லை. செங்கல்பட்டு அருகே ஒரு பெரிய ஏரியே மருத்துவக்கழிவுகள் கொட்டும் இடமாக இருக்கிறது. செங்கல்ப்பட்டு பைபாசில் போகும் போதே அந்த ஏரி தெரியும்.அந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும், ஆனால் அதை குடிக்க பயன்படுத்தமுடியாது.
இதன் காரணமாக தான் வீரானத்தில் இருந்து தண்ணீர் சென்னைக்கு எடுத்து வரப்படுகிறது.
இன்னும் நாம் சாதரண வீட்டுக்குப்பைகளை கூட சரியான முறையில் அப்புறப்படுத்த வில்லை. சும்மா ஒரு இடத்தில் கொட்டி வைத்து ஊரை நாறடிக்கிறோம்.பெருங்குடி/துரைப்பாக்கம் பக்கம் போனத்தெரியும் சென்னையின் குப்பைகளை.
//வவ்வால் said...
ஆயில்யன் ,
நல்லப்பதிவு, அனேகமாக போன ஆண்டும் யாரோ ஒரு பதிவு இது சம்பந்தமாகப்போட்டார்கள், அப்போதும் நான் பின்னூட்டம் போட்டேன் :-))
//
ஆமாங்க வவ்வால்! பதிவின்னு இல்ல இது சம்பந்தமா ஆறு மாசத்துக்கு ஒரு தடவை எதாவது கட்டுரை தினமணியில வந்துக்கிட்டுத்தான் இருக்கு :)))
ஆனா பலனில்லை :((((
//பெருங்குடி/துரைப்பாக்கம் பக்கம் போனத்தெரியும் சென்னையின் குப்பைகளை.
//
ஏன் அவ்ளோ தூரம் :)
அதான் ஒவ்வொருத்தவங்க வீட்டு வாசல் பக்கத்துலயே கிடக்குதே!
ஆனா பாவம்தான் பெருங்குடி வசிக்கிறவங்க!
Post a Comment