அர்த்தமுள்ள இந்து மதத்திலிருந்து - குசும்பனுக்கு..!


தண்ணீரில் வாழுகின்ற மீன் அதைவிட உயர்ந்த பாலிலே வாழும்படி கெஞ்சினாலும் வாழாது வாழ முடியாது

அது போல யார் என்ன சொன்னாலும் செய்தாலும் கும்மியையோ அல்லது மொக்கையோடும், சில சமயங்களில் தீர்க்க சீரியஸ் சிந்தனைகளோடும் வாழுங்கள்..!

நம்முடைய உள்ளங்கையிலே எவ்வளவு சாதம் அடங்குமோ அதன் பேர்தான் கவளம்.

ந்ம்முடைய இருகைகளாலும் முடிந்தால் காலாலும் கூட எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு நல்ல சத்தம் வரும் வகையில் கீ போர்டில் அடிப்பதுதான் கும்மி அந்த எண்ணங்களோ உங்களது வாழ்க்கையை விரிவுபடுத்தும்!

இதுவே நமது கடமை என்று ஒரு சேவையை செய்!

இதுவே நமது கடமை என்று கலாய்த்தலும் கும்மிகளையும் தொடருங்கள்!

ஊருக்கு செய்யாவிட்டாலும் உன் குடும்பத்துக்கு செய் அதன் பெயரும் சுயதர்மம் தான்!

ஊரையே கலாய்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, உங்களின் பா.குடும்பத்துக்குள் கலாய்த்துக்கொள்ளுங்கள் அதன் பெயரும் சுய கலாய்த்தல்தான்!

வில்லங்கங்கள் இல்லாத சேவையில் ஒரு நிம்மதி இருக்கிறது

வில்லங்கமான கலாய்த்தல்களிலும் கும்மிகளிலும் ஒரு நிம்மதி உனக்கு இருக்கத்தான் செய்யும்!

மிகமுக்கியமான சேவை தாய்க்கு மகன் செய்யும் சேவையாகும்

மிக மிக முக்கியமான நபர்களின் கலாய்த்தல்கள் சேவையே தமிழ்மணத்துக்கு நீ செய்யும் பெரிய சேவையாகும் !

பொதுச்சேவை என்ற பெயரில் அரசியலில் ஈடுபடுவதனால் நாட்டுக்கு அதனால் பயன் இருந்தாலொழிய, எந்த தலைவனையும் நம்பி இறங்காதே.!

பொழுதுப்போக்கு என்ற பெயரில் ஓவர் டைம் போட்டு கலாய்த்தலில் ஈடுபடுவதால்,அரபிக்கும் ஆபிசுக்கும் பயன் இல்லையே என்றாலும் கூட, எந்த சூழ்நிலையிலும் ஓவர் டைம்மை விட்டுக்கொடுக்காதே!

வாழ்த்துக்களுடன்....!!!


நன்றி - அர்த்தமுள்ள இந்துமதம் (போல்டாக சொன்னது!)

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஜூப்பரு... தல'க்கு வாழ்த்து மழையா பொழியுது...நாங்க எல்லாம் மணிக்கு ஒரு வாழ்த்து காலை 6:00 டொ மாலை 6:00 வரை போடபோறோம்...

said...

ரொம்ப நன்றி நண்பா!

said...

வாழ்த்துக்கள்!

said...

குசும்பன் மாம்ஸ்க்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

அன்புடன் ரசிகன்..

said...

குசும்பனுக்கு நெரெய இடத்துலே வாழ்த்து சொல்லிட்டேன்