தெரிந்து கொள்வோம் இவரைப்பற்றி - ஆண்டாள் தாமோதரன்

1967ல் குழந்தைகளின் நலனின் மீது ஆர்வம் கொண்டு சமூக சேவை உலகில் காலடி எடுத்து வைத்தவருக்கு மனதுக்கு திருப்தியளிக்கும் பணியாக இந்த சேவை அமைந்திருப்பதில் மகிழ்ச்சிதான்!

சாதரணமாக குழந்தைகள் அதுவும் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படும் சிறார்கள் அனுபவிக்கும் பணி சார்ந்த இடத்து பயங்கரங்கள் மிகக்கொடுமையானது! அதுவும் பெண் சிறார்களுக்கோ சொல்ல இயாலத அளவு உள்ளன!

அதுபோன்ற பயங்கரங்களிலிருந்து சிறார்களை மீட்டு, அவர்களது இளமை பருவம் வீணாகமலும்,வாழ்க்கையின் அடிப்படையை அமைந்துகொள்ளும் வயதில் அதற்கேற்ற வகையில் கல்வி கற்கவும் வேண்டிய ஏற்பாடுகளை செய்வதுதான் இந்த அரசு சார தனியார் சேவை அமைப்பின் முக்கிய நோக்கம்!

கொஞ்சம் நீங்களே யோசிச்சு பாருங்க! ஒரு பையனோ அல்லது பெண்ணோ சிக்னல்ல நின்னு பிச்சை எடுத்து சுமாரா 100 வரைக்கும் சம்பாதிக்கும் போது,அந்த சிறார்கள பெத்தவங்க ஒ.கே.ஒ.கே போய்க்கோடா ராசான்னுதான் சொல்வாங்க! அவங்களை புடிச்சு சம்மதிக்க வைச்சு, அது மட்டுமில்லாம அந்த சிறார்களை ஒரு காலகட்டத்துக்கு பிறகு அந்த தொழில்லேர்ந்து விடுவிச்சு,படிக்க வைக்கிறதுங்கறது ரொம்ப்ப்ப் ரொம்ப பெரிய கஷ்டமான விஷயம்தான்! அதை செஞ்சுக்கிட்டிருக்கற இந்த மனிதர்களை பற்றி நாம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

சுனாமி பாதிப்பின் போதும் தங்களது சேவை அமைப்பின் மூலம் பல பணிகளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளிலும் நிறைவேற்றியுள்ளனர்!

பெரும்பாலும் குழந்தை தொழிலாளர்கள்,அடிமைத்தொழிலில் சிறார்கள் ஈடுபடுத்தும் செயல், போன்றவற்றிலிருந்தும்.சிறார்களை சட்டப்படி விடுவித்து, சிறார்கள் தங்களின் இளம் வயது வாழ்க்கையை மிக்க மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும் அத்தனை செயல்களிலும் ஈடுபடுவதில் மிக்க மகிழ்ச்சியும், மிக்க மனத்திருப்தியோடு செய்துவருவதாக கூறும் இவரின் பணி குறித்து, உசிலம்பட்டியில் மீண்டு, வாழும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை சொல்லும் பெருமிதத்தோடு...!

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உண்மையிலேயே பாராட்டக்கூடிய தொண்டுதாங்க...
அதை எல்லாருக்கும் தெரியப்படுத்திய உங்களுக்கு ஒரு "சபாஷ்"
நல்லா சொல்லியிருக்கிங்க.. தொடருங்க..

said...

நன்றி நண்பா...!

said...

பாராட்டுகள் - சமூக ஆர்வலர்கள் செய்யும் தொண்டு வெளியில் தெரியாமலேயே போய் விடுகிறது. தொடர்க

said...

நல்லதொரு அறிமுகம். அறிமுகம் செய்யப்பட்டவரின் தொண்டு பாராட்டபட வேண்டிய ஒன்று.

said...

Nice muyarchi.

பாராட்டுகள்! தொடருங்க..

said...

மகத்தான பணிகள் செய்கிற இவரைப் பற்றி அறிமுகப் படுத்திய உங்களுக்குப் பாரட்டுகள்...

said...

vaazhthukkal.thodarka.
mullaiamuthan