இரவல் கவிதைகள் - வாரமலர்

என்னையுனக்கு
பிடித்ததாலல்ல...
எனக்குப்பிடித்தவன்
நீயென்பதால் தான்
காத்திருக்கிறேன்!

உன்னிடம்
என்னப்பிடித்ததென
சொல்லதெரியவில்லை
பிடிக்காததோ
எதுவுமேயில்லை!

காதல்
புரவியிலேறியவனே..
வாழ்விலேன்
துறவியென
திரிகிறாய்...?

இதுவோர்
காதற்மயக்கமாயிருக்கலாம்...
விளக்கிச்சொல்லவுமா
தயக்கமாயிருப்பது?

என் மனசுக்குள்
நீயோர்
தினுசாயிருப்பது
காதல் எனக்கு
புதுசென்பதால்தான்!

ஜன்னலில்
காதல் மின்னலாய்
வந்தாலும்,
வாழ்க்கை தென்றலாய்
வாவென்றைழ்க்கிறேன்..!

நீ
காதலானாலும்
கானலானலும்
உன் மேலான
என் காதலை
உன்னாலும் கூட
கையகப்படுத்த இயலாது...!



நன்றி - வாரமலர்!

ஏலேலங்கடி - 11

டேஞ்சரஸ் ஃபெலோஸ்!

நாங்கெல்லாம்....?!


1.இப்படித்தான் பிரியப்பட்டு கேக்குறாரு!


2 இப்படித்தான் இருக்கும் போல!


3.இப்படியே டிசைன் பண்ணிப்புடலாம்ல!


4.இது மாதிரியே செஞ்சுப்புடுங்க!


5.இம்புட்டு அழகா இருக்கும்!


6.இப்படித்தான் செஞ்சு முடிக்கப்போறோம்!


7.இப்ப ஸ்டார் பண்ணிட்டோம்! சீக்கிரத்துல முடிச்சுடுவோம்!


8.இம்புட்டு காசு செலவு ஆகிடுச்சுப்பா! :-(


9.இனி ஃபினிஷிங் மட்டும்தான் பாக்கி! மேட்டர் ஓவரூ!



10 அடங்கொய்யாலுங்களே நான் கேட்டது இதைத்தாண்டா!!!

நம்பிக்கை!

சங்கிலி தொடர் போன்ற நிகழ்வுகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன!

எங்கு தொடங்கும் என்பதில் இருக்கும் ஒரு தீர்க்கம் எங்கு முடியும் என்பதில்லை !

எப்படி முடியும் என்பதிலும் கூட இல்லை!

நம்பிக்கை !

நம்பிக்கை ஒன்றே வாழ்க்கையினை கடத்துகிறது! நாம் கடக்கிறோம் தினங்களை!

நாளை இந்த உலகினை ஆளப்போவது ராஜாக்களா அல்லது எந்திரங்களா யாருக்கும் தெரியவில்லை!

எத்தனையோ கேள்விகளினை எழுப்பி விடைப்பெற்றுக்கொண்டாலும்?

விடை காணமுடியாத விசயங்கள் உண்டு இங்கு பல!

எதிர் நோக்கும் சிரிப்புக்களில் எத்தனை சிரிப்பு நல்ல சிரிப்பு எத்தனை சிரிப்பு வில்ல சிரிப்பு என்று கூட தெரியாத சாதாரண மனிதர்களாய் நாம் அன்றும் இன்றும் என்றும்!

எண்ணங்கள் நாம் எப்படி வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ள கூடியவையாக இருக்கின்றன எதற்கும் ஒரு கட்டுப்பாடு இல்லை! கட்டுபாட்டில் இருக்கும் அனைத்தும் கூட நம் கட்டுக்குள் வெற்றிகளை கொண்டு வந்து தருமா என்றும் கூற முடியாது!

நன்றாக யோசித்து செயல்படுத்தி வந்த திட்டங்களினை ஏதோ ஒரு புள்ளியில் தடம் மாறும் போது, டக்கென்று யோசித்த திட்டத்தினை அப்படியே மாற்றி கொள்வதும், சில சமயங்களில் தடம் மாறிச்செல்வது ரொம்ப அருகிய நேரங்களில் தடம்புரண்டு வீழ்வதும் கூட நம் வாழ்க்கையின் ஆப்ஷன்கள்தான்! - எல்லாமே ஆப்ஷன்களினோடே இருக்கின்றன!

ஒவ்வொரு முறை தடம் மாறும்போதும் சரி திட்டங்கள் மாறும் போதும் சரி நமக்குள்ளேயே சமாதானங்களை சொல்லி மனதினை தேத்திக்கொண்டு மேற்கொண்டு பயணத்தினை தொடர்கிறோம்!

எதிர் வரும் பயணம் மட்டுமே நாம் எதிர்பார்ப்பதனை விட அதிக அளவு இன்பத்தினை கொண்டு வந்து சேர்த்துவிடாது!

அப்பொழுது மீண்டும் ஒரு தடுமாற்றம்! அந்த நேரத்தில் மீண்டும் கணம் பின்னோக்கி யோசிக்க வைக்கும்!



Soooooooo நான் கொஞ்சம் பின்னாடி போய் நிதானமா யோசிச்சிட்டு வர்றேன்!



நீங்க இங்கேயே கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்கப்பு!


டிஸ்கி:- டைட்டில் வைச்சு ஒரு டெஸ்டிங்க்! :)

விடியும் பூமி அமைதிக்காக விடியவே...!

வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையும் - மழை
பாடும் பாடல்களும்
ஓர் மௌனம் ஓர் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் - கவி
கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ (வெள்ளைப்பூக்கள்)

எங்கு சிறு குழந்தை - தன்
கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் - போர்
ஓய்ந்து சாய்ந்திடுமோ - அங்கு
கூவாயோ வெள்ளை குயிலே






செப்டம்பர் - 21 - உலக சமாதான நாள்!

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்!

டிஸ்கி:- ஆரம்ப கல்வியில் வாத்தியார்களிடம்,அடிபட்டு, உதைப்பட்டு, ரணப்பட்டு போகும் ஒரு மாணவன் தன் எண்ணங்களை ஒரு பேப்பரில் குவித்து தன் கண்ணீர்லால் நனைத்து எழுதிய காவியம்! (என்னது ஏதோ பாட்டு மாதிரி இருக்கா???? நோஓஓஓஓஓ!)


என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்
அவர் என் பேரைத் தினம் கூறும் வாத்தி அல்லவா
அவர் பரீட்சை எனக்கு வைத்த ஆப்பல்லவா?

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்

என்றும் ஜீரோவான என் எக்ஸாம் பேசாதய்யா!
பெயிலான சப்ஜெக்ட் மீண்டும் மலராதய்யா!??
கனவான வாழ்க்கை மீண்டும் தொடராதய்யா?
கனவான வாழ்க்கை மீண்டும் தொடராதய்யா?
எம்டியான என் வாழ்வு திரும்பாதய்யா!!!

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்!

எந்தன் புதுத்தெருவின் ப்ரெண்டாக வந்தானம்மா
தோளோடு தோளாக வளர்ந்தோம்மா
காலெஜ் என்னும் பஸ் ஏறி அவன் பறந்தானம்மா
பி.இயோ பி.இயாக அவன் கலந்தான்ம்மா

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்

இன்று எனக்காக கூட படிக்க துணையில்லையா
என் ஒளி வீசும் கல்வி கேட்க வாத்தியில்லையே!
இந்த வாழ்வு இறைவன் தந்த வரமல்லவா?
கல்வியோடு கல்வியாக வளர்வேன் அய்யா!

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்!

**********************

கீழ் டிஸ்கி:- யாருய்யா இது? இம்புட்டு அருமையா மொக்கை போட்டிருக்கேன்ன்னு பார்க்க ஆசைப்படறவங்களுக்காக என்னோட போட்டோவும் இத்துடன் இணைத்துள்ளேன்ன்ன்ன்ன்!

ஏலேலங்கடி - 10

சிரித்து இருங்கள்;

சிறப்பாய் இருங்கள்!

நகைக்கும் அழகில்;

நகை தேவைப்படா!


டிஸ்கி:- தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்கும் போது பதிவுகளில் இருக்கும் படங்களினை உரிமையாளரின் அனுமதிக்கு பிறகுதான் பயன்படுத்த முடியுமெனில் இப்படியான பதிவுகளின் தாக்கம் அதிகரிக்க கூடும்!

அல்லது மாத மாத பிஐடி போட்டிகள் இனி வாரக்கணக்கில் வளப்படும்!

காலங்களோடு கடந்து போனவை!



மனிதம் மறந்து போனது;

மனிதம் மரத்து போனது;

மனிதம் மரித்துப்போனது!

செப்டம்பர் 16 - ஓசோன்! ?

பலூன் போன்ற உலகம்

அதில் பாதுகாப்பாய் நாம்

உழன்றுகொண்டும் உருண்டுகொண்டும்!

இன்னும் நிறைய உபத்திரவம் கொடுத்துக்கொண்டும்,

இயற்கை பலூனில் ஏகப்பட்ட இடங்களை

பஞ்சராக்கிக்கொண்டும்...!

சுழன்று கொண்டிருக்கிறோம்!






செப்டம்பர் - 16 - உலக ஓசோன் தினம்!

நம்ம கவர்ன்மெண்ட் இன்னா சொல்லுதுன்னா, ரகசிய மொழியில சொல்லியிருக்காங்க நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

மங்களூர் சிவாவுக்கு திருமண வாழ்த்துக்களோடு, ஓணம் ஸ்பெஷலும்...!

இன்று இல்லறம் ஏற்கும், நட்பில் சகோதரனாய் மங்களூர் சிவா மற்றும் பூங்கொடிக்கு திருமண வாழ்த்துக்களுடன்...!

தமிழ் மறையில் சில திருமண வாழ்த்து குறள்களுடன்...!

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

நன்றி:- யாழ்



(பய புள்ளைக்கு என்னா குஷி பாருங்களேன்!!!)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இது ஓணம் ஸ்பெஷல்!

ஏலேலங்கடி - 9

என் இனமடா நீ...!

குன்னக்குடி வைத்தியநாதன்!

நாளும் கிழமைகளின் அதிகாலை வேளைகளில் குடும்பமே உக்கார்ந்து பார்த்த நிகழ்ச்சி என்றால் அது குன்னக்குடி வைத்தியநாதனின் அன்றும் இன்றும் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும்!

அனேகமாக இது முதன் முதலில் தூர்தர்ஷனின் கண்டுபிடிப்பாய் அமைந்திருந்தது என்றே நினைக்கிறேன்!

அதன் பின்னர் வந்த தனியார் தொலைக்காட்சிகள் அதே முறையினை பின்பற்றி சில காலங்கள் தொடர்ந்தன!

ஒவ்வொரு பாடலும் ஆரம்பித்து முடிக்கும் வரை குன்னக்குடியின் முகப்பாவங்களையும் இசையோடு சேர்த்து ரசிக்கவைக்கும்! (அதுவும் சக கலைஞர்களோடு இசைத்துக்கொண்டே பேசுவதும் ஒரு ஸ்பெஷல்!)



>>>>>>>

1994ஆம் ஆண்டு திருத்தணி ஆடி தெப்பதிருவிழாவில்,தேவார இன்னிசை கச்சேரி செய்ய வந்திருந்த, தருமபுரம் சுவாமிநாதன் மற்றும் திருத்தணி சுவாமிநாதன் அவர்களின் கச்சேரியில் என் உறவுகளின் பரிந்துரையில் எனக்கும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது! ஆனால் ஒரு கண்டிஷனோடு! - வேட்டி அணிந்து வரவேண்டும்!

பட் தெப்பத்தில் உக்கார்ந்து சுத்தி வரமுடியும் என்ற ஆவலில் ஒ.கே சொல்லி ஒரு கையில் அந்த கச்சேரிக்கு வேண்டிய ஒரு முக்கியமான விசயத்தையும் மறுகையில் இடுப்பில் வேட்டியினையும் பிடித்துக்கொண்டு,குளத்தில் இருந்து தெப்பத்திற்கு தாவும்போது நிலைதடுமாறி விழ போன சுழலில் ஒரு கரம் பற்றினேன்! நெற்றி நிறைய குங்கும விபூதியோடு சிரித்த முகத்துடன் தம்பி மெதுவா வாப்பா? என்ற வார்த்தைகள் மட்டும் ஒலிக்க யார் அவுரு?(அத்தனை சின்னவயசுல எப்படி தெரியும்!) என்று தெரியாமலே போய் கச்சேரி நலமாக நடத்தி திரும்ப வீடு வந்து சேரும்போதுதான் சொன்னார்கள் உறவினர்கள் பய வேட்டியை நழுவ வுடறதுக்கு முன்னாடி குன்னக்குடி வந்து காப்பாத்திட்டாரு! (அதற்கு முந்திய கச்சேரியினை அவர் முடித்து செல்லும் நேரத்தில் நடந்த விசயங்க்ள் இவை!)

தெய்வீக பாடல்களை தந்து,அவைகளை கேட்டாலே பக்தியில் திளைக்கும் அளவுக்கு இசையால் இறைவனை காட்டிய வயலின் வித்தகரே உம் புகழ் நிலை பெற்று நிற்கும்! இறை அருளால் உலகின் இறுதி நாள் வரை!

தொடர்புடைய குறிப்பு செய்தி:- தேவார கச்சேரியில் எனக்கு அளிக்கப்பட்ட பணி சுருதி பெட்டியினை எடுத்து வந்து வைத்துக்கொண்டு உக்கார்ந்து பின் பத்திரமாக திரும்ப எடுத்துவரவேண்டிய ரொம்ப ஈசியான பணிதான்!

கனவு தொழிற்சாலையில்....?

1970களின் தொடக்கத்திலிருந்தே, நாடக உலக நடிகர்களின் சினிமாபிரவேசத்தின் மாயையை கண்டு அதை பற்றி, அவர்கள் வழியிலேயே தாமும் எப்படியாவது ஒரு பெரிய நடிகராக வேண்டுமென்ற விருப்பத்தில் (வெறி!?) ஊர் விட்டு உறவு விட்டு புது உலகு காணவந்து இன்னும் கூட தங்களின் கனவுகள் முழுதும் நிறைவேறாமல்,ஆனாலும் சினிமா உலகினை விட்டுச்செல்ல மனமில்லாமல் அதிலேயே உழன்று கொண்டிருப்பவர்கள் ஏராளம்!

காத்திருக்கும் வாய்ப்பு கிடைத்தால் சாதாரண மனிதர்களுக்கே கூட சில மணி நேர காத்திருப்புக்களுக்கு பிறகு, ஒரு இரட்டை நிலை எண்ணங்கள் தான் தோன்றும்! விட்டு விட்டு சென்றுவிடலாமா? விட்டு சென்ற சில நிமிடங்களில் நாம் எதற்காக காத்திருந்தோமோ அது நடைப்பெற்றால் பாதிப்பு நமக்குத்தானே? சரி இத்தனை நேரம் காத்திருந்து விட்டோம் இன்னும் கொஞ்சம் நேரத்துக்கு பொறுத்திருந்து பார்ப்போம் இதுதான் பொதுவாக எல்லோருடைய எண்ணங்களிலும் தோன்றும் இது பொதுவானது!

இதைப்போன்ற சூழ்நிலையே இப்படி சினிமா உலகில் விருப்பமுடன் நுழைந்து,ஆடம்பர வாழ்க்கையில் அதிசயித்து போன மனிதர்களுக்கு கண்டிப்பாய் அத்தனை எளிதாய் வெளியேறி வந்துவிட மனம் நினைக்காது! இருக்காது!

இந்த நடிகரும் கூட கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன்பே இளமையில் ஆரம்பித்த தன் நடிப்பு பணியினை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்! ஆனால் எந்தவொரு பெரும் பலன் இன்றி...!

இவர்களை நினைத்து கவலைப்படுகின்ற அதே நேரத்தில் இவர்கள் தம் எண்ணங்களின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை நிஜமாக அதிசயிக்க வைக்கிறது!

இவற்றையெல்லாம் விட, படங்களில் சின்ன சின்ன கேரக்டர்கள் தான் என்றாலும் கூட, இவர்கள்தான் சரியாக பொருந்துவார்கள் வேறு ஆட்கள் வேண்டாம்! என்று தொடர்ந்து, இவர்களுக்கு ஆதரவு தந்துக்கொண்டிருக்கும், முன்னேறிய நடிகர்கள் மற்றும் டைரக்டர்கள் பல மடங்கு ஆச்சர்யத்தை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்!





கழுத்தில் துண்டுடன், அண்ணன் ராமசாமி வாழ்க!
கொட்டகை கட்டிய கோமான் ராமசாமி வாழ்க! என்ற வசனத்தில் ஆரம்பித்து, பொட்டீ வர்லைங்க என்று கூறும் வரையிலான 10 நிமிட நடிப்பிலும்,



அவுட் ஆப் போகஸில், ஆனால் எல்லோரையும் டக்கென்று சிரிக்கவைக்கும் மிகக்குறுகிய நகைச்சுவை காட்சியில்,வழி தேடிக்கொண்டிருக்கும் நபராய்

படித்த காலத்தில்...1

வார விடுமுறை வருகிறதென்றாலே, ஒரு பரபரப்பு வந்துவிடும்!ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளோடு தங்களின் தேடுதல் வேட்டைகளினை தொடங்கிவிடுவார்கள்

என்னாங்கடா...! அப்படி தேடப்போறாங்கன்னு ஆச்சர்யமா நீங்க பார்த்தீங்கன்னா ஒண்ணுமில்ல! :-) அது அந்தந்த பருவத்தில் வரும் சின்ன சின்ன கிறுக்குத்தனமான செய்கைகள்தான்!

நண்பர்களின் முதுகில் நல்லா பொளேருன்னு அல்லது பளீர்ன்னு அடிக்கும்ப்போதே அவனுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டுவிடும் சரி திங்கள் வரும்போது டிபரெண்டா யோசிச்சுட்டு வரணும்ன்னு!

அந்த டைம்ல ரொம்ப டிபரெண்டா மேட்டர்கள் எடுக்கணும்ன்னா தூர்தர்ஷனா விட்ட வேற வழியே கிடையாது!



அதுல வர்ற சித்ரகார் சித்ரமால இல்லாங்காட்டி சனிக்கிழமை சாயங்கால இந்திப்படம் இப்படி முழிச்சு விழிச்சு பார்த்து எதுனா மேட்டர் தேத்தணும்!

அப்படி ஒரு நாள் நான் தேத்திய மேட்டர்தான் இந்த பாட்டுல வர்ற மேனரிசம்! (இந்த மாதிரி நீங்களும் கிறுக்குபயபுள்ளதனமா எதுனா செஞ்சு இருப்பீங்கள்ல!)

எங்க வீடு இருந்த நாஞ்சில் நாட்டிலிருந்து கிளம்பி அபி அப்பா படுத்துகிடந்த பிரசவ ஆஸ்பத்திரி கிராஸ் பண்ணி நேஷனல் ஸ்கூல் வர்ற வரைக்கும் இந்த மேனரிசத்தை பண்ணிக்கிட்டே வந்தா போற வர்றவங்க என்ன சொல்லுவாஙக்ன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்!

தந்தையர் தினம்!

இன்று தந்தையர் தினம்!

நாம் சமூகத்தின் வழி பயணத்தில் நம் எண்ணங்களினையெத்த சக பயணிகளை கண்டிப்பாக காணக்கூடும். அவர்தம் எண்ணங்களின் வெளிப்பாடு,அட..! நாம வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை அழகா சொல்லியிருக்காரேன்னு நினைக்கவைக்கும்! அப்படி ஒரு பதிவிலிருந்து..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



அன்புள்ள அப்பாவுக்கு,

இப்போ முதல் முறையா உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுறேன், எப்படி ஆரம்பிக்குறதுனே தெரியல

நேர்லயும் சரி, போன்லையும் சரி, பேசும்போது கூட அப்பான்னு ஒரு பயம் கலந்த மரியாதை சின்ன வயசில இருந்தே இருந்திருக்கு (அதுக்கு எத்தனையோ காரணம்),ஆனா எந்த ஒரு சமயத்திலயும் அப்பா இப்படியேனு வெறுப்பு வந்ததில்ல.

உங்களோட கோபம் தான் எல்லோரையும் உங்ககிட்ட இருந்து அன்னியோநியப்படுத்தியிருக்கு அப்படீன்றது எவ்வளவு உண்மையோ, அத்தனை தூரம் என்னை உங்க கிட்ட நெருக்கமா சேர்த்திருக்குன்றது உண்மை.

உங்க இத்தனை வருஷ வாழ்க்கையில உங்களோட அதிகபட்ச சுயநலமான விருப்பம்னு இருந்ததுனா , சாப்பிடும்போது குடிக்க தண்ணி இருக்கணும்னு நீங்க எதிர்பாக்குறதாத்தான் இருந்திருக்கும், அந்த அளவுக்கு வேற எந்த விஷயத்தை பத்தியும் யோசிக்காம எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

அம்மா படவேண்டிய கஷ்டங்கள் அத்தனையும் பட்டது போதும், இனியாவது எந்த வகையிலையும் அம்மா கஷ்டபட்டிரக்கூடதுனு உங்க எண்ணம் யாருக்கு புரியுதோ இல்லையோ , ஏன் அம்மாவுக்கே புரியுதோ இல்லையோ எனக்கு என்னைக்கோ புரிஞ்சிருக்கு. மத்தவுங்களுக்கு புரியலையேனு வருத்தப்படாதீங்க, ஆனா ஏன் புரியலைனு ஒரு நொடி யோசிச்சுபாருங்கனு தான் கேட்டுக்குறேன். உங்க கோபமும் , பேச்சும் அவுங்களை அதன் பக்கம் திசை திருப்பியிருது அப்பா, அப்படி இருக்கையில, உங்க நோக்கத்தை அவுங்க புரிஞ்சிகனும்னு நாம எதிர்பாக்குறது சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்க.

வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை

ஏலேலங்கடி - 8

பூக்கள் நீட்டும் கைகளுக்கு

மத்தியில்,

புன்னகையாய் நீ என்னை நினைத்து....!

பெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லுங்களேன்!


ரொம்ப நாளா மனசுக்குள்ள கேட்டுக்கிட்டிருந்த கேள்வி!

எத்தனையோ நண்பர்களுக்கு,உடன் பணிபுரியும் சகாக்களுக்கு, நாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி இனிப்பு உண்டு மகிழ்ந்ததுண்டு! ஆனால் நாம் நம் பெற்றோர்களின் திருமண நாள் அவ்வளவாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோமா?

சகோதர சகோதரிகளின் கல்யாண நாளினை கூட நாம் வெகு எளிதாக வாழ்த்து சொல்லி கொண்டாடும் மனநிலை பெற்றிருந்தாலும் கூட,

அம்மா அப்பாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து சொல்லும் அளவுக்கு மனநிலையுடன் வளர்க்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் எனக்கு தெரிந்த மட்டில் கொஞ்சம் குறைவுதான்!

இத்தனைக்கும் அது ஒன்றும் அவ்ளோ பெரிய தவறான விசயமும் கூட இல்லை! ஆனாலும் கூட ஏதோ மனதளவில் ஒரு கூச்சம்!

சொல்லுங்களேன்! எத்தனை வருடங்களாக நீங்கள் உங்கள் தாய் தந்தைக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லி வருகிறீர்கள்?

இது வரை எப்படியோ!? இனிய வரும் காலங்களில் பெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துகளினை சொல்லி மகிழ்ந்திருங்கள்! -

சின்ன சின்ன அன்பில்,வாழ்த்துக்களில்,மகிழ்ச்சிகளில் தானே, இனிய வாழ்க்கை இருக்கிறது!

எப்பிடிடீ இருக்க ராசா?


அம்மா!!! என் அம்மாவை பற்றிய கர்வம் எனக்கு கொஞ்சம் அதிகம் தான்.

நான் அழகின் மதிப்பீட்டாய் அம்மாவைதான் வைத்திருக்கிறேன்.

அம்மா கூடவே இருந்த போது அதன் அருமை தெரியாமலே போய் விட்டது.

ஆனால் முதன் முதலாய் அம்மாவை விட்டு அபுதாபி வந்த போது வந்த முதல் நாள் போன் செய்த போது அம்மா "எப்புடுடீ இருக்க??" என கேட்ட போது உடைந்து அழுதேன்.+

ப்ச் எங்கடா,

நான் உன்னை ரொம்ப அடிச்சுட்டேன் சின்ன பிள்ளையிலே இருந்து, தவிர உனக்கு எப்பவும் ஒரு கோவம் என்கிட்டே இருக்கும்.

உன்னைவிட நான் தம்பி மேல பாசமா இருப்பதா நீயே ஒரு கற்பனை பண்ணிகிட்டே...எனக்கு எல்லாரும் ஒன்னுதான்....நான் செத்தா ஒழிஞ்சாடா ராட்சசின்னு நெனச்சிப்பியோ என்னவோ...

தவிர தனியா சம்பாதிச்சு பெரிய மனுஷனா ஆக போற...இந்த அம்மால்லாம் கண்ண்ணுக்கு தெரியுமோ என்னவோ" அம்மா பேசியதை நினைத்து அபுதாபிக்கு வந்து அம்மாவிடம் பேசி உடைந்த பின் தனியாக உட்காந்து இதையெல்லாம் யோசித்து மீண்டும் உடைந்தேன்.

>>>>>>>>>>>

இந்த வரிகளினை அபி அப்பாவின் “அம்மா என்னும் அழகி!!! ” வாசிக்கும் போதே எனக்கு என் அம்மாவும்,என் அம்மாவின் அம்மா நினைவுகளை தவிர வேறு ஒன்றுமே தோன்றவில்லை!

சற்று நேரம் செயலற்று இருந்தேன் என்றே சொல்லவேண்டும்!


அபி அப்பா...!

உங்கள் உணர்வுகளில் அவ்வப்போது எங்களுடன் கொஞ்சம் உரையாடிச்செல்லுங்கள்!

எல்லாரும் ஓடியாங்க - கூகுள் குரோம் ரீலிசு ஆகிடுச்சு!


ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டு இருந்த கூகுள் குரோம் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரீலிசு ஆகிடுச்சு!

ரீலிசுன்னு வார்த்தையை கேட்டாலே கை காலெல்லா உதறிப்போகும் முதல் ஷோவுக்கே டிக்கெட் கிடைக்கணுமே ராசானு ஃபீல் ஆகிப்போவேன்! அப்படித்தான் இப்பவும் ஆச்சு!

இளா அண்ணாச்சி சொல்ற மாதிரி யுனிகோட் டைப்பிங்க்ல கொஞ்சம் பிரச்சனை இருக்கு! தமிழ் யுனிகோட் சரியா டிஸ்பிளே ஆகலை :-(

அதைபத்தி கூட நாம கவலைப்பட தேவையில்ல நம்ம தகடூர் கோபி அண்ணா இருக்காங்க! சரி செஞ்சுடுவாங்க அப்புறம் NHM குரூப்புக்கும் அப்பப்பா இது மாதிரியான சோதனைகள் வந்தாத்தானே இன்னும் நிறைய விசயங்கள் நமக்கு புதுசு புதுசா கிடைக்கும்! :-)

சரி எல்லாம் ஆண்டவன் விட்ட வழின்னு டவுன்லோடி பார்த்தா அட்டகாசமா வந்துச்சு தமிழ்மணம்!

ஒரு கிளிக்கினாலே டப்புன்னு பக்கத்துக்கு பக்கம் பாயுது பார்ப்போம்! என்ன மாதிரியான பிரச்சனைகள் இனி வரும்னு! ( அதுவும் கூட ஒரு 24 மணி நேரத்துக்குள்ளயே தெரிஞ்சுபுடும் பயமக்க அலசி, ஆராய்ஞ்சு,துவைச்சு காயவைச்சிடமாட்டாங்களா?)


இணையதளங்களை பார்த்துட்டு விண்டோவை குளோஸ் பண்ணிட்டு திரும்ப ஒபன் பண்றப்ப,அப்படியே அழகா பழைய ஹிஸ்டரி தம்ப்நெயில் (thumbnail) காமிக்குதுங்க சூப்பரா இருக்கு!

முதல் நாள் ரீலிசுலேயே பார்க்கணும்ன்னு ஃபீல் பண்றவங்க இப்பவே இங்க போய் பார்த்துடுங்க!

இல்ல எனக்கு இப்பவேணாம் பிறகு எல்லாரும் ரிவ்யூ பண்ணி அனுப்பட்டும் அப்பாலிக்கா பாத்துக்கிறேன்னு இருக்கறவங்க அப்படியே இருந்துக்கோங்க!

GOOGLE Chrome ரீலிசு எப்ப பாஸ்?


ஒரு 24 மணி நேரத்துக்கு முந்தித்தான் கூகுள்லேர்ந்து ஒரு கலக்கலான ஒரு வெப் ப்ரவுசர் ரீலிஸ் ஆகப்போகுதுன்னு ஒரு இன்போ!

செவ்வாய்கிழமை ரீலிசு அப்படின்னு சொல்லி முடிக்கல, அவனவன் இப்படி இருக்குமா? அப்படி இருக்குமா? இண்ட்ரட்ந்நெட் எக்ஸ்புளோரர் விட நல்ல யூசர் ப்ரெண்ட்லியா இருக்குமா? இல்ல ஸ்பீடா இருக்கும்ன்னு சொல்லிக்கிட்டிருக்கற பயர் பாக்ஸ்க்கு ஆப்பு வைக்குமான்னு கொஸ்டீ மேல கொஸ்டீனா போட்டு தாக்கிகிட்டிருக்காங்க!

சரி நாமளும் சும்மா ஒரு கொஸ்ட்டீன் போட்டு வைச்சுட்டுப்போவலாம்ன்னு வந்தேன்!

ஒரு வேளை நிஜம்மாவே கலக்கலான ஒரு பிரவுசர் கூகுள் க்ரோம் கூகுள் நிறுவனம் இன்னும் 24 மணி நேரத்துக்குள்ள ரீலிஸ்பண்ணினா அதை நாம தமிழுக்காய் பயன்படுத்துவதில் பிரச்சனை வருமா?

இல்ல ஏற்கனவே எந்த பிரச்சனையானாலும் சரி ஒரு கை பார்த்துடலாம்ன்னு ரெடியாத்தான் இருக்கோமா ?

Google Chrome
ரீலிசு ஆகற வரைக்கும் இந்த லிங்க் ஒர்க் ஆகாதாம் ரீலிசு ஆகிட்டா இந்த லிங்குக்கு நோ ரெஸ்டாம்!

அம்புட்டுத்தான்!

வாருங்கள் கம்யூனிஸ்ட்களை வழியனுப்பிவிட்டு, தமிழ் மக்களிடம் கேள்வி கேட்போம். - கலைஞர்

இதுவரை 14 முறை கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் நேற்று திடீரென விலகிக்கொள்கிறோம், இனிமேல் கூட்டணி வேண்டாம் என்று அறிவித்துள்ளார். அவர்களது விலகிக்கொள்கிறோம் கடுதாசியை கீழே கொடுத்துள்ளேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

விலகிக்கொள்கிறோம்!

அந்த காலத்தில் எப்படியோ அறிமுகமானது தி.மு.க.! ஏதோ இருக்கின்ற ஆட்களை வைத்து கட்சி நடத்தி வந்தாலும் இதுவரையில் உருப்படியாக எந்த பதவியும் பெற்றதில்லை. இனிமேலும் பெறுவதற்கான வாய்ப்புக்களும் எம்மிடம் எதுவும் இல்லை. எங்களின் கூட்டணியையும் மதித்து எங்களுக்கு ஓட்டுக்கள் அளித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக கூட்டணி போய்க்கொண்டிருக்கையிலேயே திடீர் என விலகுகிறேன் இணைகிறேன் என அறிவிப்பது. உடனே எனது அமைச்சர்கள் நலம் விரும்பிகள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள், நீங்களும் எங்களை விட்டு போய்விட்டால் எப்படி என்பது போன்ற கொஞ்சல்கள், கெஞ்சல்கள் செய்வது, பின்பு நீங்கள் எல்லாம் கடைசி வரை கெஞ்சி கேட்டதால், எங்களுக்கு சொல்லிக்கொள்ளுமளவுக் எதிர் கூட்டணியில் சீட்கள் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் மீண்டும் பழைய கூட்டணியில் இணைகிறோம் என்பது. ஏன் இதெல்லாம்?

இப்டியே எல்லாரும் போறேன்னு சொல்றதும், எங்க நலம் விரும்பிகள் நீங்க எல்லாம் தொடர்ந்து கூட்டணியில இருக்கணும்ன்னு கூப்பிடுறதும் தொடர் கதையா போயிடுச்சு.

நீங்க உண்மையிலேயே இனிமே கூட்டணிக்கு வரமாட்டோம்ன்னு நினைச்சா நீங்க இனிமே கட்சியை மூடிகிட்டு இருக்கப் போறீங்கன்னு அர்த்தம். எதையும் பேச மாட்டீங்க, போராட்டம் கிடையாதுன்னுத்தான் அர்த்தம். ஏன்னா நீங்க பேசுறது போராடறதுலதானே இருந்துதானே உங்கள் அரசியல் வளர்ந்து வருது. அப்டித்தான் இருக்கப் போறீங்கன்னா ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க, இனிமே வராதீங்க!

உங்களையெல்லாம் கூட்டணிக்கு வாங்க வாங்கன்னு கூப்பிடவே கூடாதுங்கிறதுதான் என் கொள்கை. மத்த நலம் விரும்பிகள் கூப்பிடுறாங்கன்னு எல்லாம் வந்துடாதீங்க. உங்க கொள்கை இனிமே கூட்டணி கூடாதுங்கிறது தானே? அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் கட்சி ஆபிஸ் அட்ரஸ் தர்றேன். தொடர்புல இருங்க.லைப்ரரிக்கு அடிக்கடி வந்துட்டுப்போங்க! ஆனா இனிமே நீங்க அரசியல் நடத்தவே வேண்டாம். நாடு ஒன்னும் நல்லாயிடாது! போங்க போயிட்டு வாங்க. நன்றி. இதுவரை நீங்க தமிழ் மக்களுக்கு செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றிங்க. வணக்கம். எங்கள் முகவரி: அண்ணா அறிவாலயம் தேனாம்பேட்டை சென்னை!

கூட்டணி வைக்க ஆதாயம் எதுவுமே இல்லைன்னு சொல்லிட்டு போறவங்களை எதுக்கு இத்தனை பேரு திரும்ப கூட்டணிக்கு வாங்கன்னு கூப்பிடனும் ?

தேர்தல் நடக்குது பலர் போட்டி போடறாங்க அதுல ஒருத்தரு நான் வாபஸ் வாங்கிக்கிறேன் என்னால இனி பிரச்சாரம் செய்யமுடியாது பிரச்சாரம் செய்றதுக்கு என் கையில காசு இல்ல உக்காந்துட்டாருன்னா என்ன செய்ய முடியும்? சரிங்க அப்டி ஒரமா உக்காந்துக்கோங்கன்னு தானே சொல்ல முடியும்! இல்ல, இல்ல, நீங்க கட்டாயம் பிரச்சாரம் செய்துதான் ஆகணும் அதுக்கு கழகம் பணம் கொடுக்கும்ன்னு விரட்ட,மிரட்டவா முடியும்?

எனக்கு என்னமோ கம்யூனிஸ்ட்கள் நிஜமான காரணம் எதையும் சொல்லாம வெறுமனே இனிமேல் போட்டி போட சக்தி இல்லைன்னு சொல்லியிருக்காங்களோன்னுதான் தோணுது! எப்டியிருந்தாலும் தேர்தல்ல போட்டி போட முடியாதுன்னு சொல்றவங்களப்போய் நாம எதுக்குங்க மல்லு கட்டணும்? காரணமே தெளிவா சொல்லாத கம்யூனிஸ்ட்களுக்கிட்ட எதுக்கு போயி நாம கெஞ்சணும்?

நேற்று இரவு இந்த செய்தியினை படித்துவிட்டு நானும் தம்பி ஸ்டாலினும் வாக் உரையாடலில் பேசிக்கொண்டிருந்தோம்! இப்படி அவர்கள் அறிவிப்பதும் நாம் கெஞ்சுவதும், திரும்ப வருவதுமான போக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது இதை நாம் கட்டுபடுத்தி ஒரேடியாக அனுப்பிவிட ஏதாவது செய்தாகவேண்டும் என்று தம்பி ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்!

இது கட்டாயம் நாளை தமிழ் மக்களின் ஆர்வத்தோடு பார்க்கும் வகையில் பேப்பர்களில் சூடான தலைப்புக்களில் இடம் பிடிக்கும் என்றும் தம்பி ஸ்டாலின்னுக்கு நான் கூறினேன்! அதே போல் இன்று தமிழ் பத்திரிக்கைகளின் முகப்பில் சூடான தலைப்பாகிவிட்டது! இப்படி காரணமில்லாமல் கூட்டணியில் இருந்து விலகிச்செல்வதும் இனி வரமாட்டோம் என்று சொன்னால் நம் கழகத்தில் யாரும் கெஞ்சகூடாது என்பதுதான் என்னுடைய இன்றைய உடன்பிறப்பே கடிதத்தின் முக்கியமான கருத்து!

தமிழ் மக்களுக்கு :

சூடான தலைப்புக்களின் வரும் பேப்பர்களினை எந்த அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

பேப்பர்களை வெறித்து நின்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை வைத்தா அல்லது விற்பனையாகாத பேப்பர்களின் எண்ணிக்கையினை வைத்தா?

ஏன் பெரும்பாலும் இரண்டு வரிகளில் மட்டுமே தலைப்புகள் சூடான வால் போஸ்டர்களில் இடம்பிடிக்கின்றது?

இப்படி சூடான தலைப்புக்களில் வரும் பேப்பர்களினை மட்டுமே நீங்கள் வாங்கிப்படித்துக்கொண்டிருந்தால், அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா?

இதை பற்றி ஏன் நீங்கள் சிந்திக்க மறுக்கிறீர்கள்?

டிஸ்கி:-1

இது சிங்கை, அண்ணன் ஜோசப்பின் இந்த பதிவினை போலவே அமைந்தது தற்செயல் அல்ல!

டிஸ்கி:-2

கொஞ்சம் சீரியசாக காமெடி பண்ணி எல்லாரையும் சிரிக்கவைக்கமுடியுமான்னு, ஒரு டென்ஷனான நேரத்தில் தீர்மானிச்சதால இந்த மொக்கைய படிச்சுட்டு நீங்க டென்ஷன் ஆனா நான் சிரிச்சுக்கிட்டே இருப்பேனாம் !

டிஸ்கி:-3

இந்த பதிவுதான் என் வலையுலக வரலாற்றில், நகைச்சுவை/நையாண்டி பிரிவில் நானாக வகைப்படுத்திய முதல் பதிவு!

நான் என்ன செய்யணும் சொல்லுங்க பாஸ்?

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நம் மனதில் ஒரு பதிவை உண்டாக்குகிறது! (பதிவு என்றால் போஸ்ட்டும் எடுத்துக்கலாம்,பாதிப்புன்னும் எடுத்துக்கலாம் - பாதிப்புத்தான் பதிவு வடிவில பலரை பாதிக்கும்ன்னு சொன்னா அதுவும் ரைட்டு!)

இந்த பாதிப்புக்களின் கூட்டுப்பலனே குணம் என்று சொல்லப்படுக்கின்ற தனிமனிதனின் சக்தி!

ஒவ்வொரு மனிதனும் தன் குணத்தினை தானே உருவாக்கிக்கொள்கிறான்!

நற்குணங்கள் தீய குணங்கள் என்பதும் கூட ஒவ்வொரு மனிதனின் எண்ணத்திலிருந்து பெறப்படுகின்றது!

(வாரத்தின் முதல் நாள் அப்படிங்கறதால ஒரு சின்ன சிந்தனைக்குறிப்பு!)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இன்னிக்கு ரமலான் புனித மாதத்தின் முதல் நாள்!




இன்னிக்கு எனக்கும் கூட ரொம்ப முக்கியமான நாள் - ஆமாம் நானும் திரும்பவும் புக்கை தூக்கிக்கிட்டு படிக்க கிளம்பிட்டேன்! பட் கொஞ்சம் கஷ்டமான படிப்புன்னு கொஞ்சம் பேரு சொல்றாங்க! அட இதெல்லாம் ஒரு மேட்டரா சும்மா ச்சூசூன்னு ஓட்டிட்டு வந்துடுவப்பான்னு சில பேர் சொல்றாங்க! ஆனா வழக்கம்போலவே படிக்கணும்ன்னு நினைக்கும்போதுதான் பயம்மா இருக்கு! அதுவும் பரீட்சை வேற உண்டாமாம்! ( பரீட்சை இல்லாத படிப்பு எதாவது இருக்கா?)


இணைய நண்பர்கள் இந்த PMP (PROJECT MANAGEMENT PROFESSIONAL ) சம்பந்தமாக உங்களுக்கு தெரிஞ்ச தகவல்களை ரகசியமாக என்னோட மெயில்லுக்கு அனுப்புனா நான் கொஞ்சம் படிச்சு தேறிடுவேன்! kadagam80 அட் ஜிமெயில்.காம்

ஹெல்பு பண்ணனும்!

என் நண்பர்கள் மத்தியில சில விசயங்களை சொன்னா அதை கொஞ்சமாச்சும் முறையா கடைப்பிடிக்கணும் இல்லாட்டி நண்பர்கள் நாக்கை புடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்பாங்க! இப்போதைக்கு இணைய நண்பர்கள் மட்டும்தான் நொம்ப நெருங்கி நிக்கிறாங்க! (பாருங்க பெரியபாண்டி என்னாப்பா எழுதிக்கிட்டிருக்கன்னு கேக்கறாரு?) ஸோ!அவுங்களுக்கிட்ட மேட்டரை ஷேர் பண்ணிக்கிட்டாச்சு! ( அப்பப்ப நீங்களும் கூட கேள்வி கேட்கலாம்? )