நம்பிக்கை!

சங்கிலி தொடர் போன்ற நிகழ்வுகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன!

எங்கு தொடங்கும் என்பதில் இருக்கும் ஒரு தீர்க்கம் எங்கு முடியும் என்பதில்லை !

எப்படி முடியும் என்பதிலும் கூட இல்லை!

நம்பிக்கை !

நம்பிக்கை ஒன்றே வாழ்க்கையினை கடத்துகிறது! நாம் கடக்கிறோம் தினங்களை!

நாளை இந்த உலகினை ஆளப்போவது ராஜாக்களா அல்லது எந்திரங்களா யாருக்கும் தெரியவில்லை!

எத்தனையோ கேள்விகளினை எழுப்பி விடைப்பெற்றுக்கொண்டாலும்?

விடை காணமுடியாத விசயங்கள் உண்டு இங்கு பல!

எதிர் நோக்கும் சிரிப்புக்களில் எத்தனை சிரிப்பு நல்ல சிரிப்பு எத்தனை சிரிப்பு வில்ல சிரிப்பு என்று கூட தெரியாத சாதாரண மனிதர்களாய் நாம் அன்றும் இன்றும் என்றும்!

எண்ணங்கள் நாம் எப்படி வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ள கூடியவையாக இருக்கின்றன எதற்கும் ஒரு கட்டுப்பாடு இல்லை! கட்டுபாட்டில் இருக்கும் அனைத்தும் கூட நம் கட்டுக்குள் வெற்றிகளை கொண்டு வந்து தருமா என்றும் கூற முடியாது!

நன்றாக யோசித்து செயல்படுத்தி வந்த திட்டங்களினை ஏதோ ஒரு புள்ளியில் தடம் மாறும் போது, டக்கென்று யோசித்த திட்டத்தினை அப்படியே மாற்றி கொள்வதும், சில சமயங்களில் தடம் மாறிச்செல்வது ரொம்ப அருகிய நேரங்களில் தடம்புரண்டு வீழ்வதும் கூட நம் வாழ்க்கையின் ஆப்ஷன்கள்தான்! - எல்லாமே ஆப்ஷன்களினோடே இருக்கின்றன!

ஒவ்வொரு முறை தடம் மாறும்போதும் சரி திட்டங்கள் மாறும் போதும் சரி நமக்குள்ளேயே சமாதானங்களை சொல்லி மனதினை தேத்திக்கொண்டு மேற்கொண்டு பயணத்தினை தொடர்கிறோம்!

எதிர் வரும் பயணம் மட்டுமே நாம் எதிர்பார்ப்பதனை விட அதிக அளவு இன்பத்தினை கொண்டு வந்து சேர்த்துவிடாது!

அப்பொழுது மீண்டும் ஒரு தடுமாற்றம்! அந்த நேரத்தில் மீண்டும் கணம் பின்னோக்கி யோசிக்க வைக்கும்!



Soooooooo நான் கொஞ்சம் பின்னாடி போய் நிதானமா யோசிச்சிட்டு வர்றேன்!



நீங்க இங்கேயே கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்கப்பு!


டிஸ்கி:- டைட்டில் வைச்சு ஒரு டெஸ்டிங்க்! :)

19 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சிறப்பாக இருக்கிறது...

said...

:-)))...

டைட்டில் நம்பிக்கைன்னு வச்சிட்டு, லேபிள்ல 1ம் இல்லையா!!!

நிதானமா யோசிச்சாலும், சீக்கிரமா திரும்பி வந்துடுவீங்க என்ற நம்பிக்கையோடு...

said...

romba nalla nambikkai. ;-)

said...

:))

//நம்பிக்கை ஒன்றே வாழ்க்கையினை கடத்துகிறது! நாம் கடக்கிறோம் தினங்களை!//

நிஜம் தான்... :)

said...

//Soooooooo நான் கொஞ்சம் பின்னாடி போய் நிதானமா யோசிச்சிட்டு வர்றேன்!//

பொறுமையா யோசிச்சிட்டு வாங்க...

said...

நல்லாயிருக்கு அண்ணா..!! :)))))

said...

"///அப்பொழுது மீண்டும் ஒரு தடுமாற்றம்! அந்த நேரத்தில் மீண்டும் கணம் பின்னோக்கி யோசிக்க வைக்கும்!"///

அண்ணன் ஆயிலுக்கு தடுமாற்றமா?

இன்னாயிது ஜோக்காகீது?

said...

முன்னோக்கி யோசிச்சா தீர்வு கிடைக்குமா? இல்ல பின்னோக்கி யோசிச்சா தீர்வு கிடைக்குமா?

Anonymous said...

//எதிர் நோக்கும் சிரிப்புக்களில் எத்தனை சிரிப்பு நல்ல சிரிப்பு எத்தனை சிரிப்பு வில்ல சிரிப்பு என்று கூட தெரியாத சாதாரண மனிதர்களாய் நாம் அன்றும் இன்றும் என்றும்!//


தெரியாவிட்டாலும் நம்பிக்கையுடனே இருக்கிறோம்! பதிலுக்கு சிரிக்கிறோம்

Anonymous said...

//Soooooooo நான் கொஞ்சம் பின்னாடி போய் நிதானமா யோசிச்சிட்டு வர்றேன்!//
எவ்வளவு பின்னாடி போக போறீங்க அண்ணா ?

said...

நம்பிக்கையுடன் நானும்.. ஆனால் பின்னால் போகனுமா? எதிர் நோக்கி வெல்லலாம் வாருங்கள்

said...

//அப்பொழுது மீண்டும் ஒரு தடுமாற்றம்! அந்த நேரத்தில் மீண்டும் கணம் பின்னோக்கி யோசிக்க வைக்கும்!//

சிலசமயங்களில் உண்மைதான்!
ஆனால், அடுத்து என்ன என்னன்னு நம்ம மனசு உடனடியா திங்க் பண்ணும் பாருங்க..வாழ்க்கையப் புதிர்களின் ரகசியங்கள் அங்குதான் இருக்கோன்னு ஆச்சரியப் பட வைக்கும்!! :-)

Anonymous said...

Very good......

said...

நம்பிக்கை ஒன்றே வாழ்க்கையினை கடத்துகிறது! நாம் கடக்கிறோம் தினங்களை!

ஒவ்வொரு முறை தடம் மாறும்போதும் சரி திட்டங்கள் மாறும் போதும் சரி நமக்குள்ளேயே சமாதானங்களை சொல்லி மனதினை தேத்திக்கொண்டு மேற்கொண்டு பயணத்தினை தொடர்கிறோம்!
//
/
/

சமீப காலங்களில் இன்றுவரை என் மனநிலை இதுவாகவே இருக்கிறது
கொஞ்சம் வேதனை ஒன்றும் செய்ய முடியவில்லை!

Anonymous said...

ஆழ்ந்த கருத்தொன்று இங்கும் யோசனைக்கு அடி போடுகின்றது..

நல்ல பதிவு சகோதரா

said...

நாட்கள் மட்டுமே நகர்கிறது ஆயில்யன் அண்ணன்...

said...

யோசிக்க வச்சுப்பிட்டாங்களே...!!!

said...

நம்பிக்கைதானே வாழ்க்கைன்னு சொல்லிக்கிறாய்ங்க...:)

said...

Well written.. (ரெண்டாவது தடவை படிக்கீறேன். ;-))