எல்லாரும் ஓடியாங்க - கூகுள் குரோம் ரீலிசு ஆகிடுச்சு!


ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டு இருந்த கூகுள் குரோம் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரீலிசு ஆகிடுச்சு!

ரீலிசுன்னு வார்த்தையை கேட்டாலே கை காலெல்லா உதறிப்போகும் முதல் ஷோவுக்கே டிக்கெட் கிடைக்கணுமே ராசானு ஃபீல் ஆகிப்போவேன்! அப்படித்தான் இப்பவும் ஆச்சு!

இளா அண்ணாச்சி சொல்ற மாதிரி யுனிகோட் டைப்பிங்க்ல கொஞ்சம் பிரச்சனை இருக்கு! தமிழ் யுனிகோட் சரியா டிஸ்பிளே ஆகலை :-(

அதைபத்தி கூட நாம கவலைப்பட தேவையில்ல நம்ம தகடூர் கோபி அண்ணா இருக்காங்க! சரி செஞ்சுடுவாங்க அப்புறம் NHM குரூப்புக்கும் அப்பப்பா இது மாதிரியான சோதனைகள் வந்தாத்தானே இன்னும் நிறைய விசயங்கள் நமக்கு புதுசு புதுசா கிடைக்கும்! :-)

சரி எல்லாம் ஆண்டவன் விட்ட வழின்னு டவுன்லோடி பார்த்தா அட்டகாசமா வந்துச்சு தமிழ்மணம்!

ஒரு கிளிக்கினாலே டப்புன்னு பக்கத்துக்கு பக்கம் பாயுது பார்ப்போம்! என்ன மாதிரியான பிரச்சனைகள் இனி வரும்னு! ( அதுவும் கூட ஒரு 24 மணி நேரத்துக்குள்ளயே தெரிஞ்சுபுடும் பயமக்க அலசி, ஆராய்ஞ்சு,துவைச்சு காயவைச்சிடமாட்டாங்களா?)


இணையதளங்களை பார்த்துட்டு விண்டோவை குளோஸ் பண்ணிட்டு திரும்ப ஒபன் பண்றப்ப,அப்படியே அழகா பழைய ஹிஸ்டரி தம்ப்நெயில் (thumbnail) காமிக்குதுங்க சூப்பரா இருக்கு!

முதல் நாள் ரீலிசுலேயே பார்க்கணும்ன்னு ஃபீல் பண்றவங்க இப்பவே இங்க போய் பார்த்துடுங்க!

இல்ல எனக்கு இப்பவேணாம் பிறகு எல்லாரும் ரிவ்யூ பண்ணி அனுப்பட்டும் அப்பாலிக்கா பாத்துக்கிறேன்னு இருக்கறவங்க அப்படியே இருந்துக்கோங்க!

10 பேர் கமெண்டிட்டாங்க:

said...

pinnootam try panni parthen :((

kummi adika லாயக்கில்லை

said...

அதுக்காக இந்த நேரத்துலயா...:)

said...

\
ஒரு கிளிக்கினாலே டப்புன்னு பக்கத்துக்கு பக்கம் பாயுது பார்ப்போம்! என்ன மாதிரியான பிரச்சனைகள் இனி வரும்னு
\
ஆமா ஆமா...எகிறுது...:)

said...

\
அதுவும் கூட ஒரு 24 மணி நேரத்துக்குள்ளயே தெரிஞ்சுபுடும் பயமக்க அலசி, ஆராய்ஞ்சு,துவைச்சு காயவைச்சிடமாட்டாங்களா?)
\

இப்பவே இரண்டு பேரோட பதிவு படிச்சாச்சு !

நம்ம பயலுகளா...????

விடமாட்டாய்ங்கல்ல..:)

said...

try pannidde irukken. ;-)

said...

comparitively slow.

Firefox rocks :) lets wait if chrome gonna increase the speed

said...

பரவாயில்லை.

said...

இணையதளங்களை பார்த்துட்டு விண்டோவை குளோஸ் பண்ணிட்டு திரும்ப ஒபன் பண்றப்ப,அப்படியே அழகா பழைய ஹிஸ்டரி தம்ப்நெயில் (thumbnail) காமிக்குதுங்க சூப்பரா இருக்கு!
பிரச்சினை இங்க தானே ஆரம்பிக்குது

office ல வேலை செய்ய வேணாமா
(அட தமிழ்மணம் பார்க்கவேனமா )
பார்த்தது எல்லாத்தையும் thumbnail
வந்தா நம்ப பொழப்பு என்ன ஆவுறது

Anonymous said...

:)
கொஞ்ச நாள் போகட்டும்

said...

உடனே download பண்ணி பார்த்தேன்...
பார்க்கலாம் போக போக எப்படி இருக்குணு... :)