குன்னக்குடி வைத்தியநாதன்!

நாளும் கிழமைகளின் அதிகாலை வேளைகளில் குடும்பமே உக்கார்ந்து பார்த்த நிகழ்ச்சி என்றால் அது குன்னக்குடி வைத்தியநாதனின் அன்றும் இன்றும் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும்!

அனேகமாக இது முதன் முதலில் தூர்தர்ஷனின் கண்டுபிடிப்பாய் அமைந்திருந்தது என்றே நினைக்கிறேன்!

அதன் பின்னர் வந்த தனியார் தொலைக்காட்சிகள் அதே முறையினை பின்பற்றி சில காலங்கள் தொடர்ந்தன!

ஒவ்வொரு பாடலும் ஆரம்பித்து முடிக்கும் வரை குன்னக்குடியின் முகப்பாவங்களையும் இசையோடு சேர்த்து ரசிக்கவைக்கும்! (அதுவும் சக கலைஞர்களோடு இசைத்துக்கொண்டே பேசுவதும் ஒரு ஸ்பெஷல்!)>>>>>>>

1994ஆம் ஆண்டு திருத்தணி ஆடி தெப்பதிருவிழாவில்,தேவார இன்னிசை கச்சேரி செய்ய வந்திருந்த, தருமபுரம் சுவாமிநாதன் மற்றும் திருத்தணி சுவாமிநாதன் அவர்களின் கச்சேரியில் என் உறவுகளின் பரிந்துரையில் எனக்கும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது! ஆனால் ஒரு கண்டிஷனோடு! - வேட்டி அணிந்து வரவேண்டும்!

பட் தெப்பத்தில் உக்கார்ந்து சுத்தி வரமுடியும் என்ற ஆவலில் ஒ.கே சொல்லி ஒரு கையில் அந்த கச்சேரிக்கு வேண்டிய ஒரு முக்கியமான விசயத்தையும் மறுகையில் இடுப்பில் வேட்டியினையும் பிடித்துக்கொண்டு,குளத்தில் இருந்து தெப்பத்திற்கு தாவும்போது நிலைதடுமாறி விழ போன சுழலில் ஒரு கரம் பற்றினேன்! நெற்றி நிறைய குங்கும விபூதியோடு சிரித்த முகத்துடன் தம்பி மெதுவா வாப்பா? என்ற வார்த்தைகள் மட்டும் ஒலிக்க யார் அவுரு?(அத்தனை சின்னவயசுல எப்படி தெரியும்!) என்று தெரியாமலே போய் கச்சேரி நலமாக நடத்தி திரும்ப வீடு வந்து சேரும்போதுதான் சொன்னார்கள் உறவினர்கள் பய வேட்டியை நழுவ வுடறதுக்கு முன்னாடி குன்னக்குடி வந்து காப்பாத்திட்டாரு! (அதற்கு முந்திய கச்சேரியினை அவர் முடித்து செல்லும் நேரத்தில் நடந்த விசயங்க்ள் இவை!)

தெய்வீக பாடல்களை தந்து,அவைகளை கேட்டாலே பக்தியில் திளைக்கும் அளவுக்கு இசையால் இறைவனை காட்டிய வயலின் வித்தகரே உம் புகழ் நிலை பெற்று நிற்கும்! இறை அருளால் உலகின் இறுதி நாள் வரை!

தொடர்புடைய குறிப்பு செய்தி:- தேவார கச்சேரியில் எனக்கு அளிக்கப்பட்ட பணி சுருதி பெட்டியினை எடுத்து வந்து வைத்துக்கொண்டு உக்கார்ந்து பின் பத்திரமாக திரும்ப எடுத்துவரவேண்டிய ரொம்ப ஈசியான பணிதான்!

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:(

said...

ஈசியான பணி தான். :-)

said...

avar oru perum methai

said...

ஆயில்ஸ்ம் பெரிய மேதை தான் கானா..:)

said...

/தெய்வீக பாடல்களை தந்து,அவைகளை கேட்டாலே பக்தியில் திளைக்கும் அளவுக்கு இசையால் இறைவனை காட்டிய வயலின் வித்தகரே உம் புகழ் நிலை பெற்று நிற்கும்! இறை அருளால் உலகின் இறுதி நாள் வரை!/


வழிமொழிகிறேன்!

said...

உண்மையில் viloin என்றாலே குன்னக்குடி வைத்தியநாதன்அவர்களின் பெயர் தான் முதலில் ஞாபகம் வரும் ...

said...

அவரு அம்ருத வர்ஷினி வாசிச்சு ரெண்டு மூனு சொட்டு மழை வந்ததா கூட நினைவு