தந்தையர் தினம்!

இன்று தந்தையர் தினம்!

நாம் சமூகத்தின் வழி பயணத்தில் நம் எண்ணங்களினையெத்த சக பயணிகளை கண்டிப்பாக காணக்கூடும். அவர்தம் எண்ணங்களின் வெளிப்பாடு,அட..! நாம வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை அழகா சொல்லியிருக்காரேன்னு நினைக்கவைக்கும்! அப்படி ஒரு பதிவிலிருந்து..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>அன்புள்ள அப்பாவுக்கு,

இப்போ முதல் முறையா உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுறேன், எப்படி ஆரம்பிக்குறதுனே தெரியல

நேர்லயும் சரி, போன்லையும் சரி, பேசும்போது கூட அப்பான்னு ஒரு பயம் கலந்த மரியாதை சின்ன வயசில இருந்தே இருந்திருக்கு (அதுக்கு எத்தனையோ காரணம்),ஆனா எந்த ஒரு சமயத்திலயும் அப்பா இப்படியேனு வெறுப்பு வந்ததில்ல.

உங்களோட கோபம் தான் எல்லோரையும் உங்ககிட்ட இருந்து அன்னியோநியப்படுத்தியிருக்கு அப்படீன்றது எவ்வளவு உண்மையோ, அத்தனை தூரம் என்னை உங்க கிட்ட நெருக்கமா சேர்த்திருக்குன்றது உண்மை.

உங்க இத்தனை வருஷ வாழ்க்கையில உங்களோட அதிகபட்ச சுயநலமான விருப்பம்னு இருந்ததுனா , சாப்பிடும்போது குடிக்க தண்ணி இருக்கணும்னு நீங்க எதிர்பாக்குறதாத்தான் இருந்திருக்கும், அந்த அளவுக்கு வேற எந்த விஷயத்தை பத்தியும் யோசிக்காம எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

அம்மா படவேண்டிய கஷ்டங்கள் அத்தனையும் பட்டது போதும், இனியாவது எந்த வகையிலையும் அம்மா கஷ்டபட்டிரக்கூடதுனு உங்க எண்ணம் யாருக்கு புரியுதோ இல்லையோ , ஏன் அம்மாவுக்கே புரியுதோ இல்லையோ எனக்கு என்னைக்கோ புரிஞ்சிருக்கு. மத்தவுங்களுக்கு புரியலையேனு வருத்தப்படாதீங்க, ஆனா ஏன் புரியலைனு ஒரு நொடி யோசிச்சுபாருங்கனு தான் கேட்டுக்குறேன். உங்க கோபமும் , பேச்சும் அவுங்களை அதன் பக்கம் திசை திருப்பியிருது அப்பா, அப்படி இருக்கையில, உங்க நோக்கத்தை அவுங்க புரிஞ்சிகனும்னு நாம எதிர்பாக்குறது சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்க.

வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல நாளில் நல்ல சிந்தனை. அப்பாவின் அன்பின் பெருமை காலம் கடந்து தான் இன்னும் தெரியும்.

said...

அருமையான பதிவு.,
அப்பாவுக்கு கடிதம் எழுதுவதும் சரி,
அப்பா எழுதிய கடிதத்தை படிப்பதும் சரி, மிக இனிமையான விஷயம்!

said...

அது சரி, அவனவன் குடும்பத்த பிரிந்து நொந்து கிடக்கும் போது.,
அம்மாவ பத்தியும் அப்பாவ பத்தியும் பதிவ போட்டு வீட்டு நினைப்ப அதிகப்படுத்திட்டிங்க...

Anonymous said...

அழகு..

said...

Father's day today is for Austalia & Newzealand only, isntit?

In US, UK, Canada they normally celebrate Fathers day on 3rd Sunday of every June.

said...

எல்லாத் தந்தையர்களுக்கும் (நான் உள்பட), தந்தையர் தின வாழ்த்துக்கள்!