வாருங்கள் கம்யூனிஸ்ட்களை வழியனுப்பிவிட்டு, தமிழ் மக்களிடம் கேள்வி கேட்போம். - கலைஞர்

இதுவரை 14 முறை கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் நேற்று திடீரென விலகிக்கொள்கிறோம், இனிமேல் கூட்டணி வேண்டாம் என்று அறிவித்துள்ளார். அவர்களது விலகிக்கொள்கிறோம் கடுதாசியை கீழே கொடுத்துள்ளேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

விலகிக்கொள்கிறோம்!

அந்த காலத்தில் எப்படியோ அறிமுகமானது தி.மு.க.! ஏதோ இருக்கின்ற ஆட்களை வைத்து கட்சி நடத்தி வந்தாலும் இதுவரையில் உருப்படியாக எந்த பதவியும் பெற்றதில்லை. இனிமேலும் பெறுவதற்கான வாய்ப்புக்களும் எம்மிடம் எதுவும் இல்லை. எங்களின் கூட்டணியையும் மதித்து எங்களுக்கு ஓட்டுக்கள் அளித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக கூட்டணி போய்க்கொண்டிருக்கையிலேயே திடீர் என விலகுகிறேன் இணைகிறேன் என அறிவிப்பது. உடனே எனது அமைச்சர்கள் நலம் விரும்பிகள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள், நீங்களும் எங்களை விட்டு போய்விட்டால் எப்படி என்பது போன்ற கொஞ்சல்கள், கெஞ்சல்கள் செய்வது, பின்பு நீங்கள் எல்லாம் கடைசி வரை கெஞ்சி கேட்டதால், எங்களுக்கு சொல்லிக்கொள்ளுமளவுக் எதிர் கூட்டணியில் சீட்கள் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் மீண்டும் பழைய கூட்டணியில் இணைகிறோம் என்பது. ஏன் இதெல்லாம்?

இப்டியே எல்லாரும் போறேன்னு சொல்றதும், எங்க நலம் விரும்பிகள் நீங்க எல்லாம் தொடர்ந்து கூட்டணியில இருக்கணும்ன்னு கூப்பிடுறதும் தொடர் கதையா போயிடுச்சு.

நீங்க உண்மையிலேயே இனிமே கூட்டணிக்கு வரமாட்டோம்ன்னு நினைச்சா நீங்க இனிமே கட்சியை மூடிகிட்டு இருக்கப் போறீங்கன்னு அர்த்தம். எதையும் பேச மாட்டீங்க, போராட்டம் கிடையாதுன்னுத்தான் அர்த்தம். ஏன்னா நீங்க பேசுறது போராடறதுலதானே இருந்துதானே உங்கள் அரசியல் வளர்ந்து வருது. அப்டித்தான் இருக்கப் போறீங்கன்னா ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க, இனிமே வராதீங்க!

உங்களையெல்லாம் கூட்டணிக்கு வாங்க வாங்கன்னு கூப்பிடவே கூடாதுங்கிறதுதான் என் கொள்கை. மத்த நலம் விரும்பிகள் கூப்பிடுறாங்கன்னு எல்லாம் வந்துடாதீங்க. உங்க கொள்கை இனிமே கூட்டணி கூடாதுங்கிறது தானே? அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் கட்சி ஆபிஸ் அட்ரஸ் தர்றேன். தொடர்புல இருங்க.லைப்ரரிக்கு அடிக்கடி வந்துட்டுப்போங்க! ஆனா இனிமே நீங்க அரசியல் நடத்தவே வேண்டாம். நாடு ஒன்னும் நல்லாயிடாது! போங்க போயிட்டு வாங்க. நன்றி. இதுவரை நீங்க தமிழ் மக்களுக்கு செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றிங்க. வணக்கம். எங்கள் முகவரி: அண்ணா அறிவாலயம் தேனாம்பேட்டை சென்னை!

கூட்டணி வைக்க ஆதாயம் எதுவுமே இல்லைன்னு சொல்லிட்டு போறவங்களை எதுக்கு இத்தனை பேரு திரும்ப கூட்டணிக்கு வாங்கன்னு கூப்பிடனும் ?

தேர்தல் நடக்குது பலர் போட்டி போடறாங்க அதுல ஒருத்தரு நான் வாபஸ் வாங்கிக்கிறேன் என்னால இனி பிரச்சாரம் செய்யமுடியாது பிரச்சாரம் செய்றதுக்கு என் கையில காசு இல்ல உக்காந்துட்டாருன்னா என்ன செய்ய முடியும்? சரிங்க அப்டி ஒரமா உக்காந்துக்கோங்கன்னு தானே சொல்ல முடியும்! இல்ல, இல்ல, நீங்க கட்டாயம் பிரச்சாரம் செய்துதான் ஆகணும் அதுக்கு கழகம் பணம் கொடுக்கும்ன்னு விரட்ட,மிரட்டவா முடியும்?

எனக்கு என்னமோ கம்யூனிஸ்ட்கள் நிஜமான காரணம் எதையும் சொல்லாம வெறுமனே இனிமேல் போட்டி போட சக்தி இல்லைன்னு சொல்லியிருக்காங்களோன்னுதான் தோணுது! எப்டியிருந்தாலும் தேர்தல்ல போட்டி போட முடியாதுன்னு சொல்றவங்களப்போய் நாம எதுக்குங்க மல்லு கட்டணும்? காரணமே தெளிவா சொல்லாத கம்யூனிஸ்ட்களுக்கிட்ட எதுக்கு போயி நாம கெஞ்சணும்?

நேற்று இரவு இந்த செய்தியினை படித்துவிட்டு நானும் தம்பி ஸ்டாலினும் வாக் உரையாடலில் பேசிக்கொண்டிருந்தோம்! இப்படி அவர்கள் அறிவிப்பதும் நாம் கெஞ்சுவதும், திரும்ப வருவதுமான போக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது இதை நாம் கட்டுபடுத்தி ஒரேடியாக அனுப்பிவிட ஏதாவது செய்தாகவேண்டும் என்று தம்பி ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்!

இது கட்டாயம் நாளை தமிழ் மக்களின் ஆர்வத்தோடு பார்க்கும் வகையில் பேப்பர்களில் சூடான தலைப்புக்களில் இடம் பிடிக்கும் என்றும் தம்பி ஸ்டாலின்னுக்கு நான் கூறினேன்! அதே போல் இன்று தமிழ் பத்திரிக்கைகளின் முகப்பில் சூடான தலைப்பாகிவிட்டது! இப்படி காரணமில்லாமல் கூட்டணியில் இருந்து விலகிச்செல்வதும் இனி வரமாட்டோம் என்று சொன்னால் நம் கழகத்தில் யாரும் கெஞ்சகூடாது என்பதுதான் என்னுடைய இன்றைய உடன்பிறப்பே கடிதத்தின் முக்கியமான கருத்து!

தமிழ் மக்களுக்கு :

சூடான தலைப்புக்களின் வரும் பேப்பர்களினை எந்த அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

பேப்பர்களை வெறித்து நின்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை வைத்தா அல்லது விற்பனையாகாத பேப்பர்களின் எண்ணிக்கையினை வைத்தா?

ஏன் பெரும்பாலும் இரண்டு வரிகளில் மட்டுமே தலைப்புகள் சூடான வால் போஸ்டர்களில் இடம்பிடிக்கின்றது?

இப்படி சூடான தலைப்புக்களில் வரும் பேப்பர்களினை மட்டுமே நீங்கள் வாங்கிப்படித்துக்கொண்டிருந்தால், அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா?

இதை பற்றி ஏன் நீங்கள் சிந்திக்க மறுக்கிறீர்கள்?

டிஸ்கி:-1

இது சிங்கை, அண்ணன் ஜோசப்பின் இந்த பதிவினை போலவே அமைந்தது தற்செயல் அல்ல!

டிஸ்கி:-2

கொஞ்சம் சீரியசாக காமெடி பண்ணி எல்லாரையும் சிரிக்கவைக்கமுடியுமான்னு, ஒரு டென்ஷனான நேரத்தில் தீர்மானிச்சதால இந்த மொக்கைய படிச்சுட்டு நீங்க டென்ஷன் ஆனா நான் சிரிச்சுக்கிட்டே இருப்பேனாம் !

டிஸ்கி:-3

இந்த பதிவுதான் என் வலையுலக வரலாற்றில், நகைச்சுவை/நையாண்டி பிரிவில் நானாக வகைப்படுத்திய முதல் பதிவு!

11 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:))

ரொம்ப லேட்டா இருந்தாலும் டேஸ்ட்டா இருக்குது...

said...

:-)))...

அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாயாச்சா....

said...
This comment has been removed by the author.
said...

me the first!

said...

// டிஸ்கி:-1

இது சிங்கை, அண்ணன் ஜோசப்பின் இந்த பதிவினை போலவே அமைந்தது தற்செயல் அல்ல! //

சரிங்க!!!

said...

// டிஸ்கி:-2

கொஞ்சம் சீரியசாக காமெடி பண்ணி எல்லாரையும் சிரிக்கவைக்கமுடியுமான்னு, ஒரு டென்ஷனான நேரத்தில் தீர்மானிச்சதால இந்த மொக்கைய படிச்சுட்டு நீங்க டென்ஷன் ஆனா நான் சிரிச்சுக்கிட்டே இருப்பேனாம் ! //

இப்போ என்ன பண்ணணும்??? சீரியஸா காமெடின்னு சிரிச்சுட்டு டென்ஷனாகணுமா...இல்ல சீரியஸா டென்ஷனாயிட்டு, அப்புறம் காமெடின்னு சிரிக்கணுமா???

அது சரி..நீங்க டென்ஷனா இருக்கீங்களா இல்ல சிரிச்சுகிட்டு இருக்கீங்களா???

கடைசியா ஒரே ஒரு கேள்வி...இந்தப்பதிவு சீரியஸா, காமெடியா இல்ல மொக்கையா????

Anonymous said...

ஆரம்பிச்சிட்டாங்கடா :)

said...

:)))))))))

said...

தலைப்பில் உள்குத்து ஒண்ணும் இல்லையே ;)

said...

கலக்கல்

said...

:-))