எப்பிடிடீ இருக்க ராசா?

அம்மா!!! என் அம்மாவை பற்றிய கர்வம் எனக்கு கொஞ்சம் அதிகம் தான்.

நான் அழகின் மதிப்பீட்டாய் அம்மாவைதான் வைத்திருக்கிறேன்.

அம்மா கூடவே இருந்த போது அதன் அருமை தெரியாமலே போய் விட்டது.

ஆனால் முதன் முதலாய் அம்மாவை விட்டு அபுதாபி வந்த போது வந்த முதல் நாள் போன் செய்த போது அம்மா "எப்புடுடீ இருக்க??" என கேட்ட போது உடைந்து அழுதேன்.+

ப்ச் எங்கடா,

நான் உன்னை ரொம்ப அடிச்சுட்டேன் சின்ன பிள்ளையிலே இருந்து, தவிர உனக்கு எப்பவும் ஒரு கோவம் என்கிட்டே இருக்கும்.

உன்னைவிட நான் தம்பி மேல பாசமா இருப்பதா நீயே ஒரு கற்பனை பண்ணிகிட்டே...எனக்கு எல்லாரும் ஒன்னுதான்....நான் செத்தா ஒழிஞ்சாடா ராட்சசின்னு நெனச்சிப்பியோ என்னவோ...

தவிர தனியா சம்பாதிச்சு பெரிய மனுஷனா ஆக போற...இந்த அம்மால்லாம் கண்ண்ணுக்கு தெரியுமோ என்னவோ" அம்மா பேசியதை நினைத்து அபுதாபிக்கு வந்து அம்மாவிடம் பேசி உடைந்த பின் தனியாக உட்காந்து இதையெல்லாம் யோசித்து மீண்டும் உடைந்தேன்.

>>>>>>>>>>>

இந்த வரிகளினை அபி அப்பாவின் “அம்மா என்னும் அழகி!!! ” வாசிக்கும் போதே எனக்கு என் அம்மாவும்,என் அம்மாவின் அம்மா நினைவுகளை தவிர வேறு ஒன்றுமே தோன்றவில்லை!

சற்று நேரம் செயலற்று இருந்தேன் என்றே சொல்லவேண்டும்!

அபி அப்பா...!

உங்கள் உணர்வுகளில் அவ்வப்போது எங்களுடன் கொஞ்சம் உரையாடிச்செல்லுங்கள்!

29 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உண்மை தான் அம்மா கூட இருக்கும் போது அவங்க அருமை நமக்கு தெரியரது இல்லை..
ஏன் நானே கூட வீட்டுல இருக்கும் போது இல்லாத அட்டகாசம் எல்லாம் பண்ணுவேன்...
office வந்து அம்மா வை இப்படி அழவெக்குறோமேனு அழுது இருக்கேன்... அப்பாவுக்குனு ஒரு வட்டம் இருக்கு, எனக்குனு கூட ஒரு வட்டம் இருக்கு.. அதாவது நண்பர்கள் வட்டம்...
ஆனால் அம்மாவோட வட்டம் பெரும்பாலும் என்னையும் அப்பாவையும் சுத்தி தான் இருக்குனு நினைக்கும் போதே அழுகை தான் வரும்.. உங்க பதிவை படிச்சுட்டு கலங்கிய கண்ணோடு இந்த பின்னூட்டத்தை போடுறேன்.... :(

said...

அம்மா என்றால் என்ன? என்பதை உணர்ந்தது நான் பிரசவவலியால் துடித்த பொழுதுதான்.

உங்க பதிவு என் அம்மாவையும், அம்மாவைவிட அதிகமாய் நான் நேசிக்கும் என் அம்மம்மாவின் நினைவியும் அதிகமாகிடுச்சு.

ரெண்டு பேர்கிட்டயும் பேசிட்டு பில்லை உங்களுக்கு அனுப்பிடறேன்.
:))))))))))))))))))

said...

அண்ணா, நானே அம்மாவ பிரிஞ்ச சோகத்துல இருக்கேன்..!! :( இந்த பதிவு அதை அதிகப்படுத்தினாலும், மறுபடியும் அவளைப் பார்க்கும் போது அன்பை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை..!! :))

said...

புலம் பெயரும் போது தன் கைக்குள் இருந்த செல்லப்பிள்ளை எங்காவது பாதுகாப்பாக இருக்கட்டும் என்று முத்தமிட்டு அனுப்பினார் என் அம்மா. காருக்குள் ஏறியபோது கண்களைத் துடைத்துக் கொண்டிருப்பதை கண்ணாடி வழி கண்டேன். கடும் யுத்த காலத்தில் தொலைபேசியே இல்லாத போது எப்போதாவது ஆறு மாதமோ ஏழுமாதமோ கழித்து வரும் கடிதத்தில் தான் அம்மா பேசுவார். பள்ளிப்படிப்போடு புலம் பெயர்ந்து எட்டு வருஷம் கழித்துத் தான் அம்மாவின் முகத்தை நான் பார்க்க முடிந்தது.

இன்றைக்கு வேடிக்கையாகப் பதிவுகளை நான் போட்டாலும், எனக்குள் உள்ளே எப்போதும் இருக்கும் என் பிரிவுத் துயரை உங்கள் பதிவு மீண்டும் அதிகப்படுத்தி விட்டது.

என் அம்மாவை இனி நான் பார்க்கும் நாள் எந்நாளோ?

said...

//ஆனால் அம்மாவோட வட்டம் பெரும்பாலும் என்னையும் அப்பாவையும் சுத்தி தான் இருக்குனு நினைக்கும் போதே அழுகை தான் வரும்.. //

மிகச்சரியான விசயம் நாணலக்கா!

எங்க வீட்லயும் கூட இது மாதிரிதான்!

ஒ.கே இனி வீட்ல சமர்த்தா நடத்துக்க்ணும் சரியா!

said...

//புதுகைத் தென்றல் said...
அம்மா என்றால் என்ன? என்பதை உணர்ந்தது நான் பிரசவவலியால் துடித்த பொழுதுதான்.

உங்க பதிவு என் அம்மாவையும், அம்மாவைவிட அதிகமாய் நான் நேசிக்கும் என் அம்மம்மாவின் நினைவியும் அதிகமாகிடுச்சு.

ரெண்டு பேர்கிட்டயும் பேசிட்டு பில்லை உங்களுக்கு அனுப்பிடறேன்.
:))))))))))))))))))
//

அனுப்புங்க அனுப்புங்க!

அத்தோட கூடவே ரெண்டு மூணு இனிப்பு பலகாரமும் சேர்த்து அனுப்புங்க :))

said...

//Sri said...
அண்ணா, நானே அம்மாவ பிரிஞ்ச சோகத்துல இருக்கேன்..!! :( இந்த பதிவு அதை அதிகப்படுத்தினாலும், மறுபடியும் அவளைப் பார்க்கும் போது அன்பை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை..!! :))
///

அச்சச்சோ அக்கா! பரவாயில்ல நீங்க சொல்ற மாதிரி கொஞ்சமா பிரிவுதான் இன்னும் அன்பை அதிகமாக்கும்!
:)

said...

//கானா பிரபா said...
புலம் பெயரும் போது தன் கைக்குள் இருந்த செல்லப்பிள்ளை எங்காவது பாதுகாப்பாக இருக்கட்டும் என்று முத்தமிட்டு அனுப்பினார் என் அம்மா. காருக்குள் ஏறியபோது கண்களைத் துடைத்துக் கொண்டிருப்பதை கண்ணாடி வழி கண்டேன். கடும் யுத்த காலத்தில் தொலைபேசியே இல்லாத போது எப்போதாவது ஆறு மாதமோ ஏழுமாதமோ கழித்து வரும் கடிதத்தில் தான் அம்மா பேசுவார். பள்ளிப்படிப்போடு புலம் பெயர்ந்து எட்டு வருஷம் கழித்துத் தான் அம்மாவின் முகத்தை நான் பார்க்க முடிந்தது.

இன்றைக்கு வேடிக்கையாகப் பதிவுகளை நான் போட்டாலும், எனக்குள் உள்ளே எப்போதும் இருக்கும் என் பிரிவுத் துயரை உங்கள் பதிவு மீண்டும் அதிகப்படுத்தி விட்டது.

என் அம்மாவை இனி நான் பார்க்கும் நாள் எந்நாளோ?
//

:(

காலம் கனியும் கண்டிப்பாய் வெகு விரைவில்...!

said...

//புதுகைத் தென்றல் said...
அம்மா என்றால் என்ன? என்பதை உணர்ந்தது நான் பிரசவவலியால் துடித்த பொழுதுதான்.//

உண்மை. அம்மா கூட இருந்தப்ப அருமை தெரியல. எனக்கு குழந்தை பிறந்தப்பதான் நானும் உணர்ந்தேன்.

said...

ஆயில்யன்!
சிறுவயதில் விளையாட்டுப் பிள்ளையாக, கவலையில்லாமல், விபரம் தெரியாமல் இருந்தபோது அம்மாவின் அருமை தெரியவில்லை. என்னைப்பார்த்து, கையைப் பிடித்துக்கொண்டு கடைசியாக அம்மா சொன்ன வாக்கியம் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
"என்ன செய்யப் போறீங்களோ"

said...

உங்கள் சுட்டி மூலம் ஒரு நல்ல பதிவை படித்தேன். நன்றி!!
அம்மா போலவே நீங்கள் படித்த பள்ளியையும் நேசிப்பதைக் கண்டு வியக்கிறேன்!!

கானாஸ் : நோ சோகம் ஓக்கே..

said...

அண்ணாச்சி இப்படி பீலிங்கஸ் கெளப்பறீங்களே.. என்ன சொல்லுங்க நம்ம குடும்பம் போல வராதுங்க..அம்மா அப்பா என்ற ஜீவன்கள் தான் நம்முடன் எல்லா நேரங்களினும் இருக்கும் தெய்வங்கள் :)

Lord Cannot be with everyone always
That why he created parents :)

said...

//தெய்வசுகந்தி said...
//புதுகைத் தென்றல் said...
அம்மா என்றால் என்ன? என்பதை உணர்ந்தது நான் பிரசவவலியால் துடித்த பொழுதுதான்.//

உண்மை. அம்மா கூட இருந்தப்ப அருமை தெரியல. எனக்கு குழந்தை பிறந்தப்பதான் நானும் உணர்ந்தேன்.
//

நன்றி சுகந்தி அக்கா!

said...

//நானானி said...
ஆயில்யன்!
சிறுவயதில் விளையாட்டுப் பிள்ளையாக, கவலையில்லாமல், விபரம் தெரியாமல் இருந்தபோது அம்மாவின் அருமை தெரியவில்லை. என்னைப்பார்த்து, கையைப் பிடித்துக்கொண்டு கடைசியாக அம்மா சொன்ன வாக்கியம் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
"என்ன செய்யப் போறீங்களோ"
//

என்ன செய்ய போறீங்களோ? இந்த வார்த்தைகளை உபயோகிக்காத அம்மாக்களே இல்லை என்று கூட சொல்லமுடியும்! ஒவ்வொரு அம்மாவும் தன் பிள்ளைகளின் பிரிவில் உதிர்க்கும் சொல்!

இன்றும் என்றும் நினைவில் இருக்கும்!

said...

//சந்தனமுல்லை said...
உங்கள் சுட்டி மூலம் ஒரு நல்ல பதிவை படித்தேன். நன்றி!!
அம்மா போலவே நீங்கள் படித்த பள்ளியையும் நேசிப்பதைக் கண்டு வியக்கிறேன்!!
//

நன்றி அக்கா!

said...

//சந்தனமுல்லை said...
கானாஸ் : நோ சோகம் ஓக்கே..
//

அக்கா நீங்க சொன்னதை நானும் ரிப்பீட்டீக்கிறேன்!

said...

Ramya Ramani said...
அண்ணாச்சி இப்படி பீலிங்கஸ் கெளப்பறீங்களே.. என்ன சொல்லுங்க நம்ம குடும்பம் போல வராதுங்க..அம்மா அப்பா என்ற ஜீவன்கள் தான் நம்முடன் எல்லா நேரங்களினும் இருக்கும் தெய்வங்கள் :)

Lord Cannot be with everyone always
That why he created parents :)
//

அக்கா நீங்க சொல்ற கடைசி வரிகளும் சும்மா நச்சுன்னு இருக்கு அக்கா!

said...

வணக்கம் ஆயில்யன்.இன்றுதான் முதன் முதலாக உங்கள் வீடு வந்தேன்.அம்மாவை ஞாபகப் படுத்தி அழ வைத்து விட்டீர்கள்.
பெற்றவர்களின் பிரிவை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கும் தூரதிஸ்டக்காரர்கள் நாங்கள்.போன வாரமும் அம்மா அப்பா நினைவில் ஒரு கவிதை பதிவாக்கினேன்.

//வானம் தாண்டிய அடுத்த எல்லையில்
நானும் நீங்களுமாய்.
நினைவு வரும்போதெல்லாம்
சுவரில் தொங்கும் நிழற்படத்தில்
கண் பதித்து நிலைகுத்தி
நிற்பது மாத்திரமே முடிகிறது.
வாழ்வின் அற்புதங்களாய்
மனதில் பரவிக் கிடக்கும்
வாடாத இரு மலர்களாய் நீங்கள்.//

said...

ஆயில்யன் அம்மாவை எப்பவும் போற்றுங்கள்.
அவள் மனதில் எப்பவும் குழந்தைகளின் நலனே மேல் நோக்கி இருக்கும்.
கொஞ்சம் வயதானதும் தான் பெற்ற குழந்தைகளிடமே யோசித்துப் பேசும் காலம் வரும்.
எப்போதுமே அம்மாவை விட்டுக் கொடுக்காமல் இருக்கப் பழகிவிடுங்கள்.

அவள் ஒரு போதும் தவறு நினையாள்.

அம்மா அப்பா எல்லோரும் சேர்ந்து வாழும் சந்தோஷச் சுற்றமாக இருக்க வேண்டுகிறேன். ஆயில்யன் உங்கள் அம்மாவுக்கு என் அன்பு.

said...

//ஹேமா said...
வணக்கம் ஆயில்யன்.இன்றுதான் முதன் முதலாக உங்கள் வீடு வந்தேன்.அம்மாவை ஞாபகப் படுத்தி அழ வைத்து விட்டீர்கள்.
பெற்றவர்களின் பிரிவை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கும் தூரதிஸ்டக்காரர்கள் நாங்கள்.போன வாரமும் அம்மா அப்பா நினைவில் ஒரு கவிதை பதிவாக்கினேன்.//

வருகைக்கு நன்றி!

சூழ்நிலைகள் மட்டும் மாறுபட்ட சூழலில் நானும் கூட தூரதிஷ்டக்காரந்தான்!
பட் அதை விட மனதை வருத்தும் நினைவுகள் உம்முடையவை!

said...

//ஹேமா said...

//வானம் தாண்டிய அடுத்த எல்லையில்
நானும் நீங்களுமாய்.
நினைவு வரும்போதெல்லாம்
சுவரில் தொங்கும் நிழற்படத்தில்
கண் பதித்து நிலைகுத்தி
நிற்பது மாத்திரமே முடிகிறது.
வாழ்வின் அற்புதங்களாய்
மனதில் பரவிக் கிடக்கும்
வாடாத இரு மலர்களாய் நீங்கள்.//

உண்மை !
உண்மை !
உண்மை !

said...

ஹேமா,
அருமையாகச் சொல்லிவிட்டீர்கள். எனக்கு கூட ஆசை என்னிக்காவது அம்மா அப்பா இருவரும் ஒரு சின்னப் புன்னகை கொடுக்க மாட்டாங்களா.
ஒண்ணும் கவலைப் படாதே உன்னை நாங்கள் என்றுமே தவறாக நினைக்கவில்லை. அன்பு போதும்னு சொல்ல மாட்டாங்களானு யோசிப்பேன்.

said...

அம்மா...

said...

அம்மா...

said...

அம்மா...

said...

அண்ணே நான் சொல்ல விரும்பல...

said...

//ஒ.கே இனி வீட்ல சமர்த்தா நடத்துக்க்ணும் சரியா//

இப்ப எல்லாம் நாங்க திருந்திட்டோம்ல...

Anonymous said...

:)

said...

ரொம்ப அழகான விஷயம். எங்கம்மா எனக்கு மிகச்சிறந்த தோழியா இருக்காங்க. இந்த உலகத்திலயே எனக்கு ரொம்பப் பிடிச்சவங்கன்னா அது எங்கம்மாதான் :):):)